Pages

புதன், ஜூன் 26, 2013

மத்தியஅரசு விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகு பாமக'வினர் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது: பழிவாங்கலின் உச்சகட்டம் 

மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை: "அரசியல் சட்ட உரிமைகளை மதிக்காமலும், பழி வாங்கும் நோக்குடனும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் இருவரை உடனடியாக விடுதலை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அவர்களை தமிழக அரசு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத் தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாரி ஆகிய பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் கடந்த மே 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள்  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் அருகே பேரூந்தை தீயிட்டு எரித்ததாக அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மத்திய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மனு அனுப்பினர்.
இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கோரிய மத்திய உள்துறை அமைச்சகம், ஒருவர் மீது தேசிய தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்று கூட இவர்கள் விவகாரத்தில் பின்பற்றப் படவில்லை என்று கூறி, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை தள்ளுபடி செய்தது. தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்14(3) -ஆவது பிரிவின்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

இதையறிந்த தமிழக அரசு மத்திய அரசின் ஆணை சிறைக்கு வருவதற்கு முன்பாகவே, பழனி மற்றும் மாரியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மீண்டும் கைது செய்வதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் ஆணை கையில் கிடைக்காத நிலையில் இந்த ஆணையை செயல்படுத்த முடியாது என சிறை அதிகாரிகள் கூறிய பிறகும் தமிழக அரசு அதன் தீவிரத்தை குறைத்துக் கொள்ளவில்லை.

மத்திய அரசின் உத்தரவை உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுத்து விட்டு, புதிய கைது ஆணைகளையும் சிறையில் வழங்கி, அவர்கள் இருவரையும் தொடர்ந்து சிறையில் அடைக்க வைத்திருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பழி வாங்குவதற்காக சட்டத்தை எப்படியெல்லாம் தமிழக அரசு வளைக்கிறது; மீறுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பா.ம.க.வுக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.
தீவிரவாதம் தலைவிரித்தாடும் ஜம்மு - காஷ்மீரில் கூட கடந்த சில ஆண்டுகளில் 86 பேர் மட்டுமே தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்." என மருத்துவர் அன்புமணி இராமதாசு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வியாழன், ஜூன் 20, 2013

தருமபுரி செல்வி. திவ்யாவுடன் ஒரு சந்திப்பு: தயவுசெய்து படிக்க விடுங்கள்!

'தருமபுரி கலவரத்துக்கு காரணமான நிகழ்வு' எனப்படும் ஒரு செய்தியில் தொடர்புபடுத்தப்படும் செல்வி. நா. திவ்யாவை சந்தித்தது குறித்து - தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை: 

"தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காதல் நாடகக் கடத்தல் வழக்கில் விசாரணை முடிவடைந்த பின்னர், உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் திவ்யாவைக் கடத்திச் சென்று டாக்டர். இராமதாசிடம் ஒப்படைத்து, அவரை மிரட்டி, மனமாற்றம் செய்ததாக அவதூறுக் குற்றச்சாற்றைக் கூறியிருந்தார். அதற்குப்பிறகு தான் ஒரு முறையாவது திவ்யாவை நேரில் சந்தித்து விட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.

தருமபுரி என்ற பெயரை உலகம் முழுவதுக்கும் எடுத்துச் சென்ற விஷயத்தின் மையப்புள்ளியாக இருந்த திவ்யாவையும் இளவரசனையும் நான் எப்பொழுதும் பார்த்ததுக் கிடையாது. எனவே சென்னையில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியப் பிறகு தருமபுரி புறப்படுவதாகத், தெரிந்ததுமே நான் வழக்கறிஞர் திரு. க. பாலுவைத் தொடர்புக் கொண்டு அவர்களைப் பார்க்க்க வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். மறுநாள் எனக்குப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஓட்டு வீட்டில் உயரம் குறைந்த வாசலில், தலை இடிக்காமல் இருக்கக் குனிந்து உள்ளே நுழைந்தேன்.தரையில் இரண்டு ஆண்களும், எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த திவ்யாவின் தாயாரும் அமர்ந்து இருந்தார்கள்.அவர்களுக்கு பக்கத்தில் வெளிச்சம் குறைவாக இருந்த அந்த அறையில் அவர்களோடு அமர்ந்திருந்த இளம்பெண்ணை திவ்யா என்று எனக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கத் தேவை ஏற்படவில்லை. பளீரென்ற வெள்ளை முகத்தோடு, அச்சமும்,குழப்பமும் மிகுந்த கண்களோடு அந்தப் பெண் என்னைப் பார்த்தப் போது திருவிழாவில் காணாமல் போன சின்னக் குழந்தையின் மிரட்சியையே கண்டேன்.

பக்கத்து வீட்டில் இருந்துக் கொண்டு வரப் பட்ட நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு நட்புப் புன்னகையோடு 'நல்லா இருக்கிறாயா?'என்று கேட்ட போது , திவ்யாவிடமிருந்து தலையசைப்பின் மூலம் “ஆம்“ என்ற பதில் கிடைத்தது.அந்தப் பெண்ணின் குழப்பத்தையும், அந்தத் தாயின் துயரத்தையும் அதிகரிக்க விரும்பாமல் 'நான் இப்போது வந்திருப்பது உனக்கு அறிவுறை சொல்லவோ அல்லது கண்டிக்கவோ அல்ல. குடும்பத் தலைவரை இழந்து இருக்கிற உங்களுக்கு தைரியம் சொல்வதற்கு மட்டுமே.இப்போது நான் என்ன உதவி செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். திவ்யா எனக்குப் பதிலைச் சொல்லாமல் அவள் அம்மாவைப் பார்த்தாள். அவள் அம்மா எனக்குச் சொன்ன பதில் உள்ளபடியே என்னை உலுக்கியது. 'அவளுக்கு திரும்பப் படிக்கணும் சார். பாதியில் விட்ட நர்சிங் படிப்பை எப்படியாவது முடிக்கிறேன் என்று சொல்கிறாள். ஆனால் தருமபுரியில் இருக்கிற நர்சிங் காலேஜுக்குப் பயமா இருக்காம். வேற எங்கியாவது சேர்ந்து விட முடியுமா? என்று கேட்கிறாள்' என்றார் திவ்யாவின் தாயார். 'கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நீங்கள் கவலைப் படாமல் இருங்கள்' என்று சொல்லிவிட்டு வந்த என்னை அந்த குழந்தைப் பெண்ணின் கண்கள் விரட்டின.குழப்பம், அச்சம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளைத் தாண்டி தோல்விகளைத் தாண்டி வழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற , இளம் வயதினரிடம் மட்டுமே காணக் கூடிய வேட்கையை என்னால் உணர முடிந்தது.

தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகவும், பல்வேறு இணையத்தளங்களின் ஆயிரக் கணக்கானப் பக்கங்களின் நாயகியாகவும், அரசியல் தலைவர்களும், 'புரட்சியாளர்களும்' பல முறை உச்சரித்த பெயருக்குச் சொந்தக்காரியுமான அந்தப் பெண் தரையில் உட்கார்ந்து என்னைப் பார்த்த பார்வையில் இருந்த கெஞ்சல், கோடிக்கணக்காண மக்கள் கூட்டத்திலும் தனியாகவே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற ஒரு சராசரி இந்தியனின் வேதனை மிகுந்த நிதர்சனம்.அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வு அந்தப் பெண்ணின் கையில் மட்டுமே. திவ்யாவைப் பற்றி எழுதித் தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொண்ட பத்திரிக்கைகளோ, மணிக்கணக்கில் விவாதங்கள் நடத்தி காசு பார்த்த தொலைக்காட்சி நிறுவனங்களோ, திவ்யாவை வைத்து சமூக நீதிக்கும், சாதி ஒழிப்புக்கும் புதிய உத்திகளைத் தேடிய அரசியல் அமைப்புகளோ,சமூகப் பாதுகாப்பு என்பதின் அடிப்படைகளை கொஞ்சமும் அறிந்திராத இந்திய அரசு நிர்வாகமோ இனி அவளுக்குத் துணை இல்லை. இந்த மனிதக் காட்டில் அவளுக்குத் துணை அவளின் அம்மாவும், தம்பியும் மட்டுமே.

