Pages

சனி, டிசம்பர் 31, 2016

தி இந்து கும்பலின் சாதிவெறி: மருத்துவர் அன்புமணிக்கு சாதிப்பட்டம்!

'தி இந்து' வெளிவராத புத்தகங்கள்- 2016 என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைவர்களை விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் இதர தலைவர்களை பொதுவாக விமர்சனம் செய்துள்ள அப்பத்திரிகை, பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை மட்டும் சாதி பொருள் படும்படி "பள்ளி" என்று விமர்சனம் செய்துள்ளது.  

ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் மட்டம் தட்டி, தி இந்து தனது சாதி வெறி அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகத்தில் இருக்கும்  பிராமண சாதியினர் தொடர்ந்து தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர்களை குறிவைத்து தாக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும்.

பள்ளி என்பது வழக்கொழிந்துபோன சொல்.

பார்ப்பான் என்கிற பெயரை பிராமணர் பயன்படுத்த விரும்புவதில்லை. அதுபோல இன்னும் பல சமூகங்கள் அவரவர் சாதியின் 'கொச்சையானது என்று கருதப்படும் பெயர்சொற்களை' பயன்படுத்துவது இல்லை (அந்த நீண்ட பட்டியலை இங்கே குறிப்பிடும் தேவையும் இல்லை).

அதுபோல, ஒருகாலத்தில் பள்ளி என்கிற வார்த்தை மன்னர் பரம்பரை என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் - விஜயநகர பேரரசின் ஊடுருவலுக்கு பின்பு, வன்னியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், பள்ளி என்கிற வார்த்தை சாதாரண வழக்கத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை.

இதன் உச்சமாக, 1850 ஆண்டு வாக்கில், சாதிவாரி கணக்கெடுப்பில் பள்ளி என்கிற பெயரை கீழான சாதி என்கிற வரையறையின் கீழ் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயன்றனர். இதனை எதிர்த்து, 1888 ஆம் ஆண்டு வன்னியகுல சத்திரிய மகா சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் முதன்மை நோக்கம், பள்ளி என்கிற பெயரை சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தில் வெற்றியும் அடைந்தனர்.

பள்ளி என்று அழைப்பதை இன்றைக்கும் திட்டும் வார்த்தையாகவே வன்னியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதனால், பெரும் சண்டைகளும், கொலைகளும் கூட நடந்துள்ளன.

இலக்கியங்களில் பள்ளி எனும் சொல்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1950 ஆம் ஆண்டில் எழுதிய 'சௌந்தர கோகிலம்' எனும் நாவலில் - பள்ளி என்பதும் பாப்பான் என்பதும் கொச்சையான சொல் - என்று பொருள்படும் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:
'ஒகோ! அப்படியா சங்கதி "கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் பள்ளிப்பயல்" என்றும், "கண்டால் சாமி சாமி, கானாவிட்டால் பாப்பான்" என்றும் சிலர் நடந்து கொள்வதுண்டு. அதுபோல இருக்கிறது காரியம். சொந்தக்காரர் இல்லா விட்டால், அவர்களுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுகிறது. அவர்கள் இருந்தால் அவர்களிடம் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்ளுகிறது. இந்த மாதிரி நியாயம் மூட ஜனங்களிடத்தில் இருக்கத் தகுந்ததென்றல்லவா நான் நினைத்தேன். நாகரீகம் கண்ணியம் முதலியவை வாய்ந்த நம்மைப் போன்றவர்களிடத்தில்கூட இந்த நியாயம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது'. 
- இவ்வாறு 'சௌந்தர கோகிலம்' நாவல் கூறுகிறது.

வன்னிய புராணம் வசன வடிவிலான காவியத்திலும் பள்ளி என்கிற சொல் கொச்சையான சொல்லாக கீழ்கண்டவாறு அடையாள படுத்தப்பட்டுள்ளது:
தேவேந்திரன் அங்குவந்து "பள்ளியாரே! பரமசிவன் வரத்தால் பிறந்த உங்களுக்கு இந்த அல்லல் வந்தது என்ன" என்று விளையாட்டாகக் கேட்டான்.

உடனே வன்னிய குமாரர்கள் கோபமுற்று, "எங்களைப் பள்ளி என்று சொல்லி நீர் பழிக்கலாகுமோ? உம் தேகத்தை இப்போதே வெட்டி வீழ்த்தி எமதூதர் கையிலே கொடுக்கிறோம் பாரும்!" என்று கூறி கண்களாலே நெருப்புப் பொறி பறக்க வீரமீசைகள் படபடக்க ஆத்திரத்துடன் வீரவாள்களை உருவினார்கள். 
- இவ்வாறு வன்னிய புராணம்' கூறுகிறது.

இந்துவை கண்டிக்க வேண்டும்.

சுமார் கடந்த இருநூறு ஆண்டுகளாக வன்னியர்களை பழிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும் 'பள்ளி' என்கிற சொல்லைக்கொண்டு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை கேலி செய்துள்ளது தி இந்து.

பள்ளி என்பது ஒரு அரசபரம்பரை சொல்தான். ஆனால், அந்த சொல் அதே பொருளில் இப்போது பயன்பாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, சாதியை சொல்லி மருத்துவர் அன்புமணி அவர்களை திட்டவேண்டும் என்கிற இழிநோக்கில்தான் தி இந்து இதனை எழுதியுள்ளது. எனவே, இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பட்டை நாமம்: மோடி போட்டதும், மோடிக்கு போட்டதும்!

இந்தியாவின் 'மாபெரும் புரட்சி' என்று பேசப்பட்ட, மோடியின் செல்லாக்காசு நடவடிக்கை, இப்போது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்' என்கிற நிலையை அடைந்துள்ளது. 

அதனால்தான் - கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் ஒழிக்கிறேன் என்று பேசிக் கிளம்பிய டேஷ் பக்த கும்பல், இப்போது 'கேஷ் லெஸ் எகானமி' - 'லெஸ் கேஷ் எகானமி' என்று புதிது புதிதாக புரூடா விடுகிறது. 

மோடிக்கு வங்கிகள் போட்ட பட்டை நாமம்

லட்சக்கணக்கான கோடி கருப்புப் பணத்தை பிடிக்கப்போகிறேன் என்று பிரதமர் மோடி பீலா விட்டார். ஆனால், டிசம்பர் 23 ஆம் நாள் கணக்கின் படி, மக்களிடம் மீதமிருந்த 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களின் மதிப்பு 97,613 கோடி ரூபாய் மட்டும் தானாம்! அதாவது - ஒரு லட்சம் கோடிக்கும் குறைவு.

நவம்பர் 8 ஆம் நாளில் மக்களிடம் இருந்த செல்லா தாள்களின் மதிப்பு 15,45,816 கோடி. அதில் டிசம்பர் 23 ஆம் நாள் வரை, வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ள பணம் 14,48,203 கோடி! மீதம் இருந்த பழை தாள்களின் அளவு 97,613 கோடி ரூபாய்.

டிசம்பர் 23 முதன் 30 வரையில் வங்கிகளில் செலுத்தப்படும் பழை தாள்கள், மற்றும் ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தப்படவுள்ள பழை தாள்கள் ஆகியவற்றையும் சேர்த்து பார்த்தால் - மிகப்பெரிய பூஜ்யத்தை மோடி பெறுவார் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

அதாவது, வங்கிகளின் துணையுடன் எல்லா கருப்பு பணமும் இப்போது நல்ல பணம் ஆகிவிட்டது! இது வங்கிகள் மோடிக்கு போட்ட பட்டை நாமம் ஆகும்!

மக்களுக்கு மோடி போட்ட பட்டை நாமம்

மக்களும் கருப்பு பண முதலைகளும் 14,48,203 கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கு புதிய ரூபாய் தாள்களாக 5,92,613 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய தாள்களில் பாதியளவுக்கு கூட புதிய தாளை தரவில்லை. சுமார் 8,55,000 கோடி மக்கள் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக, கேஷ் லெஸ் எகானமிக்கு மாறுகிறோம் என்று சொல்லி, மக்கள் பணத்தை வங்கிகளில் குவித்து, பெரும் கார்ப்பரேட் பணக்காரர்களுக்கு (வராக்)கடனாக கொடுக்கப் போகிறார்கள். இது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்'. மோடி மக்களுக்கு போடும் பட்டைநாமம்.

