Pages

Wednesday, October 19, 2011

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியின் பிறந்த ஊர் எது?
சாமி நாகப்பன் படையாட்சி
இது ஒரு விடைதெரியாத கேள்வி. இதற்கு விடை தேடும்போது, பதிலைவிட கேள்விகளே அதிகம் தென்படுகின்றன.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். "மறைக்கப்பட்ட இந்த தியாகத்தினை" விரிவாக மூன்று கட்டுரைகளில் எழுதியுள்ளேன் (இங்கே காண்க):

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர். சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேருமே மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்

வடக்குவாசல் இதழில் நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

"....தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வந்த காந்தியடிகள், சென்னைக்கு வந்ததும் முதலில் பார்க்க விரும்பிய இடம் தியாகச்சுடரின் தில்லையாடி கிராமத்தைத்தான்! தில்லையாடி கிராமத்தில் சந்தித்த மக்களைப் பார்த்துக் கலங்கிய காந்தியடிகள் "இவர்கள் எல்லோரும் யார்! இவ்வளவு அவலமாக கந்தல் துணி அணிந்து ஓட்டைக் குடிசைகளில் வாழ்கிறார்களே!'' என்று வருத்தத்துடன் வினவினார்.


"இவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் உங்களுடன் பங்கேற்றவர்களான வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் ஆகியவர்களின் உறவினர்கள்'' என்று கூறினர்.


நாகப்பனின் மனைவியைச் சந்தித்தார். நாகப்பனின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தார். "உங்களால் தான் என் கணவர் மரணமடைந்தார்'' என்று நாகப்பனின் மனைவி அழுது புலம்பினார்.  காந்தியடிகள் கலங்கிய மனதுடன் "சகோதரியே, நீயும், உன் குழந்தைகளும் என்னுடன் வந்து சபர்மதி ஆசிரமத்திலேயே தங்கிவிடுங்களேன்'' என்று அவர்களை அழைத்தார்.


ஆனால் அந்த அம்மையார் உடன்படவில்லை. பின்னர் அந்த கிராம மக்கள் அவரை சமாதானப் படுத்தி நாகப்பனின் இரு குழந்தைகளில் ஒருவரை காந்தியடிகளுடன் அனுப்பி வைத்தனர்.  காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்குச்சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் சபர்மதி ஆசிரமத்தில் மரணமடைந்தான்....." என்று வடக்கு வாசல் இதழில் நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் எழுதியுள்ளார்.

சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் மட்டுமல்லாமல், "1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் 'சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்' என்று கூறிய ஆறு தமிழர்கள் - பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பினார், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்தார்" என்று எனுகா எசு. ரெட்டி என்பவர் குறிப்பிடுகிறார்.

காந்தி சந்தித்தது யாருடைய விதவை மனைவி? காந்தி யாருடைய வீடுகளுக்கெல்லாம் சென்றார்?

காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். 1915 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார்.

அப்போது செம்மனார்கோவில், தரங்கம்பாடி, ராமாபுரம், தில்லையாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு போனதாக காந்தி குறிப்பிடுகிறார்.

மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது.

13.5.1915 அன்று காந்தியின் நண்பர் கல்லன்பெக்கிற்கு எழுதிய கடிதத்தில் - "இரண்டு விதவைகளையும் சந்தித்துவிட்டேன். ஒருவரது மகனை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்று கூறியுள்ளர்.

4.5.1915 அன்று ஏ.எச். வெஸ்ட் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் - "நான் செல்வனின் விதவை மனைவியைப் பார்த்தேன், அவரை என்னுடன் வருமாறு கேட்டதற்கு மறுத்துவிட்டார். அவருக்கு மாதம் 5 ரூபாய் அனுப்புவேன். அவருடைய இளைய மகனை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்." என்று கூறியிள்ளார். அந்த இளைய மகனை "நாய்க்கர்" என்று அவர் அழைக்கிறார்.

6.5.1915 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் "நான் என்னுடன் செல்வனின் மகனை அழைத்து வருகிறேன். உனக்கு அவனைத் தெரியும். போனிக்சு பண்ணையில் துறுதுறுப்பாக இருந்தானே, அவன் தான் அது" என்று குறிப்பிடுகிறார்.

