Pages

Thursday, June 06, 2013

தர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய பெண் திவ்யாவை யாரோ (வேறு யார்? பாமகவினர்தான்) கடத்திவிட்டனர் என்று தர்மபுரி காவல்நிலையத்தில், அந்தப்பெண்ணின் 'கணவன் என்று தனக்குத் தானே' கூறிக்கொள்கிற நபரான இளவரசன் புகார் செய்தார்.

திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்து இருந்த கேபியஸ் கார்பஸ் மனு இன்று (6.5.2013)  நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் திவ்யாவை தங்கள் அருகில் அழைத்தனர். நீதிபதிகள் முன்பு “என் அப்பாவும் இறந்துவிட்டார். அம்மா தனியாக இருக்கிறார்” என்று திவ்யா விம்மி அழுதார். பின்னர் நீதிபதிகள் "இளவரசனும் வந்திருக்கிறார். அவருடன் பேசுகிறாயா?" என்றனர். அதற்கு "பேச விரும்பவில்லை" என்று மறுத்துவிட்டார். "நீ யாருடன் செல்ல விரும்புகிறாய்?" என்றதும் "என் அம்மாவுடன் செல்லவே ஆசைப்படுகிறேன்" என்றார். 
விசாரணைக்கு கோர்ட்டில் அமர்ந்து இருந்தபோதும், நீதிபதிகள் முன்பு எதிர் எதிரே நின்றபோதும் இளவரசன் திவ்யாவை பார்த்து “ப்ளீஸ், வந்துவிடு” என்று கெஞ்சினார். ஆனால் திவ்யா பாராமுகத்துடனேயே இருந்தார். அவரது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. 

இளவரசன் தரப்பில் திவ்யாவை கடத்தி சென்று மிரட்டி இருக்கிறார்கள் என்று வாதிட்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, "நாங்கள் அந்த பெண்ணிடம் தெளிவாக விசாரித்து விட்டோம். யாரும் கடத்தவில்லை. தானாகவே தாய் வீட்டுக்கு சென்றதாக கூறினார். மேலும் தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் தாயுடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். எனவே அவரது விருப்பத்துடன் தாயுடன் செல்ல அனுமதிக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இளவரசனும், திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர் பெற்றோருடன் சென்றனர். - இப்படியாக ஒரு மாலை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது (தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது). நீதிமன்றத்திலும் இதுதான் நடந்தது.

சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

ஆனால், இந்த நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய 'இளவரசன்' தரப்பு வழக்குரைஞர் பின்வருமாறு கூறினார்:

"அந்த பெண்ணின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, தருமபுரி மருத்துவர் செந்தில், திவ்யாவை வரவைத்து தர்மபுரியிலிருந்து கடத்தினார். பின்னர் அந்தப் பெண் நேராக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் மருத்துவர் இராமாதாசு அவர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மருத்துவர் இராமதாசு முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
மருத்துவர் இராமதாசு, மருத்துவர் செந்தில் ஆகியோர் அந்தப் பெண்ணையும் அவரது தாயாரையும் கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டினர். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் அவர் நீதிமன்றத்தில் 'தாயுடன் போவதாக' கூறியுள்ளர்." - இப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் இளவரசன் தரப்பு வழக்குரைஞர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து முழுஓய்வில் இருப்பவர் மிரட்டினாராம்!

மருத்துவர் செந்தில் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தருமபுரியில் உள்ள அவரது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு மே 20 ஆம் தேதி இதயத்தில் பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூன் 15 வரை முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் சென்னையில்தான் ஓய்வில் உள்ளார். அவரது மகன் (மருத்துவர் அன்புமணி இராமதாசு) மற்றும் துணைவியார் (அம்மா) தவிர வேறு எவரும் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவது இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான கோ.க. மணி அவர்கள் கூட இதுவரை மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'தருமபுரி திவ்யாவை கடத்தினாராம், தைலாபுரம் தோட்டத்தில் வைத்து மிரட்டினாராம்'!

முற்போக்கு சாதிவெறிக் கூட்டமே - உங்கள் அபாண்டத்துக்கும் அக்கிரமத்துக்கும் ஒரு எல்லையே இல்லையா? தமிழக மக்களை அந்த அளவுக்கா முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
தொடர்புடைய சுட்டி:


3 comments:

ஊரான் said...

உங்களுக்குள் பார்ப்பனியம் இருக்கிற வரை உங்களைப் போன்றவர்களுக்கு சாதி வெறி என்றால் என்னவென்றே தெரியாது. அதுவரை எல்லாமே காதல் நாடகமாகத்தான் தோன்றும்.

வன்னியப் பையன்கள் பிற உயர்சாதிப் பெண்களை காதலிக்கும் போது அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.ஒரு காதல் உண்மையிலேயே நாடகக் காதல் என்றால் அதை குற்றச் செயலாகக் கருதி போராடுங்கள். அதைவிடுத்து இதில் சாதிச் சாயத்தை ஏன் பூசுகிறீர்கள்? இங்கேதான் உங்களுக்குள் பார்ப்பனியம் ஒளிந்திருக்கிறது.

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர்-1
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் - 2
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 3
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 4
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 5
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 6
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 10
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 11

pspandy said...

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது. நீதி மன்றத்தில் வழக்கு தொடங்கியது. கலவி முடிந்தது. தவறு உணர்ந்து பெண் தாயுடன் சேர்ந்து விட்டார். திவ்யாவின் தந்தை அவமானம் தாங்காமல் மாய்ந்து விட்டார். இவ்வளவு கலவரத்துக்கும் காரணமான இளவரசனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ராமதாஸ் அய்யா சொன்னது போல நாடக காதல் 100% வீதம் நிரூபணமாகிறது. இளவரசனுக்கு வேறு பெண் கிடைப்பாள். திவ்யாவின் தந்தை மரணம் மீட்க முடியாதது. விடலை காதல் திருமணம் விவாகரத்தில் முடியும். பெண்களே சற்று யோசித்து முடிவு செய்யுங்கள். வேண்டாம் இந்த விபரீதம்.

samugam said...

ர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது. நீதி மன்றத்தில் வழக்கு தொடங்கியது. கலவி முடிந்தது. தவறு உணர்ந்து பெண் தாயுடன் சேர்ந்து விட்டார். திவ்யாவின் தந்தை அவமானம் தாங்காமல் மாய்ந்து விட்டார். இவ்வளவு கலவரத்துக்கும் காரணமான இளவரசனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ராமதாஸ் அய்யா சொன்னது போல நாடக காதல் 100% வீதம் நிரூபணமாகிறது. இளவரசனுக்கு வேறு பெண் கிடைப்பாள். திவ்யாவின் தந்தை மரணம் மீட்க முடியாதது. விடலை காதல் திருமணம் விவாகரத்தில் முடியும். பெண்களே சற்று யோசித்து முடிவு செய்யுங்கள். வேண்டாம் இந்த விபரீதம்