பாரத் மாதாகீ ஜே...!

வியாழன், டிசம்பர் 29, 2016

கிறுக்குத்தனமான நோபல் பரிசு: இறந்த பிறகும் ஏமாற்றப்படும் ஜெயலலிதா!

ஜெயலலிதா ஏமாற்றப்படுவதற்காகவே பிறந்தவர் போலிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் போது, ஐநா சபையின் 'தங்கத்தாரகை விருது' வழங்குவதாக சொல்லி நன்றாக ஏமாற்றினார்கள். இப்போது, அவர் இறந்த பிறகும் 'அமைதிக்கான நோபல் பரிசு' என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இறந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடையாது

நோபல் பரிசு அமைப்பின் சட்ட விதிகளின் படி - உயிரோடு உள்ளவர்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு வழங்கப்படும். இதனை நோபல் சட்டவிதி, பிரிவு 4 தெளிவாகக் கூறுகிறது. (Work produced by a person since deceased shall not be considered for an award. Article 4. Statutes of the Nobel Foundation)

நோபல் பரிசினை அறிவிக்கும் போது உயிரோடு உள்ள ஒருவர் - அந்தப் பரிசு வழங்கும் போது உயிரோடு இல்லாவிட்டால் மட்டுமே - இறந்தவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்த விதிகளுக்கு மாறாக, 2011 ஆம் ஆண்டில் ரால்ஃப் ஸ்டெய்ன்மென் என்ற ஒருவருக்கு நோபல் பரிசு அறிவித்தார்கள். ஆனால், அந்த அறிவிப்புக்கு மூன்று நாள் முன்னதாக அவர் இறந்துவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் - நோபல் பரிசு நிருவாகக் குழுவைக் கூட்டி, ரால்ஃப் ஸ்டெய்ன்மெனுக்கு பரிசை அறிவிக்கும் போது அவர் இறந்துவிட்ட தகவல் எங்களுக்கு தெரியாது. அவர் உயிரோடு இருப்பதாகக் கருதிதான் அதனை அறிவித்தோம். நல்ல எண்ணத்துடன் அறிவிக்கப்பட்டதால், அந்த பரிசு செல்லும் என்று விளக்கம் அளித்தார்கள்.

(Following an emergency meeting of officials at the Nobel assembly, it was decided that, in this instance, the rules could be ignored. The Nobel foundation concluded that the award should stand, saying: "The Nobel prize to Ralph Steinman was made in good faith, based on the assumption that the Nobel laureate was alive.")

இவ்வாறு, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு இல்லை என்பது தெளிவாக உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அவர் இறந்தபின்னரும் ஏமாற்றுகின்றனர்.

தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருது

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, 2004 ஆம் ஆண்டில் அவருக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.
உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. 

(தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

உடன் இருப்பவர்களால் ஏமாற்றம்

உயிரோடு இருந்தபோது ஏமாற்றும் டுபாக்கூர் விருது கொடுத்தனர். இறந்த பின்னர் சாத்தியமே இல்லாத நோபல் விருது கோரிக்கையை அதிமுக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றுகின்றனர். 

இருக்கும் போதும், இறந்த பின்பும் உடன் இருப்பவர்களாலேயே ஏமாற்றப்படுவதற்காக பிறந்தவர்தான் ஜெயலலிதாவா? 

புதன், டிசம்பர் 28, 2016

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு: மருத்துவர் அன்புமணி பங்கேற்றது ஏன்?

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பங்கேற்றதை வைத்து, முஸ்லிம்களுக்கு பாமக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்று சிலர் கொந்தளித்தார்கள்.

ஆனால், முஸ்லிம்களுக்காக மட்டும் பாமக அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாறாக, பாமகவின் கொள்கையே 'பொது சிவில் சட்ட எதிர்ப்புதான்' என்கிற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றார்.

பாஜகவுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்த 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே - பொதுசிவில் சட்ட எதிர்ப்புதான் பாமகவின் நிலைப்பாடு என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. (படத்தில் காண்க). இதனை 9.11.2016 அன்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை 9.11.2016

இஸ்லாமிய சகோதரர்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் கூட பொது சிவில் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது; எதிர்க்கிறது; எதிர்க்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளையும், அதன் அரசியல் பயணத்தையும் அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாக புரியும். 

இந்தியாவில், பொருளாளர் பதவியை இஸ்லாமிய சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்த முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். பா.ம.க.வின் இந்த கொள்கையைத் தான் இன்று மேலும் பல கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் நலனுக்காக சமூக சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தியது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம் அதை எதிர்த்து போராடியது, கோவை கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்பட்ட போது அதற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை
பொது சிவில் சட்டத்திற்காக பாஜக அணிந்திருக்கும் புதிய முகமூடி ‘‘தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்பதாகும். தலாக் நடைமுறையால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதற்கான தீர்வு தலாக் நடைமுறையில் உள்ள குறைகளை களைவது தானே தவிர பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்ல. இது காலில் உள்ள புண்ணை குணப்படுத்துவதற்கு பதிலாக காலையே வெட்டி வீசுவதற்கு சமமாகும். 

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

- இவ்வாறு 9.11.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பாமகவின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு நிலைப்பாட்டை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்  தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இன்று: ஒரு பிரதமர் அக்னி பிரவேசம் செய்யும் நாள்!

50 நாட்களில் பணத்தாள் தட்டுப்பாடு நீங்காவிட்டல் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார் நரேந்திர மோடி.

இன்றுதான் அந்த 50 ஆவது நாள் என்பதை அவருக்கு யாராவது புரிய வைப்பார்களா?

"பணமதிப்பு நீக்கம் என்பது மாபெரும் ஊழல்" 

2017 ஆம் ஆண்டு முழுவதுமே பணத்தாள் பற்றாக்குறை நீங்காது. ஏடிஎம் எந்திரங்கள் இயங்காது. வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தினை - சில ஆயிரம் மதிப்பிலான பெரிய தொகை - பணத்தாளாக வாங்கவே முடியாது.

புதிய பணத்தாளை தேவையான அளவு அச்சடிக்கவே இல்லை. இனி அச்சடிக்கவும் மாட்டார்கள்!

ஏனெனில், பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு (வராக்)கடனாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் செலுத்தப்படும் பணத்தை வங்கிகளிலேயே முடக்கி விட்டார்கள். இனி அதில் பெரும்பகுதியினை பணத்தாளாக வெளியே எடுக்க வாய்ப்பே இல்லை.

பணமதிப்பு நீக்கம் என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்பதை எதிர்கால வரலாறு சொல்லும்.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

கி. வீரமணியின் சசிகலா புராணம்: நாகபதனிக்காக களமிறங்கும் நாகப்பதனி!

நாகபதனி குழுவை சேர்ந்த அதிமுகவுக்காக - நாகப்பதனி குழுவை சேர்ந்த கி. வீரமணி வாள் வீச்சில் இறங்கியுள்ளார். அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்!

'அதிமுகவின் தலைமைக்கு சசிகலாவைத் தேர்வு' செய்ய வேண்டும். இதுவரை கேடயமாய் பயன் பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம்!" - என்று முழங்கியுள்ளார் திராவிடர் பூசாரி கி. வீரமணி!

இந்த உலகமகா தத்துவத்துக்கு தந்தை பெரியாரையும் துணைக்கழைத்து ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் - போர் வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’’ என்று நீட்டி முழக்கியுள்ளார்.

கூடவே, 'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்றும் கூறியுள்ளார் கி. வீரமணி. அவரின் இந்த உரிமைப்பாசத்தில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்! 

வீரமணி நாகப்பதனி குரூப்: அதிமுக நாகபதனி குரூப்

வடிவேலுவின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் 'நாகபதனி' மற்றும் 'நாகப்பதனி' என இரண்டு சாதிகளுக்குள் சண்டைப் போட்டி நடக்கும். இரண்டும் ஒருசாதி தானே என்று கேட்கும் போது - நடுவில் 'ப்' இல்லாததை கவனியுங்கள் மன்னா என்பார்கள்.