நாய்க்கரின் தந்தை தியாகியா?

எனுகா எசு. ரெட்டி "செல்வன் மகன் அந்தோணிமுத்துவை" காந்தி தன்னுடன் அழைத்து சென்றதாகக் குறிப்பிடுகிறார். காந்தி "செல்வன் மகன் நாய்க்கரை" அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஒருவேளை - அது "அந்தோணிமுத்து நாய்க்கர்" என்று கூட இருக்கலாம்.

"தென் ஆப்பிரிக்காவில் ஃபோனிக்சு தோட்டத்தில் இருந்த துடுக்கான பையன் நாய்க்கர்" என்கிறார் காந்தி. ஆனால், "செல்வன் என்கிற ஒருவர் உயிர்த்தியாகம் செய்ததாக" எந்த இடத்திலும் காந்தி குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை.

செல்வன் நவம்பர் 1913 இல் சுட்டுக்கொல்லப்பட்டதாக எனுகா எசு. ரெட்டி குறிப்பிடுகிறார். காந்தி 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று சிறையிலிருந்து வெளிவந்தார் - 1914 சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார். இடைப்பட்ட ஏழு மாத காலத்தில் நாய்க்கர் ஃபோனிக்சு பண்ணையில் வளர்ந்தாரா? அல்லது "செல்வன்" என காந்தி குறிப்பிடுவது வேறு நபரா?

நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் வடக்குவாசல் இதழில் கூறுவது போல காந்தி நாகப்பன் மனைவியை சந்தித்தாரா? ஆம் எனில், 18 வயதில் தென் ஆப்பிரிக்காவில் உயிர்நீத்த நாகப்பனுக்கு தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகள் இருந்திருக்க முடியுமா? அல்லது, காந்தி சந்தித்த இரண்டு தியாகிகளின் விதவை மனைவியரில் வேறு ஒருவர் நாகப்பன் மனவியா?

நாகப்பன் ஊருக்கு காந்தி சென்றாரா? நாகப்பன் உறவினர் யாரையாவது பார்த்தாரா?

எனது பதிவை படித்துவிட்டு திரு. மு. இளங்கோவன் அவர்கள் "விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் (தன்வரலாறு) நான் பதிப்பித்துள்ளேன். துரையனார் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். தாங்கள் குறிப்பிடும் போராட்டத்தில் 16 வயது இளைஞராகக் கலந்துகொண்டு காந்தியுடன் சிறையில் இருந்தவர்.


விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலில் - நாகப்பன் மாயவரம் தாலுக்காவைச் சார்ந்தவர். நாகப்பன் காந்தியடிகளுக்கு உண்மையான நண்பரும் தியாகியுமாவர் என்று குறிப்பு உள்ளது. 1913 இல் காந்தியடிகள் இந்தியா வந்தபொழுது நாகப்பனின் உறவினரைக் கண்டு ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் உள்ளது. துரையனார் அடிகள் நாகப்பனை அறிவேன் என்று எழுதியுள்ளார். துரையனாரை விட சற்று வயது அதிகம் என்கின்றார். துரையனார் அடிகள் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்" - என்று திரு. மு. இளங்கோவன் அவர்கள் கூறினார். (காந்தி வந்ததாகக் குறிப்பிடும் ஆண்டு 1915 ஆக இருக்கலாம்)

இனி என்ன?

1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தபோது செம்மனார்கோவில், தரங்கம்பாடி, ராமாபுரம், தில்லையாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு போனதாக காந்தி குறிப்பிடுகிறார். நாகப்பன் ஊருக்கு காந்தி சென்றாரா? நாகப்பன் உறவினர் யாரையாவது பார்த்தாரா?


ஒரு மாபெரும் தியாகியின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறேன்
(நான் எனது முதல் வெளிநாட்டு பயணமாக சென்ற ஊர் ஜொகனஸ்பர்க், அதே ஊரில்தான் சாமி நாகப்பன் படையாட்சி தியாகியானார். நான் அங்கு சென்ற நாட்களில் - 2002 - அதுகுறித்து அறிந்திருக்கவில்லை)



தவறாமல் இதையும் இதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள்:
மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

ஆதாரம்:


1. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY, 1995
by Sanchar Publishing House, New Delhi
2. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14
3. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 15
4. தியாக தீபம் தில்லையாடி வள்ளியம்மை, நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன்

51 comments:

இராஜராஜேஸ்வரி said...