கூட்டுறவுத்துறையில் பணிப்புரிந்த அவள் அப்பாவுக்கு பென்சன் கிடையாது. தம்பி இப்பொழுது தன் +2 முடித்து இருக்கிறான். அம்மாவுக்கு வீட்டிக்கு வெளியே ஒன்றும் தெரியாது. சொத்தாக இருக்கும் ஒன்றை ஏக்கர் நிலம் வானம் பார்த்த பூமி. ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அது பத்தாது. வாழ்க்கையின் கடுமையை அந்தக் குழந்தைப் பெண் உணர்ந்து பார்க்கும் பொழுது அவளுக்குத் தென்படுகிற ஒரே நம்பிக்கை அவளின் கல்வி மட்டும் தான்.

இன்றைய மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவை கல்வியே. வேலைப் பெற தகுதி தரும் கல்வியைப் பெறுவதே இளம் வயதின் தலையாயக் கடமை.

ப்ளஸ் டூ படிப்பு ஒரு இன்றியமையாத காலம். இந்த இரண்டாண்டுக் காலத்தில் சரியாக உழைத்து மதிப்பெண் பெறுகின்ற குழந்தைகளுக்கு சரியான மேற்படிப்பிற்கான இடம் கிடைத்து வாழ்கை எளிதாகிவிடும்.இந்தக் காலத்தில் படிப்பை விட்டு விட்டு காதல் என்று ஏமாந்து போகிற பெண்கள் வாழ்க்கை சீரழிவை மட்டுமே சந்திக்கின்றன.

ப்ளஸ் டூவிற்க்குப் பிறகுத் தொழில் கல்வியில் சேரும் பெண்களுக்கு பொதுவாக பெரிய பிரச்சனைக் கிடையாது. நான் மருத்துவம் படித்தப் போது என்னுடன் படித்தப் பல பெண்கள் காதல் வயப்பட்டார்கள். அத்துனைப் பேரும் மருதுவப் படிப்பை முடித்தப் பின்னர் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.யாரும் படிப்பை நிறுத்திவிட்டுத் திருமணம் செய்து கொண்டு ஓடவில்லை. இதே நிலைத் தான் பொறியியல், சட்டப் படிப்பு படிக்கும் பெண்களுக்கும். மற்றப் படிப்புப் படிக்கிற பெண்கள் தான் இப்படிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடுவது என்கிற மிகமிகத் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் இந்தப் படிப்பை படிக்கும் பெண்களின் குடும்பச் சூழலும் தான். கீழ்நடுத்தட்டு குடும்பப் பெண்களின் அறியாமையும், உலக அனுபவம் இல்லாத பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.

இப்படிப் படிப்பை பாதியில் விட்ட பெண்கள் தங்கள் படிப்பை முடிப்பதே இல்லை. சில மாதங்களில் காதல் கசந்து,வாழ்க்கையின் கடுமையும், வறுமையின் தாக்கமும் ஏற்படும் பொழுது உணர்கிற குழப்பங்கள் காரணமாக பலர் தற்கொலை முடிவுக்கு போகிறார்கள். இந்த ஆபத்தான கலாச்சாரம் பரவுவதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாக்கள் தான். தொடர்ந்து ப்ளஸ் டூ படிக்கும் பெண்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுவதாகவும் காட்டுவதன் மூலம் அந்த இளம் வயது பெண்களுக்கு தவறான மனோபாவத்தை ஏற்படுத்துகிறார்கள். அதை விட முக்கியமாக வெளிநாடுகளில் ஆண், பெண் உறவுகள் இப்படித்தான் இருக்கிறது என்று இங்கே பரவலாக இருக்கும் கருத்துக்களுக்கும், அங்கே இருக்கிற உண்மைக்கும் தொடர்பே கிடையாது.

நான் மூன்றரை ஆண்டு காலம் இங்கிலாந்து நாட்டில் பணிப்புரிந்த போது பல மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். இங்கே காட்டப்படும் ஆங்கிலப் படங்களில் வருவது போல யாரும் முட்டிக்கு நாலரை இஞ்ச் மேலே இருக்கும் குட்டைப் பாவாடையுடனோ, 'லோ கட்'பிளவ்சுடனோ கல்லூரிக்கு வர மாட்டார்கள்! அவர்கள் கைவிரல்கள், கழுத்து தவிர மற்ற அத்துனை பகுதிகளையும் மறைக்கிற உடைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் பார்த்த பிரிட்டிஷ் மருத்துவ மாணவிகள் அனைவரும் படிப்பில் மிகுந்த அக்கறை உள்ளவர்களாகவே இருந்தார்கள். நம் மருத்துவ மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அதிகக் கவனம் தேவை. நாம் ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் அடுத்த நாள் படித்துவிட்டு நிச்சயம் கேள்வி கேட்பார்கள். அவர்கள் காதல்,செக்ஸ் போன்றவற்றையும் படிப்பையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வது கிடையாது. அதற்கு மிக முக்கியக் காரணம் ஆணும்,பெண்ணும் தோழர்களாக, தோழிகளாக பழகிக் கொள்வது தான்.

மருத்துவம்,பொறியியல், சட்டக் கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்கள் துறைச் சேர்ந்த படிப்புகளைச் சிறப்பாகப் படித்தாலே போதும். ஆனால் கலைக்கல்லூரியில் படிப்பவர்கள் இந்தக் கல்லூரிக் காலத்தில் பொது அறிவுப் புத்தகங்களை ஏராளமாக படிக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் வேலைக்காக நடத்தும் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு தனியாக முயற்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இல்லாமல் இன்னொரு மொழி,ப்ரெஞ்சு, ஹிந்தி அல்லது ஜப்பானிய மொழி ஏதாவது ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும்.இப்படியெல்லாம் தன்னை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றிப் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தை இட வேண்டிய வாழ்வின் மிக மிக்கியமான காலம் 17வயதிலிருந்து 22 வயது வரை. அந்தக் காலம் தான் பருவ மாற்றம் ஏற்பட்டு ஆண், பெண் இடையே அபரிதமான ஈர்ப்பு உண்டாகும் காலமும், இந்த கவர்ச்சியால் வாழ்க்கையின் முக்கியக் கடமைகளை மறந்து பாதை மாறிச் செல்லாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இளம் பருவதினரைப் பாதுகாக்க வேண்டும்.

பருவ வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் விளையாட்டு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி போன்ற மாறுப்பட்ட தளங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் கல்லூரி விழா போன்ற நிகழ்வுகளை இணைந்து நடத்தவும், இப்படிப்பட்ட பழக்கங்களால் நண்பர்களாக இருக்க பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொன்னான வயதில் திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற பெரிய பொறுப்புகளைப் பற்றி நினைப்பதோ, ஈடுபடுவதோ வாழ்க்கையையே அழித்துவிடும்.

திவ்யா போன்ற பெண்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், காதலின் மூலம் சமத்துவத்தைத் நிறுவத் துடிக்கும் அரசியல்வாதிகளையும், காதல் திருமணம் மூல்ம் சாதியை ஒழிக்கத் திட்டம் போடும் புரட்சியாளர்களையும், கலப்பு மணத்தால் சமூக நீதியை நிலைநாட்ட மேடைப்போட்டு கூச்சல் போடும் கிழவர்களையும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்:

'தயவு செய்து அவர்களைப் படிக்க விடுங்கள்!’

