Pages

புதன், மே 01, 2013

மனுஷ்ய புத்திரன் - இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற விரும்புகிறாரா?


உயிர்மை எனும் பத்திரிகையை நடத்தும் மனுஷ்ய புத்திரன், மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாடு குறித்து நக்கீரன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் "நான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்காக என்னையும் சூத்திரன் என்று அழைப்பீர்கள் என்றால் என் வாழ்க்கையில் வேறு எதையும் விட அந்தப்பட்டத்தை நான் மிகுந்த கௌரவத்துடன் ஏற்பேன்" என்று கூறியுள்ளார்.
மனுஷ்ய புத்திரனின் இந்த விருப்பம் விபரீதமானது. அவரே விரும்பினாலும் அது நடக்கவும் நடக்காது. இஸ்லாமியர் ஒருவர் சூத்திரனாக விரும்பினால், அதற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதைத் தவிற வேறு வழி இல்லை. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது. அதாவது அவர் ஒரு இஸ்லாமியர். இவர் எப்படி சூத்தரன் ஆக முடியும்?

இஸ்லாமியர் ஒருவர் தன்னை "சூத்திரன்" என கருதினால், அவர் இந்து மதத்திற்குள் வந்துவிடுகிறார். இஸ்லாமியர் ஒருவர் இந்து மதத்தின் சாதிக்கொடுமைகளை எதிர்ப்பது என்பது வேறு, அவரே இந்து மதத்துக்குள் வருவது என்பது வேறு. ஒரே நேரத்தில் ஒருவர் இந்து - இஸ்லாமியர் என்கிற இரட்டை வேடங்களையும் போட முடியாது.

மனுஷ்ய புத்திரனின் வாதத்தை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா? என்பதை இஸ்லாமியர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, முற்போக்கு வேடம் போடுவதாக நினைத்துக்கொண்டு, இஸ்லாமிய மதத்துக்கு துரோகம் இழைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் எஸ். அப்துல் ஹமீது. இது தேவைதானா?

மனுஷ்யபுத்திரன் சாதிக்கொடுமை குறித்து ஊருக்கு உபதேசிப்பதற்கு முன்பு, குழந்தைத் திருமணக் கொடுமை குறித்து அவர் பேசிப் பார்க்கட்டும்!

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

அது தானே ! சாதிக் கொடுமை பற்றியெல்லாம் பேசிக் கொண்டு வேறு மதத்து காரவங்க, நாட்டாமை மாதிரி வந்திடுறாங்க.
செல்லாது செல்லாது.
இவங்கெல்லாம் எங்க ஆட்டத்திற்கு வரக் கூடாது. நாங்க இந்து, நாங்க மட்டுந்தான் ஜாலியா சேரி குடிசையெல்லாம் கொளுத்தி விளையாடுவோம். தலித்களை அடிச்சி் விளையாடுவோம். அப்பாவிகளை கொன்னு விளையாடுவோம்.மாற்று மத்தினர் இதில் தலையிடககூடாது
ஆமாஞ்சொல்லிபுட்டேன்

Unknown சொன்னது…

மனுசுயபுத்திரன் போன்று தமிழகத்தில் இருக்கிற இசுலாமியர்கள் அரேபியாவிலிருந்தோ, ஈரான்-ஈராக் தேசங்களிலிருந்தோ வந்தவர்கள் இல்லை. இந்த மண்ணில் பிறந்த தமிழர்கள்தான். இந்து மதத்தின் சாதிக்கொடுமைகளை எதிர்த்து சில தலைமுறைகளுக்கு முன்னால் இசுலாத்திற்கு மாறியவர்கள்தான் என்பது அருளுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

