Pages

Monday, August 05, 2013

சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

புதியதலைமுறை தொலைகாட்சியில் இன்று (5.8.2013) காலை புது புது அர்த்தங்கள் எனும் நிகழ்ச்சியில் மனுஷ்யப்புத்திரனும் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனுவாசனும் - சேரன் மகள் காதல் மற்றும் 21 வயதுக்கு முன் நடைபெரும் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் தேவை எனும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் கோரிக்கை - குறித்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 2006 ஆம் ஆண்டுமுதலே இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை, மீண்டும் ஒருமுறை சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் இராமதாசு ஏன் கேட்கவில்லை? இது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? என்கிற வகையில் பொங்கி எழுந்துள்ளார் மனுஷ்யப்புத்திரன்!

'ஏற்கனவே இருக்கும் சட்டத்தையே மீண்டும் கேட்கிறோமே' என்கிற அடிப்படை பொது அறிவுக்கூட தனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் மனுஷ்யப்புத்திரன்

பேய் ஆட்ட மனநிலையில் மனுஷ்யப்புத்திரன்

பாஜகவைச் சார்ந்த வானுதி சீனுவாசன் 'காதல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து' தெளிவாக பேசிய போதும், மனுஷ்யப்புத்திரன் ஒருவிதமான பேய் ஆட்ட மனநிலையில், வானதி சீனுவாசன் பேசுவதைக் காதில் வாங்காமல் கத்திக்கொண்டிருந்தார். 'மனுஷ்யப்புத்திரனை மட்டுமே பேச விட்டுவிடுங்கள், அவர் மற்றவர் சொல்வதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை' என்று வானுதி சீனுவாசன் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் 'குழாயடிச் சண்டை' போலவே பேசிக்கொண்டிருந்தார் மனுஷ்யப்புத்திரன்.
'சேரன் மகள் சட்டப்படியான திருமண வயதை அடைந்துவிட்டார், எனவே அவரைக் காதலனுடன் உடனடியாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, காவல்துறையினர் எதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினர்?' என மனுஷ்யப்புத்திரன் கொந்தளித்து எழுந்தார். 

எனினும் எதிரில் பேசிய வானதி சீனுவாசன் 'மனுஷ்யப்புத்திரனுடைய உலகம் வேறொரு உலகம், ஆனால், நம்முடைய சமூகம் வேறு வகையில் உள்ளது' என்பதை எடுத்துச் சொல்லி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் நியாயம் என்றார்.

தான் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபித்தார் மனுஷ்யப்புத்திரன்

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜென்ராம், "21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும்போது பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொன்ன உடனேயே வானுக்கும் பூமிக்கும் துள்ளிக்குதிக்கும் விதமாக கொந்தளித்தார் மனுஷ்யப்புத்திரன்.

"அது எப்படி, பெண்கள் அறிவாளிகள் இல்லையா? அவர்களுக்கு யோசித்து முடிவெடுக்கத் தெரியாதா? அப்படியானால் பெண்களை மருத்துவர் இராமதாசு இழிவுபடுத்துகிறாரா?" என்றெல்லாம் நீட்டி முழக்கி, தான் ஒரு அரைவேக்காடு என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்தார்.
மனுஷ்யப்புத்திரனுக்கு கொஞ்சமாவது அடிப்படை அறிவு என்கிற ஒன்று இருந்திருந்தால் - அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து என்ன என்று பார்த்திருப்பார். இன்னும் கொஞ்சம் பொது அறிவு உள்ளவராக இருந்திருந்தால் அந்த கருத்தின் பின்னணி என்ன என்றாவது தெரிந்திருக்கும். அடிப்படை அறிவு, பொது அறிவு - இந்த இரண்டுமே மனுஷ்யப்புத்திரனுக்கு இல்லை.

 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு?

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை" என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது - என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  (இங்கே காண்க: 21 வயது திருமணம் குறித்து இராமதாஸ் கருத்து)

மருத்துவர் அய்யா அவர்கள் தனது கோரிக்கையாக "21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுள்ளார்.
"21 வயதுக்குட்பட்ட ஆணின் திருமணத்துக்கு மட்டும் பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லையா? அப்படியானால் ஆணுக்கு ஒரு நீதியா? பெண்ணுக்கு வேறொரு நீதியா?" என்றெல்லாம் கேட்பதற்கு முன்பாக ஏற்கனவே இருக்கிற சட்டம் என்ன சொல்கிறது என்கிற பொதுஅறிவு மனுஷ்யப்புத்திரனுக்கு இருந்திருக்க வேண்டும்.

21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு திருமணம் செய்யவே சட்டத்தில் இடமில்லை.

 21 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளும் உரிமையே பெண்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆண்களுக்கு அந்த உரிமை சட்டப்படி இல்லை.

