Pages

ஞாயிறு, மார்ச் 23, 2014

மே 17 இயக்கத்துக்கு ஒரு சவால்: சர்வதேச விசாரணை எங்கே இருக்கிறது?

//ஐநாவால் கொண்டு வரப்படவுள்ள சர்வதேச விசாரணையை தடுக்க உள்நாட்டு விசாரணையை கொண்டு வந்து இலங்கையை காப்பாற்றும் அமெரிக்காதான் ஈழத்திற்க்கான தீர்வை தர போகிறதா?//

- இப்படி ஒரு கருத்தை மே 17 இயக்கம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

"ஐநாவால் கொண்டு வரப்படவுள்ள சர்வதேச விசாரணை" என்று மே 17 இயக்கம் எதைச் சொல்கிறது? அப்படி ஒரு விசாரணை எங்கே இருக்கிறது? அதை யார் கொண்டு வரப்போகிறார்கள்? அந்த விசாரணை எப்படி சாத்தியமாகும்? அதற்கான வழிமுறைகள் என்ன?

தானாக எந்த விசாரணையையும் ஐ.நா நடத்த வாய்ப்பே இல்லை. இல்லாத ஒன்றைக்காட்டி தமிழர்களை எதற்காக இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

இலங்கை இனப்படுகொலை: ஐநா விதிமுறை எனும் மாயமான்

ஐநா விதிமுறையின் கீழ் இலங்கையை ஐநா தானாகவே விசாரிக்க வேண்டும். அதனை அமெரிக்காதான் தடுக்கிறது என்று சொல்லி, மக்களைக் குழப்பி, பூச்சாண்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். ஆனால், அப்படி ஒரு விசாரணை வாய்ப்பு இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை!

ஐநா விதி 99 என்பது 'உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விடயங்களை ஐநா பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஐநா பொதுச்செயலர் கொண்டுவரும் அதிகாரம்' ஆகும். இது அரிதிலும் அரிதான தருணங்களில் பயன்படுத்தக் கூடிய அதிகாரம். ஐநா அவையின் வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இந்த அதிகாரம் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டது.

ஐநா விதி 99 இல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், வருமுன் காக்கும் நடவடிக்கையாக, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலை ஆராய ஒரு விசாரணைக் குழுவை ஐநா பொதுச்செயலர் அமைக்கலாம். இதன்படி 2008 ஆம் ஆண்டின் கடைசியிலோ, 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ, இத்தகைய ஒரு விசாரணையை ஐநா பொதுச் செயலர் நியமித்திருக்க வேண்டும். ஆனால், பான் கி மூன் இந்தக் கடமையில் இருந்து தவறிவிட்டார்.

(பான் கி மூன் கடமைத் தவறியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஐநாவின் விஜய் நம்பியாருடைய தம்பி சதீஷ் நம்பியார் ராஜபக்சேவின் ஆலோசகராக இருந்தார். பான் கி மூனுடைய உறவினரான இந்தியர் ஒருவரே ராஜபக்சேவின் கையாளாக இருந்தார் என்று கூறப்பட்டுகிறது. பான் கி மூனே தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கருதினார். அவர் ராஜபக்சேவுக்கு இணக்கமாகவே இருந்தார்).

பான் கி மூன் கடமை தவறினார் என்பதற்காக, அவரைக் கேள்வி கேட்கவோ தண்டிக்கவோ எந்த வழியும் இல்லை. ஐநா அவையே சார்லஸ் பெட்ரி குழு அறிக்கையின் மூலம் "ஆமாம், ஐநா அவை கடமை தவறியதுதான்" என்று ஒப்புக்கொண்டது. இலங்கையில் நாங்கள் கடமைத் தவறிவிட்டோம். இனி மற்ற நாடுகளில் இதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக செயல்படுவோம் என்று ஐநா கூறுகிறது.

இப்போது, இலங்கையின் நிலைமை பன்னாட்டு பாதுகாப்புக்கோ, பன்னாட்டு அமைதிக்கோ அச்சுறுத்தலாக இல்லை. எனவே, இனிமேல் ஐநா விதி 99 ஐ பயன்படுத்த வாய்ப்பே இல்லை.

ஐநாவும் ஐநா பொதுச் செயலரும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. அந்த அமைப்பு ராஜதந்திர வழிகளில்தான் செயல்படும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கலகங்களில் தலையிட்டுள்ள ஐநா அவை - மூன்று நிகழ்வுகளில் மட்டுமே ஐநா விதியை வெளிப்படையாக பயன்படுத்தியது.

அவ்வாறு விதி 99 இன் கீழ் விசாரணை நடத்தியிருந்தாலும் - அந்த அறிக்கை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் போகும். அங்கு இலங்கையின் நட்புநாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அவர்கள் இலங்கை மீதான விதி 99 அறிக்கையைக் குப்பைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஐநா அவையில் உச்ச அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலர் அல்ல. மாறாக, ஐநா பாதுகாப்பு அவையும், ஐநா பொதுச்சபையும்தான் அதிகாரத்துடன் உள்ளன. அங்கு உறுப்பு நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஐநாவில் நடக்கும் விடயங்கள் முழுக்க முழுக்க சர்வதேச அரசியல் சார்ந்தவையே ஆகும். அங்கு போய் 'ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை' என்று கேட்டுக் கொண்டிருந்தால் - அது காணல் நீராகவே முடியும்.

தொடர்புடைய சுட்டிகள்: 

ஐநா தீர்மானம்: குழப்பத்தின் சிகரம் மே 17 இயக்கம்!

1. மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

2. ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

3. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

4. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

5. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


6. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

ஐநா தீர்மானம்: குழப்பத்தின் சிகரம் மே 17 இயக்கம்!  

