Pages

Saturday, June 04, 2011

உலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5


மனித வாழ்க்கையின் ஆதாரமான சுற்றுச்சூழல் காப்பாற்றப்படுவதில் தான் நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்கிறது. 


"இந்த பூமி எல்லோரது தேவைகளையும் நிறைவு செய்யும், ஆனால் எல்லோரது பேராசையையும் பூமியால் நிறைவேற்ற முடியாது" என்றார் அண்ணல் காந்தி.  


"இந்த உலகம் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்து அல்ல. மாறாக, நமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் வாங்கியிருக்கும் கடன். அதனை அவர்களுக்கு பாதுகாப்பாக விட்டுச்செல்ல வேண்டியது நமது கடமை" என்கிறது ஒரு கென்ய முதுமொழி.

1972 ஆம் ஆண்டில் உலகளாவிய முதல் சுற்றுச்சூழல் மாநாடு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூடியதைக் குறிக்கும் வகையில் ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
நோபல்அமைதி பரிசுபெற்ற 'பசுமைப்போராளி' வங்காரி மத்தாயுடன் நான் - இடம், கென்யா

2011 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக "காடுகள்: உங்கள் சேவையில் இயற்கை" என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இடம் காடுகளாக உள்ளது. பூமியின் சுவாசப்பைகளாக கருதப்படும் காடுகள் மனிதனுக்கு இன்றியமையாத கொடைகளை அளித்து வருகிறது. சுமார் 160 கோடி மக்கள் தமது வாழ்வாதாரமாக காடுகளைக் கொண்டுள்ளனர். கரியமில வாயுவை உறிஞ்சி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய பணியில் காடுகளே முன்நிற்கின்றன.

உலகின் 50% மாநகரங்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்பவை காடுகள்தான். மண்வளம் காத்தல், புயலின் வேகத்தைக் குறைத்தல், வெள்ள்ச் சேதத்தை தடுத்தல் எனப் பல பணிகளைக் காடுகள் செய்கின்றன. உலகின் உயிரின வளத்தைக் காப்பதிலும் காடுகளே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காடுகள் ஆண்டுக்கு 1 கோடியே 30 லட்சம் எக்டேர் பரப்பளவுக்கு அழிந்து வருகின்றன. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் நாள் செய்தி ஆகும்.

5 comments:

கூடல் பாலா said...

நினைவூட்டியதற்கு நன்றிகள் .......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மரம் வளர்ப்போம்..
மனிதம் வளர்ப்போம்..

ராம்ஜி_யாஹூ said...

டோனி மது விளம்பரத்தில் நடித்ததற்கு கண்டனப் போராட்டம் சென்னையில் திரு அருள் தலைமையில் நடந்தது என்ற செய்தி வந்தது கடந்த மாதத்தில். அந்த அருள் தாங்கள் தானா

அருள் said...

@ ராம்ஜி_யாஹூ

ஆம்

rathinapugazhendi said...

வணக்கம் அருள் உங்கள் படைப்புகளை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன் . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தொடர்க பணிகள். வாழ்த்துகள்