செவ்வாய், ஜூன் 18, 2013

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கு ஒரு பதிலடி: தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானதா திராவிடர் இயக்கம்?

"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது" எனக்குறிப்பிட்டு எனது ஒரு வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் பதில் அளித்துள்ளது. 

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக நான்கு பாகம் கொண்ட ஒரு தொடரை வெளியிட்டுள்ளது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்.
"1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என்ற அறிமுகத்துடன் 13, 14, 15, 16 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழ்களில் பதிலடிக் கட்டுரை தொடராக வெளிவந்துள்ளது. (இங்கே காண்க: இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!). 

விடுதலை நாளிதழின் பதிலடி சொல்வது என்ன?

1. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான எம்.சி.ராஜா அவர்களே கலவரத்துக்கு காரணம் 

"1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தத்தின் போது - பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாசமின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவுபடுத்தியது எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார்." சென்னை மாகான சட்டமன்றத்தில் "பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்?"

"வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள்தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க்குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர்களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை FACT".
 எம்.சி.ராஜா 
"நீதிக்கட்சியின் மேல் சொந்தபகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை அருள் ஒன்றும் செய்ய முடியாது."

- இவ்வாறாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான எம்.சி.ராஜா அவர்களே பின்னி மில்/புளியந்தோப்புக் கலவரத்துக்கு காரணம் என்று விடுதலை நாளிதழில் விவரித்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

2. பிட்டி.தியாகராயர் "தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும்" என்று சொன்னதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களை சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும் என்று அப்போதையை திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவரான பிட்டி தியாகராய செட்டி கூறினார் என்பதுதான் எனது பதிவின் சாராம்சம் ஆகும். இதனை விடுதலை நாளிதழில் மறுத்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.
சென்னை மாநகராட்சி கட்டடம் முன்பு பிட்டி தியாகராய செட்டி சிலை.
"கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை" என்று கூறியுள்ளது விடுதலைக் கட்டுரை.

கூடவே, பிட்டி தியாகராய செட்டி அறிக்கை "அய்யத்திற்கு இடமின்றி ஆம் (off course) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது" என்றும் விடுதலை நாளிதழில் கூறியுள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

3. மகாத்மா காந்தி இந்த பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த பிரச்சனை குறித்து மகாத்மா காந்தி பேசினார் என்று எனது பதிவில் குறிப்பிட்டதற்கு, "தொழிலாளர்கள் பிரச்சனை குறித்தோ, புளியந்தோப்புக் கலவரம் குறித்தோ மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை" என்று விடுதலை நாளிதழில் மறுத்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

- இந்த மூன்று தகவல்கள்தான் முதன்மையான மறுப்புகளாக உள்ளன. மற்றபடி, மேலும் சில மறுப்புகளும் எனது கட்டுரையில் சில புள்ளிவிவரங்கள் தவறாக இருப்பதாக சுட்டப்பட்டுள்ளது.

விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைக்கு எனது விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். குறிப்பாக மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்று முதன்மையான மறுப்புகளுக்கும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கூடவே, மற்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுவேன்.

அந்தவகையில் "மகாத்மா காந்தி இந்த பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை" எனும் விடுதலை கட்டுரை மறுப்புக்கு எனது விளக்கம் இதோ:

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கு ஒரு பதிலடி 1: 
பின்னி ஆலை வேலை நிறுத்தம் குறித்து மகாத்மா காந்தி பேசினாரா? இல்லையா?

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" எனும் எனது பதிவில் "போராட்டத்தை காந்தி ஆதரித்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வேலைக்கு திரும்புவதை தடுக்கக் கூடாது என்று கருதினார்" என்று குறிப்பிட்டிருந்தேன்:
எனது இந்தக் கருத்தினை விடுதலை நாளிதழில் மறுத்துள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள், பினருமாறு குறிப்பிட்டுள்ளார்: "காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம்சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை." என்று மானமிகு க.திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்

காந்தி இந்த பிரச்சினை குறித்து பேசினாரா? இல்லையா?

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிர்புறம் சென்னைக் கடற்கரையில் பின்னி மில் போராட்ட தொழிலாளர்களிடையே மகாத்மா காந்தி பேசினார். 

மகாத்மா காந்தியின் பேச்சுக்களும் எழுத்துகளும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளான. COLLECTED WORKS OF MAHATMA GANDHI எனப்படும் இந்த நூல் தொகுப்பின் 24 ஆவது தொகுதியில் பக்கம் 251 முதல் 255 வரை ஐந்து பக்கங்களில் மகாத்மா காந்தி என்ன பேசினார் என வெளியிடப்பட்டுள்ளது. (Collected Works of Mahatma Gandhi - Volume 24 நூலினை முழுவதுமாக பதிவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்).


மகாத்மா காந்தியின் பேச்சின் தமிழ் மொழிபெயற்பு (இங்கே சொடுக்கவும்): பின்னி ஆலை வேலைநிறுத்தம்- காந்தியின் உரை

ஆக, மகாத்மா காந்தியின் இந்த பேச்சின் போது மிக அதிகமாக "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவும், தெளிவாகவும்" தான் மகாத்மா காந்தி பேசினார்.

இதுகுறித்த - தமிழ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்திலும் தெளிவாக "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவும், தெளிவாகவும்" பேசினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:

"பின்னி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இந்திய போராட்ட வரலாறில் மிக முக்கியமான நிகழ்வாகும். பல கோரிக்கைகளை வேண்டி தொழிலாளர்கள் சுமார் ஆறு மாத காலம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் தொழிலாளர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர். தலித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று ஆங்கிலேய ஆதரவு நிலைபாடை எடுத்தனர். அவர்கள் பணிக்கு திரும்பினர். தொழிலாளர் பிரச்சனை மெல்ல சாதிய அடையாளத்திற்குள் ஒடுக்கப்பட்டது. தலித்துக்கள் ஒருபுறமும் சாதி இந்துக்களும் முஸ்லீம்களும் மறுபுறமும் அணிதிரண்டனர். தொழிலாளர் ஒற்றுமையை தலித் தொழிலாளர்கள் உடைத்துவிட்டனர் என்று இதர தரப்பினர் அவர்கள் மீது காழ்ப்பு கொண்டிருந்தனர். விளைவாக புளியந்தோப்பு கலவரம் ஏற்பட்டு, சூழல் மிகுந்த பதட்டமாக இருந்தது. இந்த பின்னணியில் காந்தி ஆலைத் தொழிலாளர்களுக்கு முன் உரையாற்றினார். சுமார் 45 நிமிடம் நீடித்த அந்த உரையில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை கண்டிக்கிறார். துணிவோடு தொழிலாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார்." என்று குறிப்பிட்டுள்ளது காந்தியின் பேச்சுக்களை தமிழில் தொகுத்துள்ள "காந்தி இன்று" இணைய தளம்.

இதைத் தான் நான் எனது பதிவில் குறிப்பிட்டேன்.

மேலே உள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும், Collected Works of Mahatma Gandhi - Volume 24  நூலின் 251 - 255 பக்கங்களைப் படித்தும், விடுதலைக் கட்டுரையின் உண்மைத் தண்மையை உணருங்கள்.

மகாத்மா காந்தி "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை" என்று விடுதலை நாளிதழில் மறுத்துள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்களின் கருத்து சரிதானா என்று நீங்களே சொல்லுங்கள்.

உண்மையை உணருவீர்!

விடுதலை நாளிதழ் எனது பதிவுக்கு அளித்த மறுப்பில் "நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!" என்று கூறியுள்ளது.

எனவே, பொய்யான தகவல்களை அள்ளி வீசுவது யார்? ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!

