Pages

Thursday, May 02, 2013

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜாமீன் இல்லை - பழைய வழக்குகளை தூசுதட்டி தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டம்! வன்னியர்களுக்கு எதிராக மாபெரும் சதி! 


மரக்காணத்தில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வன்னியர் அவர்களின் குழந்தை!
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கினை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று (2.5.2013) தாமதமாக மதியம் ஒரு மணிக்கு மேல் வந்துள்ளார்.

'தான் புதிதாக வந்துள்ளதால் இந்த வழக்கு குறித்து விவரங்கள் எதுவும் தெரியாது. நாளை தான் முடிவெடுக்க முடியும்' என்று கூறியுள்ளார். நாளையும் காலதாமதமாக வந்து வேறு காரணம் சொல்லவும், அல்லது வேறு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய வழக்குகளை தூசுதட்டி எடுத்து மீண்டும் மருத்துவர் அய்யா அவர்கள் மீது வழக்குபோட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் இருக்கின்றனவோ, அந்த நீதிமனறங்களுக்கெல்லாம் மருத்துவர் அய்யா அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வாழ்க ஜனநாயகம், வாழ்க மனித உரிமைகள். 
மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா?

4 comments:

Unknown said...

75 வயதிற்கு மேல் ஆகும் ஒரு மூத்த தலைவருக்கு இழைக்கபடும் அநீதி -
செய்தி: அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர்கள் இன்சுலின் ஊசி போட்டனர். அவருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து காலையில் 2 சப்பாத்தியும் குர்மாவும், மதியம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. அவர் வைத்திருந்த பிஸ்கட்டுகளை அவ்வப்போது சாப்பிட்டார்.
திருச்சியில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மின்தடை ஏற்படுவதால் அவர் புழுக்கத்தில் அவதிப்படுகிறார். அவர் தனக்கு முதல் வகுப்பு வேண்டும் என்று இதுவரை கேட்வில்லை. சிறையில் காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து வருகிறார். சிறையில் ஏற்கனவே 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

தருமி said...

வாழ்க ஜனநாயகம், வாழ்க மனித உரிமைகள்.

அன்பு said...

ராமதாஸுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமையை பற்றி கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

Unknown said...

இந்த பழிவாங்கும் செயலுக்காக வரும் நாடாளுமன்ற தேர்ததலில் அம்மாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.