Pages

Saturday, October 02, 2010

அயோத்தி: நடந்தது இதுதான்!

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குரியதா அல்லது போற்றுதலுக்குரியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

8 comments:

Anonymous said...

Good analysis.

Sridhar

Unknown said...

எது எப்படியாயினும் மேலும் சில உயிர்கள் பலியாகி விடுமோ என்ற பயம் அனைவரின் மனதையும் உறுத்திக்கொண்டிருந்தது உண்மை.

பரணீதரன் said...

அயோத்தி பற்றி சொல்லி இருக்கும் ஏழு கருத்துகளும் மிக மிக உண்மை

அஸ்மா said...

உண்மைக்கு முரணில்லாத மிகச் சரியான இடுகை. தொடரட்டும் உங்கள் பணி!

திருபுவனம் வலை தளம் said...

தீர்ப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினாலும்
இன்னும் முஸ்லிம்கள் அமைதியாய் இருப்பது தங்களை போன்ற நடுநிலைவாதிகளின் அன்பும் ஆதரவும் இருப்பதும் இன்னும் இந்த நாட்டை நேசிப்பதுமே காரணமாகும்
www.newstbm.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

இதுபோன்ற விபரங்களறியா எங்களை போன்றவருக்கும்
உண்மையை விளக்கியுள்ளீர்கள் நன்றி..

இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.//

என்ற ஐயத்தை ஏற்படுதிவிட்டதே இத்தீர்ப்பு

Anonymous said...

பாபரின் உயிலில் உள்ள மதச்சார்பின்மை,பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ,அவரின் சிறந்த அரசாற்றலை தெரிவிக்கிறது.ஐந்து நூற்றாண்டுகள் கழித்தும் தற்கால அரசுகளிடம் அது இல்லாதது இவர்களின் முதிர்ச்சியின்மை அறியமுடிகிறது.
-சேகு

adirai....... said...

நல்ல விமர்சனம், உண்மையை மூடிமறைக்க முயலும் அன்பர்களுக்கு நல்ல பதிலடி. வாழ்த்துக்கள்.

மேலும் கீழே உள்ள சுட்டிக்கு சென்று பாருங்கள் முன்று கேள்விகள் உள்ளது,

http://adiraimujeeb.blogspot.com/2010/10/13.html

முப்பத்து மூனு கோடியே முப்பத்து மூனு லட்சத்து முப்பத்து மூவாயிரத்து முன்னூற்றி முப்பத்தி மூன்று நீதிபதிகள் வந்தாலும் உறுப்படியான தீர்ப்பு சொல்ல முடியாது