இலங்கையில் நடந்த கொடூரங்கள் குறித்து ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என உலகெங்கும் வாழும் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த ஐந்தாண்டுகளாக பலவிதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக ஐநா மனித உரிமைப் பேரவையில் ஒரு உருப்படியான தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் பன்னாட்டு முயற்சிகளுக்கு துணை நிற்க கடமைப்பட்ட முதல் நாடு அல்லது மக்கள் என்று பார்த்தால் - அது தமிழ்நாட்டினை உள்ளடக்கிய இந்திய நாடாகவும், தமிழ் மக்களாகவுமே இருக்க முடியும். ஆனால், வாய்ப்புக்கேடாக இங்கே தமிழர்கள் மத்தியில் இயங்கும் சில குழப்பவாதிகள் - எல்லாவற்றையும் குழப்பி, ராஜபக்சேவின் கரத்தை தெரிந்தோ தெரியாமலோ வலிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான சில எடுத்துக்காட்டுகளை காண்போம்:

கட்டுக்கதை 1: போர்க்குற்றம் என்று சொல்வது இனப்படுகொலை என்பதற்கு எதிரானது

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

//தமிழர்கள் 'இனப்படுகொலை விசாரணை' என்கிற ஒன்றைத்தவிர வேறு எதையும் ஏற்கக் கூடாது// என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், ஐநா மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கையில் நடந்த எல்லாவிதமான மனித உரிமை மீறல்களையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். அதற்காக ஒரு முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு சட்டவிதி மீறல்களான - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என எல்லாவகையான குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கான முகாந்திரத்துடன் தான் இரண்டாவது வரைவு தீர்மானம் உள்ளது.

'போர்க்குற்றம் என்பதை மட்டும் விசாரி, இனப்படுகொலையை விசாரிக்காதே' என்று வரைவுத் தீர்மானத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, ஐநா மனித உரிமை ஆணையரால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விசாரணையில் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் வெளியானால் - சர்வதேச சமூகம் 'இலங்கையில் இனப்படுகொலை நடந்தது' என சட்டப்பூர்வமாக ஏற்கும் சூழல் வரும்.

கட்டுக்கதை 2: // 'ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது' // - என்கிறது மே 17 இயக்கம்?

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

மே 17 இயக்கம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கிலேயே பல கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அதற்கு இந்த வாதம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

மே 17 இயக்கத்தின் இதுதொடர்பான வாதத்தில் மூன்று பச்சைப் பொய்கள் உள்ளன: முதலாவதாக - விசாரணையின் கால எல்லையையும் குற்றத்தின் வரம்பையும் பொருத்தமில்லாத இடத்தில் உதாரணமாக்கியுள்ளனர். இரண்டாவதாக - ஐநா மனித உரிமைத் தீர்மானத்தில் இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவதாக - ஐநா விசாரணையை ஆணையத்தையும் குற்றவியல் தீர்ப்பாயத்தையும் ஒன்றாக்கி குழப்பியுள்ளனர்.

இவையெல்லாம் வேண்டுமென்றே செய்யப்படும் குழப்பங்களாக இருக்கலாம்.

1. முதல் குழப்பம்:

//"1994ஆம் ஆண்டின் ருவாண்டா இனப்படுகொலையை விசாரிக்க ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயத்திடம் 1997 முதல் 2003 வரையிலான இனப்படுகொலைக் குறித்து விசாரிக்கக் கோரிய போது - ஐநா மிக தெளிவாக 'இது ருவாண்டாவில் 1994ல் நடைபெற்ற இனப்படுகொலையை மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம். இதற்கு அதை மட்டுமே விசாரிக்க அதிகாரமுள்ளது. வேறு எதையும் விசாரிக்க இதற்க்கு அதிகாரமில்லை. இதுதான் ஐநாவின் விதியென்று மறுத்துவிட்டது"// என்று ஒரு எடுத்துக்காட்டை அளித்துள்ளது மே 17 இயக்கம்.

அதாவது ஐநா அமைத்த ஒரு விசாரணை ஆணையம், அதற்கு அளித்த கால எல்லைக்கு உள்ளேயே விசாரணை நடத்தும். அதைத்தாண்டி விசாரணை நடத்தாது என்கிறது மே 17 இயக்கம். இது சரியான கருத்துதான்.

ஆனால், இந்த உதாரணம் இலங்கைக் குறித்த தீர்மானத்துக்கு பொருந்தாது. 'இலங்கையில் நடந்தக் குற்றங்களை உள்ளது உள்ளபடி கண்டறிய வேண்டும்' என்றே ஐநா வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. அதில், இனப்படுகொலையை விசாரிக்காதே என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்த விசாரணையில் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றோ, இந்தக் குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்றோ இல்லை. மிகக் கடுமையான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடையக் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வரைவுத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. ஆக, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள், இனப்படுகொலை என வகைப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள எல்லா குற்றங்களையும் விசாரிக்க ஐநா தீர்மானம் வழிசெய்கிறது.

2. இரண்டாவது குழப்பம்:

//"ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்க்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள்.இதை போனவருடமோ அல்லது அதற்க்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும். எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது."// என்று சொல்கிறது மே 17 இயக்கம்.

கூடவே //"எதாவது ஒன்று முதலில் வரட்டும் என்று நாம் இருந்தால் அது தீர்வை அடையாமல் போகத்தான் வழிவகுக்கும்.நமது ஆசைகள் வேறாகயிருக்கலாம் ஆனால் ஐநாவின் விதி என்ன அது மேற்க்கொண்டு இதை நகர்த்துமா இல்லை இதோடு முடித்து வைத்துவிடுமா என்பதை பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாம் தான் கவனமாக இருந்து ஆராயவேண்டும்"// என்றும் கூறி பேனை பெருச்சாளியாக்கி, பெருச்சாளியை பெருமாளாக்க முயற்சிக்கிறது மே 17 இயக்கம்!