(2. பிட்டி.தியாகராயர் "தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும்"  என்று சொன்னாரா? இல்லையா? - எனது அடுத்த பதிவில் காண்போம்)

தொடர்புடைய சுட்டிகள்:

1. தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!


2. எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி! (முழுவதுமாக)

திங்கள், ஜூன் 17, 2013

எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி! (முழுவதுமாக)


"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக நான்கு பாகம் கொண்ட ஒரு தொடரை வெளியிட்டுள்ளது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்:

"இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!" என தலைப்பிட்டு 13, 14, 15, 16 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழ்களில் பதிலடிக் கட்டுரை தொடராக வெளியாகியுள்ளது.





"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என அந்த பதிலடிக் கட்டுரை முகப்பில் கூறப்பட்டுள்ளது.

நான் எனது பதிவில் "புளியந்தோப்பு கலவரம் 1921" பற்றி குறிப்பிட்டு "தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ள ஒரு வரலாற்று சம்பவத்தையும் அதில் நீதிக்கட்சியின் பங்களிப்பையும் திராவிட இயக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஏன் என்று தெரியவில்லை!" எனக் கேட்டிருந்தேன்.

எனது இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக "இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண்டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத்தியாயம் இடம்பெறும். எம் மனத்திலிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச்சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா?" என்றும் கூறியுள்ளார்கள்.

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கான எனது 'மறுப்பினையும் விளக்கத்தையும்' எனது வலைப்பூ வழியாக பின்னர் எழுதுவேன்.

எனது வலைப்பதிவுக்கு விடுதலையின் பதிலடி இதோ:

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (13.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (14.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (15.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (16.06.2013)

சனி, ஜூன் 15, 2013

தமிழக பத்திரிகைகளின் அக்கிரமத்துக்கு உச்சவரம்பே இல்லையா?

"ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதலை பிரித்ததால் நடுரோட்டில் காதலர்கள் தீக்குளிப்பு"

"ஸ்ரீபெரும்புதூர்: காதலியை கட்டிபிடித்து தீக்குளித்த காதலன்"

"நடுரோட்டில் தீக்குளித்து காதலியை கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்ற காதலன் "

"எரியும் தீயுடன் காதலியை கட்டிப்பிடித்த வாலிபர் பரிதாப சாவு"

- மேலே இருப்பதெல்லாம் தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தலைப்பு (13 ஜூன் 2013). 

"ஸ்ரீபெரும்புதூரில், மகள் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசுக்கு புகார் தெரிவிக்க அவரது பெற்றோர் சென்றதால், அஞ்சிய இளைஞர், நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, பெற்றோருடன் சென்ற தனது காதலியை அவர் கட்டிப்பிடித்ததால் இருவரும் காயமடைந்தனர்" - என்பதுதான் அந்த செய்தியாகும்.

கூடவே, இந்த சமபவத்தில் தொடர்புடைய ஆணும் பெண்ணும் காதலித்ததாகவும், இரண்டுமுறை வீட்டை விட்டு ஓடியதாகவும் வெளியே ஒன்றாக வசித்ததாகவும் பத்திரிகைகள் எழுதியுள்ளன.

அக்கிரமத்துக்கு உச்சவரம்பே இல்லையா?

இதில் 'என்ன அக்கிரமம் இருக்கிறது' என்கிறீர்களா?: தீக்குளித்த நபரின் வயது 24, அவர் தீக்குளித்தவாரே கட்டிப்பிடித்த பெண்ணின் வயது 13. இதுதான் அக்கிரமம்.

ஒரு 13 வயது குழந்தை எப்படி 'காதலி' ஆகமுடியும்? 

நம் எல்லோருடைய வீட்டிலும் நம் சொந்தபந்தங்களில் 13 வயது குழந்தைகள் இருக்கலாம். ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படிக்கும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை யாரோ ஒருவரின் "காதலி" என்று சொல்வதை நம்முடைய மனம் சகிக்குமா?
ஆனாலும், பத்திரிகைகள் விற்கவேண்டும் என்பதற்காக, பரபரப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக - எப்படி வேண்டுமானாலும் எழுதும் அவல நிலைக்கு தமிழ் பத்திரிகைகள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது.

இந்திய சட்டங்களின் படி 16 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளுடன் யார் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது கற்பழிப்பு குற்றம் ஆகும். அதாவது, 16 வயதுக்கு முன்பாக காதல் கத்திரிக்காய் எல்லாம் கிடையாது.

எனவே, எவனோ ஒருவன் ஒரு சிறுமியைக் கடத்திய குற்றத்தையும், அதுதொடர்பான காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவன் தீக்குளித்த நிகழ்வையும்  - "காதலன் காதலி" என்று எழுதுவது நியாயம்தானா? உண்மையில், பத்திரிகை தர்மத்தை குழிதோண்டி புதைத்திருப்பதுடன், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையுமே இழிவுபடுத்தியுள்ளன தமிழ் பத்திரிகைகள்.

குழிதோண்டிப் புதைக்கப்பட்ட பத்திரிகை நெறிகள்

இந்திய பத்திரிகை கவுன்சில், இந்திய பத்திரிகைகள் பின்பற்ற வேண்டிய நன்னடத்தை நெறிகளை தெளிவாக அளித்துள்ளது. (இங்கே காண்க: Press Council of India-NORMS OF JOURNALISTIC CONDUCT )

அதில், கட்டாயத் திருமணம், பாலியல் உறவு போன்ற எந்த நடவடிக்கையிலும் தொடர்புபடுத்தப்படும் குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற எதையும் வெளியிடக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"Caution against Identification: Minor children and infants who are the offspring of sexual abuse or 'forcible marriage' or illicit sexual union shall not be identified or photographed."

இதே போன்று ஐநா குழந்தைகள் நிதியம் 'யுனிசெஃப்' வழிகாட்டு நெறிகளும் வலியுறுத்துகின்றன.(இங்கே காண்க: UNICEF Principles for ethical reporting on children)

"Always change the name and obscure the visual identity of any child who is identified as: A victim of sexual abuse or exploitation"

ஆனாலும், மேற்கண்ட சம்பவத்தில், 13 வயது சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் ஊரையும் பத்திரிகைகள் மிகத்தெளிவாக வெளியிட்டுள்ளன.

இந்த அக்கிரமத்தைக் கேட்க ஆளே இல்லையா?

வெள்ளி, ஜூன் 14, 2013

எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி!

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக ஒரு தொடரை வெளியிடுகிறது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்.

"இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!" என தலைப்பிட்டு 13 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழில் அந்த பதிலடிக் கட்டுரை வெளியாகியுள்ளது.

"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என அந்த பதிலடிக் கட்டுரை முகப்பில் கூறப்பட்டுள்ளது.

நான் எனது பதிவில் "புளியந்தோப்பு கலவரம் 1921" பற்றி குறிப்பிட்டு "தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ள ஒரு வரலாற்று சம்பவத்தையும் அதில் நீதிக்கட்சியின் பங்களிப்பையும் திராவிட இயக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஏன் என்று தெரியவில்லை!" எனக் கேட்டிருந்தேன்.

எனது இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக "இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண்டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத்தியாயம் இடம்பெறும். எம் மனத்திலிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச்சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா?" என்றும் கூறியுள்ளார்கள்.

எனது வலைப்பதிவுக்கு விடுதலையின் பதிலடி இதோ:

இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு 
1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (13.06.2013)

வியாழன், ஜூன் 13, 2013

தி இந்து - ஒரு விபச்சார பத்திரிகையா...? குற்றங்களில் கூட்டாளியாகும் பத்திரிகை அதர்மம்!