அதேபோல - கி. வீரமணி என்பவர் 'திராவிடர்' இயக்கத்தை சேர்ந்தவர். அதிமுக கட்சி 'திராவிட' இயக்கத்தை சேர்ந்தது. இரண்டுக்கும் நடுவே 'ர்' விட்டுவிட்டதை கவனியுங்கள்! 
அதாவது, இவை இரண்டும் வெவ்வேறு குழுக்கள் ஆகும். எப்படி 'இந்தியன் பேங்க்' என்பதும் 'பேங்க் ஆஃப் இந்தியா' என்பதும் இரண்டு வெவ்வேறு வங்கிகளோ, அதுபோலத்தான் இவை இரண்டும் வெவ்வேறு கொள்கைக் கொண்ட அமைப்புகள்!

திராவிட"ர்" இயக்கம் என்பதில்தான் வீரமணியின் திராவிடர் கழகம் உள்ளது. திராவி"ட" இயக்கம் என்பதில் திமுகவும் அதிமுகவும் உள்ளன. இவை இரண்டுக்கும் இடையே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்குமான மாபெரும் வேறுபாடு உள்ளது.

பெரியாருக்கு எதிரான இயக்கம்

தந்தை பெரியார் தலைமையிலான 'திராவிடர்' இயக்கம், 'பிராமணர் - பிராமணர் அல்லாதார்' என்கிற வேறுபாட்டை முன்னிறுத்தியது. அது 'திராவிடர்' என்கிற மக்கள் பிரிவினருக்கான இயக்கம் ஆகும். அதாவது, பிராமணர் அல்லாத மக்களின் இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.

பெரியாரின் கொள்கைக்கு நேர் எதிராக, அண்ணா உருவாக்கியது 'திராவிட' இயக்கம் ஆகும். 'தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதியை 'திராவிட நாடு' என்று குறிப்பிட்டு - இந்த நிலப்பகுதியின் நலனை முன்னிறுத்தியது 'திராவிட' இயக்கம். இது பிராமணர் உள்ளிட்ட எல்லோருக்குமான இயக்கம் ஆகும்.

"திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும்போது அதில் திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப்போக்குக்கு இது உகந்ததாகப் படவில்லை. நம்முடைய கட்சியின் லட்சியம் திராவிட நாட்டைச் செழுமையான பூமியாகப் பேணிக் காப்பதாகும்" - என்று 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தபோது அண்ணா தெரிவித்தார். (அண்ணா 'ர்' எழுத்தை கைவிட்டு விட்டதைக் கவனியுங்கள்)

அதாவது, திராவிடர் இனம் என்கிற பெரியாரின் கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டு, திராவிட நாடு என்கிற இடத்துக்காகத்தான் அண்ணா கட்சி தொடங்கினார். அதிலிருந்து உருவானதுதான் அதிமுக. 'ஆரியர் - திராவிடர்' என்கிற வேறுபாட்டை 67 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட கட்சிகள் கைவிட்டுவிட்டதால்தான்,  சட்டமன்றத்திலேயே 'நான் பாப்பாத்திதான்' என்று கூறிக்கொண்ட ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக வரமுடிந்தது.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் அப்பா?

யாரோ பெற்ற பிள்ளைக்கு தன்னுடைய இனிஷியலை சூட்டக் கூறுவது போல, கி. வீரமணிக்கு தொடர்பே இல்லாத அதிமுகவுக்கு வக்காலத்து வாங்கும் சாக்கில் -  'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்கிறார் வீரமணி!

அதிமுக திராவிடர் இயக்கமே இல்லை. அது திராவிட இயக்கம். அப்புறம் எப்படி உரிமையும் உறவும் வரும்? இந்தியன் பேங்க் மேனஜர், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு மேனஜர் ஆக முடியுமா?

யாராவது  கி. வீரமணியிடம் சொல்லுங்கள் - அது நாகப்பதனி குரூப் அல்ல. நாகபதனி குரூப் என்று! 

அதிர்ச்சி செய்தி: சசிகலாவிடம் வசமாக சிக்கினார் நரேந்திர மோடி!

சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சேகர் ரெட்டியை கைது செய்து, அப்படியே ஊழல் விஞ்ஞானி ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தியது மத்திய அரசு. அதுவரை நடந்தவை எல்லாம் சரிதான். ஆனால், அதன் பிறகு நடந்தவை பாஜக அரசின் சுயநல சொதப்பல் மட்டுமே. 

ராமமோகன ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பணம், ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அறிவிக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தால் அதன் தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பிறகு சமாதானமாக போக முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லை மத்திய அரசு.

மேலும், ராமமோகன ராவுடன் சேர்ந்து கொள்ளையடித்த அரசியல் மேலிடங்கள் மீதும் கை வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'ஹைதராபாத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். துணை ராணுவம் வந்துள்ளது. அவர்கள் அங்கே சோதனை செய்யப்போகிறார்கள், இங்கே சோதனை செய்யப்போகிறார்கள்' என புலிவருகிறது கதையாக பூச்சாண்டி காட்டினர்.

அரசியல் லாபமே மோடியின் நோக்கம்

மோடி அரசின் பூச்சாண்டிக்கான காரணம் மிகத்தெளிவானது. அவர்களுக்கு அதிமுக ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதன் கழுத்தை எதற்காகவும் அறுக்க மாட்டார்கள். அதிமுகவின் 13 ராஜ்ய சபா உறுப்பினர்களின் ஆதரவு மோடி அரசுக்கு தேவை. அப்படியே, தமிழ்நாடு அரசையும் தமது விருப்பம் போல நடத்த பாஜக விரும்பியிருக்கலாம்.

சசிகலா தரப்பை மிரட்டியே காரியம் சாதிக்கலாம் என்கிற பாஜக நினைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் ராமமோகன ராவ். இனிமேல் சசிகலா தரப்புக்கு எதிராக ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் - அது பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுத்த கதை ஆகிவிடும்.

தப்பி ஓடும் பாஜக

முள் மேல் விழுந்த சேலையின் நிலையில் இருக்கிறார் மோடி. இனி, சேலை கிழியாமல் தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக அரசு.

ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, சசிகலாவிடமிருந்து தப்பி ஓடுவதை விட்டால், மோடி அரசுக்கு வேறு வழியே இல்லை!

திங்கள், டிசம்பர் 26, 2016

வன்னியர்களை தோற்கடித்த தெலுங்கு மன்னன்: மாபெரும் தமிழர் வீழ்ச்சியின் தொடக்கம்

பாஜகவுக்கு காவடி தூக்கும் வன்னியர்கள் சிலபேர், அப்படியே இந்து விஜயநகரப் பேரரசுக்கும் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறார்கள். ஆனால், இதே இந்து விஜயநகரப் பேரரசால்தான் வன்னியர்கள் பேரழிவுக்கு ஆளானார்கள்.

இன்று வரை தொடரும் வன்னியரின் வீழ்ச்சி விஜயநகரப் பேரரசின் ஊடுருவலில்தான் தொடங்கியது.

தெலுங்கு ஆதிக்கத்தின் தொடக்கம்

துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம மரபினரான ஹரிஹரன்-புக்கன் உள்ளிட்ட சகோதரர்களால் விஜயநகர அரசு 1336-ல் உருவானது. இந்த புக்கனின் மகன்தான் குமார கம்பணன். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழகத்தின் மீது படையெடுத்தான் குமார கம்பணன். அப்போது அவனது சாம்ராஜ்ய விரிவாக்கத்துக்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர்கள் வன்னியர்கள்.

அப்போது - தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த இராஜ நாராயணன் (கி.பி.1339 - 1363) என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

எல்லை காத்த வன்னியர்கள்

தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் - அதற்கு வன்னியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் குமார கம்பணனின் முக்கிய இலக்காக இருந்தது. இதனை 1380 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட மதுராவிஜயம் எனும் சமற்கிருத காவியம் குறிப்பிடுகிறது.
'தமிழ்நாட்டை வெற்றியடைய வேண்டுமானால் நீ முதலில் வன்னியர் ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்று குமார கம்பணனிடம் அவனது தந்தை புக்கன் அறிவுரைக் கூறினான். அதனை ஏற்று வன்னியர் ஆட்சியை வீழ்த்தினான் என்கிறது குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல்.

