Pages

Tuesday, January 03, 2012

தி இந்து நாளிதழுக்கு ஏன் இந்த மலையாளக் கொலைவெறி?


இன்றைய (3.1.2012) தமிழ் பத்திரிகைகளையும் தி இந்து ஆங்கில நாளிதழையும் ஒப்பிட்டு பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. 

தி இந்து சென்னையிலிருந்து வெளியிடப்படுகிறதா? அல்லது திருவனந்தபுரத்திலிருந்து வெளியிடப்படுகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது.
தினத்தந்தி 

தினத்தந்தி நாளிதழின் முதல்பக்க தலைப்புச் செய்தி:

"கேரள அரசின் புகார் நிராகரிப்பு - முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது. நீதிபதி ஆனந்த் கமிட்டியிடம் நிபுணர்குழு அறிக்கை."

தினமணி

தினமணி நாளிதழின் முதல்பக்க இரண்டாம் தலைப்புச் செய்தி:
 "அணைக்கு ஆபத்து இல்லை - தமிழகம் விளக்கம்."

THE HINDU

தி இந்து ஆங்கில நாளிதழின் முதல்பக்க தலைப்புச் செய்தி:

"New dam is the only solution, says Kerala"

தி இந்து ஆங்கில நாளிதழின் முதல்பக்க இரண்டாம் தலைப்புச் செய்தி:

"Kerala slams attitude of dam panel's technical members"

தி இந்து ஆங்கில நாளிதழின் நடுப்பக்க சிறப்புக் கட்டுரை:

"The case for a new Mullaperiyar dam, N. K. PREMACHANDRAN"

தி இந்து நாளிதழுக்கு ஏன் இந்த மலையாளக் கொலைவெறி?

தொடர்புடைய சுட்டிகள்:


முல்லைப்பெரியாறு 'மலையாள' கட்டுக்கதைகள்

9 comments:

எச்.பீர்முஹம்மது said...

நண்பரே,

ஹிந்து மலையாள சார்பு நிலைபாட்டை எடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் அதன் முக்கிய பொறுப்புகளில் கேரளத்தவர்கள் இருக்கிறார்கள்.இன்னொன்று இந்தியாவில் கேரளாவில் தான் வாசகர்கள் அதிகம். குறிப்பாக இந்து பத்திரிகையின் வாசகர்கள் தமிழ்நாட்டை விட அங்கு அதிகம். அங்கு தான் அதிகம் விற்பனையாகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அசின் ஆப்பிள் கடித்த செய்தி இல்லாவிட்டால் நம்மவர்கள் எந்த பத்திரிகையையும் வாங்குவதில்லை. தினமணி போன்ற பத்திரிகை என்ற ஒன்று இருப்பதே அநேகம் பேர்களுக்கு தெரியாது.

தமிழ்மலர் said...

இந்து நாளிதழில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_21.html

anandrajah said...

சரியாச்ச் சொன்னீங்க பீர் முஹம்மத் சார்..! தமிழனுக்கு அணை ஒரு பிரச்சினை இல்லை..! ரஜினி படமும் அனுஷ்கா படமும் தான் தமிழனின் வாழ்வுச்சூழல்..!

rajamelaiyur said...

//ஆனந்த் ராஜ்.P சொன்னது…
சரியாச்ச் சொன்னீங்க பீர் முஹம்மத் சார்..! தமிழனுக்கு அணை ஒரு பிரச்சினை இல்லை..! ரஜினி படமும் அனுஷ்கா படமும் தான் தமிழனின் வாழ்வுச்சூழல்..!
//

அப்ப போராட்டம் நடத்துனவங்க தமிழன் இல்லையா ? தான் இனத்தையை குற்றம் சொல்லும் பழக்கத்தை விடலாமே ..

Anand said...

மலையாள கும்பல்கள் வேளை செய்யும் இந்துவில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

PUTHIYATHENRAL said...

பார்பனர்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவை ஆள்வது மலையாளிகளே. இவர்கள் இல்லாதா அதிகார வர்க்கம் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவின் அனைத்து துறைகளிலும் இவர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். மலையாளி ஜாதி, மதத்தை மறந்து மலையாளி என்று ஒன்று சேர்ந்து கொள்வான் ஆனால் அது தமிழர்கள் இடத்தில் இல்லை. அதனாலேயே தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழர்களுக்கு விரோதமாக தினமலராலும், தினமணியாலும், ஹிந்து போன்ற பத்திரிக்கைகளாலும் எழத முடிகிறது. நல்ல பதிவு நன்றி.

Barari said...

நம் இனத்தை குறை சொல்லவில்லை நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.நண்பர் ராஜா அவர்களே/

jayakrishnan said...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு , பிற்படுத்தப்பட்டு கிடந்த தமிழர்களிடம் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகப்பெரியது . நிச்சயமாக தெளிவாக சிந்திக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துதான் வருகிறது . இந்த வேகத்தை விரைவு படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கலாமே!தொடர்ந்து நாமே தமிழர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைப்பதற்கு பதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்கலாமா?

எனது பதிவு said...

நண்பர் பீர் கூறுவது போல் தான் நம்மில் பலரின் யதார்த்த நிலை!