Pages

Monday, June 17, 2013

எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி! (முழுவதுமாக)


"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக நான்கு பாகம் கொண்ட ஒரு தொடரை வெளியிட்டுள்ளது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்:

"இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!" என தலைப்பிட்டு 13, 14, 15, 16 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழ்களில் பதிலடிக் கட்டுரை தொடராக வெளியாகியுள்ளது.





"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என அந்த பதிலடிக் கட்டுரை முகப்பில் கூறப்பட்டுள்ளது.

நான் எனது பதிவில் "புளியந்தோப்பு கலவரம் 1921" பற்றி குறிப்பிட்டு "தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ள ஒரு வரலாற்று சம்பவத்தையும் அதில் நீதிக்கட்சியின் பங்களிப்பையும் திராவிட இயக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஏன் என்று தெரியவில்லை!" எனக் கேட்டிருந்தேன்.

எனது இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக "இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண்டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத்தியாயம் இடம்பெறும். எம் மனத்திலிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச்சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா?" என்றும் கூறியுள்ளார்கள்.

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கான எனது 'மறுப்பினையும் விளக்கத்தையும்' எனது வலைப்பூ வழியாக பின்னர் எழுதுவேன்.

எனது வலைப்பதிவுக்கு விடுதலையின் பதிலடி இதோ:

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (13.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (14.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (15.06.2013)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (16.06.2013)

1 comment:

Unknown said...

அருள்...

நல்ல பதிவு... உங்களின் எந்த கேள்விக்கும் அவர்களின் பதிவில் நேரடி பதில் இல்லை.. ஏன் தலித்துகளை விரட்ட முயன்றார்கள் என்று கேட்டால்... அதற்கு பதில் சொல்லாமல் "அவர்களுக்கு முகாமில் அரசு கொடுக்கும் சலுகையை பாருங்கள்" என்று புலம்பல்.. 11,000 என்ற எண்ணிக்கையில் செலுத்திய ஆர்வம், கவனம் உங்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்வதில் இல்லை.. இவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.சி. ராஜாவை முழுக்க முழுக்க துரோகியாகவே வர்ணிக்கும் லட்சணத்தில் தெரிகிறது இவர்களின் முன்னோடிகளின் "பரந்த மனம்".. இதில் எல்லாவற்றிலும் பிரமாதம், முதல் மூன்று பாகம் வரை பிரச்சனைக்கே வராமல் சரணத்திலேயே காலம் கழித்தது... அவர்களின் நான்கு பாகங்களும் படித்துவிட்டு நேரத்தை வீணடித்த ஒரு உணர்வு.. உங்கள் பதிலடியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ..

நன்றி,
சூரியா