தனது தெலுங்கு - இந்து இராஜ்யத்தை விரிவுபடுத்தவே குமார கம்பணன் தமிழ்நாட்டை கைப்பற்றினான், வடதமிழ்நாட்டை ஆட்சி செய்த வன்னிய மன்னர்களை தோற்கடித்தான். அதன்பின்னர் மதுரையை ஆண்ட முஸ்லிம் சுல்தான்களை வெற்றி கொண்டான். அதுவே தமிழ்நாட்டில் தெலுங்கு சாம்ராஜ்ய ஆதிக்கமாக விரிவடைந்தது.
ஹரிஹர சாஸ்திரி, சுப்ரமணிய சாஸ்திரி ஆகிய வரலாற்று அறிஞர்கள் 1924 ஆம் ஆண்டில் எழுதிய 'மதுராவிஜயம்' குறித்த ஆய்வு நூலில், முதலில் வன்னிய ராஜாவை தோற்கடித்து அதன் பின்னர் துருக்க ராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதை குறிப்பிட்டுள்ளனர். (attack and conquer the "Vannyarajas" further south and the Turushkarajas reigning at Madhura - Madhura Vijaya or Virakamparaya Charita - An Historical Kavya by Ganga Devi, by G. Harihara Sastri and V. Srinivasa Sastri 1924. படம் 1.)
இதே கருத்தை 'வன்னியர்களின் தலைவன் சம்புவராயனை தோற்கடிக்க வேண்டும்' என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதாக கர்நாடக பல்கலைக்கழகத்தின் கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் ஆய்வு நூலும் குறிப்பிடுகிறது. (Bukka I advised his son Kumara Kampana to march against the Shambuvaraya...The Sambuvaraya is the leader of "Vanniyas", Gangadevi's Madhravijayam - A Critical Study, by BA. Dodamani, Karnataka University 1991 படம் 2.)

தொடரும் தெலுங்கு ஆதிக்கம்

கி.பி.1362 -ல் இராஜ நாராயணச் சம்புவராயரை தோற்கடித்து தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினான்.

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது. விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான தெலுங்கு படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இப்படித்தான் தெலுங்கு நாயக்கர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ்நாடு சென்றது.

அன்று வன்னிய ராஜ்யத்தினை வீழ்த்தியதில் தொடங்கிய தெலுங்கு ஆட்சியும் தமிழகக் கொள்ளையடிப்பும் இன்று  ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வரை தொடருகிறது!

இந்த ஆதிக்க போக்கிற்கு இந்து சாம்ராஜ்யம் என்கிற போர்வையை போர்த்தி ஏமாற்றுகிறது இந்துத்வ கும்பல்!

சனி, டிசம்பர் 24, 2016

ஜெ. மரணத்தில் மர்மம்: சசிகலாவை எதிர்க்கும் 'சோ'வின் துக்ளக்'!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுவிவரமும் வெளிவர வேண்டும் என்றும், அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலா வரக்கூடாது என்றும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது, சோ நிறுவிய துக்ளக் பத்திரிகை.

துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில் 'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் சதி செய்தது அம்பலமானதால்தான் அவர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து சோவிடம் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்' என்கிறது துக்ளக்.

'அதிமுகவில் ஜெயலலிதா தவிர மற்ற எல்லோருமே சைபர்கள். அந்த சைபர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலா எனும் சைபரை தேர்ந்தெடுத்தால் அவர் சைபர் இல்லை என்று ஆகிவிடுமா?...  ஜெயலலிதா பாணியில் சசிகலா தன்னை சின்னம்மா என்று அழைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலத்தான்' என்கிறது துக்ளக்.

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் தலைமையேற்க கோரிக்கை வைப்பதும், பத்திரிகை முதலாளிகள் அவரை வரிசையாக சந்திப்பதும் அப்பட்டமான நாடகம் என்கிறது துக்ளக்.

"துக்ளக் கருத்து முக்கியமானது!"

துக்ளக் இதழ் ஜெயலலிதாவின் ஒரே ஆசான் ஆன சோ'வுடையது. அதுமட்டுமல்லாமல், இந்தியப் பேரரசை ஆளும் தில்லி தலைமையின் முக்கியமான ஆலோசகரும், நாக்பூர் தலைமையகத்தின் முக்கிய பிரதிநிதியுமான ஆடிட்டர் குருமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு துக்ளக் இதழ் வெளிவருகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆகும்.

துக்ளக் இதழின் கடுமையான சசிகலா எதிர்ப்பு - தமிழக அரசியலின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:




வெள்ளி, டிசம்பர் 23, 2016

அதிமுகவின் சாதி அரசியலும் - உயர்நீதி மன்றத்தின் அதிரடியும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அதிமுக அரசின் அப்பட்டமான சாதி அரசியலுக்கு தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது. 

அமைச்சரவையில் சாதி

ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கே அதிகாரமிக்க பதவிகள் அளிக்கப்படுகின்றன. 32 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 9 பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் முதலமைச்சர் பதவியும் அடங்கும்.

அதாவது, முதலமைச்சருடன் சேர்த்து 28 % அமைச்சரவை பதவிகள் முக்குலத்தோர் சமூகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோரை விட அதிக எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு வெறும் 9 % இடம் (3 பேர்) அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிட்டு பார்த்தால் - அதிமுகவின் சாதி அரசியல் தெரியும்.

அரசுப்பணி தேர்வில் சாதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும்.

அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளின் மதிப்பெண் மட்டுமல்லாமல், நேர்முகத்தேர்வு என்கிற வழியில் அளிக்கப்படும் மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு - கூட்டு மதிப்பீட்டின் படி அரசுப்பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசாங்க வேலைக்கான பணி நியமனங்களை மேற்கொள்ளும் இந்த இடத்தில் இருப்பவர்கள் நினைத்தால் - 'என்ன நடக்கும்' என்பது எல்லோரும் அறிந்ததுதான். இப்படிப்பட்ட முக்கியமான இடத்துக்கு - தேர்தல் தேதி அறிப்புக்கு முன்பாக, அவசரம் அவசரமாக 2016 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் 11 உறுப்பினர்களை நியமித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 11 உறுப்பினர்களில்:

முக்குலத்தோர் 7 பேர்
நாயுடு 1
கொங்கு வெள்ளாளர் 1
யாதவர் 1
தாழ்த்தப்பட்டவர் 1

அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 64 % முக்குலத்தோர் ஆகும். வன்னியர், முத்தரையர், வெள்ளாளர், முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு ஒரு இடம் கூட இல்லை.

தகுதியற்ற நியமனம்

இந்த நியமனத்தில் 'சாதிசார்பு நியமனத்தை விட பெரிய கொடுமை', தகுதியற்ற நபர்களுக்கு இந்த பதவிகளை வழங்கியதுதான்.

'அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை' என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 1.2.2016 அன்று அறிக்கை வெளியிட்டார்கள் .

பாமகவின் சட்டப்பிரிவான, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்குத் தொடுத்தார். பின்னர், இதே பிரச்சினைக்காக திமுகவும், புதிய தமிழகம் கட்சியும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் பாமக பொதுநல வழக்குடன் இணைத்து விசாரிக்கப்பட்டன.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய  உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது' என்று கூறி அவர்களின் நியமனத்தை ரத்து செய்திருக்கிறது. 

‘‘ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்கள் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முறையாக கலந்தாய்வுகள் செய்யப்படவில்லை. உறுப்பினர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

சாதி ஆதிக்கத்துக்கு தற்காலிக தடை!

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சியின் காரணமாக, சென்னை உயர்நீதி மன்றத்தீர்ப்பின் படி, அரசுப் பணியாளர் தேர்வில் சாதி ஆதிக்கம் நிகழாவண்ணம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சாதிக்கு 64 % உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட்ட சமூக அநீதிக்கு அடி கிடைத்துள்ளது.

