Pages

Friday, November 02, 2012


ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!

War Crimes Proved, We want Justice!

ஜெனீவா ஐநா அவை முன்பு நான்
ஜெனீவா ஐநா மனித உரிமை அவையிலிருந்து இந்தப் பதிவை எழுதுகிறேன் (2.11.2012). இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பன்னாட்டளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றுள்ளதை கடந்த மூன்று நாள் நிகழ்வுகள் சுட்டுகின்றன. அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 2 ஆகிய நாட்களில் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து துணைக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முதல் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
இலங்கை மீதான ஐநா காலமுறை விசாரணையில் திரு. கோ.க. மணி அவர்கள்
மிகமுக்கிய நிகழவான இலங்கை மீதான காலமுறை விசாரணை 1.11.2012 அன்று மனித உரிமை அவையில் நடந்தது. இதில் இலங்கை அரசின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க 'இலங்கை மனித உரிமையை மதிக்கும் நாடு' என மிகவும் நிட்டி முழக்கி பொய்யுரைத்தார். இதனை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை என்று உடனடியாக அறிய முடிந்தது.

இலங்கை மீதான ஐநா காலமுறை விசாரணையில் திரு. கோ.க. மணி மற்றும் நான்
இலங்கை மீதான விவாதத்தில் 99 நாடுகள் பேசினர். இதில் மிகச்சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுமே இலங்கையைக் கண்டிக்கும் விதமாகவே பேசினர். இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பிலும், இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் தொடர்பாகவும் பெரும்பாலான நாடுகள் கேள்வியெழுப்பின. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகள் செயலாக்கம், இலங்கை நீதித்துறை மற்றும் இலங்கை மனிதஉரிமை ஆணையத்தின் தனித்தன்மை இல்லாத நிலை, பத்திரிகையாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல் என எல்லாமும் கேள்விக்குள்ளானது.

இந்தியாவின் எதிர்பாராத மாற்றம்

இந்த நிகழ்வின் போது நேர்ந்த எதிர்பாராத மாற்றம் என்பது இந்தியாவின் நிலைபாடுதான்.  இலங்கைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 13 ஆவது சட்டத்திருத்தம், வடக்கில் தேர்தல், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை என பலவற்றைக் குறித்தும் சரமாரியாக இந்தியா கேள்வி எழுப்பியது. அளிக்கப்பட்ட 1 நிமிடம் 22 வினாடிகளில் எல்லாக் கேள்விகளையும் இந்தியாவின் சார்பில் பேசியவர் எழுப்பினர்.

உண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பேசினர். இதில் அதிகமாக பேசிய நாடு இந்தியாதான். இந்தியாவின் இந்த புதிய நிலைபாடு தொடர வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எத்ர்பார்க்கிறார்கள் என்பதை இங்கு நிலவும் மனநிலை உணர்த்துகிறது.
இலங்கை அரசின் கண்காட்சி - கொடூரத்தை மறைக்க அப்துல் கலாம்.
ஐநா அவையின் இந்த விசாரணையின் போது நுழைவாயிலில் ஒரு கண்காட்சியை இலங்கை வைத்திருந்தது. இதனை ஒருவரும் கண்டு கொள்ளவோ, நம்பவோ இல்லை. இனியும் பன்னாட்டு சமூகத்தை இலங்கை ஏமாற்ற முடியாது என்பதை ஜெனீவா நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


குறிப்பு: மருத்துவர் அய்யா அவர்கள் அளித்த அரிய வாய்ப்பின் காரணமாக, வரலாற்று சிறப்புமிக்க இலங்கை மீதான ஐநா விசாரணையில் நானும் கலந்து கொண்டுள்ளேன். இந்த விசாரணையில் இந்தியாவிலிருந்து அரசு சாராமல் பங்கேற்றுள்ளவர்கள் திரு. கோ.க.மணி அவர்களும் நானும்தான்.

 பின்னர் விரிவாக எழுதுவேன்...

6 comments:

Anonymous said...

பாதிக்கப்பட்ட ஈழ மக்களின் சார்பாய் பேசிய அனைவருக்கும் எம் நன்றிகள். இந்தியாவின் மாற்றம் தொடர வேண்டும். அது தமிழக மக்களின் வாக்குகளை பறிப்பதற்கான நாடகமாய் இருக்கக் கூடாது. இதுவே எம் பேரவா.நன்றி

Unknown said...


"ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!" good

Anonymous said...

அன்பின் திரு.அருள் அவர்களுக்கு,

பாமக நிறுவனர் அய்யா இராமதாசு அவர்களின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையில் தாங்கள் மேற்கொண்ட முயற்சி உள்ளபடியே பெரும் பாராட்டுதலுக்குரியது. இலங்கையின் சிங்களப் பேரினவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து தாங்கள் இயங்கி வருகிறீர்கள். வெறும் பேச்சில் மட்டும் தனித் தமிழீழம் கட்டும் தமிழகத் தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல்பாட்டுக்கு மத்தியில், உணர்வுப்பூர்மான செயல் பங்களிப்பிற்கு எங்களின் ஆதரவு என்றைக்கும் உண்டு. வெற்றியுடன் வாருங்கள்! வீழ்ந்து கிடக்கின்ற நம் இன மக்களின் நம்பிக்கைக்கு ஆதரவான செய்தியைத் தாருங்கள்

இரா.சிவக்குமார்

சம்பூகன் said...

இந்தியாவின் மாற்றத்திற்கு குறிப்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவின் குரல் மற்றும் டெசோ மாநாட்டின் தாக்கம் ஆகியவை முக்கியக் காரணமாகும்.மேலும்,தமிழக அனைத்துக் கட்சிகளும் அளித்த அழுத்தங்களும் காரணமாக இருக்கவேண்டும்.இந்தியாவின் இந்த மாற்றம் தொடரவேண்டுமானால் ஈழச்சிக்கலைப் பொறுத்தவரையில் தமிழக அனைத்துக் கட்சிகளும் தத்தமது சொந்த அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு ஒருமித்த குரலில் ராஜபக்சேவுக்கு எதிராக மட்டுமே செயல்படவேண்டும்.மாறாக யார் என்ன செய்தோம் என்ற லாவணிக் கச்சேரியில் ஈடுபடக்கூடாது.தமிழர்கள் ஈழத்தில் வாழ்விழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழலில் அவர்களை வாழவைக்க உலக நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் அழுத்தம் தரவேண்டும்.இதுவே இப்போதைய உடனடித் தேவை.

MARKET said...

நம் இன மக்களின் நம்பிக்கைக்கு ஆதரவான செய்தியைத் தாருங்கள்

ரிஷி said...
This comment has been removed by a blog administrator.