ஆனால். இலங்கைக் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எதிலும் THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்று ஒரு வார்த்தை இல்லவே இல்லை.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உதாரணங்களைக் காட்டி குழப்புகிறது மே 17 இயக்கம். THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்கிற வாசகத்துடன் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களைக் கொண்டுவருகிறது. (அவ்வாறு கொண்டுவரும் தீர்மானங்கள் பல பிற்காலத்தில் மாற்றப்பட்டும் உள்ளன).

ஆனால், இலங்கைக் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் அந்த வார்த்தை இல்லை. இல்லவே இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாகச் சொல்லி - 'அய்யையோ, ஒரு முறை இப்படிச் சொன்னால், அதை மாற்ற முடியாதே' என பொய்யாக அலருகிறது மே 17 இயக்கம்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதற்கு 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு பாராட்டு பத்திரம் வாசித்த அதே ஐநா மனித உரிமைப் பேரவையில் இப்போது அதற்கு எதிரான தீர்மானம் வருவதே சான்று.

(ஒரு முறை தீர்மானம் வந்துவிட்டால் அதனை மாற்ற முடியாது என்று உலகத்தில் எந்த ஒரு தீர்மானமோ, சட்டமோ இல்லை. ஒவ்வொரு தலைமுறையினரும் தமக்கு முன்னால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றும் உரிமையோடுதான் பிறக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினரின் அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கும் ஒரே சட்டம் இந்தியாவின் அரசியல் சாசனம் மட்டும்தான்).

3. மூன்றாவது குழப்பம்:

ஐநாவால் அமைக்கப்படும் 'பன்னாட்டு விசாரணை ஆணையம்' என்பதும் 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' என்பதும் வெவ்வேறு வகையிலானதாகும். இரண்டையும் ஒன்றாக்கி குழப்புகிறது மே 17 இயக்கம்.

‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ (Commission of Inquiry - COI) என்றால் என்ன?

பன்னாட்டு விசாரணை ஆணையம் என்பது ஒரு நாட்டில் நடந்த குற்றங்கள் குறித்த உண்மை நிலையை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவது. அரசின் குற்றங்களையும் தோல்விகளையும் பொதுவாகத் தொகுப்பது. குறுகிய காலத்தில் அறிக்கையை வெளியிடக் கூடியது. இதற்கு துள்ளியமான ஆதாரங்கள் தேவை இல்லை. பன்னாட்டு விசாரணை ஆணையம் யாரையும் நேரடியாகத் தண்டிக்காது (ஆனால், எதிர்காலத்தில் தண்டிக்க வழி செய்யும்).

'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' (International Criminal Tribunal - ICT) என்றால் என்ன?

இதற்கு மாறாக, 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' என்பது நாட்டின் குற்றங்களையோ அரசின் தோல்விகளையோ பார்க்காது. தனி நபர்களின் குற்றங்களையே பார்க்கும். விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும். இதற்கு துள்ளியமான ஆதாரங்கள் தேவை. அவற்றை சந்தேகத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்க வேண்டும். கடைசியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கையில் நடந்த குற்றம் குறித்து தற்போது சர்வதேசம் கேட்பது பன்னாட்டு விசாரணை ஆணையம் (COI) தான். 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்' (ICT) அல்ல.

இந்நிலையில், பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை உதாரணம் காட்டி குழப்புகிறது மே 17 இயக்கம்: //"போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான விசாரணையா என்பது இங்கு அவரவர் விருப்பம் சார்ந்தது பேசப்படுகிறது. அனால் நாம் என்ன கோரிக்கையை வைத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அது தீர்வை நோக்கி நகர்த்தும் என்பதை ஐநாவின் நடைமுறை விதியை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக 1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி மக்கள் மீது அங்குள்ள இன்னொரு இனக்குழுவான ஊட்டு மக்கள் நடத்திய இனப்படுகொலைக்காக ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது."// என்கிறது மே 17 இயக்கம்.

தவறான இடத்தில் காட்டப்படும் தவறான உதாரணம் இதுவாகும்.

கட்டுக்கதை 3: இருதரப்பையும் விசாரித்தால் கேடு நேரும் என்பது உண்மையா?

//"போர்குற்றம் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று ஆரம்பித்து விசாரணை நடந்தால் அது இரண்டு தரப்பில் உள்ள யாரவது ஒருவரை தண்டிப்பதில் முடியும் இல்லையேல் இரண்டு தரப்பும் தவறு செய்திருக்கிறது என்று முடியும். இதுதான் கடந்தகால வரலாறு.

ஆனால், இனப்படுகொலை விசாரணையென்று வந்தால்...இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சூழலும் வரும்."// - என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இந்த வாதத்திலும் முன்று குழப்பங்கள் உள்ளன. முதலாவதாக - ஏதோ இனப்படுகொலைக்கு என தனி விசாரணை இருப்பது போலக் கட்டுக்கதைக் கட்டப்படுகிறது. இரண்டாவதாக - ஒரு தரப்பை விசாரிக்கும் விசாரணை முறை இருப்பதாக ஏமாற்றப்படுகிறது. மூன்றாவதாக - இனப்படுகொலை விசாரணைக்குதான் சர்வதேச சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனைக் கிடைக்கும் என்றும் நம்ப வைக்கப்பார்க்கின்றனர். இவை அனைத்தும் பொய்.