ஒரு சாதி சார்பாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் - அது மிகப்பெரிய சமூக அநீதிக்கு வழிசெய்திருக்கும். அந்த ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இனியாவது, அதிமுக அரசு தனது சாதி அரசியல் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து பதவிகளிலும் உரிய விகிதாச்சார பங்கினை அளிக்க முன்வர வேண்டும். கூடவே, ஊழலுக்காக அல்லாமல், தகுதி அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கான நியமனங்களை அளிக்க வேண்டும்.

குறிப்பு: முக்குலத்தோர் சமுதாயம் ஒரு பின்தள்ளப்பட்ட சமுதாயம் ஆகும். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை நாம் ஆதரிக்கிறோம். மக்கள் தொகை விழுக்காட்டுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கும் உரிய அதிகாரம் தேவை என்பதே நமது நிலைப்பாடு. அதே நேரத்தில், தமது உரிமைக்கு அதிகமாக எந்த ஒரு சமூகமும் அதிகாரத்தில் கோலோச்சுவது சாதி மேலாதிக்கத்துக்கே வழி செய்யும். அது சமூகநீதிக்கு எதிரானதாகும். (மேலும், முக்குலத்தோரிலும் கூட, கள்ளர், மறவர் போன்று அகமுடையோருக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்).

செவ்வாய், டிசம்பர் 20, 2016

சசிகலாவும் முக்குலத்தோரும்: தமிழகத்திற்கே வழிகாட்டும் சமூகம்!

முக்குலோத்தோர் சமூகத்தினர் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் 'சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் ஆக வேண்டும்' என்று கருதுகிறார்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லக்கண்ணு, முத்தரசன், தா. பாண்டியன் ஆகியோர் சசிகலாவை சென்று சந்தித்து ஆதரவு தெரிவிப்பதும், காங்கிரசு கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் தற்செயலானது என்று கருத முடியாது. சசிகலா ஆதரவுதான் பெரும்பாலான முக்குலத்தோர் சமூகத்தினரின் கருத்தாக இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் இந்த நிலைப்பாடு வரவேற்க கூடியதே.

சாதி, இனம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக இந்திய அரசியலோ, தமிழக அரசியலோ ஒருபோதும் இருந்தது இல்லை. அரசியல் அதிகாரத்தில் உரிய இடத்தை பெறாத எந்த சமூகமும் உரிய உரிமைகளுடன் வாழ்வது சாத்தியமும் இல்லை. எனவே, தம்முடைய சாதியினர் உச்ச அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று முக்குலத்தோர் நினைப்பது இயல்பானதும் நியாயமானதும் ஆகும்.

ஐநா மேம்பாட்டு லட்சியங்களும் - ஏற்றத்தாழ்வும்

ஏற்றத்தாழ்வை போக்குவது என்பது ஒரு உன்னதமான அரசியல் நோக்கமாகும். ஏற்றத்தாழ்வு நிலை குறைந்த அளவில் உள்ள சமூகமே அமைதியானதாக, நீடித்ததாக இருக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதும் நீடித்த ஆயுளும் கூட சமத்துவ சமுதாயத்தில்தான் அதிகம் என்பது ஆய்வுகள் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேரெதிராக - சமத்துவமற்ற சமூகத்தில் வன்முறையும், அமைதியின்மையும், பேரழிவும் நேர்கிறது. இப்போது உலகமெங்கும் இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஏற்றத்தாழ்வை அகற்றுவது தான் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை முன்வைத்துள்ள, நீடித்திருக்கும் மேம்பாட்டு லட்சியங்களின் (UN Sustainable Development Goals 2030) முதன்மை நோக்கம் ஆகும். இதனை 'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) என்று ஐநா அவையின் தீர்மானம் குறிப்பிடுகிறது. 2016 - 2030 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உலகளாவிய வளர்ச்சி இலக்கு இதுதான்.

ஏற்றத்தாழ்வு நிலை என்பது - தனிநபர் அளவிலான ஏற்றத்தாழ்வு (செங்குத்தான சமத்துவமின்மை - Vertical inequality), குழு அளவிலான ஏற்றத்தாழ்வு (கிடைமட்டமான சமத்துவமின்மை - Horizontal inequality) என இருவகைப்படும்.

சமத்துவமின்மை என்பதை பொத்தாம் பொதுவாக 'ஏழை - பணக்காரன்' என்று வரையறுக்க முடியாது. மாறாக, ஒருவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் அடிப்படையிலும் வரையறுக்க வேண்டும். கிடைமட்டமான சமத்துவமின்மைக்கு தனிமனித முன்னேற்றத்தின் அடிப்படையில் தீர்வு காண முடியாது. மாறாக, பின் தள்ளப்பட்டுள்ள குழுவே முன்னேற்றம் அடைந்தாக வேண்டும்.

இந்திய சூழலில் குழு அளவிலான ஏற்றத்தாழ்வு (Group inequality) நிலையை தீர்மானிப்பதில் சாதிதான் முதன்மையானது. இந்தியாவில் தனிமனித மேம்பாட்டின் மூலம் சமத்துவ நிலையை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை. சாதி அளவிலான மேம்பாடுதான் உண்மையான சமத்துவத்துக்கு வழிவகுக்கும். எனவே, சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது தான் - இந்தியாவில் ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு லட்சியங்களை அடைவதற்கான முதன்மை வழியாக இருக்கும்.

1. பொருளாதாரமும் சாதியும்

இந்தியாவின் பொருளாதாரத்தை ஆக்கிரமித்திருப்பது சாதிதான். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார பலம் வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த ஒரு ஆய்வு, இந்தியாவின் முதன்மையான 1000 கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இருப்போர் 93% பிராமணர்களும் பனியாக்களும்தான் என்கிறது. மக்கள் தொகையில் 5% அளவு கூட இல்லாத சாதிகள்தான் இந்திய பெரும் முதலாளிகளில் 93% அளவாக உள்ளனர். (8 லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளில் இருந்து கொள்ளையடித்திருப்பது இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்).

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

2. ஊடகமும் சாதியும்

இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பதும் சாதிதான். புதுதில்லியின் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள 300 பத்திரிகையாளர்களின் சாதியை ஆய்வு செய்த போது - அவர்களில் 88% பேர் உயர்சாதியினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பிராமணர்கள் மட்டுமே 49% ஆகும். இதற்கு நேர் எதிராக, மக்கள் தொகையில் பாதியளவுக்கும் கூடுதலாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) அளவு வெறும் 4% மட்டுமே.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ ஊடகங்களின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் ஊடகங்களின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

3. அரசியல் கட்சிகளும் சாதியும்

இந்திய அரசியல் கட்சிகளை ஆக்கிரமித்திருப்பதும் சாதிதான். இந்தியாவின் தேசிய கட்சிகள் அனைத்தும் மேல்சாதி ஆதிக்கத்தில் இருக்கும் கட்சிகளே ஆகும். குறிப்பாக, இந்திய அரசியல் கட்சிகளின் தலைமைக்குழுவில் உயர்சாதியினரே மிக அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளனர். பாஜகவின் உயர்பதவிகளில் 75%, காங்கிரசு கட்சியின் உயர்பதவிகளில் 73%, சிபிஎம் கட்சியின் உயர்பதவிகளில் 85%, சிபிஐ கட்சியின் உயர்பதவிகளில் 76% - என உயர்சாதியினர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ அரசியல் கட்சிகளின் உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் அரசியல் கட்சிகளின் உயர்பதவியை தீர்மானிக்கிறது.

4. நீதித்துறையும் சாதியும்

இந்திய நீதித்துறை முழுக்க முழுக்க மேல்சாதி ஆதிக்கத்தில் உள்ளது. உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்ற தலைமைப் பதவிக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) வந்துள்ளனர். இந்திய உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளில் 70% பேர் வெறும் 135 உயர்சாதி குடும்பங்களில் இருந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது, தனிநபரின் தகுதியோ திறமையோ நீதித்துறை உயர்பதவியை தீர்மானிக்கவில்லை. மாறாக, உயர்சாதியில் பிறந்த பிறப்புதான் நீதித்துறை உயர்பதவியை தீர்மானிக்கிறது.

