Pages

Saturday, January 05, 2013

புதுவை பாலியல் வன்கொடுமை: தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் சீரழிக்கப்பட்டால் அது சாதிவெறி ஆகாது!


சம்பவம் 1: சிதம்பரம் - சாதிவெறி 

சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். பரதூர்சாவடி துர்கா. ஒரே கல்லூரியில் படித்த இருவருக்கும் இடையே இருந்த தொடர்பை கண்ட பெண்ணின் குடும்பத்தினர், பையனைக் கொலை செய்துவிட்டனர். கொலை செய்யப்பட்டவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள குடும்பத்தினர் வன்னியர்கள்.

இதற்காக "வன்னியர் சங்கத்தின் தலைவர் ஜெ. குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன்ர் மருத்துவர் இராமதாசு அய்யா ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில்" இந்த கொலை நடந்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தலித் அமைப்பினரும், தம்மை நடுநிலையாளர்கள் என்போரும், மனித உரிமைக்காக பேசுவதாக சொல்லிக்கொள்பவர்களும் கோரிக்கை வைத்தனர். கூடவே, இது வன்னிய சாதிவெறியால் நடந்த கொலை என்றும் சொன்னார்கள்

சம்பவம் 2: புதுவை - சாதிவெறி அல்ல

புதுச்சேரி அருகே உள்ள கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் தினமும் தனி வகுப்புக்காக வந்து சென்றுள்ளார். வில்லியனூர் சென்றுவிட்டு, வீடு திரும்ப மாணவி வழக்கமான தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர், மாணவியின் தாயாருக்கு உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரை விழுப்புரத்தில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அழுத மாணவிக்கு மயக்க மருந்து கலந்த கைக்குட்டையைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் ஓரிடத்தில் நடத்துநரும் அவரது கூட்டாளிகளும் மாணவியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பத்தாம் வகுப்பில் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று நன்கு படிக்கும் மாணவியை காமக்கொடூரர்கள் சீரழித்துள்ளனர். சீரழிக்கப்பட்ட மாணவி 17 வயதே ஆகும் சிறுமி.

பாலியல் வன்கொடுமையால் சீரழிக்கப்பட்ட சிறுமி வன்னியர் வகுப்பை சேர்ந்தவர். இக்கொடுமையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஏற்கனவே வன்னியப் பெண் ஒருவரை நாசமாக்கியவர்தான் என்று கூறுகின்றனர். மேலும், ஒரு கூட்டமாக இத்தகைய நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வை ஒருவரும் சாதி வெறி என்று கூறவில்லை. யார் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூட ஒருவரும் பேசவில்லை.

குற்றச்செயல்களை சமூகத்தோடு தொடர்புபடுத்துவது சரிதானா?

தீவிரவாதம், பயங்கரவாதம், குற்றச் செயல்களை அவை குற்றம் என்கிற அளவில் மட்டுமே பார்ப்பதுதான் நியாயமானது. அதனைக் குற்றம் இழைத்தவர்களின் சமூகத்தோடு தொடர்பு படுத்தக்கூடாது.

ஆனாலும், குண்டு வைத்தவர் இஸ்லாமியர் என்றால் அதை 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்பதும், அதுவே இந்துவாக இருந்தால் வெறுமனே 'தீவிரவாதம்' என்பதும் நாட்டில் நடைமுறையாக இருக்கிறது.

அப்படித்தான், வன்னியர்கள் தொடர்புடைய குற்றங்கள் எல்லாம் திட்டமிட்ட சாதிவெறி, அதுவே தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்புடைய குற்றங்கள் என்றால் அது தனிப்பட்ட நிகழ்வு என்பதுதான் நடுநிலைவாதம்.

வாழ்க நடுநிலைமை! வாழ்க ஜனநாயகம்! வாழ்க மனித உரிமை!

குறிப்பு: புதுச்சேரி காவல்துறையில் மிக முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அதனால்தான் வழக்கைத் திசைதிருப்பி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். மேலும் குற்றம் நடந்த இடம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதே நியாயமாக இருக்கும்.
தொடர்புடைய சுட்டிகள்: 

1. சாதிக்கலவர கொலைகளும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியும்!

2. இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளே சமுதாய கொந்தளிப்புக்கு காரணம்: தீர்வு என்ன?

8 comments:

Vannikumran said...

ippa eng apa poninga dravidam pesum pemningale

Subramanian Lokesh said...