1. முதலாவது குழப்பம்:

உண்மையில் - உலகில் எங்கெல்லாம் சர்வதேச சட்ட மீறல்கள், குறிப்பாக இனப்படுகொலைக்கு விசாரணை நடத்தப்பட்டதோ, அங்கெல்லாம் - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என எல்லாவற்றையும்தான் விசாரித்தார்கள். ருவாண்டா, யூகோசுலோவியா, சூடான் என எல்லா நாடுகளிலும் எல்லாவற்றுக்குமான விசாரணைதான் நடந்தது. இனப்படுகொலையைத் தனியாக விசாரிக்கும் முறை எங்கும் இல்லை.

2. இரண்டாவது குழப்பம்:

இருதரப்பு மோதல், போர் என்று நிகழும் நிலையில் - பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தரப்பினராக இருந்தாலும் - போர் குறித்த விசாரணையில் இரண்டு தரப்பினையும்தான் விசாரித்தாக வேண்டும். ஒரு பக்கத்தை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்கிற விசாரணை முறை என்று உலகில் எதுவுமே இல்லை.

ஈழப்போரில் அரசப்படையினர் மிக அதிகக் குற்றங்களை இழைத்தனர், கருணா அணியினர் அதற்கு அடுத்ததாக குற்றமிழைத்தனர். இந்த இரண்டு தரப்புக்கும் அடுத்ததாக விடுதலைப்புலிகளும் குற்றம் செய்தனர் என பன்னாட்டு அமைப்புகள் கூறுகின்றனர். இந்நிலையில், ஒருதரப்பை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று சொல்வது - விசாரணையே வேண்டாம் என்பதற்கு சமமானதாகும்.

3. மூன்றாவது குழப்பம்:

பன்னாட்டு நீதிமன்றனங்கள் பன்னாட்டு சட்ட மீறல்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. அந்த வகையில் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என மூன்று வகையான குற்றங்களுமே விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இவை அனைத்துமே பன்னாட்டு சட்டங்களின் கீழ் கொடும் குற்றங்கள்தான்.

இன்னும் சொல்லப்போனால் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை நிரூபித்து குற்றவாளிகளைத் தண்டிப்பது எளிது. இனப்படுகொலையை மெய்ப்பிப்பது கடினம். ஒரே குற்றவாளியின் மீது மூன்று குற்றங்களையும் சுமத்தி தண்டிக்க முடியும்.

உண்மை இவ்வாறிருக்க 'இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சூழலும் வரும்' என்று சொல்வதன் மூலம் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க முடியாது என்பது போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துகிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதை 4: தமிழீழ விடுதலையை முடக்குவதற்கான முயற்சியா?

//"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கான ஒரு வேலையினை, தற்பொழுது ஐ.நா.வில் முன்வைக்கும் தீர்மானத்தின் வாயிலாக மேற்கொண்டிருக்கின்றன"// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட மீறலகளை விசாரிப்பதன் மூலம் தமீழ விடுதலைக்கு தடை ஏற்படும் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள்? இதற்கு எந்த ஒர் அடிப்படையும் இல்லை, ஆதாரமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினரால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த இயக்கம் இலங்கையில் செயல்பாட்டு அளவில் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இலங்கை மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இப்போது யார் முன்னெடுத்து செல்கிறார்கள்? இலங்கையில் அப்படி ஒரு கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்து அதற்கான வேலைகளை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் – ‘அய்யோ அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழீழ விடுதலை தள்ளிப்போகுமே’ என்பது பித்தலாட்டம் இல்லையா?

இன்றைய உலகம் மிக வேகமாக மாறிவிட்டது. இனியும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஒரு நாட்டின் விடுதலை என்பது நம்முடைய வாழ்நாளில் சாத்தியம் இல்லை. மேலும், வெளிநாட்டில் இருந்து விடுதலைப் போராட்டத்தை இறக்குமதி செய்யவும் முடியாது.

இன்றைய நிலையில் தமிழீழம் என்பது ஒரு கனவு மட்டும்தான். இது ஒருகாலத்தில் நனவாகலாம்.

ஆனால், இலங்கையின் சர்வதேசக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கனவல்ல. அது கண்முன் நிற்கும் நிதர்சனம்.

அமெரிக்க தீர்மானம் தமிழீழத்தை தடுக்கிறது என்று போலிப்பிரச்சாரம் செய்கிறவர்கள், அதற்கு முன்பாக - எங்கிருந்து, எப்படி தமிழ் ஈழம் சாத்தியமாகப் போகிறது - என்பதை விளக்கி, அதனை அமெரிக்கா எப்படி தடுக்கிறது என்பதையும் நேர்மையுடன் விளக்க வேண்டும்.

கட்டுக்கதை 5: தமிழர்கள் மதச் சிறுபான்மையினர் என்கிறதா அமெரிக்கத் தீர்மானம்?

//"தமிழர்கள் என்றொரு தேசிய இனம் இல்லை என்று நிறுவும் முயற்சியில், தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டு, வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம், தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுக்கும் ஒரு முயற்சியே"// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

மிழர்கள் தேசிய இனம் இல்லை என்று வரைவுத் தீர்மானத்தின் எந்த இடத்திலும் இல்லை. அவ்வாறு இருப்பதாகக் கூறுவது பச்சைப் பொய். திருத்தப்பட்ட வரைவின் 8 ஆவது பத்தியில் மதம், நம்பிக்கை, அல்லது இனம் என்கிற வேறுபாடுகள் இன்றி எல்லா இலங்கை மக்களும் முழு மனித உரிமையுடன் வாழ வேண்டும்' என்று கூறுகிறது.