- இவ்வாறாக, பொருளாதாரம், ஊடகம், அரசியல், அதிகாரப்பதவிகள், நீதித்துறை என எல்லாவற்றிலும் சாதீய ஆதிக்கம் நீடிக்கிறது. இந்திய விடுதலை சாதியற்ற சமூகத்தை தோற்றுவிக்கும் என்று கற்பனை செய்யப்பட்டது. அந்தக் கற்பனை இப்போது காலாவதியாகிவிட்டது. இந்திய விடுதலைக்கு பின்னர், 70 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதும் சாதி ஆதிக்கமே தொடர்கிறது. எனவே, இதற்கானத் தீர்வும் சாதி ரீதியாகவே வந்தாக வேண்டும்.

சாதி ஏற்றத்தாழ்வுக்கு தீர்வு சாதி அரசியலே

"சாதி அரசியல் என்பதே சாதீய மேலாதிக்க முறைக்கு எதிரானது. சாதிதான் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது" (...we came upon two of India's greatest paradoxes, that caste was anti-caste, and that caste strengthened democracy) என்பது இந்திய அரசின் பத்மபூஷன் விருதுபெற்ற லாயிட் ருடால்ஃப் எனும் அமெரிக்க அறிஞரின் கருத்து ஆகும். ஏனெனில், சாதி அரசியல் என்பது 'ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை தகர்க்க முயல்கிறது. அதுவே, சாதாரண மக்களை ஜனநாயக தேர்தல் அரசியலில் ஈடுபடவும் ஊக்கப்படுத்துகிறது' என்றார் அவர்.

ஒருகாலத்தில் கோவில் விழாக்களில் சம உரிமை வேண்டும், சத்திரிய பட்டங்கள் வேண்டும் என்று 'சமூக அங்கீகாரத்துக்காக' போராடிய சாதி அமைப்புகள் - இந்திய விடுதலைக்கு பின்னர் 'அரசியல் அதிகாரம் வேண்டும்' என்கிற நிலைப்பாட்டுக்கு மாறின. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என உயர்பதவிகளில் தத்தமது சாதியினர் இடம்பெற வேண்டும் என்கிற சாதி அமைப்புகளின் போராட்டமே இந்திய ஜனநாயகத்தை பரவலாக்கியது என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வுக் கருத்தை அவர் 1960 ஆம் ஆண்டில் வெளியிட்டார். (The Political Role of India's Caste Associations, Lloyd I. Rudolph 1960)

லாயிட் ருடால்ஃப் அவர்களின் கருத்து இப்போதும் உயிரோட்டமாக இருக்கிறது. இந்தியாவின் சமத்துவமின்மைக்கு எதிரான ஒருசில மாற்றங்கள் சாதி ரீதியான போராட்டங்களின் மூலமே சாத்தியமாகியிருக்கிறது. இடஒதுக்கீடும், மண்டல்குழு போராட்டமும் அதற்கான அடையாளம் ஆகும். இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, முக்குலத்தோரின் ஒற்றுமையை கொள்ளலாம்.

"முக்குலத்தோரின் வெற்றி"

தமிழ்நாட்டின் அரசியலில் முக்குலத்தோர் சமூகம் தலைமை அதிகாரத்தை பிடிப்பது என்பது மிகப்பெரிய மாற்றம் ஆகும். சசிகலா என்கிற தனிநபரோ, அவரது பின்னணியோ இங்கே முக்கியமானது அல்ல. மாறாக, சசிகலா என்கிற அடையாளத்தை முக்குலத்தோர் சமூகம் எவ்வாறு தமக்கான அடையாளமாக மாற்றுகிறது, அவர்மீது நம்பிக்கை கொள்கிறது என்பதுதான் இங்கே முக்கியமானது ஆகும்.

அரசியல் சித்தாந்தங்கள், கொள்கை வேறுபாடுகள் என எல்லாவற்றையும் கடந்து - அனைத்து நிலைகளில் உள்ள முக்குலத்தோரும் தம்மை சார்ந்த ஒருவர் முழுமையான முதல்வராக வரவேண்டும் என ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

சர்வதேசிய வர்க்க அடிப்படை பேசிய கம்யூனிஸ்டுகள், இந்தியனாக ஒன்றுபடக்கோரிய தேசிய அரசியல்வாதிகள், திராவிட இனம் என்று பேசிய திராவிடக் கட்சியினர், சாதியை மறந்து தமிழனாக ஒன்றுபடக்கோரிய தமிழ்த்தேசியர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போது 'முக்குலத்தோர்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைகின்றனர். அரசியல் ரீதியில் வாக்களித்து அதிகாரத்தை பிடிக்க ஒன்றுபடாவிட்டாலும் கூட, அதிகாரம் 'ஏதோ ஒரு வழியில்' தம்முடைய சாதியின் கைகளுக்கு வரும்போது அதனை தவறவிடக்கூடாது என்று ஒன்றுபடுகின்றனர். இந்த ஒற்றுமை வரவேற்கக் கூடியதே ஆகும்.

இதே ஒற்றுமையை மற்ற சமூகங்களும் பின்பற்றுவது, தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்தவும், சமூகங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வை அகற்றவும்,  'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) எனும் ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளை (UN Sustainable Development Goals 2030) தமிழ்நாட்டில் சாத்தியமாக்கவும் வழிசெய்யும்.

குறிப்புகள்: 

1. 'அதிமுக என்கிற கட்சி நல்லாட்சியை அளிக்கும், சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்கள்' - என்றெல்லாம் நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மக்களின் கடந்த கால அனுபவங்கள் கசப்பானதாக இருக்கின்றன. அதே நேரத்தில், இவர்களுக்கு மாற்றாக அதிமுகவில் வேறு யாராவது வந்தாலும் கூட - காட்சிகள் மாறிவிடப்போவதில்லை.

2. அதிமுக - திமுக கட்சிகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான கட்சிகள் என்பதே நமது நிலைப்பாடு. அந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபடுவோம். எந்த சாதியினர் அதிமுகவின் தலைமைப் பதவிக்கு வந்தாலும் - மாற்றத்தை விரும்புவோர் அதிமுக கட்சியை எதிர்க்கவே செய்வார்கள்.

3. ஒவ்வொரு சாதியும் அதன் விகிதாச்சார எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் பெறவேண்டும் என்கிற 'வகுப்புவாரி உரிமையே' நியாயமானது ஆகும். எந்த ஒரு சமூகமும் அதன் விகிதாச்சார அளவை விட அதிகமான இடங்களை எடுத்துக்கொண்டால் அது சாதி ஆதிக்கமே ஆகும். அத்தகைய சாதி ஆதிக்கத்தை எந்த சாதி முன்னெடுத்தாலும் அதனை எதிர்ப்போம்.

திங்கள், டிசம்பர் 19, 2016

ரூ.5000 புதிய உச்சவரம்பு: இந்தியாவில் கருப்பு பணமே இல்லையாம்!

டிசம்பர் 30 ஆம் தேதிவரை, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தலாம் என்று அறிவித்த மத்திய அரசு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது. அடுத்த பத்து நாட்களில் ஒரே ஒருமுறை மட்டும்தான் 5000 ரூபாய்க்கு மேல் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

அதுவும் கூட, இரண்டு வங்கி அதிகாரிகள் முன்பாக, 'இவ்வளவு நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தாதற்கான காரணத்தை விளக்கிக் கூறி', அவர்கள் அதனை நம்பினால் மட்டுமே, 'ஒரே ஒருமுறை' வங்கியில் பழைய பணத்தை செலுத்த முடியுமாம். மற்ற எல்லோருக்கும் அடுத்த பத்து நாட்களில் மொத்தமாக 4999 ரூபாய்தான் உச்சவரம்பு!

"ஏன் இந்த தடுமாற்றம்?"

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன், கள்ளப் பணத்தை ஒழிக்கிறேன் என்பதெல்லாம் வெளியில் சொல்லப்பட்ட மோசடி காரணங்கள்.  'மக்களிடம் உள்ள பணத்தை வங்கிக் கணக்கில் முடக்கி, அதனை பெரும் பணக்காரர்களுக்கு கடனாக வாரி வழங்குவது மட்டும்தான்' மோடி அரசின் உண்மையான நோக்கம்!

