Pages

Thursday, July 18, 2013

ஆனந்த விகடனின் அட்டகாசம்: இளவரசன் இல்லாத திவ்யா - ஹன்சிகா இல்லாத சிம்பு!

ஆனந்த விகடன் கடந்த இரண்டு இதழ்களாக 'காதல் பிரிவு' என்பதை கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது.

17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் "இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?" என்பது கவர் ஸ்டோரி. அதற்கு அடுத்த, 24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் இதழில் "சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம்! ஸீ யூ ஹன்சிகா" என்பது கவர் ஸ்டோரி.
17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் 
24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் 
இந்த இரண்டு இதழ்களுக்கு இடையே - குறைந்தபட்சம் ஒரே ஒரு இதழிலாவது 'வேறு எந்த கருமாந்திரத்தையாவது' கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

திவ்யாவிடம் கேள்வி, ஹன்சிகாவிடம்  பதில்!

சென்ற இதழ் கவர் ஸ்டோரியில் "திவ்யா இப்போது பேச வேண்டும். தன் அன்புக் காதலனை பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா  துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்!" என உசுப்பி விட்டது ஆனந்த விகடன்.

இந்த இதழ் கவர் ஸ்டோரியில் திவ்யாவுக்கு பதிலாக பதில் அளித்துள்ளார் ஹன்சிகா: "நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு பெருசா எழுதிடுங்க. இந்தக் கதைக்கு ஒரு டிராஜடி க்ளைமாக்ஸ் கிடைச்சுடும். என்னப் பத்தி இப்படித் தப்பு தப்பா கிளப்பி விடறவங்களை அந்தக் கடவுள் நிச்சயம் பார்த்துப்பார். அவ்வளவுதான்." என்றிருக்கிறார்  ஹன்சிகா.

நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பு இல்லாத ஆனந்த விகடன் சாத்தியமா?

நீதி, நியாயம், தர்மம், வெங்காயம், புண்ணாக்கு என்று வக்கணையாகப் பேசும் ஆனந்த விகடன் - பலரின் அபிமானத்துக்குரிய தலைவர்களை அநாகரீக கேலிப்படமாக சித்தரித்து, தனது குரூரமான அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் ஆனந்த விகடன் - இந்த தமிழ் சமூகத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையுள்ள பத்திரிகையாக இருக்குமானால், ஒரு ஆறுமாத காலத்திற்காவது, நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பை அட்டையில் வெளியிடாமல் பத்திரிகையை நடத்திக்காட்டட்டும்.

3 comments:

Vanathi Rayar Senthil Nathan said...

Dear Mr. Arul Brother

I have been seeing the Ananda vikatan advertisement for quite long(not reading the book) they are just showing how they can sell the books without press ethics. Vikatan group should be banned immediately to avoid law and order situation in tamilnadu.

Thanks for you, for exploring the vikatan group to world about their cheap paper sales

rajah said...

சரியான செருப்படி ஆனா இதெல்லாம் உரைக்கவா போகுது..

KAYALVIZHI said...

திமிருடன் பேசினார்கள்? எத்தனை டிமாண்ட்ஸ்.தமிழ் நாடு மருத்துவர்கள் எல்லாம் முட்டாள்களா ? நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தானா, பிறரை காக்க தன் உயிரை கொடுத்தானா 19 வயதில் காதல், குடிப்பழக்கம். அதுவும் தன் வயதிற்கு மீறிய பெண்ணுடன் காதல்.படிக்க வெண்டிய வயதில் காதல்.ஒரு அம்மா ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று மிரட்டல். இன்னொரு வீரப் புலி ஆடாத ஆட்டம் இல்லை.தடையை மீறி உள்ளே போவேன் என்று வாய் கிழிய பேசி விட்டு காட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது.இன்னொரு வக்கீல் நல்ல வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி சுய விளம்பரம் தேடிக் கொண்டது.இந்த பையனின் தந்தை என் மகன் உத்தமன்,ஒரு கெட்ட பழக்கம் இல்லாதவன் என்று வேதம் ஓதியது.குடிப் பழக்கம் கெட்ட பழக்கம் இல்லை என்பது அவர் எண்ணம் போலும்.அந்த பையனின் தாயின் முகத்தில் ஒரு துக்கம் இல்லை.னான் தப்பு செய்து விட்டேனே என்று அழுததை மியூட் செய்து விட்டார்கள்.என்ன தப்பு அது ? திவ்யா வர வேண்டும் , சடங்குகள் செய்து கொள்ள வேண்டும் என்றார் அந்த அம்மா.சடங்கு படிதான் திருமணம் நடந்ததா ? தந்தை தாரை வார்த்து கொடுத்தாரா? இத்தனை போலீஸ் ,எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான செலவு எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து வஸூல் செய்ய வேண்டும்