Pages

Tuesday, June 11, 2013

முற்போக்கு புர்ச்சியாளர்களைக் காணவில்லை: முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை வழக்கில் தொடரும் கள்ளமவுனம்!

முற்போக்கு புர்ச்சியாளர்களைக் கண்டுபிடிப்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி: பதர் சயீத், முன்னாள் எம்எல்ஏ., திருவல்லிக்கேணி

தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளிலும் உடனுக்குடன் தலையிட்டு தங்களது அதிமுற்போக்கான தீவிரக்கருத்துகளை முன்வைப்பவர்கள் முற்போக்கு புர்ச்சியாளர்கள் எனப்படுகின்றனர்.

இடதுசாரிகள், திராவிடர்கள், தமிழ்தேசியர்கள், பெண்ணியவாதிகள், மனிதஉரிமைப் போராளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பின்நவீனத்துவவாதிகள், முன்நவீனத்துவவாதிகள் -  எனப்பல பெயர்களில் உலாவரும் இந்தக் கூட்டத்தினர் "அடுத்தவீட்டு பெண்கள்" தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் உலகப்பிரசித்தம் பெறத்தக்கவையாக இருக்கும்.

"21 வயதுக்கு முன் நடக்கும் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் அனுமதி வேண்டும். படிப்பை முடிக்காத, வேலைக்கு போய் சொந்தக்காலில் நிற்கும் தகுதியற்ற சிறுவர்களின் காதல் திருமணங்களை ஆதரிக்கக் கூடாது" என்று மருத்துவர் அய்யா அவர்கள் கோரியபோது இந்த முற்போக்கு புர்ச்சிக் கூட்டம் வானுக்கும் பூமிக்குமாக துள்ளிக்குதித்து, பாய்ந்து பிராண்டி கடித்து குதறியது.

அதே முற்போக்கு கூட்டம் இப்போது ஒரு முக்கியமான சிக்கலில் கருத்து சொல்லாமல் கள்ளமவுனத்தில் ஆழ்ந்துள்ளது.

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை வழக்கு 

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ''விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிடமுடியும். சில நேரங்களில் மனைவிக்குத் தெரியாமலேயேகூட கணவர் தலாக் கூறி, காஜிக்களிடம் திருமண முறிவுக்கான சான்றிதழ் பெற்று விடுகின்றனர். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை'' எனக்கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மனு குறித்த விளக்கங்களை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கும் மாநிலத் தலைமை காஜிக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்திரவிட்டது. (காண்க: முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு) (Stop Kazis from issuing talaq certitificates, PIL says)

பதர் சயீத் வழக்கு தாக்கல் செய்துள்ளதற்கே மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பிருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"இதுகாலம் காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து வரும் வழக்கம். இதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மேலும் இது முஸ்லிம் சட்டத்திற்கும் விரோதமானது. இதனை மாற்றினால் தேவையில்லாமல் முஸ்லிம் பெண்களுக்குப் பிரச்சனை ஏற்படும்" என்கிறர் ஜவாஹிருல்லா. (காண்க: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து தொடரப்பட்ட வழக்கு குறித்து திரு. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் கருத்து!)

- இந்த முக்கியமான விவகாரத்தில்தான், கடந்த செவ்வாய்க்கிழமை (4.6.2013) அன்று வழக்கு விசாரணைக்கு வந்தும், கடந்த எட்டு நாட்களாக கருத்து சொல்லாமல் தலைமறைவாகியுள்ளனர் கருத்து கந்தசாமிகள் என்று அழைக்கப்படும் முற்போக்கு புர்ச்சியாளர்கள்.

கருத்து கந்தசாமிகளின் கள்ளமவுனம்

"முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை" விவகாரத்தை முற்போக்கு புர்ச்சியாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றோ எதிர்க்க வேண்டும் என்றோ நாம் கருதவில்லை. குறைந்தபட்சம் தங்களது கருத்து என்ன என்று அவர்கள் சொல்லலாமே. அண்டசராசரத்தில் உள்ள அத்தனை விடயங்கள் குறித்தும் தமது மேதாவிலாசமான கருத்தைக் கூறுகிறவர்கள் இந்த வழக்கு விவகாரத்திலும் தமது மேதமையைக் காட்டலாமே. கள்ளமவுனம் எதற்காக?