நிஜாம் கான் சொன்னது…

மனுஷ்யபுத்திரன் ஒரு கேடு கெட்ட அயோக்கியன், அவனுக்கும் இஸ்லாத்திற்கும் துளிகூட தொடர்பு இல்லை எனும்போது அவனது செயலை இஸ்லாமோடு கோர்த்து பேசத்தேவை இல்லை. குழந்தை திருமணம் கொடுமை என்கிறீர்கள். 5 வயசு பிள்ளைக்கா திருமணம் செய்து வைக்கப்படுகிறது? பருவமடைந்த பெண்களை குழந்தை என்று சொல்லும் முட்டாள்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். உங்கள் கணக்குப்படியே பார்த்தால் மேஜராகிய ஒரு பெண் காதல் திருமணம் செய்ததற்காக ஒரு ஊரையே கொழுத்தியது கொடுமை இல்லையா? மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என உங்கள் தலைவர் சொல்கிறார், ஆனால் நீங்கள் மதுவைக்குடித்து விட்டு பாட்டிலை பொதுமக்களின் மீது வீசி அடிக்கிறீர்கள். அது கொடுமை இல்லையா? தலைவரை கைது செய்ததற்காக தமிழகம் முழுவதும் பஸ் மீது கல்லெறிந்து பல பஸ்களை பயணிகளோடு கொழுத்த முயற்சித்து அவர்கள் காயங்களுடன் தப்பிக்க பஸ்ஸை மட்டும் கொழுத்துகிறீர்களே அது கொடுமை இல்லையா? பசுமை தாயகம் என பம்மாத்து காட்டிக் கொணடு பச்சை மரங்களை சாலையில் வெட்டி சாய்க்கிறீர்களே அது கொடுமை இல்லையா? மனுஷ்யபுத்திரன் என்ற அயோக்கிய பன்றிப்பயலோடு இஸ்லாத்தை இணைக்கிறீர்களே அது கொடுமை இல்லையா? குழந்தை திருமணம் குறித்த கேள்வி எழுப்பும் நீங்கள் பழனிபாபா உங்களுக்காக ஊர் ஊராய் மீட்டிங் போட்டு ஆள்சேர்த்தாரே! அப்போது இதை அவரிடம் கேட்டு தெளிவுபெறாமல் இஸ்லாமுடன் துளியும் தொடர்பில்லாத மானங்கெட்ட பய மனுஷ்யபுத்திரன் உடன் இணைத்து பேசுவதே கொடுமை. முடிந்தால் திருந்துங்கள்.

பெயரில்லா சொன்னது…

முட்டாள் தனமான பதிவு .. நால் வருணக் கோட்பாடு இந்து மதத்தில் மட்டும் பின்பற்றப்படவில்லை, இந்தியாவில் புழங்கும் அனைத்து மதத்திலும் உள்ளது. குறிப்பாக திருச்சி - தஞ்சைப் பக்கங்களில் கிறித்தவர்களில் வன்னியர்கள், வேளாளர்கள் போன்றோரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் தேவாலயங்களில், அவர்கள் தான் பிசப்புகளாகவும் இருக்கின்றனர். இதே போன்ற கட்டமைப்பு இஸ்லாத்திலும் உள்ளது. கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் உள்ள தமிழர்களும் இங்கிருந்த தமிழர்கள் தான் மதம் மாறிக் கொண்டவர்கள். அங்கும் வெவ்வேறு வடிவங்களில் சாதியம் உள்ளது.. அதன் வன்மங்களும், வடிவங்களும் மாறுபடலாம் அவ்வளவே..!