இந்துவில் அவ்வப்போது விபச்சாரம், கற்பழிப்பு, கொலை, சூதாட்டம், திருட்டு என்கிற செய்திகள் வருகின்றன. அதற்காக அந்த பத்திரிகையை விபச்சார பத்திரிகை, கற்பழிப்பு பத்திரிகை, கொலைகாரப் பத்திரிகை, சூதாட்ட பத்திரிகை, திருட்டு பத்திரிகை என்றெல்லாம் சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு செய்தியை என்னைப் பற்றி வெளியிட்டுள்ளது தி இந்து பத்திரிகை.

ஆதாரத்துடன் பேசினால் தி இந்துவுக்கு கோபம் வரும்!

"தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!"  (இங்கே காண்க) எனும் ஒரு பதிவினை நான் எழுதியிருந்தேன். அதில் 'மாற்று சாதிப்பெண்கள் தாழ்த்தப்பட்டவர் வீட்டில் குடும்பம் நடத்தட்டும்' என்று வேறொருவர் வன்முறையையும் கோபத்தையும் தூண்டும் வகையில் பேசியதை நான் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்.

அதிலும் ஆனந்த விகடன், கீற்று போன்ற வேறு மூலங்களில் இருந்து இணைப்புகளைக் கொடுத்துதான் நான் எழுதினேன். எனது கருத்தில் எந்த இடத்திலும் 'கோபத்தையும் தூண்டும் வகையில்' எதுவும் இல்லை.
எனது இந்தப் பதிவினை PROVOCATIVE BLOG POST என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியர்களை நூற்றுக்கணக்கான இணையப்பதிவுகள் தாறுமாறாக கிழித்துப்போட்டும், அவதூறாகவும் எழுதலாம் - ஆனால், வன்னியர்கள் தரப்பு நியாயத்தை ஒருவர் எடுத்துவைத்தாலும் அதை நாங்கள் பொருத்துக்கொள்ள மாட்டோம் என்று இதன்மூலம் தெரிவிக்கிறது தி இந்து.

Provocative ஆக வேறொருவர் பேசியதை நான் குறிப்பிட்டதற்காக - எனது வலைப்பூவை Provocative blog post என்று தி இந்து சொல்லும் போது, விபச்சார செய்திகளை வெளியிடும் இந்துவை நான் ஏன் 'விபச்சார பத்திரிகை' என்று கூறக் கூடாது?

தி இந்துவின் கோபத்துக்கு காரணம் என்ன?

சமீபகாலங்களில் வன்னியர்களுக்கு எதிராகவும் பாமக'வுக்கு எதிராகவும் அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறது தி இந்து பத்திரிகை. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்க:

1. ஆட்கடத்தல் பழியை பாமக மேல் போட்ட தி இந்துவின் அராஜகம்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லண்டன் தம்பதியினர் சென்னைக்கு வந்த போது, அவர்களை 2.4 கோடி பணம் கேட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடத்தினர். இதுகுறித்து எல்லா பத்திரிகைகளும் 'கடத்திய முக்கிய பிரமுகர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்' என்று தெளிவாகக் கூறிய நிலையில் தி இந்து மட்டும் - குற்றவாளி பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் என்று அபாண்டமாக எழுதியது. (held hostage in a house allegedly belonging to a PMK member).
இந்த அநியாயத்தக் கண்டித்து நான் எனது வலைப்பூவில் எழுதினேன் (இங்கே காண்க: சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்: பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!). தி இந்து பத்திரிகைக்கும் பலர் கடிதம் எழுதினர். தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்காத தி இந்து பத்திரிக்கை என் மீது பாய்கிறது.

2. பாமக தொண்டரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்திய தி இந்து.

மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்கிற பாண்டியன் எனும் இளைஞர் தீக்குளித்து இறந்தார். அவரது மரணம் குறித்து எல்லா பத்திரிகைகளும் 'பாமக தலைவர்கள்  கைது செய்யப்பட்டதைக்  கண்டித்து' தீக்குளித்தார் என்று கூறியபோது, தி இந்து மட்டும் 'அவர் பாமக தொண்டர்தான், ஆனாலும் அவர் பாமக தலைவர்கள் கைதைக் கண்டித்து தீக்குளிக்கவில்லை' என்று எழுதியது. (இங்கே காண்க: Youth commits self-immolation, police see no political connection), (இந்துவின் இந்த வக்கிரத்துக்கு மாறாக, இறந்தவரின் உறவினர்கள் அவர் எதற்காக தீக்குளித்தனர் என்று தெளிவாகக் கூறியுள்ள காணொலி இங்கே காண்க: "எங்க அய்யாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. நான் இனி உயிரோடு இருக்க மாட்டேன்")

3. மரக்காணம் படுகொலையில் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்த தி இந்து.

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து அபாண்டமான செய்திகளை வெளியிட்டது தி இந்து. கலவரத்தில் ஈடுபட்ட வன்னியர்கள் 'தங்கள் தலைவரிடம் காட்டவேண்டும் என்பதற்காக அந்த கலவர நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்' (They also took photographs of the destruction they caused claiming that they had to show it to their leader) என்று எழுதியது தி இந்து. மேலும் பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றும் எழுதியது தி இந்து.(இங்கே காண்க: Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob)
அதாவது, மரக்காணம் கலவரத்திற்கு ஏதோ வன்னியர் சங்கத்தின் தலைவர்களே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது போலவும், அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை அவர்கள் கேட்டது போலவும் எழுதிய தி இந்து - இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணையும், நீதிவிசாரணையும் வேண்டும் என பாமகவினர் கேட்கும் பொது அதுகுறித்து ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது.

(உண்மையில் மரக்காணம் கலவரம் என்பது ஒரு திட்டமிட்ட கலவரம்தான். முன்கூட்டியே திட்டமிட்டு வன்னியர்களை படுகொலை செய்துவிட்டு - பழியையும் வன்னியர்கள் மீதே போட்டனர். இப்படி வன்னியர்கள் மீது பழிசுமத்துவதற்கான கட்டுக்கதையை தி இந்து எழுதியுள்ளது. ஆக, இந்தக் குற்றச்செயல் குறித்து முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப கதையையும் எழுதிவைத்து உடனுக்குடன் வெளியிட்டுள்ளது தி இந்து)

- மேற்கண்ட சம்பவங்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு - என்னால் முடிந்த அளவுக்கு எனது வலைப்பூவில் மட்டும் தி இந்துவின் சாதிவெறியை வெளிக்காட்டினேன். (இங்கே காண்க:சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்: பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!) அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் எனது வலைப்பூவை Provocative blog post என்கிறது இந்த 'மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு'.
உலகின் எந்த மூலையில் எவரது பேச்சுரிமையாவது பாதிக்கப்பட்டால் அதுகுறித்து எட்டுகாலம் செய்திபோட்டு தன்னை 'பேச்சுரிமைக்கு ஆதரவான பத்திரிகையாகக் காட்டிக்கொள்ளும்' அதே தி இந்து பத்திரிகை - எனது சாதாரண எதிர்ப்பை சகிக்க மறுப்பது நியாயமா?

The Hindu வானத்திலிருந்து குதித்த பத்திரிகையா? 
ஊடகங்கள் யாரையும் விமர்சிக்கலாம், ஊடகங்களை ஒருவரும் விமர்சிக்கக் கூடாதா?

பத்திரிகை சுதந்திரம், ஊடகங்களுக்கு தனி உரிமை என்றெல்லாம் எதுவும் தனியாக இல்லை. தி இந்து பத்திரிகை தன்னைத் தானே 'வானத்திலிருந்து குதித்த பத்திரிகையாக நினைத்துக் கொண்டால்' அதற்காக நாம் பரிதாபப்படதான் வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம் என்கிற உரிமை - சராசரி குடிமகனுக்கு அளிக்கப்பட்டுள்ள 'கருத்துரிமை பேச்சுரிமை' என்கிற அடிப்படை உரிமையில் இருந்துதான் பெறப்படுகிறது. எனவே, தி இந்துவின் கூட்டத்திற்கு என்னவெல்லாம் உரிமைகள் உண்டோ, அது எல்லாமும் எனக்கும்தான் உண்டு.

