Pages

Friday, September 02, 2011

ராஜீவ் கொலை: மர்மம் விலகுமா?

ராசீவ் காந்தியைக் கொலை செய்தது யார்? இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து கீழே அளிக்கப்பட்டுள்ள காணொளி நேர்காணல் இணைப்பை பாருங்கள்:  

1. கொலை நடப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக எடுக்கப்பட்ட நிழற்படத்தில் பொட்டு இல்லாமல் இருக்கும் தணு என சொல்லப்படுகிற பெண், கொலை நடந்தபின் துண்டிக்கப்பட்ட அதே பெண்ணின் தலையில் பொட்டு வைக்கப்பட்டிருப்பது எப்படி?

2. கொலை சம்பவத்தின் ஒளிப்பதிவு நாடாவை வாங்கிய அப்போதைய ஐ.பி. இயக்குநர் எம்.கே.நாராயணன் அதனை இன்னமும் திருப்பித்தராதது ஏன்? அதன் மூலம் மறைக்கப்பட்டது என்ன?

3. அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராசீவ் கொலை வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது எப்படி? இதுகுறித்து தா.பாண்டியன் கேட்டபோதும் ப.சிதம்பரம் அதை அலட்சியப்படுத்தியது எதற்காக?

4. ராசீவ் கொலை தொடர்பான விசாரணை தொடங்கும் முன்பாகவே - கொலை நடந்த இரவே, கொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சாமி அவசரமாக அறிவித்தது ஏன்?

5. திருப்பெரும்புதூரில் அவசரமாக ராசீவ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதில் மார்கரட் ஆல்வாவின் பங்கு என்ன? மார்கரட் ஆல்வாவின் சொந்தமாநிலமான கருநாடகத்தை சேர்ந்த கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப் பட்டதன் பின்னணி என்ன? அவர் சில நபர்களைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார் என ரகோத்தமன் கூறுவதை ஏன் விசாரிக்கவில்லை?

இப்படியாக விடைதெரியாத பல கேள்விகளை எழுப்புகிறது இந்த இணைப்பு

5 comments:

Prabu Krishna said...

கண்டிப்பாக பார்க்கிறேன் நண்பரே

ராஜ நடராஜன் said...

சுப்ரமணியன் சுவாமியின் கலந்துரையாடல்.

http://www.youtube.com/watch?v=E1CC82n0iI0

சுதா SJ said...

அத்தனையும் நேர்மையான நடு நிலைவாதிகளை
உறுத்தும் கேள்விகளே.....
பதில் சொல்ல வேண்டியவர்கள் தான்
பொத்தி கொண்டு இருக்கிறார்கள்...

சுதா SJ said...

சம்மந்த பட்டவர்கள்
தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் (இருக்கா...!)
இதற்கான பதிலை தரலாமே.......

கோகுல் said...

கேட்கப்படும் கேள்விகள் இன்னமும் விடை காணப்படாதவை!ஆனால் கானப்படவேண்டியவை!