(8) Reaffirming that all Sri Lankans are entitled to the full enjoyment of their human rights regardless of religion, belief, or ethnicity, in a peaceful and unified land

இதனை மதச்சிறுபான்மையினராக தமிழர்களைக் கூறுவதாக எப்படிக் கொள்ள முடியும்?

14 ஆவது பத்தியில் இந்து, முஸ்லீம், கிறித்தவ வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி, செயல்பாட்டுப் பகுதியின் 4 ஆம் பத்தியில் இத்தகைய தாக்குதல்களை விசாரிக்கக் கோரப்பட்டுள்ளது.

(14) Alarmed at the significant surge in attacks against members of religious minority groups in Sri Lanka, including Hindus, Muslims and Christians.

(4) Urges the Government of Sri Lanka to investigate all alleged attacks, by individuals and groups, on journalists, human rights defenders, members of religious minority groups, and other members of civil society, as well as on temples, mosques and churches, and further urges the Government of Sri Lanka to hold perpetrators to account and take steps to prevent such attacks in the future;

இதனை "தமிழர்களை மதச் சிறுபான்மையினர்" எனக் குறிப்பிடுவதாகத் திரிப்பது விஷமத்தனமான சதியாகும்.

கட்டுக்கதை 6: அமெரிக்கத் தீர்மானத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க வழி இல்லையா?

//"தமிழீழப் போராட்டத்தை சிதைப்பதில் சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதின் ஒரு அங்கமாக இந்த ஆண்டும் அமெரிக்க அரசு ஒரு அயோக்கியத் தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இனப்படுகொலகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும், நிற்பவர்களையும் தண்டிக்க எந்த நகர்வினையும் பரிந்துரைக்காத இந்த அயோக்கியத் தீர்மானம்,…ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது."// என்கிறது மே 17 இயக்கம்.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:

இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமான வாதம். மே 17 இயக்கத்தின் இந்த வாதத்தில் உண்மை இல்லை. ஐநா அவையில் அமெரிக்காவும் உறுப்புநாடுகளும் கடைசியாக விவாதித்த தீர்மான வரைவின் 8 ஆவது செயல்பாட்டுப் பத்தியில் 'இலங்கை மீது ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்த உத்தரவிடும்' பகுதி உள்ளது.

8. Takes note of the High Commissioner’s recommendations and conclusions regarding ongoing human rights violations and on the need for international inquiry mechanism in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner:

b) to lead a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka and establish the facts and circumstances of such violations and of the crimes committed with a view to avoiding impunity and ensuring accountability, with assistance from relevant experts

c) to present an oral update to the Human Rights Council at its twenty-seventh session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty-eighth session.

"இனப்படுகொலைகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும், நிற்பவர்களையும் தண்டிக்கும் நோக்கிலான தெளிவான நகர்வு இதுவாகும்.

இதனை மாற்ற வேண்டும். இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என இந்தியா கோருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

"While India is okay with the majority and substantive part of the text of the draft resolution UNHRC 25 which has been circulated in Geneva, negotiators are working on softening the language of paragraph 8 of the resolution, which calls for the need for an “independent and credible international investigation” and “investigate alleged violations and abuses of human rights and related crimes”"

http://indianexpress.com/article/india/india-others/india-to-back-unhrc-motion-on-lanka/

எனவே, தமிழர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒரு சிறந்த தீர்மானம் வராவிட்டாலும், ஒரு நல்ல தீர்மானத்தை அமெரிக்க முன் வைத்துள்ளது. அந்தத் தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பிருந்தால் அது மிகச் சிறந்த ஒரு தொடக்கமாக அமையும்.

அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்கிற மூர்க்கத்தில், தமிழனுக்கு நன்மையான ஒரு தீர்மானத்தை எதிர்ப்பது - ஒரு வரலாற்றுத் துரோகம்.

(இன்றைக்கும் இந்த தீர்மானம் இதே வடிவில் வராமல் போகலாம். அப்படி நடந்தால் அதற்கு இந்தியாவே காரணமாக இருக்கும். எனவே நீதியை விரும்பும் இந்தியக் குடிமக்கள் இந்தியாவிடம் உங்களது கோரிக்கையை முன் வையுங்கள்.)

தெளிவு வேண்டும்:

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் மே 17 இயக்கம் போன்ற அமைப்புகளின் குழப்பங்களில் இருந்து விடுபட வேண்டும். கடந்த 2012 மார்ச் மாதம் ஐநாவில் ஒரு பலவீனமான தீர்மானம் வந்தது. அப்போது தமிழ் நாடே ஓரணியில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது (அப்போதும் சில குழப்ப வாதிகள் இருந்தனர்).

இப்போது 2013 மார்ச்சில், ஒப்பீட்டளவில் முன்பைவிட வலிமையான தீர்மானம் ஐநாவில் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இன்று தமிழ்நாடு முன்பிருந்த எழுச்சியுடன் ஓரணியில் போராடவில்லை.

குழப்பவாதிகளால் குழம்பி, இலக்கில் தெளிவில்லாது போகும் மக்கள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்: 

1. மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

2. ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

3. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

4. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

5. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


6. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

'ஐநா அவை மூலமாக இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்களாக, அனைத்து அடிப்படை உரிமைகளுடனும் வாழும் நிலை வர வேண்டும்' - இதுதான் இன்றைய சர்வதேசத்தின் மனித உரிமை சார் அடிப்படை கோரிக்கை ஆகும்.

ஐநா அவை என்பது ஒரு அரசியல் அமைப்பு. அங்கு எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பவை உறுப்பு நாடுகளாகும். உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்தந்த நாடுகளின் புவிசார் நலனை முன்னிறுத்திதான் இருக்கிறது. நீதியும் மனித உரிமையும் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது. தமது நாடுகளுக்கு நன்மையாகவோ, அல்லது தமக்கு பாதிப்பில்லாத நிலையிலோ தான் அடுத்த நாடுகளின் விவகாரங்களில் உலகநாடுகள் தலையிடும்.