எனினும், சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளை ஒழிக்கும் போது, அதில் சுமார் 4 லட்சம் கோடி அளவுக்கு பணம் திரும்ப வராது என்றும், அந்தப் பணம் ரிசர்வ் வங்கியின் பணமாக மாறுவதால், அதிலிருந்து ஓரிரு லட்சம் கோடி ரூபாயை எடுத்து - ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று மோடி அரசு திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார்கள்!

அதாவது, பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்த 8 லட்சம் கோடி ரூபாய் பணம் வராக்கடனாக போய்விட்டதால் - திவாலாகிவிட்ட வங்கிகளின் கணக்கில் மக்கள் பணத்தை குவித்து, மீண்டும் பணக்காரர்களுக்கே கடனை வாரி வழங்கும் நோக்கம் ஒருபக்கம் - மக்களின் கொந்தளிப்பை அடக்க, ஏழைகளின் கணக்கில் கருப்புப் பணத்தை பகிர்ந்தளிப்பது இன்னொரு நோக்கம் ஆகும்.

"ஏமாந்து போனது மோடி அரசு"

மக்களின் பணத்தை பிடுங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் ஒரு நோக்கத்தில் மட்டும்தான் மோடி அரசு வெற்றி அடைந்துள்ளது. ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 14 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் முழுவதுமே வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் நிலை இப்போது உருவாகி உள்ளது.

அதாவது, ஜனவரி முதல் வாரத்தில் கணக்கு பார்க்கும் போது - எல்லா ரூபாய் நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன. இந்தியாவில் பணத்தாளாக கருப்பு பணமே இல்லை என்று அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

இப்படி, எல்லா பணமும் திரும்பவும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதை தடுக்கவே இப்போதைய புதிய 5000 ரூபாய் உச்சவரம்பு திணிக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது நடப்பது மீண்டும் ஒரு துக்ளக் தர்பார்! எதற்கும் நாமும் சொல்லி வைப்போம் - "பாரத் மாதாகீ ஜே!"

தொடர்புடைய சுட்டிகள்:

1. 500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

2. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

3. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

4. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?


5. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை: சாதிவெறி பிடித்த ஊடகங்களின் பார்வைக்காக...!

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே. பாலு தொடர்ந்த வழக்கில் - 'சென்னை உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில்தான்' - இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடளவில் அளித்த உத்தரவு, இப்போது உச்சநீதிமன்றத்தால் இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை

2015 அக்டோபர் மாதம் ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நடத்தப்பட்ட உலக மது ஒழிப்பு கொள்கை மாநாட்டில் (Global Alcohol Policy Conference - Momentum for change: research and advocacy reducing alcohol harm, 7th-9th October 2015 in Edinburgh, Scotland) - பாமகவின் சாதனை மாநாட்டு உரையாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  


Litigation: A Tool for Enforcing Alcohol Regulation Legal Provisions எனும் தலைப்பில் வழக்கறிஞர் கே. பாலு உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது (படம் காண்க). 

(குறித்த நேரத்தில் விசா ஏற்பாடுகளை செய்ய முடியாததால் அவர் உலக மதுஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை). 

ஊடகங்களின் சாதிவெறி

உலக மது ஒழிப்புக் கொள்கை மாநாட்டிலேயே இந்த சாதனை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாமக வழக்கறிஞர் கே. பாலு தொடுத்த வழக்கு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பிலேயே உள்ள நிலையில் - பாமகவையும் வழக்கறிஞர் பாலுவையும் இன்னமும் ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?

ஊடகங்களின் சாதிவெறிக்கு ஒரு எல்லையே இல்லையா? எல்லாவற்றையும் சாதிவெறியுடன் பார்க்கும் இந்தக் கொடூரத்துக்கு ஒரு முடிவே இல்லையா?
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பு
தொடர்புடைய இடுகை: டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

மலையாளிகளால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' - தமிழர் கட்சி ஒன்று இந்திய அளவில் சாதனை படைத்ததை மறைத்து எழுதியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகையின் இனவெறியும், சாதிவெறியும் இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 

மறைக்கப்படும் சாதனை

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதால், இதனை எவரும் பேச மறுக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU Versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு 'தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என்று தொடுத்த வழக்கின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டின் போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, பாமகவின் வழக்குடன் அதுபோன்ற இதர வழக்குகளையும் இணைத்து விசாரணை நடத்தி 'இந்தியா முழுவதுக்குமாக' தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், ஊடகங்களும் சாதி வெறியர்களும் - ஏதோ சில பொதுநல அமைப்புகள் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது - என்பது போல மேம்போக்காக எழுதுகின்றனர். குறிப்பாக, மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், இந்த வழக்கின் தலைப்பு  "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" என்பதைக் கூட குறிப்பிடாமல், வேறு ஒருவர் தொடுத்த வழக்கு என்பது போல எழுதியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18.12.2016
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இவ்வாறு சாதிவெறி, இனவெறியுடன் உணமையை மறைத்து செய்திகளை வெளியிடுவதை விட, அந்த ஊடகத்தை நடத்துபவர்கள் பாலியல் தொழிலை நடத்துவது மேலானதாக இருக்கும்.

பாமகவின் மாபெரும் சாதனை

பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்; நெடுஞ்சாலைகளின் வெளிப்புற எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்ககக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து பார்க்கும் போது, பார்வையில் படும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகளோ, விளம்பரங்களோ எதுவும் இருக்கக் கூடாது - என்று தீர்ப்பளித்துள்ளது.

இது உலகளாவிய சாதனை
1. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலக நாடுகள் உருவாக்கியுள்ள 'ஆபத்தான மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்கான உலக வியூகத்திட்டத்தின் படி (Global strategy to reduce harmful use of alcohol 2010)- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், மதுபானம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், மதுமான விளம்பரங்களை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகள் (drink-driving policies and countermeasures; availability of alcohol; marketing of alcoholic beverages) இந்த தீர்ப்பின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
2. ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'தொற்றா நோய்களை தடுக்கும் திட்டத்தின்' (Global Action Plan for the Prevention and Control of NCDs 2013-2020) ஒரு முக்கிய அங்கமான, மதுப்பழக்கதை குறைத்தல் (At least a 10% relative reduction in the harmful use of alcohol) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு வழிசெய்கிறது.
3.  ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்தின்' (Global Plan for the Decade of Action for Road Safety 2011-2020) ஒரு முக்கிய அங்கமான,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல் (Set and seek compliance with drink–driving laws and evidence-based standards and rules to reduce alcohol-related crashes and injuries) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு மிகப்பெரிய அளவில் வழிசெய்கிறது.

பாமக வழக்கின் வெற்றி என்பது, ஐநா அவையும், உலக சுகாதார நிறுவனமும் முன்வைக்கும் உலகளாவிய மாபெரும் லட்சியத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - ஒரு மாபெரும் வரலாற்று சாதனை - இதனை சாதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற ஒரே காரணத்துக்காக கண்டும் காணாமல் செய்யப்படுகிறது.

ஊடகங்களின் இந்த மூடிமறைத்தலுக்கு சாதி வெறியைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இணைப்பு: பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதோTHE STATE OF TAMILNADU Versus K BALU & ANR

CIVIL APPEAL Nos .12164-12166 OF 2016
THE STATE OF TAMILNADU Versus K BALU & ANR 

Hon'ble the Chief Justice, His Lordship T.S. Thakur
Hon'ble Dr. Justice D.Y. Chandrachud  
Hon'ble Mr. Justice L. Nageswara Rao.

- judgment of the Bench - 

We accordingly hereby direct and order as follows :

(i) All states and union territories shall forthwith cease and desist from granting licences for the sale of liquor along national and state highways;

(ii) The prohibition contained in (i) above shall extend to and include stretches of such highways which fall within the limits of a municipal corporation, city, town or local authority;

(iii) The existing licences which have already been renewed prior to the date of this order shall continue until the term of the licence expires but no later than 1 April 2017;

(iv) All signages and advertisements of the availability of liquor shall be prohibited and existing ones removed forthwith both on national and state highways;

(v) No shop for the sale of liquor shall be (i) visible from a national or state highway; (ii) directly accessible from a national or state highway and (iii) situated within a distance of 500 metres of the outer edge of the national or state highway or of a service lane along the highway.