இந்த தலைமறைவில் வியப்பளிக்கக் கூடியது எதுவும் இல்லை. 

ஏனெனில், வன்னியர், தேவர், கொங்குக் கவுண்டர்கள் என தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எளிதில் பேசி முற்போக்கு பட்டத்தை தட்டிச்செல்ல முடியும். 

இசுலாமியர்கள் தொடர்புடைய விடயத்தில் அப்படிப் பேசிவிட முடியுமா? அதற்கெல்லாம் முதுகெலும்பு வேண்டுமே!

14 comments:

James said...

What Ramadoss has said in this Muslim issue?

Sketch Sahul said...

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/muthalak_pennurimaiku_ethiranathu/

G.T.Arasu said...

திருஅருள்,புர்ச்சியாளர் என்று நீங்கள் புழங்கும் சொல் சிறுபிள்ளைத்தனமானது.சாதி பற்றிய உங்கள் கண்ணோட்டம் நடைமுறை பற்றி விமரிசனம் வலுத்துவருகின்றது. "லோகமே கெட்டுடுத்துடி" என்ற தோரணையில் முசுலிம் விவாகரத்தைப் பற்றிய உங்கள் முற்போக்குக்கருத்து வேறு. என்னதான் முயன்றாலும் ஒருவர் செயலின் பலன்கள் அவரைத் தொடரும்.அடுத்தவர்கள் வாக்களித்து இதை மாற்றமுடியாது.எனவே தங்கள் முயற்சி தேர்தலுக்கு பயன்படலாம்.மற்றைய இடங்களில் பயன்படும் என்று நினைக்கின்றீர்களா?

வாசகன் said...

சிரிப்பு போலீஸ் மாதிரி அவுக சிரிப்பு புர்ச்சியாளர்கள். வேற எங்காவது புர்ச்சி நடக்குதான்னு பாக்க போய் பிஸியா இருப்பாங்க.

அருள் said...

"ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால்தான் மீண்டும் சேர முடியாது. மூன்றாம் முறை விவாகரத்து செய்தபின் இன்னொருவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்."

"ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்."

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/muthalak_pennurimaiku_ethiranathu/

அருள் said...

@ G.T.Arasu

மருத்துவர் இராமதாசு அவர்கள் மீதும், அவரது நியாயமான கருத்துக்களை ஆதரிப்பவர்கள் மீதும் புழுதிவாரித் தூற்றுபவர்களின் வார்த்தைகள், ஏச்சுக்கள், இழிசொற்களை விட - எனது 'புர்ச்சியாளர்' என்கிற பதம் வலிக்கிறதா?

புர்ச்சியாளர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். சராசரி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இயக்குனர் சசிக்குமார் படங்களை பார்க்கும்போது மக்கள் எந்த வசனத்துக்கு கைத்தட்டுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

அருள் said...

@DiaryAtoZ.com
//What Ramadoss has said in this Muslim issue?//

மருத்துவர் இராமதாசு அவர்களின் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்லாமிய அமைப்புகள் தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சியும் இதில் கருத்து சொன்னதாகத் தெரியவில்லை.

ராவணன் said...

குண்டர் சட்டத்தில் உன்னைத்தான் சிறையில் அடைத்தாகிவிட்டது. பின்ன இந்த பதிவை எழுதுவது யாரு?

எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லையெனில் நாளை ஒரு மெகா பதிவு வரும்.

rajah said...

கருத்து கந்தசாமிகளின் கள்ளமவுனம் ..ha ha ha ROFL

அருள் said...

ராவணன் கூறியது...
//குண்டர் சட்டத்தில் உன்னைத்தான் சிறையில் அடைத்தாகிவிட்டது. பின்ன இந்த பதிவை எழுதுவது யாரு?
எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லையெனில் நாளை ஒரு மெகா பதிவு வரும்.//

அய்யோ...பயமா...இருக்கே....!