PRINCENRSAMA சொன்னது…

சமூகநீதி, சுற்றுச்சூழல் பேசும்போதும், ஈழம் பற்றிய தகவல்களைத் தரும்போதெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கும் தோழர் அருள், ஜாதியவாதம் பேசும்போது தரைக்கடியில் போய்விடுகிறார். மனுஷ்யபுத்திரன் ’என்னை சூத்திரனாகக் கருதிக் கொண்டாலும் சரி’ என்று நக்கீரனில் எழுதியதற்காக, முஸ்லிம் மதத்துக்கு துரோகம் செய்கிறார் என்று முஸ்லிம்களிடம் போட்டுக் கொடுக்கும் அருளைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

பார்ப்பானுக்குப் பிறகு வேறு வர்ணங்கள் கிடையாது - எல்லோரும் சூத்திரர்களே என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டபிறகு, இந்துமதத்தின் பெருமை பேசி, புராண விளக்கம் சொல்லி, ”நான் வன்னிய குல ஷத்திரியன், நீ நாலாஞ்சாதி” என்று பேசுகிற ஒரு கடைந்தெடுத்த மடையனை, அயோக்கியனை, இந்து மதத்தின் படி ஷத்திரியன் என்று தன்னை சொல்லிக் கொள்வதாலேயே தானாக சூத்திரனாகிவிட்ட (பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாகிவிட்ட) ஒருவனை, ’பார்ப்பன சங்கத் தலைவர் சொல்வது போலத் தான் எங்கள் மருத்துவர் அய்யா நடந்துகொள்கிறார்’ என்று சொல்வதில் வெட்கப்படாத கேவலமானவனைக் காப்பாற்ற... அருள் இன்னும் பாதாளம் வெட்டியெல்லாம் போவார் போலிருக்கிறது...

நன்னயம் சொன்னது…

"இஸ்லாமிய மதத்துக்கு துரோகம் இழைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் எஸ். அப்துல் ஹமீது. இது தேவைதானா?"

மனுஷ்ய புத்திரனுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையில் சிண்டு முடிய பார்க்கின்றீர்கள் அருள்.
தனி மனிதன் தான் சார்ந்த இயக்க வன்முறைகளை நியாயப்படுத்த எவ்வளவு கீழே இறங்கவும் தயாராக இருப்பான் என்பதுக்கு நீங்கள் சிறந்த உதாரணம்.

மனுஷ்யபுத்திரன் பிறப்பால் இஸ்லாமியராக இருந்த போதிலும் தன்னை அவர் இஸ்லாமியராக அடையாளப்படுத்துவதில்லை.

அதுமட்டுமல்ல இஸ்லாமிய ஷரியா சட்டம் தொடர்பாக மிகக்கடுமையான விமர்சனங்கள் எழுதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வசைபாடப்பட்டவர். இவருக்கு கொலை அச்சுறுத்தல் வேறு விடுக்கப்பட்டது.

அவர் தான் சார்ந்த்த மதம் மீதான நியாயமான விமர்சனம் வைக்கும் துணிச்சலில் ஒரு சதவீதம் தானும் உங்களுக்கு இருக்கின்றதா??

முதலில் சுயபரிசோதனை செய்யுங்கள் .

நீங்கள் செய்வது கோயபல்ஸ் வேலை

அருள் சொன்னது…

உயிர்மை பத்திரிகையில் அவரது பெயர் எஸ். அப்துல் ஹமீது என்றுதான் இருக்கிறது. அது இஸ்லாமிய பெயர்தான். அவரது பெயரை அவர் மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை.

மேலும், இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஒருவர் அந்த மதத்தை விட்டு வெளியேற அந்த மதம் அனுமதிக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாது.

நால் வர்ணம் என்கிற கோட்பாட்டை இந்து மதம் மட்டும்தான் கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமியர்கள் நுழைய என்ன இருக்கிறது?