இன்னும் சொல்லப்போனால், அடிப்படை மனித உரிமைகள் விதிகளின் படி, குடிமக்கள் பத்திரிகைகளுக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. பத்திரிகைகள்தான் குடிமக்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றன.


ஐநா மனித உரிமைகள் குழுவின் 'கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை' குறித்த விளக்க அறிக்கையில் 'சுதந்திரமான தகவல் தொடர்பும் கருத்துப்பரிமாற்றமும் அடிப்படையான தேவை என்பதால் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள அதே வேளையில், 'இதற்கு சமமாக பொதுமக்கள் ஊடகங்களிடம் செய்தி பெறும் உரிமையைப் பெற்றுள்ளனர்' (The public also has a corresponding right to receive media output.) என ஐநா மனித உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது (பத்தி 13 - UN Human Rights Committee, General comment No. 34 Article 19: Freedoms of opinion and expression)
WEAPONS OF
MASS DECEPTION
நான் மேலே குறிப்பிட்டுள்ள, தி இந்து பத்திரிகையில் வெளியான பாமக பற்றிய மூன்று செய்திகளிலும், 'சரியான, நம்பகத்தன்மையுள்ள, உண்மையான, பக்கசார்பற்ற செய்தியைப் பெறுவதற்கான' குடிமக்களின் உரிமையை பறித்துள்ளது தி இந்து. அதாவது அடிப்படை மனித உரிமைகளுக்கு, குறிப்பாக 'கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும்' பங்கம் விளைவித்துள்ளது தி இந்து.

தி இந்துவே - குடிமக்களின் ஊடக உரிமைக்கு வேட்டு வைக்காதே.

ஐநா மனித உரிமைகள் குழுவின் 'கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை' குறித்த விளக்க அறிக்கையின் 14 ஆம் பத்தியில் "ஊடகப் பயன்பாட்டாளர்களின் உரிமையைக் காப்பாற்றும் வகையில், பரந்துபட்ட அளவிலான  (எல்லாவிதமான) தகவல்களையும் கருத்துகளையும் ஊடகப்பயன்பாட்டாளர்கள் பெறக்கூடிய வகையில் தன்னிச்சையான மற்றும் பன்முகப்பட்ட ஊடகங்கள் இயங்குவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
UN Human Rights Committee - General comment No. 34 Article 19: Freedoms of opinion and expression

"As a means to protect the rights of media users, including members of ethnic and linguistic minorities, to receive a wide range of information and ideas, States parties should take particular care to encourage an independent and diverse media."


ஆனால், உண்மைச் செய்தி மக்களுக்கு தெரியாதவண்ணம் தடுத்து, பொய்யான செய்தியை இட்டுக்கட்டி எழுதிவருவதன் மூலம் பத்திரிகை தர்மத்துக்கு துரோகமிழைத்து வருகிறது தி இந்து. இதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளையே மீறி வருகிறது இந்த பத்திரிகை.
- இவ்வாறாக, குடிமக்கள் உண்மையான கருத்துகளை பக்கசார்பற்று பெறுவதற்கு தி இந்து நாளிதழ் தடையாக இருக்கிறது. பன்முகப்பட்ட தகவல்களையும் கருத்துகளை பெறுவதற்கும் தி இந்து பத்திரிகை தடையாக இருக்கிறது. மாற்றுக்கருத்துகள் சின்னஞ்சிறு வலைப்பூவில் வருவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எனது வலைப்பூவை Provocative blog post என்கிறது தி இந்து.

"தி இந்து வெளியிடும் செய்தியின் உண்மைத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு"
விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் கொலைசெய்யப்பட்டதாக 1989 ஆண்டு தி இந்து வெளியிட்ட செய்தி

தி இந்து பத்திரிகை ஒழிந்தால் இந்தநாடு உருப்படும்!
"உண்மையாக இந்த நாட்டில் 'இந்து', 'சுதேசமித்திரன்' என்ற இந்த இரண்டு பேயாட்ட, வெறிகிளப்பும் விஷமப் பத்திரிகைகள் இல்லாமல் இருந்திருக்குமானால் - இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டுமக்கள் எவ்வளவோ அன்னியோன்னிய பாவமடைந்து ஞானமும், செல்வமும் ஆறாகப் பெருகும் நன்னாடாக ஆகிப் பல்லாண்டுகள் ஆகியிருக்கும்...

'இந்து', 'சுதேசமித்திரன்' என்ற இந்த இரண்டு விஷ ஊற்றுக்களும் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷநோய்கள் நீங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுவோம்"

- தந்தை பெரியார், குடி அரசு தலையங்கம் 07.02.1948

தந்தை பெரியார் விரும்பியது போல சுதேசமித்திரன் பத்திரிகை ஒழிந்துவிட்டது. தி இந்துவும் ஒழிந்து இந்த நாடு வளம்பெறும் நன்னாள் எந்நாளோ!

செவ்வாய், ஜூன் 11, 2013

முற்போக்கு புர்ச்சியாளர்களைக் காணவில்லை: முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை வழக்கில் தொடரும் கள்ளமவுனம்!

முற்போக்கு புர்ச்சியாளர்களைக் கண்டுபிடிப்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி: பதர் சயீத், முன்னாள் எம்எல்ஏ., திருவல்லிக்கேணி

தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளிலும் உடனுக்குடன் தலையிட்டு தங்களது அதிமுற்போக்கான தீவிரக்கருத்துகளை முன்வைப்பவர்கள் முற்போக்கு புர்ச்சியாளர்கள் எனப்படுகின்றனர்.

இடதுசாரிகள், திராவிடர்கள், தமிழ்தேசியர்கள், பெண்ணியவாதிகள், மனிதஉரிமைப் போராளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பின்நவீனத்துவவாதிகள், முன்நவீனத்துவவாதிகள் -  எனப்பல பெயர்களில் உலாவரும் இந்தக் கூட்டத்தினர் "அடுத்தவீட்டு பெண்கள்" தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் உலகப்பிரசித்தம் பெறத்தக்கவையாக இருக்கும்.

"21 வயதுக்கு முன் நடக்கும் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் அனுமதி வேண்டும். படிப்பை முடிக்காத, வேலைக்கு போய் சொந்தக்காலில் நிற்கும் தகுதியற்ற சிறுவர்களின் காதல் திருமணங்களை ஆதரிக்கக் கூடாது" என்று மருத்துவர் அய்யா அவர்கள் கோரியபோது இந்த முற்போக்கு புர்ச்சிக் கூட்டம் வானுக்கும் பூமிக்குமாக துள்ளிக்குதித்து, பாய்ந்து பிராண்டி கடித்து குதறியது.

அதே முற்போக்கு கூட்டம் இப்போது ஒரு முக்கியமான சிக்கலில் கருத்து சொல்லாமல் கள்ளமவுனத்தில் ஆழ்ந்துள்ளது.

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை வழக்கு 

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ''விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிடமுடியும். சில நேரங்களில் மனைவிக்குத் தெரியாமலேயேகூட கணவர் தலாக் கூறி, காஜிக்களிடம் திருமண முறிவுக்கான சான்றிதழ் பெற்று விடுகின்றனர். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை'' எனக்கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மனு குறித்த விளக்கங்களை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கும் மாநிலத் தலைமை காஜிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்திரவிட்டது. (காண்க: முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு) (Stop Kazis from issuing talaq certitificates, PIL says)

பதர் சயீத் வழக்கு தாக்கல் செய்துள்ளதற்கே மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பிருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"இதுகாலம் காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து வரும் வழக்கம். இதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மேலும் இது முஸ்லிம் சட்டத்திற்கும் விரோதமானது. இதனை மாற்றினால் தேவையில்லாமல் முஸ்லிம் பெண்களுக்குப் பிரச்சனை ஏற்படும்" என்கிறர் ஜவாஹிருல்லா. (காண்க: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து தொடரப்பட்ட வழக்கு குறித்து திரு. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் கருத்து!)