ஒரு கருப்பின குழுவோ, அரேபிய இனமோ பாதிக்கப்பட்டால் அதற்காகப் பேச பல நாடுகள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்காக பேச உலகில் ஒரே ஒரு நாடு கூட இல்லை.

வெறும் 839 நபர்கள் மட்டுமே குடிமக்களாக உள்ள 'ஹோலி சீ (வாட்டிகன்)' என்பது ஒரு நாடு. வெறும் 36 ஆயிரம் பேர் வாழும் 'லிச்டின்ஸ்டெய்ன்' என்பதும் ஒரு தனி நாடு. அவர்கள் எல்லாம் ஐநா அவையில் பேச முடியும். தீர்மானங்களை முன்வைக்க முடியும். இப்போது அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை மீதான தீர்மானத்தை முன்வைத்துள்ள 'மான்டநீக்ரோ' நாட்டின் மொத்த மக்கள்தொகை வெறும் 6 லட்சம் பேர்தான்.

ஆனால், ஒன்பது கோடி பேருக்கு மேல் மக்களைக் கொண்ட தமிழினத்துக்காக ஐநாவில் பேச ஒரு நாடும் இல்லை. இதுதான் இன்றைய எதார்த்த நிலை. உலக நாடுகளில் தமிழனுக்காக பேச ஒரு நாடும் இல்லை. பேசவேண்டிய ஒரே நாடான இந்தியா - எதிரி நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளை 'தமிழர்களின் ஏவலாட்கள்' என்பது போல நினைத்து 'அவர்களுக்கு கட்டளையிடும் தொனியில்' சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மே 17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அளித்துள்ள கேள்விகளும், அதுகுறித்த எனது கருத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

மே17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தெற்காசிய பிராந்தியக் கொள்கைகள் என சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். "இதில் தமிழருக்கு ஆதரவான கொள்கைகள் , நிலைப்பாடுகள் எப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்றன? அல்லது மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன? என்று யாரேனும் தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி." என்றும் அவர் கேட்டுள்ளார்.

அவரது கருத்துகேள்விகளுக்கு என்னாலான பதிலை கீழே அளித்துள்ளேன்:

கேள்வி 1: "அமெரிக்கா- இந்தியா இரண்டின் இலங்கை ஆதரவு அரசியலை சுருக்கமாக புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தியா - 13 வது சட்ட திருத்தத்தினை தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக முன்வைக்கிறது. அமெரிக்கா 13வது சட்ட திருத்ததினை இந்தியாவின் சார்பாக பேசவும் செய்கிறது".

எனது பதில்: ஆம். 13 ஆவது சட்டத்திருத்தம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு என்பதை தீர்மானம் ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறது. இதற்கு மாறான கருத்து கொண்ட நாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பன்னாட்டு விசாரணை என்கிற முதன்மைக் கோரிக்கையுடன் இதனை இணைத்துப் பார்க்கத் தேவை இல்லை. இந்த ஒரு கோரிக்கைக்காக அமெரிக்காவை எதிர்ப்பதானால் - உலகின் 193 நாடுகளையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும். மேலும் 13 ஆவது சட்டத்திருத்தக் கோரிக்கையை ஆதரிக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.

கேள்வி 2: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ஈழ விடுதலையை எதிர்க்கின்றன. இரண்டு நாடுகளும் புலிகளை ஒடுக்க விரும்புகிறார்கள்".

எனது பதில்: உலகின் எந்த நாடும் ஈழ விடுதலையை ஏற்கவில்லை. புலிகளை ஒழிக்கக் கூடாது என்று சொன்ன நாடும் எதுவும் இல்லை. ஈழ விடுதலையை ஏற்கும், புலிகளை அங்கீகரிக்கும் நாடுதான் பன்னாட்டு விசாரணைக்கு வழிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் - அப்படி ஒரு நாடு இல்லவே இல்லை.

கேள்வி 3: "அமெரிக்கா புலம்பெயர் ஆற்றல்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயலுகிறது".

எனது பதில்: இது அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டு

கேள்வி 4: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் இலங்கையினை தமது பங்காளிகளாக பார்க்கிறார்கள்."

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல - சீனா, ரஷ்யா, வியட்னாம், கியூபா, பாலஸ்தீனம், இஸ்ரேல் என எல்லா இஸ்லாமிய நாடுகளும், எல்லா கம்யூனிச நாடுகளும் இலங்கையை பங்காளியாகத்தான் பார்க்கின்றன. இலங்கையை எதிரியாக பார்க்கும் நாடு என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா? அப்படி எந்த நாடும் இல்லை. இலங்கையை நட்பு நாடாக பார்க்காதே என்று எந்த நாட்டுக்கும் கட்டளையிடும் நிலையில் தமிழர்கள் இல்லை.

கேள்வி 5: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ராஜபக்சே ஆட்சியில் இருந்து நீக்கப்படுவதை விரும்புகிறார்கள். ரணிலும், சந்திரிகாவும் ஆட்சிக்கு கொண்டு வரப்பட விரும்புகிறார்கள்."

எனது பதில்: ராஜபக்சே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அதனால் தமிழர்களுக்கு மகிழ்ச்சியே. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

கேள்வி 6: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ’இனப்படுகொலை’ என்பதை மறுக்கிறார்கள்".

