Pages

Thursday, September 12, 2013

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள்: ஆனந்த விகடனுக்கு ஒரு நீதி, கிஷோர்சாமிக்கு வேறொரு நீதியா?

கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!

முகநூலிலும் வலைப்பூவிலும் இன்னபிற சமூக ஊடகங்களிலும் எழுதும் சாதாரண மனிதர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் அணிதிரளும் கொடுமை நடக்கிறதோ என்கிற அய்யம் எழுகிறது. கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகையாளர்களே கருத்துரிமைக்கு எதிராக அணி திரள்வது என்னவிதமான நியாயம் என்று தெரியவில்லை.

இப்போது எழுந்துள்ள சர்ச்சை 'கிஷோர் கே சாமி' எனும் முகநூல் பதிவரை தலைவனாக்கியுள்ளது. அவர் ஏதோ ஒரு நடிகையையும் ஒரு அமைச்சரையும் தொடர்புபடுத்தி எழுதினாராம். (இங்கே காண்க: அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?) அதனையும் வேறு ஏதோதோ தனிமனித விமர்சனங்களையும் காரணம் காட்டி பத்திரிகையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்களாம்.
கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!
எந்த ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், இதில் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு ஒரு நீதியும் பெரும் பத்திரிகைகளுக்கு வேறொரு நீதியும் இருப்பதை ஏற்க முடியாது. 

அஞ்சலிக்கு கல்யாணம்! ஆனந்த விகடனின் கருத்துரிமை!

"அஞ்சலிக்கு கல்யாணம்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்" என்றொரு கவர் ஸ்டோரியை ஆனந்த விகடன் வெளியிட்டது. "நடிகை அஞ்சலி தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண்டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்....அதிரடிப் புள்ளி இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப்பட்டவர்தான் அவரின் மருமகன்" என்று எழுதியது ஆனந்த விகடன்.

அதற்கான பின்னூட்டத்தில் ஒரு வாசகர் "என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?" என்று எழுதினார். (இங்கே காண்க:அஞ்சலிக்கு கல்யாணம்!)
(ஆனந்த விகடனின் இந்த செய்தியை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார். இங்கே காண்க: ரகசிய திருமணம் நடந்ததா? நடிகை அஞ்சலி விளக்கம்)

'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' கிஷோர் சாமி எழுதியது மாபெரும் அவதூறு என்றால், 'ஒரு முன்னாள் அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ஓடிவிட்டார், இரண்டாம் தாரமாக/சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதுவதை எந்த விதத்தில் சேர்ப்பது?

சிறிய விளம்பரம் தவறு - பெரிய விளம்பரம் சரியா?

வெறும் 6880 பேர் படிக்கும் வலைப்பூ பக்கத்தில், அதுவும் அவரது நண்பர்களுக்காக மட்டுமே கிஷோர் கே சாமி எழுதுகிறார். 'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' அவர் தெருத்தெருவாக போஸ்டர் அடித்து ஒட்டவில்லை. தெருவில் போகிற வருகிறவர்களிடம் எல்லாம் இதனைக் கூறவில்லை. அவருடைய 6880 நண்பர்களிடம் மட்டுமே தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். (அதுவும் அவர்கள் எல்லோரும் தாமாக விரும்பி அவருடைய பக்கத்தில் இணைந்தவர்கள்தான். எனவே, பொதுவெளியில் கிஷோர் கே சாமி அவதூறாக பேசினார் என்று கூற வழியில்லை)

ஆனால், ஆனந்த விகடனோ பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகை. கோடிக்கணக்கானோர் படிக்கும் பத்திரிகையில் 'அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதியுள்ளது. இதனை பல ஆயிரம் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தியது. ஜூனியர் விகடனில் ஒரு பக்கம் விளம்பரம் வெளியிட்டது.

இப்படி கோடிக்கணக்கான மக்களிடன் 'நடிகை அஞ்சலியைக் கொச்சைப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டதை எதிர்த்துப் பேச துப்பில்லாத கூட்டம்' - இப்போது கிஷோர் சாமிக்கு எதிராக கொடிபிடிப்பது ஏன்?

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." - (மத்தேயு 7:3- 5) புனித பைபிள்.

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த தொலைக்காட்சி செய்தி:
பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த ஒரு பதிவு: கிஷோர் கே ஸ்வாமி vs பத்திரிக்கைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!

கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!


விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!

2 comments:

paruthy said...

thayavu senji comedy panna sollatheenga avngala.. kishore dsh kooda onnum panna mudiyathu

karthickraja1977 said...

கவின் மலர்க்கு எதிராக இருந்ததாலே பதிவர்க்குச் சாதகமாக அருள் எழுதியிருக்கிறார் என்றாலும் இன்றாவது நியாயமாக எழுதியிருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் இந்தப் பின்னுட்டம்...அவதூறு குறித்து எந்த விதத்திலும் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கமுடியாத அளவுக்கு அனைத்தையும் தங்களின் உடைமையாகக் கொண்டிருப்பது பத்திரிகைகளே.. கள்ளக்காதல்-கிசு கிசு குறித்து எழுதும் பத்திரிகைகள் ஏதோ தங்களே அருகில் இருந்து கூட்டி கொடுத்தது போன்று எழுதுகிறார்கள்..செய்திகளை வெளியிட கவர் வாங்கும் நிருபர்கள், தனிமனிதர் குறித்து செய்திகளைப் புகைபடத்துடன் வெளியிடுவது, செய்திகளைத் திரிப்பது, ஒன்றுமில்லா செய்திகளைப் பெரிதாக்குவது, இப்படி நான்காவது தூணின் பெருமை குறித்து எழுதினால் அருளின் கட்டுரையைக் காட்டிலும் பக்கங்கள் நீளும் ...இப்படிப் பட்ட பத்திரிகைகளை அம்பலப்படுத்தும் கலகக்குரல் போன்ற பதிவர்கள் நாட்டிற்குத் தேவை. அருளுக்கும் பாராட்டுகள்...