Pages

Sunday, August 25, 2013

காதல் நாடக மோசடி: திருமாவளவன் மீது கோவை பெண் புகார்!

"கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவிதா, கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

இது குறித்து கவிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.
கவிதா திருமாவளவன் என்கிற பெயரில் வங்கிக் கணக்கு
மேலும், திருமாவளவன் ஆதரவாளார்கள் விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி, சந்துரு உள்ளிட்டோர் மூலம் எனது பள்ளியை அபகரித்து விட்டனர். அதேபோல், எனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயல்கின்றனர். திருமாவளவனை திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன். ஆனால், திருமாவளவன் எனது சொத்துகளுக்காக காதல் நாடகமாடி அபரிக்க முயல்கிறார்.

அதேபோல், எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. என்னை ஏமாற்றி வாங்கப்பட்ட சொத்துகளை மீட்டு தருவதுடன் எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கூட திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.
காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கவிதாவின் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்."

- இவ்வாறு விகடன் இணையதளம் மற்றும் NewIndiaNews ஆகிய செய்து தளங்கள் கூறுகின்றன. (இங்கே காண்க: திருமணம் செய்வதாக மோசடியா?:திருமாவளவன் மீது கோவை பெண் புகார். தொல் திருமாவளவன் என்னை ஏமாற்றிவிட்டார்: கோவைப் பெண் அதிரடி புகார்)



எனினும் இந்த செய்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுத்துள்ளது. கவிதாவின் மீது விசிக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இங்கே காண்க: திருமாவளவன் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி- விடுதலைச் சிறுத்தைகள்)

மேற்கண்ட செய்திகளில் எது உண்மை? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

8 comments:

tenkasi pandiyan said...

தொண்டர்கள் மட்டும் செய்த நாடக காதலை இன்று தலைவரும் செய்கிறாரோ ? அருமை .........நல்ல கொள்கை ..நல்ல புரட்சி ...

Unknown said...

என் கட்சிகாரன் சொந்தமா புள்ள பெத்து பொறந்த நாள் கொண்டா வக்கில்லைனு
அடுத்தவன் பெத்த புள்ளைக்கு பொறந்த நாள் கொண்டாடியது தப்பா...?

முகநூல்லா இந்தா அடி அடிக்கிறங்கா
அவன் உங்க கால்லா விழுந்த போதும் கதற கதற அடித்து கிழிக்கிறிங்க அவன் என்ன பன்னுவான் பாவம்....
தக்காளி நீ குழந்தைக்கு பொறந்த நாள் மட்டுதான் கொண்டாடி இருக்கனும் குழந்தை அம்மாவை ஆட்டைய போட நினைத்தால் அடிக்கமால் கொஞ்சு வாங்கலா......

Unknown said...

என் கட்சிகாரன் சொந்தமா புள்ள பெத்து பொறந்த நாள் கொண்டா வக்கில்லைனு
அடுத்தவன் பெத்த புள்ளைக்கு பொறந்த நாள் கொண்டாடியது தப்பா...?

முகநூல்லா இந்தா அடி அடிக்கிறங்கா
அவன் உங்க கால்லா விழுந்த போதும் கதற கதற அடித்து கிழிக்கிறிங்க அவன் என்ன பன்னுவான் பாவம்....
தக்காளி நீ குழந்தைக்கு பொறந்த நாள் மட்டுதான் கொண்டாடி இருக்கனும் குழந்தை அம்மாவை ஆட்டைய போட நினைத்தால் அடிக்கமால் கொஞ்சு வாங்கலா......

kamal said...

,// ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு *டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. *அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார். *கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். *இந்நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.// தொழிலதிபர் மகளாம்! இவருக்காக கனவரிடம் விவாகரத்து பெற்றாராம் திருமணம் செய்வதாகச் சொன்னாராம் இவரும் ஆசையில மதிமயங்கி ஏமாந்துட்டாராம். நீங்க கட்டின கனவரை கைவிடுவிங்க. இவர் நன்பர் மட்டிமே! கனவர் அல்லவே! அவர் ஏமாற்றினாரா இல்லை இல்லை இவர் அவரை ஏமாற்றினாரா பார்ப்போம் பொருத்து!

Unknown said...

அண்ணன் தான் கன்னி தமிழன் ஆயிற்றே ??? அவர் ஆண்மை சோதனை செய்து நிருபிக்கட்டும்!!!!

viyasan said...

திருமாவளவன் அவர்கள் பந்தா இல்லாதவர், பழகுவதற்கு இனிமையானவர், அவர் யாருடனும் போட்டோ எடுப்பதற்கும் தயங்குவதில்லை. மற்ற அரசியல் தலைவர்கள் இலகுவில் சம்மதிக்க மாட்டார்களாம். ஆனால் இவர் யார் கேட்டாலும் உடனடியாக மற்றவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க தயங்குவதில்லை. இந்தப் பெண் அவரை அந்தக் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்ததால் அவர் போயிருக்கலாம். அதை வைத்து திருமாவளவன் மீது திட்டமிட்டு இந்தப் பெண் அவதூறு பரப்புகிறார் போல் தான் எனக்குத் தெரிகிறது.

Unknown said...

// இந்தப் பெண் அவரை அந்தக் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்ததால் அவர் போயிருக்கலாம். அதை வைத்து திருமாவளவன் மீது திட்டமிட்டு இந்தப் பெண் அவதூறு பரப்புகிறார் போல் தான் எனக்குத் தெரிகிறது.//
அப்படினா அண்ணனோட கைதடிங்க எங்க?? மற்ற யாரும் இல்லாத வீடுன்னு அண்ணனுக்கு தோணலியா இல்ல அது தான் வேணும்னு நினைத்தாரா ????

viyasan said...

//அப்படினா அண்ணனோட கைதடிங்க எங்க?? மற்ற யாரும் இல்லாத வீடுன்னு அண்ணனுக்கு தோணலியா இல்ல அது தான் வேணும்னு நினைத்தாரா ??//

திருமாவளவன் தனியாத் தான் போனாரென்று உங்களுக்கு எப்படித் தெரியும். என்னிடம் கூடத் தான் நானும் திருமாவளவனும் தனியா எடுத்த படம் இருக்கு, அதனால் நானும் திருமாவளவனும் தனியாகச் சந்தித்தோம் என்று கருத்தாகுமா? :))

பிறந்த நாளுக்குப் போன மற்றவர்கள் உள்ள படங்களை இந்தப் பெண் வெளியிடவில்லை. அவ்வளவு தான். கனடாவில் அரசியலில் சம்பந்தமில்லாத சாதாரண ஈழத்தமிழர்களின் வீடுகளில் திருமாவளவன் தங்கியிருக்கிறார். அன்போடு அழைத்தவர்களின் வீடுகளுக்கும் போயிருக்கிறார். அது போல் தான் இதுவும் என்று நான் நினைக்கிறேன்.