எனது பதில்: அமெரிக்கா மட்டுமா இனப்படுகொலையை மறுக்கிறது? இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று உலகின் எந்த நாடும் ஏற்கவில்லை. ஐநா மூலமாக ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு - இனப்படுகொலை நடந்ததை நிரூபித்தால் மட்டுமே உலக நாடுகள் இனப்படுகொலை நடந்தது என்பதை ஏற்கும்.

கேள்வி 7: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ‘புலிகளை’ விசாரிக்கவேண்டும், புலிகள் தமிழர்களை கொலை செய்தனர் என்கிறார்கள்."

எனது பதில்: போர் குறித்த விசாரணை என்றால் - இரண்டு தரப்பின் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படுவது இயற்கையே. ஒரு தரப்பை மட்டும்தான் விசாரிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்ல. மிக அதிகமான குற்றங்களை இழைத்தவர்கள் அரசப்படையினர். அடுத்ததாக கருணா அணியினர். மூன்றாவதாக புலிகளும் சர்வதேச விதிகளை மீறினார்கள் என்று பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இலங்கையில் நடந்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றால், இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்பது இயல்பானதுதான். ஒரு தரப்பை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பது நீதி அல்ல.

கேள்வி 8: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை நாட்டினை காக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்".

எனது பதில்: இது கேலிக்கூத்தான குற்றச்சாட்டு. 'இலங்கை நாட்டினை காக்க வேண்டும் என்று அமெரிக்க நாடு விரும்புகிறது' என்றால் - யாரிடம் இருந்து இலங்கையைக் காக்க விரும்புகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தவிர இலங்கையை அச்சுறுத்தவோ தண்டிக்கவோ உலகில் இப்போது யாரும் இல்லை. இனி புதிதாக யாரும் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே இலங்கையை யாரிடம் இருந்து அமெரிக்கா காப்பாற்ற முயற்சிக்கிறது என்று திரு. திருமுருகன் காந்தி விளக்க வேண்டும்.

கேள்வி 9: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் “ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு” என்கிறார்கள். இந்தியா, தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூலமாக மாகாண அரசியல் தீர்வு என்கிறது. அமெரிக்கா, நல்லிணக்கத்தின் அடிப்படையில் தமிழர்கள் - சிங்களவர்கள் என அனைவரும் ‘இலங்கையர்களாக’ வாழவேண்டும் என்கிறது."

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல. உலகின் எல்லா நாடுகளுமே ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்றுதான் கோருகிறார்கள். பிரதேச ஒருமைப்பாட்டைக் காப்பது என்பது உலகம் ஏற்றுக்கொண்ட விதி. எனவே, இலங்கையை துண்டாட வேண்டும் என்கிற நோக்கத்துடன் உலகில் ஒரு நாடும் இல்லை. அப்படி ஏதாவது ஒரு நாட்டிடம் தான் நீதி கேட்க வேண்டும் என்று காத்திருந்தால் - காலாகாலத்துக்கும் தமிழர்கள் காத்துக்கிடக்க வேண்டியதுதான்.

கேள்வி 10: "அமெரிக்கா, இந்தியா இவை இரண்டும் இலங்கையில் பொருளாதார முதலீடுகள் செய்கின்றன. இரண்டு நாடுகளும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தங்கள் போடுகின்றன. "

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல. சீன நாடுதான் மிக அதிக முதலீட்டைச் செய்கிறது. இலங்கையின் குற்றங்கள் பன்னாட்டு விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் பொருளாதார தடையைக் கோர முடியும். அதற்கு முன்பாக பொருளாதார முதலீட்டை தடைசெய்யக் கோருவது சாத்தியம் அல்ல. இராணுவ ஒப்பந்தங்களுக்கும் இது பொருந்தும்.

கேள்வி 11: "சர்வதேச அரங்கினை அமெரிக்கா பயன்படுத்துகிறது. மனித உரிமை என்கிற ஆயுதத்தினைக் கொண்டு ராஜபக்சேவினை-புலிகளை மட்டும் குறிவைக்கிறது."

எனது பதில்: சர்வதேச அரங்கினைப் பயன்படுத்தி அமெரிக்கா ராஜபக்சேவைக் குறிவைத்தால் அது சரிதான். அதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரத்தில் அமெரிக்கா புலிகளைக் குறிவைக்கிறார்கள் என்றால் - இப்போது யார் புலிகளைப் பிரதிநிதத்துவப் படுத்துகிறார்கள்? சாதாரண ஈழக் குடிமக்களைப் புலிகளாக குற்றம் சாட்ட முடியாது.

கேள்வி 12: "அமெரிக்கா, இந்தியா இவர்கள் இருவரும் இனப்படுகொலைக்கு உதவி செய்ததை உலகிற்கு எடுத்துச் சொல்வது தமிழர்களின் கடமை. இவர்களிடத்தில் இருந்து தமிழீழத்திற்கு விடிவு கிடைக்காது."

எனது பதில்: அமெரிக்கா இலங்கையின் போருக்கு உதவி செய்தது என்பது உண்மை. அவர்கள் தமிழீழம் அமைய உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் மடைமை. இப்போது தமிழீழம் அமையப்போகிறதா இல்லையா என்பது கேள்வியே அல்ல. மாறாக, ஈழத்தில் நடந்த கொடும் குற்றங்கள் குறித்த உண்மை வெளிவர வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்கள் சரிசமமான குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையில் எந்த தவறும் இல்லை.

முடிவாக எனது பதில்: 

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமிழீழம் என்கிற கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே, தமிழீழம் அமைய வேண்டும் என்கிற நோக்கில் ஒரு தீர்மானத்தை அவர்களிடம் கோருவது ஏமாற்று வித்தை.

மனித உரிமைகளை முன்னிறுத்துவோர் - இலங்கையில் நடந்தக் கொடூரங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். அதே கோரிக்கை தமிழர்களிடமும் உள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்காவின் கோரிக்கையும் தமிழர்களின் கோரிக்கையும் ஒன்றுதான்.