நிஸார் அஹமது சொன்னது…

மனுஷ்புத்திரர் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்..அவர் இஸ்லாமியர் கிடையாது....அப்படியே அவர் அவர் தம் வழியை தேர்ந்தெடுத்துக்கொள்வதில் இஸ்லாத்திற்கோ, இஸ்லாமியர்களுக்கோ எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை.."ஒருவரின் பாவத்தை மற்றவர் சுமக்கமுடியாது" என்று இஸ்லாம் கூறுகிறது.

http://knrtimes.blogspot.com/ சொன்னது…

நன்றி மறப்பது நன்றன்று என்பது உங்களுக்கே உங்கள் தலைமைக்கே தெரியவாய்ப்பு இல்லை என்பது எனக்கு எனது சமுதயா மக்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் இந்த பதிவு

பழனிபாபா என்றா ஒரு முஸ்லிம் இல்லை என்றால் இன்னும் நீங்கள் மரவெட்டி கட்சி என்றே அல்லது ஜாதி கட்சியாக மட்டுமே இருந்து இருப்பிர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு மரவெட்டிah வரலாறு தெரியவில்லை என்றால் உங்கள்மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . பெண் திருமணத்தை பற்றி நன்றாக பேசலாம் வருங்கள்

நன்னயம் சொன்னது…

"உயிர்மை பத்திரிகையில் அவரது பெயர் எஸ். அப்துல் ஹமீது என்றுதான் இருக்கிறது. அது இஸ்லாமிய பெயர்தான். அவரது பெயரை அவர் மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. "

ஏன் பெயரை மாற்ற வேண்டும் ? பெயர் பெற்றோர் வைத்தது. அவர்க்கு மத நம்பிக்கை இல்லாவிடில் என்ன செய்வது?
பெரியார் தனது பெயரை மாற்றினாரா ? (ராமசாமி )

"இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஒருவர் அந்த மதத்தை விட்டு வெளியேற அந்த மதம் அனுமதிக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாது."

இந்தியாவில் இஸ்லாமில் இருந்து வெளியேற எந்த தடையும் இல்லை. இஸ்லாமிய நாடுகள் தவிர்ந்து வேறு எந்த நாட்டிலும் வெளியேறலாம். சிங்கப்பூரில் இஸ்லாமிய பெண் இஸ்லாமியர் அல்லாத ஆணை திருமணம் செய்ய முடியாது.ஆனால் ஆண் முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்யலாம். அல்லது பெண் தன்னை இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறியவராக அறிவித்து பின் திருமணம் செய்யலாம்.

மனுஷ்யபுத்திரன் அப்படி அறிவித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமியராக நடப்பதில்லை.

நன்னயம் சொன்னது…

@நிஜாம் கான்
நாகரீகமாக பின்னூட்டம் இட கற்றுகொள்ளுங்கள். இதுதான் இஸ்லாமியர்களின் கலாச்சாரம் என்றால் பிரச்சினை இல்லை.

sheik mohideen சொன்னது…

HI MANUSA PUTHIRAN YOU ARE AFROUD
மனுஷ்யபுத்திரன் என்ற அயோக்கிய பன்றிப்பயலோடு இஸ்லாத்தை இணைக்கிறீர்களே அது கொடுமை இல்லையா? குழந்தை திருமணம் குறித்த கேள்வி எழுப்பும் நீங்கள் பழனிபாபா உங்களுக்காக ஊர் ஊராய் மீட்டிங் போட்டு ஆள்சேர்த்தாரே! அப்போது இதை அவரிடம் கேட்டு தெளிவுபெறாமல் இஸ்லாமுடன் துளியும் தொடர்பில்லாத மானங்கெட்ட பய மனுஷ்யபுத்திரன் உடன் இணைத்து பேசுவதே கொடுமை. முடிந்தால் திருந்துங்கள்
A.SHEIK MOHIDEEN
PUDUCHERRY

Padmanaban சொன்னது…

உங்களுக்கு இஸ்லாமியர் ஒருவர் நீங்கள் செய்தது தவறு என்றதால் கோபம் வருகிறது. இஸ்லாமியர்களுக்கோ அவர் "சூத்திரன் என்று அழைத்தாலும் பரவாயில்லை" என்றது கோபம் வருகிறது. இங்கே சாதியும், மதமும் சண்டையிட்டு கொள்கிறது. வாழ்க மக்களே.