Pages

Wednesday, April 03, 2013

விஜய் டிவி நீயா நானா விரும்புவது இதைத்தானா? கௌரவக் கொலை வேண்டாம் - காதல் கொலை வேண்டுமா?

சாதியின் பெயரால் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்கும் விதமாக ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட்டது. இதற்காக 'கௌரவம்' என்கிற திரைப்படத்தை இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் எடுத்துள்ளாராம்.

நல்ல விடயம்தான். கௌரவக் கொலைகளை நாம் ஆதரிக்கவில்லை. அதனை ஊக்கப்படுத்தவும் இல்லை. இத்தகையக் கொடூரங்களை நாம் எதிர்க்கிறோம். 

அதே நேரத்தில் காதல் திருமணம் செய்பவர்களைக் கௌரவக் கொலைசெய்வது போலவே - அப்பாவிப் பெண்களிடம் காதலை திணிப்பது, கட்டாயப்படுத்துவது, பள்ளி, கல்லூரி செல்லும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது, மிரட்டுவது, சடையைப் பிடித்து இழுப்பது, தட்டிக்கேட்பவர்களை தாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காட்டி மிரட்டுவது என பலவிதமான அராஜகங்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். 

இதற்காகவும் விஜய் டிவி நிகழ்ச்சி நடத்த வேண்டும். பிரகாஷ் ராஜ் படம் எடுக்க வேண்டும். அதற்கான ஒரு சம்பவம் கீழே:


"இளம்பெண் கிண்டலை தட்டிக் கேட்ட தந்தையை கொன்றோர் மீது நடவடிக்கை" - மருத்துவர் இராமதாசு அறிக்கை

"காஞ்சிபுரம் மாவட்டம்  செங்கல்பட்டை  அடுத்த  பாலூர் வெங்கடாபுரம் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை  தட்டிக்கேட்ட  தந்தை கொடூரமான முறையில் அடித்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

திருப்பதி  திருமலை கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும்  ராமன் குருக்கள் என்பவர் தமது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி திதி கொடுப்பதற்காக செங்கல்பட்டை அடுத்த பாலூர் வெங்கடாபுரத்தில் உள்ள தமது மூத்த மகளின் வீட்டிற்கு வந்திருக்கிறார். திதி கொடுத்து முடிந்த பின்னர் தமது திருமணமாகாத இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் 5 வயது பேத்தி அட்சயஸ்ரீ ஆகியோருடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது வெங்கடாபுரம் காலனியை சேர்ந்த சில இளைஞர்கள் பத்மஸ்ரீ மற்றும் அட்சயஸ்ரீயை கிண்டல் செய்ததுடன், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளனர். இதை ராமன் குருக்கள் தட்டிக் கேட்ட போது, ''இது எங்கள் பகுதி இங்கு வந்தால் இப்படித்தான் செய்வோம். நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ'' என்று கூறியுள்ளனர்.
அப்பாவி பெண்ணிடமும், சிறுமியிடமும்  இப்படி முறை தவறி நடந்து கொள்வது சரியா? என ராமன் குருக்கள் கேட்டபோது அவரை அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி  பத்மஸ்ரீயும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பயனின்றி ராமன் குருக்கள் உயிரிழந்தார். பத்மஸ்ரீயின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக 16 தையல் போடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

சாலையில் சென்ற அப்பாவி பெண்களை பாலியல் சீண்டல் செய்ததும், அதை தட்டிகேட்ட தந்தையை அடித்து கொலை செய்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காலனிகள் வழியாக செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருவதையும் , அதை தட்டிக் கேட்பவர்கள்  தாக்கப்படுவதையும்  பலமுறை நான் சுட்டிக்காட்டியிருப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளேன். ஆனால் இதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

"நள்ளிரவு 12 மணிக்கு எந்த அச்சமும் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக வெளியில்  நடமாடும் நிலை என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத் தான் இந்தியா உண்மையான  சுதந்திரம் அடைந்ததாக கருதுவேன்" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். ஆனால் பகலிலேயே பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலை இருப்பதை பார்க்கும்போது இந்தியா இன்னும் உண்மையான விடுதலை அடையவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

இத்தகைய  சமூக சீர்கேடுகள் தொடர்வதை பார்க்கும்போது  நமது  மாநிலம் எங்கே செல்கிறது என்ற கவலையும், அச்சமும் தான் ஏற்படுகிறது. ஒரு சமுதாயத்தினரால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுவதும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும் தொடர்ந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

எனவே, பாலூர் வெங்கடாபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்து தாக்கியதுடன், அதை தட்டிக் கேட்ட தந்தையை கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்து நீதிபதி வர்மா குழு பரிந்துரையின்  அடிப்படையில்  இயற்றப்பட்ட சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இளம்பெண்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் எதிராக இத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... மறுப்பதற்கில்லை... இப்போதைக்கு தானே பெண்கல்வி வளர்ந்துள்ளது... அவர்களின் அச்சமில்லா ஆழ்ந்த கல்வியால் இந்த நிலை மாறும்... மாற வேண்டும்... மாறியே தீரும்...

Anonymous said...

ikkoduncheyalai seidha akkodiyavargalai kadumayaaga thandikkavendum
surendran

Unknown said...

இது பதிவிற்கும் விஜய் டிவி-க்கும் என்ன சம்பந்தம்?

அருள் said...

@vijayakumar parameswaran கூறியது...
// பதிவிற்கும் விஜய் டிவி-க்கும் என்ன சம்பந்தம்?//

உங்களது பெயரில் விஜய் இல்லையா? அதுபோலத்தான்.

புரட்சி தமிழன் said...

கிராமத்தில் உள்ள இளைஞர்கள் செய்தனர் என்றுதான் சொல்லவேண்டும் அது எப்படி காலனி என்று குறிப்பிடலாம்? வன்னியர்கள் யாராவது தப்பு செய்தால் மட்டும்தான் அவர் வன்னியர் என்று சொல்லவேண்டும்.

அருள் said...

புரட்சி தமிழன் கூறியது...

//வன்னியர்கள் யாராவது தப்பு செய்தால் மட்டும்தான் அவர் வன்னியர் என்று சொல்லவேண்டும்.//

நீங்கள் சொல்வதுதானே இப்போது நடைமுறையாக இருக்கிறது.

தருமபுரியில் தலித் அல்லாத பல சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் - அங்கு வன்னியர் சங்கம் கலவரம் செய்ததாகக் கூறினார்கள்.

இப்போது காலனி என்று சொல்வது மட்டும் நெருடலாக இருக்கிறதா?

உங்களுக்கு வந்தால் இரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?