THE PROHIBITION OF CHILD MARRIAGE ACT, 2006

Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age

2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 வயது முடிவடையாத ஆண்களும் 18 வயது முடிவடையாத பெண்களும் குழந்தைகள் என்று கருதப்படுகிறார்கள். எனவே, சட்டப்படியே 21 வயது நிரம்பாத ஆண் திருமணம் செய்ய முடியாது.


ஆகவே,"21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்கள்" என்று சொன்னாலே, அது பெண்களின் திருமணத்தை மட்டும்தான் குறிக்கிறது. 

ஆண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய சட்டப்படி அனுமதியே இல்லாத போது, அதற்கு 'பெற்றோரின் ஒப்புதல் தேவை' என்று எதற்காக கேட்கவேண்டும்?

ஏற்கனவே சட்டமாக உள்ள ஒரு சட்டத்தை, மீண்டும் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் அய்யா ஏன் கேட்க வேண்டும்? அப்படி கேட்க அவர் என்ன மனுஷ்யப்புத்திரன் போன்று அரைவேக்காடா?
மேலே உள்ள படத்துக்கும் இந்தக்கட்டுரைக்கும் தொடர்பேதும் இல்லை

தொடர்புடைய சுட்டிகள்:






6 comments:

Unknown said...

சூப்பர் அண்ணா நெத்தியடி பதில்கள்

அன்புடன் நான் said...

நெத்தியடி

kamal said...

அட போங்கப்பா இதுல கோட்ட விட்டதா வச்சிக்கங்க. மாற்றுத்திரன் கொண்ட அறிவாற்றலும் கவித்திரமைக்கும் கூட ஒரு சலுகை தரமாட்டிங்கலா

எம்.ஞானசேகரன் said...

சரி எதற்கு என்ன தகுதி இருக்கன்னை இவரையெல்லாம் கூப்பிட்டு நேர்காணல் செய்கிறார்கள்? சரியான பதிலடி?!

Anonymous said...

மனுஷ்யபுத்திரன் உலகம் வேறு.நாம் வாழும் சமுதாயம் வேறு.இவர் இவருக்கு பிடித்தமான ஒரு தவறான சூழலை உண்டாக்கும் நோக்கமும் வெறியும் கொண்ட கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் இவ்வாறாக குதர்க்கப் பேச்சுக்களை பேசுகிறார்.பெண் குழந்தையை பெற்றவர்களுக்கே வலி தெரியும்.
இவர் சார்ந்த மதத்திலும் இந்த மாதிரியான காதல் விசயங்களை பெண்ணின் பெற்றோரை ஆதரிக்க சொல்லி சட்டம் கொண்டு வரச்சொல்லி குதிக்க வேண்டியது தானே.அங்கு காதலை ஏற்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும் என்ற வற்புறுத்தல் ஏன்?ஏனென்றால் சமூகப் பிராணியான மனிதர்கள் பெற்றோர் என்றபொறுப்பில் வரும் போது அவர் சார்ந்த ஜாதிமத கலாச்சாரத்தை பின்பற்றி வாழக்கூடிய மனிதர்களே.கலைப்பணி செய்யும் போது புரட்சி செய்யும் சேரன் கூட எதார்த்த வாழ்க்கையில் இவ்வாறு நிற்கவேண்டியுள்ளது.மனுஷ்யபுத்திரன் அவர்களே நீங்களாக உங்களுக்கு பிடித்த ஒரு சாராரை பாதிக்கப்பட்டோர் என்று கூறிக் கொண்டு அவர்களைச் சார்ந்து நின்று கொண்டு உண்மையில் பிரச்சனையால் பாதிக்கப்பட்டோரை கல்லெறிவது தான் மனிதத் தன்மையா?இவ்வாறு செய்ய உங்களுக்கு என்ன வன்மம் வெகுஜன மக்கள் மீது.பிறர் பேசுவதையே காதில் வாங்காதபடி நீங்கள் அலறுவதை பல நிகழ்ச்சிகளில் காண்கிறேன்.இது மாற்றாரின் கருத்தை சொல்லவிடாத தந்திரம் என்று யாரும் புரிந்து கொள்ளலாம்.வெகு ஜன ஊடகம் என்பது நடுநிலை செய்தலை கடமையாகக் கொண்டு இருக்க வேண்டும்.ஆனால் இன்று தலைகீழ் நிலைமை.இவர்களே பாதிக்கப்பட்டவர்கள் மீது இவர் போன்ற வெகுஜனவிரோதிகளையும் மனத்தில் வன்மமும்,வேறேதோ தீவிரவாத நோக்கமும் கொண்டோரை எல்லாம் கொண்டு வந்து அமிலம்
ஊற்றுகிறார்கள்.

ttpian said...

manisha puthiran face has been covered with HAIR