Pages

Tuesday, October 30, 2012

இலங்கை மீதான ஐநா விசாரணையில் நானும் ஓரணியில் திரளும் தமிழகக் கட்சிகளும்!

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு"  (Universal Periodic Review - UPR) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை அவையில் நடைபெற உள்ளது. இந்த மதிப்பீட்டு விசாரணையின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்களும்,  ஐ.நா.மனித உரிமை ஒப்பந்தங்கள் இலங்கையில் செயல்படும் நிலையும் விவாதத்திற்கு வர இருக்கின்றன.

இலங்கை  மீதான ஐநா விசாரணையில் நான்!

இந்த நிகழ்வில் பசுமைத் தாயகம் சார்பில் திரு. கோ.க.மணி அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராக கொண்டு செயல்படும் பசுமைத்தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இந்த விசாரணையில பங்கேற்க பசுமைத்தாயகம் அமைப் பிற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதனைக் கீழே காணலாம்.
ஓரணியில் திரளும் தமிழகக் கட்சிகள்!

இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்தவிருக்கும் சர்வதேச தமிழ் மாநாட்டிலும்  திரு. கோ.க.மணி அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன்.

வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டிலிருந்து கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டில் ஒன்றிணைய உள்ளனர்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலைக் கீழே காண்க:
மேற்கண்ட நிகழ்ச்சிகள் குறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையை இங்கே காண்க. (இங்கே சொடுக்கவும்)

இந்த அரிய வாய்ப்பை எனக்களித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும் பசுமைத் தாயகம் அமைப்பிற்கும் நன்றிகள் பல.

தொடர்புடைய சுட்டி:


நெருக்கடியில் இலங்கை: ஐநாவில் உலகநாடுகள் சரமாரிக் கேள்வி! இந்தியா மவுனம்!!

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!

7 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள் அருள்.
தங்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் கிடைத்த சிறப்பாக எண்ணுங்கள்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

ராஜ நடராஜன் said...

அருள்!திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்.

நம்பள்கி said...

வாழ்த்துக்கள்! நல்லது இனிமேலாவது நடந்தால் சரி;

அன்பு துரை said...

வாழ்த்துக்கள் அண்ணா...

Anand said...

வாழ்த்துக்கள்.

Vanathi Rayar Senthil Nathan said...

அண்ணா உங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மற்றும் அங்கீகாரம் உலக அளவில், உங்கள் பணியை மேலும் திறம்பட செயல்பட எனது வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்