- இந்த முக்கியமான விவகாரத்தில்தான், கடந்த செவ்வாய்க்கிழமை (4.6.2013) அன்று வழக்கு விசாரணைக்கு வந்தும், கடந்த எட்டு நாட்களாக கருத்து சொல்லாமல் தலைமறைவாகியுள்ளனர் கருத்து கந்தசாமிகள் என்று அழைக்கப்படும் முற்போக்கு புர்ச்சியாளர்கள்.

கருத்து கந்தசாமிகளின் கள்ளமவுனம்

"முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை" விவகாரத்தை முற்போக்கு புர்ச்சியாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றோ எதிர்க்க வேண்டும் என்றோ நாம் கருதவில்லை. குறைந்தபட்சம் தங்களது கருத்து என்ன என்று அவர்கள் சொல்லலாமே. அண்டசராசரத்தில் உள்ள அத்தனை விடயங்கள் குறித்தும் தமது மேதாவிலாசமான கருத்தைக் கூறுகிறவர்கள் இந்த வழக்கு விவகாரத்திலும் தமது மேதமையைக் காட்டலாமே. கள்ளமவுனம் எதற்காக?

இந்த தலைமறைவில் வியப்பளிக்கக் கூடியது எதுவும் இல்லை. 

ஏனெனில், வன்னியர், தேவர், கொங்குக் கவுண்டர்கள் என தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எளிதில் பேசி முற்போக்கு பட்டத்தை தட்டிச்செல்ல முடியும். 

இசுலாமியர்கள் தொடர்புடைய விடயத்தில் அப்படிப் பேசிவிட முடியுமா? அதற்கெல்லாம் முதுகெலும்பு வேண்டுமே!

வெள்ளி, ஜூன் 07, 2013

தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!

கீழே உள்ள இரண்டு காணோலிகளைப் பாருங்கள். அதில் பேசுகிறவர் ரஜினிகாந்த் எனும் வழக்குரைஞர். தலித் புரட்சிக்கு ஒரு உதாரணமாக இவரை எடுத்துக்கொள்ளலாம்.

1. "திவ்யாவை கடத்தி மருத்துவர் இராமதாசு முன் நிறுத்தினார்கள்": பைப்பாஸ் அறுவைசிகிச்சை ஓய்வில் உள்ளவரை விடாது துரத்தும் தலித் புரட்சி..

முதல் வீடியோவில், தர்மபுரி திவ்யா அவரது காதலனாக இருந்த இளவரனை விட்டு பிரிந்தது தொடர்பாக 6.5.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலில் இளவரசன் தரப்பின் சார்பில் வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேசுகிறார்.

"பாமகவினரால் திவ்யாவும் அவரது தாயாரும் தர்மபுரியிலிருந்து கடத்தப்பட்டு திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் மருத்துவர் இராமாதாசு அவர்களிடம் ஒப்படைத்து, அங்கு (அதாவது மருத்துவர் இராமதாசு முன்னிலையில்) திவ்யாவும் அவரது தாயாரும் மிகமோசமான மிரட்டப்பட்டிருக்கிறார்கள். கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது" என்று கூறுகிறார் இந்த தலித் புரட்சியாளர்.

வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு - சென்னை உயர்நீதிமன்றம் 
(படத்தின் மீது சொடுக்கவும் 3.23 நிமிடத்திலிருந்து காண்க)

(படத்தின் மீது சொடுக்கவும் 3.23 நிமிடத்திலிருந்து காண்க)
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு மே 20 ஆம் தேதி இதயத்தில் பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூன் 15 வரை முழுஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் சென்னையில் ஓய்வில் உள்ளார். 

இதய பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் இராமதாசு அவர்களை அவரது மகன் மற்றும் துணைவியார் தவிர வேறு எவரும் சந்திக்க அனுமதிக்கப்படுவது இல்லை. பாமக தலைவரான கோ.க. மணி அவர்கள் கூட இதுவரை அவரை சந்திக்கவில்லை.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கடந்து ஒருமாதமாக சென்னையில்தான் உள்ளார். இந்நிலையில், தருமபுரி திவ்யாவை கடத்தி தைலாபுரத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் முன்பு நிறுத்தினார்கள், மிரட்டினார்கள் என்கின்றனர். இதுதான் தலித் புரட்சி.

2. சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும்.

இரண்டாவது வீடியோவில் பேசுகிறவரும் மேலே உள்ள வீடியோவில் பேசும் அதே நபர்தான். 2012 செப்டம்பர் மாதம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் வழக்குரைஞர் ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்.

"ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.
ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
இதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும்."


வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு - மேட்டுப்பாளையம் 
(படத்தின் மீது சொடுக்கவும்) 
அருகில் நிற்பவர் பெரியார் பெருந்தொண்டர் கோவை இராமகிருஷ்ணன்

(படத்தின் மீது சொடுக்கவும்) 
அதாவது, காதல் கத்திரிக்காய் எல்லாம் இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற சாதியினருக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதற்காக மற்ற சாதிப் பெண்களை அழைத்துப் போக வேண்டும். இதுதான் முற்போக்கு, புரட்சி, புனிதக்காதல்...எல்லா வெங்காயமும். ஏனென்றால் இதுவும் தலித் புரட்சிதான்.

3. சக்கிலியர் வீட்டில் மற்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர் கும்பம் நடத்தக் கூடாது.

தலித் வீட்டில் 'கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண்' என மற்ற சாதியினர்தான் குடும்பம் நடத்த வேண்டும். 

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களிலேயே இன்னும் தாழ்ந்தவராக இருக்கும் சக்கிலியர் வீட்டில் மற்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர் குடும்பம் நடத்தக் கூடாது. அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் சக்கிலியரான கார்த்திகேயன் வீட்டில் குடும்பம் நடத்தமுயன்ற பறையர் இனப்பெண் கோகிலாவை, அவர்கள் குடும்பத்தினரே கொலை செய்துவிட்டனர்.
கார்த்திகேயன் - கோகிலா 
இதுகுறித்த உண்மை அறியும் குழுவினர் "பள்ளிநேலியனூர் கிராமத்தில் 2012 நவம்பர் 11 அன்று நடந்த குடும்ப/சாதி வெறி, திமிர் கொலையில் (கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். (காண்க: அருந்ததியரை மணந்த பறையர் பெண்ணை பெற்றோரே கொன்ற சாதிக் கொடூரம்)

ஆனாலும் புரச்சியாளர்கள் இதுகுறித்தெல்லாம் பேசமாட்டார்கள். பேசினால், அது புரச்சிக்கு எதிர் புரச்சி ஆகிவிடாதா? 

"Take the example of the prominent intellectuals of Paraiyars in Tamil Nadu: none have said even a single line that all are Scheduled Castes. Let this be as it is. One point has to be made clear that across Tamil Nadu, any Arunthathiyar man marrying a Paraiyar or Pallar girl will never be accepted by the Paraiyar or Pallar communities." (The murder of a Dalit girl and the silence over it - by Ravi Chandran)

ஒவ்வொரு சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும் என்று பேசும் இதே ரஜினிக்காந்தால் "ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் பறையர் பெண் குடும்பம் நடத்தட்டும்" என்று பேச முடியுமா?