நெகிழவைக்கும் பகிர்வுகள்.

ம.தி.சுதா said...

அறியாத வரலாறொன்றை ஆணித்தரமாய் உரைத்ததற்கு நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

M.R said...

அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

Advocate P.R.Jayarajan said...

சிரத்தையான, ஆழ்ந்த ஆய்வு.
வாழ்த்துகள் !

Muthukumar Arumugam said...

It is an excellent historical collection. Thanks for sharing.

A.Muthukumar, Coimbatore

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

ராஜ நடராஜன் said...

அருள்!அருமையான ஆவணத் தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.மனமார்ந்த நன்றி.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

நான் அறியாத பல விஷயங்கள் உங்களது வலை மூலம் தெரிந்து கொண்டேன்.தங்களது படைப்புகள் மேலும் வளரட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு.

Thenammai Lakshmanan said...

நல்ல பதிவு. தமிழர்கள் நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் முன்நின்று தோள் கொடுப்பார்கள். உயிரும் கொடுப்பார்கள் என நெகிழ வைத்த பதிவு. உங்கள் அரிய முயற்சி நிறைவேற வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

சிரத்தையான, ஆழ்ந்த ஆய்வு.
வாழ்த்துகள் !

சத்ரியன் said...

தேய்ந்த வரலாற்றை தேர்ந்து பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

கடைசி வரி கேள்விக்கு விரைவில் பதிலை நீங்களே பதிவிடுவீர்கள் என நம்புகிறோம்.

சிந்தையின் சிதறல்கள் said...

தெரிந்திடாத வரலாறு கூறும் அரிய படைப்பு நன்றிகள்

Unknown said...

முன்னோரின் வரலாற்றின் மறைந்துள்ள பக்கங்களை வெளிக்கொணரும் சிரத்தை மிக்க பதிவுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

கும்மாச்சி said...

நல்ல பகிர்வு ஸார், அறியாத வரலாற்றை பகிர்ந்ததற்கு நன்றி.

T Senthil Durai said...

நல்ல தகவல் .
நன்றி

செந்தில்


www.tamilepaper.blogspot.com

Muruganandan M.K. said...

இத்தகைய அரிய தகவல்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Unknown said...

அருள்,
மறைக்கப் பட்ட வரலாற்று உண்மைகளைத் தேடி பகிர்ந்த்திருகிறிர்கள். இதுதான் இன்றையத் தேவையாவும் இருக்கிறது.

அம்பாளடியாள் said...

இதுவரை அறிந்திராத ஓர் உண்மை. தகவல் நெஞ்சை நெகிழவைத்தது .வாழ்த்துக்கள் உங்கள் ஆய்வு மேலும்
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .............

சி.பி.செந்தில்குமார் said...

நான் படிக்காத தகவல், நன்றிகள்

Anonymous said...

அருமையானதொரு பகிர்வு தோழ்ரே!
நன்றி. பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

அட! இந்த தில்லையாடி வள்ளியம்மை நினைவாகத்தான் தமிழ்நாடு அரசு கோ ஆப்டெக்ஸ் கட்டிடத்துக்குப் எயர் சூட்டி இருக்கா!!!!!

தகவல்கள் அனைத்தும் எனக்குப் புதுசு. நீங்க குறிப்பிட்டுள்ளதுபோல் கேள்விகளே மனதில் முளைக்கின்றன!

பால கணேஷ் said...

தெரிந்திராத, அரிய விஷயங்கள் தந்துள்ளீர்கள். அருமையான பகிர்வு. நன்றி ஐயா...

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை புத்தகமாக வெளியிடுங்கள்.வாசகர்களுக்காக தங்கள் எழுத்து நடையினை கொஞ்சம் எளிமைப் படுத்துங்கள்.

Unknown said...

பலரும் அறியாத செய்தி
அறியச்செய்தீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

ஹேமா said...