ராவணன், உங்க மனநிலை பிழன்றுவிட்டதா?

நிஜாம் கான் said...

முஸ்லிம்களின் தலாக் சட்டம் எவ்வளவு சிறப்பானது என்பது உள்ளே இருக்கும் எங்களுக்கே நன்கு தெரியும். தெளிவில்லாத விசயத்தில் அறிவாளியாக பேச வேண்டாம் அருள். அதெல்லாம் சரி இதற்கும் நாயக்கன் கொட்டாய் கலவரத்திற்கும் என்ன சம்பந்தம்? காதல் திருமணம் செய்தால் அவர்களை வெட்டி வீசுங்கடா என வெறி தூண்டி பேசும் காடு வெட்டி குருவின் பேச்சுக்கும் முஸ்லிம்களின் தலாக் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? என்ன சொல்ல வருகிறீர்கள்? மாமல்லபுரம் சித்திரை விழாவிற்கு சென்ற அப்பாவிகள் மரக்காணம், கோட்டக்குப்பம் போன்ற பகுதிகளில் வாழும் ரவுடி அயோக்கியர்கள் மீது பீர் பாட்டிலை வீசி அடித்ததும், பெண்களை நோக்கி கைலிகளைத் தூக்கிக்காட்டியும் கையால் கெட்ட சைகை செய்ததும் முஸ்லிம்களின் தலாக் சட்டத்தை மற்றவர்கள் எதிர்த்தால் மேற்கண்டவைகள் சரி என்றாகி விடுமா? ஆமா அது யாருங்க பத்ர் சையத்? இஸ்லாமிய சட்டங்களை கரைத்துக் குடித்தவரா? இஸ்லாமிய நடைமுறைப்படி வாழ்பவரா? 5 வேளையும் தவறாமல் தொழுபவரா? முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டால் அவர் முஸ்லிமாக ஆகி விடுவாரா? சட்டம் ஒழுங்கைக் கெடுத்து நாட்டின் அமைதியைக் குலைக்கும் பாமகவைத் தடைசெய்ய வேண்டும் என சட்டசபையில் முதல்வர் தீர்மானம் கொண்டு வந்த போது அதற்கான அதிகாரம் உங்களிடம் இல்லை தேர்தல் ஆணையத்திடம் தான் உள்ளது என மருத்துவர் அய்யா அறிக்கை தந்தாரே! அதே போலத்தான் நானும் சொல்கிறேன் தலாக் சட்டம் குறித்து பேச பத்ர் சையத்துக்கு எந்த தகுதியுமே கிடையாது. நான் ஒன்று கேட்கிறேன். இந்தியாவில் நடக்கும் ஒட்டு மொத்த விவாகரத்துகளின் புள்ளிப்பட்டியலை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வாங்கிப்பாருங்கள். மற்ற மதத்தினர் தங்கள் விகிதாசார அளவிற்கும் அதிகமாகவே விவாகரத்து செய்துள்ளனர். ஆனால் கொடுமையான தலாக் சட்டம் உள்ளதாக பிலிம் காட்டப்படும் இஸ்லாமியர்கள் தங்கள் விகிதாசார அளவில் பாதி அளவில் கூட விவாகரத்தை கையாளவில்லை என தெளிவாக இருக்கிறது புள்ளிவிவரம். இதுபோன்ற சிண்டு முடியும் வேலைகளைக் கைவிட்டு விட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் முதுகில் ஏறினால் ஒன்றிரண்டு தேறும் என யோசியுங்கள்.

Anonymous said...

இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களில் உள்ள குழப்பங்கள் களையப்படுவதே அனைவருக்கும் நல்லது. பொது சிவில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இச்சிக்கல் எழ வாய்ப்பில்லை, இதுக் குறித்து வழக்கின் தீர்ப்பு வரும் வரை பார்ப்போம், தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள் !

rajah said...

யோவ் ராவணா..
அவரு வேற அருள் இவரு வேற அருள்
Am i right? ....

வாசகன் said...
This comment has been removed by the author.