வியாழன், ஜூன் 06, 2013

தர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய பெண் திவ்யாவை யாரோ (வேறு யார்? பாமகவினர்தான்) கடத்திவிட்டனர் என்று தர்மபுரி காவல்நிலையத்தில், அந்தப்பெண்ணின் 'கணவன் என்று தனக்குத் தானே' கூறிக்கொள்கிற நபரான இளவரசன் புகார் செய்தார்.

திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்து இருந்த கேபியஸ் கார்பஸ் மனு இன்று (6.5.2013)  நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் திவ்யாவை தங்கள் அருகில் அழைத்தனர். நீதிபதிகள் முன்பு “என் அப்பாவும் இறந்துவிட்டார். அம்மா தனியாக இருக்கிறார்” என்று திவ்யா விம்மி அழுதார். பின்னர் நீதிபதிகள் "இளவரசனும் வந்திருக்கிறார். அவருடன் பேசுகிறாயா?" என்றனர். அதற்கு "பேச விரும்பவில்லை" என்று மறுத்துவிட்டார். "நீ யாருடன் செல்ல விரும்புகிறாய்?" என்றதும் "என் அம்மாவுடன் செல்லவே ஆசைப்படுகிறேன்" என்றார். 
விசாரணைக்கு கோர்ட்டில் அமர்ந்து இருந்தபோதும், நீதிபதிகள் முன்பு எதிர் எதிரே நின்றபோதும் இளவரசன் திவ்யாவை பார்த்து “ப்ளீஸ், வந்துவிடு” என்று கெஞ்சினார். ஆனால் திவ்யா பாராமுகத்துடனேயே இருந்தார். அவரது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. 

இளவரசன் தரப்பில் திவ்யாவை கடத்தி சென்று மிரட்டி இருக்கிறார்கள் என்று வாதிட்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, "நாங்கள் அந்த பெண்ணிடம் தெளிவாக விசாரித்து விட்டோம். யாரும் கடத்தவில்லை. தானாகவே தாய் வீட்டுக்கு சென்றதாக கூறினார். மேலும் தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் தாயுடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். எனவே அவரது விருப்பத்துடன் தாயுடன் செல்ல அனுமதிக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இளவரசனும், திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர் பெற்றோருடன் சென்றனர். - இப்படியாக ஒரு மாலை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது (தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது). நீதிமன்றத்திலும் இதுதான் நடந்தது.

சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

ஆனால், இந்த நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய 'இளவரசன்' தரப்பு வழக்குரைஞர் பின்வருமாறு கூறினார்:

"அந்த பெண்ணின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, தருமபுரி மருத்துவர் செந்தில், திவ்யாவை வரவைத்து தர்மபுரியிலிருந்து கடத்தினார். பின்னர் அந்தப் பெண் நேராக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் மருத்துவர் இராமாதாசு அவர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மருத்துவர் இராமதாசு முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
மருத்துவர் இராமதாசு, மருத்துவர் செந்தில் ஆகியோர் அந்தப் பெண்ணையும் அவரது தாயாரையும் கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டினர். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் அவர் நீதிமன்றத்தில் 'தாயுடன் போவதாக' கூறியுள்ளர்." - இப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் இளவரசன் தரப்பு வழக்குரைஞர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து முழுஓய்வில் இருப்பவர் மிரட்டினாராம்!

மருத்துவர் செந்தில் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தருமபுரியில் உள்ள அவரது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு மே 20 ஆம் தேதி இதயத்தில் பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூன் 15 வரை முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் சென்னையில்தான் ஓய்வில் உள்ளார். அவரது மகன் (மருத்துவர் அன்புமணி இராமதாசு) மற்றும் துணைவியார் (அம்மா) தவிர வேறு எவரும் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவது இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான கோ.க. மணி அவர்கள் கூட இதுவரை மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'தருமபுரி திவ்யாவை கடத்தினாராம், தைலாபுரம் தோட்டத்தில் வைத்து மிரட்டினாராம்'!

முற்போக்கு சாதிவெறிக் கூட்டமே - உங்கள் அபாண்டத்துக்கும் அக்கிரமத்துக்கும் ஒரு எல்லையே இல்லையா? தமிழக மக்களை அந்த அளவுக்கா முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
தொடர்புடைய சுட்டி:


தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!

காலம் கலிகாலம் என்பது இதைத்தான் போலிருக்கிறது. பதினெட்டு வயதைக் கடந்த ஒரு பெண், திருமணம் செய்ய தகுதியில்லாத (அதாவது சட்டப்படி திருமண வயதை எட்டாத) ஒரு பையனுடன் ஓடிப்போய் - திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தார். (அதாவது அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்ய சட்டப்படி தகுதியும் இல்லை)

பதினெட்டு வயது கடந்த பெண் யாரோடு வேண்டுமானாலும் போகலாம். கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டால் கூட, அதற்காக காசு வாங்கினால்தான் அது விபச்சாரக் குற்றம். காசு வாங்காமல் மனம் விரும்பி யாரோடு இருந்தாலும் அது குற்றம் அல்ல.

அதே போன்று 'பதினெட்டு வயது கடந்த பெண்' திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில், அவர் யாரோடு இருக்கிறாரோ, அவரை விட்டுவிட்டு வீட்டிற்கோ வேறு ஒருவருடனோ போனால் அதுவும் குற்றமல்ல.

ஆக, ஏழுமாதம் ஆன நிலையில் இப்போது அந்தப் பெண் அந்தப் பையனை விட்டுவிட்டு தனது சொந்த வீட்டிற்கு வந்துவிட்டார். வயது வந்த பெண் தனது சொந்த வீட்டிற்கு போவதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதிலும் குறிப்பாக, அந்த பெண்ணோடு ஒரு உறவும் இல்லாத வழிப்போக்கர்கள் அதை கேள்வி கேட்க எந்த நியாயமும் இல்லை.
நியாயம் இப்படி இருக்கையில், திருமணம் ஆகாமலேயே உடனிருந்த பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்று - திருமண வயதை எட்டாத சட்டவிரோத புருஷன் காவல்துறையில் புகார் அளித்துள்ளாராம்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்களாம், உயரதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்துள்ளார்களாம். இதையெல்லாமா காவல்துறை ஒரு வழக்காக எடுத்து விசாரிக்கும்? இனிமேல் இதுபோன்ற (!) இன்னும் என்னென்ன வழக்கையெல்லாம் விசாரிப்பார்களோ!

இந்த நிகழ்வு குறித்து ஒரு பத்திரிகை "மனைவியை மீட்டுதர கோரி கணவன் போலீசில் புகார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி இதோ:

"தர்மபுரி : தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், தனது மனைவியை மீ்ட்டு ‌தருமாறு தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்தாண்டு நவம்பர் மா‌தம் 7ம் தேதி, தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் இளவரசன் - திவ்யா காதல் கலப்பு திருமணம் ‌செய்துகொண்டதன் காரணமாக, பெரும் கலவரம் வெடித்தது. 300க்கு மேற்பட்ட வீடுகள் ‌தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனிடையே, திவ்யாவின் தந்தை நாகராஜனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கலவரம் மேலும் பரவ காரணமானது. மாநில அரசு சார்பில், இச்சம்பவத்தில் பாதி்‌க்கப்பட்டவர்‌களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திவ்யா கணவர் இளவரசன் மற்றும் மாமனார், மாமியாரோடு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. இதனிடையே, தனது மனைவியை உயிருடன் மீட்டு தருமாறு இளவரசன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன."

பத்திரிகை செய்திகள்:

1. தினமலர்: "மனைவியை மீட்டுதர கோரி கணவன் போலீசில் புகார்"

2. நக்கீரன்: "தர்மபுரி நத்தம் காலனியில் பதட்டம் : காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்"

தொடர்புடைய சுட்டி:

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?