(vi) All States and Union territories are mandated to strictly enforce the above directions. The Chief Secretaries and Directors General of Police shall within one month chalk out a plan for enforcement in consultation with the state revenue and home departments. Responsibility shall be assigned interalia to District Collectors and Superintendents of Police and other competent authorities. Compliance shall be strictly monitored by calling for fortnightly reports on action taken.

(vii) These directions issue under Article 142 of the Constitution.
------------------


சனி, டிசம்பர் 10, 2016

எனக்கென்று உறவினர் கிடையாது - ஜெயலலிதா சொன்னதும் நடந்ததும்!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. 
எனக்கென்று உறவினர் கிடையாது. 
எனக்கு சுயநலம் அறவே கிடையாது"

செல்வி ஜெயலலிதா வாட்ஸ்அப் பேச்சு (15.12.2015): இங்கே சொடுக்குக.

நடந்தது என்ன? படத்தில் காண்க: 
நக்கீரன் 
ஜூனியர் விகடன்

புதன், டிசம்பர் 07, 2016

ஜெயலலிதாவை பின்பற்றுமா அதிமுக...?

அதிமுகவின் நிலைப்பாடுகள் அனைத்தும் மோசமானவை என்று கூறிவிட முடியாது. தமிழக நலனுக்கான கோட்பாடுகளையும் அக்கட்சி கொண்டிருந்தது. அத்தகைய நிலைப்பாடுகள் இனியும் தொடருமா என்பதுதான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி ஆகும்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சில விடயங்களில் ஒன்றுபட்டவர்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்த இருவருமே தம்மை தமிழராகக் கருதினர். பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் அதனை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக இரண்டு விடயங்களில் இதனைக் காண முடியும்.

1. தம்முடைய தனிப்பட்ட எண்ணம் வேறாக இருந்தாலும் - தமிழக மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று வரும்போது - தாம் முதலில் கொண்டிருந்த கருத்தினை கைவிட்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தனர்.

2. இந்தியப் பேரரசின் மீது விசுவாசம் கொண்டிருந்தாலும் தமிழகத்தின் தனித்தன்மையை நிலைநாட்டவும் முயற்சித்தனர்.

அதாவது, 'தமது தனிப்பட்ட கருத்தை விடவும் தமிழக மக்களின் உணர்வு மேலானது' என்பதையும், 'இந்தியப் பேரரசை விட தமிழகத்தின் நலன் முதன்மையானது' என்பதையும் அவர்கள் நிலைநாட்டினர். இந்தப் போக்கின ஒருசில நிகழ்வுகளிலாவது நாம் காண முடியும்.

1. மக்கள் கருத்துக்கு மதிப்பு

எம்ஜிஆர்

மிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கையில் எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். சாதிவாரி இடஒதுக்கீட்டில் பொருளாதார உச்சவரம்பு என்கிற திட்டத்தை 1979 ஆம் ஆண்டில் கொண்டுவந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான 31 % இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்கிற உச்சவரம்பை நிர்ணயித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்தது.

மக்களின் உணர்வுகளை அறிந்த எம்ஜிஆர், 7 மாதம் கழித்து தனது அரசு உத்தரவை திரும்பப்பெற்றார். அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல், முன்பு இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 31 % என்பதில் இருந்து 50 % ஆக அதிகமாக்கினார். அதாவது, சமூகநீதிக்கு எதிரான ஒரு உத்தரவை வெளியிட்ட அதே எம்ஜிஆர், தமது முடிவு தவறு என்று உணர்ந்ததும் சமூகநீதி கொள்கையை மேலும் வலுவாக்கும் உத்தரவை வெளியிட்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். தேசியத் தலைவர் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்கிற அளவுக்கு தீவிரமானவர். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்றார்.

ஆனால், 2009 இனஅழிப்புக்கு பின்னர் மக்களின் கொந்தளிப்பான மனநிலையை அறிந்து, இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்றும், தமிழீழம் அமைய வேண்டும் என்றும் மிகத்தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினை அவர் கடைசிவரை ஏற்கவில்லை என்றாலும், ஈழவிடுதலை, ராஜபக்சேவுக்கு தண்டனை, ராஜீவ் கொலைவழக்கில் கைதானோர் விடுதலை - ஆகிய நிலைப்பாடுகளில் மக்கள் உணர்வுக்கு ஏற்ப குரல் கொடுத்தார்.

2. இந்தியப் பேரரசுடனான உறவு

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும், இந்தியப் பேரரசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தமிழகத்தின் நலனை ஒருசில தருணங்களிலாவது முன்வைத்தனர்.

எம்ஜிஆர்

ராஜீவ் காந்தி ஈழத்தமிழர் சிக்கலில் தலையிட்ட போது, 'தான் என்ன சொல்கிறேனோ அதையே ஈழத்தமிழர்களும் தமிழர்களும் ஏற்க வேண்டும்' என்கிற கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

1986 ஆம் ஆண்டு, ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே சொல்லும் திட்டத்தை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி வற்புறுத்தினார். பெங்களூருவில் நடந்த சார்க் மாநாட்டின் போது, சென்னையில் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரபாகரனை பெங்களூருக்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜீவ் காந்தி. எம்ஜிஆரையும் பெங்களூருக்கு வரவழைத்து 'ஜெயவர்த்தனே திட்டத்தை ஏற்கவேண்டும் என பிரபாகரனிடம் சொல்லுங்கள்' என எம்ஜிஆருக்கும் கட்டளையிட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி சொன்ன படியே பிரபாகரனிடம் பேசுவதாகச் சொன்ன எம்ஜிஆர் - பிரபாகரனைக் கூப்பிட்டு, 'ஈழத்தமிழர்களுக்கு எது சரியென்று விடுதலிப்புலிகள் கருதுகின்றனரோ, அதையே செய்யுங்கள். ஜெயவர்த்தனே திட்டத்தை பிரபாகரன் ஏற்க வேண்டாம். ராஜீவ் காந்தியிடம் நான் பேசிக்கொள்கிறேன்' - என பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் எம்ஜிஆர்.

ஜெயலலிதா

'தான் இந்தியாவுக்கு விசுவாசம் மிக்கவர், மாநிலத்தின் நலன் அதற்கு அடுத்ததுதான்' என்று சொன்ன ஜெயலலிதாவும் - நடைமுறையில் பல விடயங்களில் தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவே இருந்தார்.

ஈழத்தமிழர் நலன், இடஒதுக்கீடு, கச்சத்தீவு, காவிரி, ஜிஎஸ்டி வரி, நுழைவுத்தேர்வு, மொழி உரிமை, மீனவர் சிக்கல் எனப் பெரும்பாலான கருத்துகளில் ஜெயலலிதா தமிழகத்தின் நலனுக்கு மாற்றாக, இந்திய தேசியத்தின் நலனை முன்வைக்கவில்லை.

ஜெயலலிதாவை பின்பற்றுமா அதிமுக...?

ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் இனியும் தொடருமா என்பதுதான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி ஆகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதங்களில், தமிழ்நாட்டுக்கு ஆதரவான தமது நிலைப்பாடுகளை ஜெயலலிதா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

(காண்க: Tamil Nadu Chief Minister’s Memorandum to the Prime Minister of India)

இதே நிலைப்பாடுகளை ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அரசும் பின்பற்றுமா என்பதுதான் இப்போதுள்ள முதன்மையான கேள்வி ஆகும்!

தமிழ்நாட்டிற்கு வெளியே பிறந்த அதிமுக முதலமைச்சர்களிடம் இருந்த உறுதிப்பாடு, தமிழ்நாட்டில் பிறந்த ஓ. பன்னீர்செல்வத்திடமும் இருக்குமா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
(குறிப்பு: எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே புதிய அரசு பின்பற்ற வேண்டும் என்பது தேவை இல்லை. குறிப்பாக, மதுரவாயில் மேம்பாலம், அண்ணா நூலகம், மோனோ ரயில், தலைமைச் செயலகக் கட்டிடம் போன்ற விவகாரங்களில் வீண் பிடிவாதத்தை தவிர்க்கலாம்).

படம்: ஜெயலலிதா இல்லாத அதிமுக குறித்து சமூக ஊடகங்களில் உலாவரும் படங்கள்.