கலைஞர் தான் ஆட்சியை இழந்த கோபத்தை அவருடைய கூட்டணி கட்சியிடம் காட்ட தைரியம் இல்லை. அந்த கோபத்தை நம் தமிழக மக்களிடம் காட்டுகிறார். பல்வேறு சமுதாய மக்கிளிடம் வெறுப்புணர்வு ஊட்டி தனது இயலாமையை காட்டுகிரார். தான் மட்டும் ஏன் கழட்டப்பட வேண்டும் என்று எல்லாரையும் கஷ்டபடுதுகிறார். இதற்காகத்தான் அடிக்கடி " தமிழர்களே தமிழர்களே நீங்கள் கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்" என்று நியபகபடுதுகிறார்.
அவர் உசுபேத்தி வடிவேலுவை ஓரம் கட்டி வைத்தது போல் இப்போது பலரை உசுப்பெத்துகிறார், அவர்களும் இவருடைய ஆட்டத்துக்கு பலியாகி கொண்டிருகிறார்கள்.

Anonymous said...

நீங்கள் வன்னியராக இந்த பதிவை போட்டுலீர்கள்.
முதலில் எதற்காக நடந்தது என்று தான் பார்க்கவேண்டும், அதைபோருத்துதான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் சதிக்காகவே பேசுபவர்கள் எதையுமே சதியை வைத்துதான் முடிவு செய்கிறார்கள்.

Subramanian Lokesh said...

ஆஹா அருமையான கூற்று! எதற்க்காக நடந்தது என்று எண்ணி பார்கவேண்டுமாம்??? ஒரு மாணவி பலவந்தமாக இரண்டு மிருகங்களால் சிதைகபட்டதர்க்கு உள்நோக்கம் இருக்க தேடி பார்க்க வேண்டுமாம்.

இதில் பள்ளி மாணவி சிதைகப்பட்டிருகிறாள், இரக்கமின்றி எப்படி HOTBLOG உங்களால் இப்படி கருத்து சொல்ல முடிகிறதோ தெரியவில்லை? ((முதலில் எதற்காக நடந்தது என்று தான் பார்க்கவேண்டும், அதைபோருத்துதான் முடிவு செய்ய வேண்டும்.)) எதற்காக இப்படி அசம்பாவிதம் நடக்க வேண்டும்??? என்ன உப்பு சப்பில்லாத காரணம் வேண்டும் உங்களுக்கு! என்ன உலக அமைதிகாகவா இப்படி ஒரு விபரீதம் நடந்தது?

சதியை செய்பவர்களின் உள்நோக்கம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது, அதனால் தான் சதியை சந்தியிலே கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் உசுபேத்தி ஊரை கலவர பூமியாக்க சதி செயல்கள் செய்துகொண்டிருக்கும் ஒரு கிழட்டு நரிக்கு பலி அப்பாவி மக்களா??

அந்த காமுகர்கள் கொஞ்சம் கூட அறிவின்றி, இரக்கமின்றி இப்படி செய்திருக்கிறது., இன்னும் என்னென்ன செய்ய உத்தேசித்து கொண்டிருகுதுன்களோ.

Prakash said...

காடுவெட்டி குரு பேசிச் சென்ற பிறகு நடந்த காதல் கொலைக்கும் காமவெறியர்களின் வன்புணர்விற்கும் வித்தியாசங்கள் தெரியவில்லையா நண்பரே

அருள் said...

@Prakash

"காதல் கொலை" என்கிற வார்த்தை காதலைக் கொச்சைப் படுத்துவதாக கருதுகிறேன்.

காதலுக்காக தற்போது எந்த இடத்திலும் கொலைகள் நடப்பதாகத் தெரியவில்லை!

srini said...

இக் கட்டுரையில் மேம்போக்காக இஸ்லாமியத் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுபோல உங்களது தலித் ஆதரவுவாதமும் ஏற்புடையதன்று.

சிரிப்புசிங்காரம் said...

தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வை ஒருவரும் சாதி வெறி என்று கூறவில்லை....... ஆமாம்...அவர்கள் ஓட்டுபொறுக்கிகள்........இந்த நிலைமை எங்கே கொண்டு விடுமென்று தெரிய வில்லை.....அடுத்ததாக....குண்டு வைத்தவர் இஸ்லாமியர் என்றால் அதை 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்பதும், அதுவே இந்துவாக இருந்தால் வெறுமனே 'தீவிரவாதம்' என்பதும் நாட்டில் நடைமுறையாக இருக்கிறது.....
.இது தவறான வாதம்....எதற்காக முஸ்லீம் குண்டு வைத்தால் முஸ்லீம் தீவிரவாதி என்றும் , மற்றவன் வைத்தால் அவன் மதத்தை குறிப்பிடுவதில்லை தெரியுமா.,.???முஸ்லீம் குண்டு வைக்கும் போது குரானை கையில் வைத்துக்கொண்டு தான் முஸ்லீம் என்று கூறிக் கொல்கிறான்..ஆனால் எந்த ஹிந்துவும் கீதையைபிடித்துக்கொண்டு ஹிந்து சமையத்திற்காக குண்டு வைக்கிறேன் என்று சொல்ல்வதில்லை....முதலில் இதை புரிந்துகொள்ளணும்.......சும்மா எழுத கெடைச்சுதுன்னு எல்லாத்தையும் எழுதக்கூடாது.....