மறைக்கப்பட்ட அல்லது மறைந்த சரித்திரங்களை வெளிக்கொண்டு வருகிறீர்கள்.நல்லதொரு சேவை.வாழ்த்துகள் !

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

நல்ல பகிர்வு.
http://pothinimalai.blogspot.com

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சரித்திரத்தில் பிரபலமாவதற்க்கும் சில மச்சங்கள் தேவையை இருக்கிறது

SATYA LAKSHMI said...

Fantastic and informative posting. Thanks for sharing.

Unknown said...

நல்ல அருமையான பகிர்வு

Mohamed Faaique said...

இதுவரை அனேகர் அறியா தகவல்களை அறியத் தந்து இருக்கிறீர்கள். நன்றி..

Anonymous said...

அரிய தகவல்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

kaialavuman said...

நல்ல ஆய்வு. தொடரட்டும் உங்கள் பணி.

N.H. Narasimma Prasad said...

நெகிழ வைக்கும் நிகழ்வுகளை பதிவிட்டிருக்கிறீர்கள். பகிர்வுக்கு என் நன்றியும், பாராட்டுக்களும்.

raji said...

அறியாத பல விஷயங்களை வரலாற்றில் அறிந்து கொண்டேன் இன்று.

தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

அருள் said...

இராஜராஜேஸ்வரி, ம.தி.சுதா, MR, Advocate P.R.Jayarajan, Muthukumar Arumugam, Rathnavel, ராஜ நடராஜன் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி, T.V.ராதாகிருஷ்ணன், தேனம்மை லெக்ஷ்மணன் ஆகியோரது வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

அருள் said...

சுவனப்பிரியன்,சத்ரியன்,நேசமுடன் ஹாசிம், ரா.செழியன், கும்மாச்சி, T Senthil Durai, Dr.எம்.கே.முருகானந்தன், அப்பு, அம்பாளடியாள், சி.பி.செந்தில்குமார் ஆகியோரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருள் said...

atchaya, துளசி கோபால், கணேஷ், தி.தமிழ் இளங்கோ, புலவர் சா இராமாநுசம், ஹேமா, கிருபாகரன், நாய்க்குட்டி மனசு, Latha Vijayakumar, வைரை சதிஷ் ஆகியோரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருள் said...

Mohamed Faaique, ரெவெரி, வேங்கட ஸ்ரீனிவாசன், N.H.பிரசாத், raji ஆகியோரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

தெரியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அரிய பதிவு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பசுமைப் பக்கங்கள் என வல்லினம் மிகுந்தால் நன்றாக இருக்கும் நண்பரே!

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

Nice & superb Article

இன்றைய கவிதை said...

அருமையான பதிவு அருண் நன்றி பல


ஜேகே

அருள் said...

மாதேவி, எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங், jmbatcha, இன்றைய கவிதை ஜேகே ஆகியோரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருள் said...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

// பசுமைப் பக்கங்கள் என வல்லினம் மிகுந்தால் நன்றாக இருக்கும் நண்பரே! //

அப்படியே செய்துவிட்டேன். நன்றி

SR said...

மிகவும் வித்தியாசமான கோணம். நன்று.

Anonymous said...

அருமையான பதிவு!வாழ்த்துக்கள் !! அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே !!!

pandian said...

அருள் அவர்களுக்கு வணக்கம். படையாட்சிகளின் சிறப்பான உணர்வுகளை அறிந்தேன். மேலப்பெரும்பள்ளம் - திரு. நாகமுத்து படையாட்சி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து பின் இங்கு வந்து மறைந்துள்ளார். இன்றும் அவர்களின் வாரிசுகள் உள்ளனர். மயிலாடுதுறை வட்டாரத்தில் நிறையபேர் தெ.ஆ.சென்றவர்கள் என்பது உண்மை. தரங்கபம்பாடி வட்டம் மேலப்பெரும்பள்ளம் உள்ளது. நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பிரமாதம் சார்..

suneel krishnan said...

செறிவாக திரட்டப்பட்ட ஆவணங்கள் கொண்ட பதிவு. முக்கியமான விஷயம்.வாழ்த்துக்கள்.தங்கள் பதிவை காந்தி இன்று தளத்திற்கு எடுத்து கொள்கிறோம்.
நன்றி