இனப்படுகொலை என்கிற முன்நிபந்தனையுடன் விசாரணை நடந்தால் தமிழீழம் அமையும் என்று சிலர் பேசுகின்றனர். அதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை. அப்படி ஒரு அடிப்படை இருப்பதாக வைத்துக்கொண்டாலும், தமிழ் ஈழம் என்பது உலக நாடுகளின் கோரிக்கை இல்லை என்பதால் - தமிழீழம் அமையும் நோக்கிலான ஒரு தீர்மானத்தை உலக நாடுகள் கொண்டுவர வேண்டியக் கட்டாயம் ஏதும் இல்லை.

மேலும் தமிழ் ஈழம் வேண்டும் என்கிற அரசியல் கோரிக்கையை எழுப்ப வேண்டிய இடம் ஜெனீவா இல்லை. இதுபோன்ற அரசியல் கோரிக்கைகளை நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு அவையோ பொதுச் சபையோதான் விவாதிக்க முடியும்.

ஜெனீவாவில் பன்னாட்டு குற்றங்களுக்கு நீதி கேட்பதுதான் நடக்கும். தனி நாட்டை கோரும் இடம் அதுவல்ல. நாம் கதவைத் தட்டலாம். சுவற்றைத் தட்டிக்கொண்டிருப்பது மூடத்தனம்.

புதன், மார்ச் 19, 2014

ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

தற்போது ஜெனீவா நகரில் நடந்துவரும் ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு கலந்துகொண்டுள்ளது. மனித உரிமைப் பேரவையில் 'இனப்படுகொலை' குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி தமையந்தி ராஜேந்திரா பங்கேற்று பேசினார். 

அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக் குறித்து விசாரிக்க பன்னாட்டு விசாரணை ஆணையத்தை ஐநா அமைக்க வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நேரில் வலியுறுத்தி உரையாற்றினார்.

ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் அவரது பேச்சினை கீழே காண்க:
http://youtu.be/mv6SAIH7nKs

பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி தமையந்தி ராஜேந்திரா பேச்சின் எழுத்து வடிவம்:

25th Session of the United Nations Human Rights Council, Geneva

Item 3 – Interactive Dialogue with SASG on Prevention of Genocide

Organization: PASUMAI THAAYAGAM 

Presenter: Dhamayanthi Rajendra

Thank you Madam Vice President.

On the 65th anniversary of the “Convention on the prevention of Genocide” we are reminded,that every year, tens of thousands of civilians in Syria, Sudan, Democratic Republic of Congo, and many others continue to become victims of crimes against humanity and/or genocide.  

When crimes of genocide and crimes against humanity are left unpunished, and international community lacks the will to ensure accountability, it creates an environment of impunity that makes the world more vulnerable. Accountability requires first of all fact finding, then the identification of those responsible, punishment, reparations for victims, and restructuring of national institutions. 

When accountability is not a priority, prevention against future violations will also suffer.  The High Commissioner has recognized in two successive written reports that an international process of accountability must commence in Sri Lanka where tens of thousands of Tamils were killed in 2009 in ethnically-based violence. She and other global leaders, such as Bishop Desmond Tutu have correctly assessed the government of Sri Lanka has failed in its obligations to create a genuine and impartial domestic accountability mechanism and it lacks the political will to do so.

The UN’s own “Rights Up-Front” initiative to pre-empt and respond to early warning signs of mass atrocities in a timely manner, used Sri Lanka as a teaching moment after a UN internal inquiry found “systemic failure” in responding to the Sri Lanka crisis in 2009.  It is a timely initiative in response to the recommendations of the written statement submitted by the Society for Threatened Peoples.

The Human Rights Council is lagging behind the leadership of its own High Commissioner.  In this 25th session, the Council has an opportunity to establish an international mechanism with the mandate to conclusively establish the facts surrounding the now well-documented allegations of widespread systematic and gross violations including intentionally shelling of densely populated civilian areas and hospitals, extrajudicial killings and enforced disappearances.  

We call on UN member states to establish an international commission of inquiry on Sri Lanka to investigate international crimes, including that of genocide.  

Thank you Madam Vice President

தொடர்புடைய சுட்டிகள்: 

1. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

2. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

3. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


4. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

சனி, மார்ச் 15, 2014

இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

தற்போது ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைப் பேரவையில், ஐநாவின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை: "இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை என்னால் நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இலங்கைப் போர் முடிவடைந்த நாளிலிருந்தே இலங்கை மீது போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம் வலியுறுத்தி வருகிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 12 ஆவதுக் கூட்டத்தில் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற 24 ஆவதுக் கூட்டம் வரையிலான 13 கூட்டங்களிலும், இடையில் நடந்த பல சிறப்புக் கூட்டங்களிலும் இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என பசுமைத்தாயகம் குரல் கொடுத்தது.

மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதை மனித உரிமைப் பேரவையின்  அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த 27 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் போரின் போதும், போருக்குப் பிறகும் சிங்களப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளையும், அட்டூழியங்களையும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள பசுமைத்தாயகம், ‘‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுபேற்றல் மற்றும் சமரசம் செய்தல் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு மதித்து செயல்படுத்தவில்லை. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், அதிகார வர்க்கம் மற்றும் இராணுவ அதிகாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அம்சங்கள் இல்லாதது குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க நம்பகமான  விசாரணை அமைப்பை இலங்கை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் தான். எனவே இலங்கையின் இப்போதைய மற்றும் கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் ஆணையிட  வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலககெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைப் பிரச்சினையின் பின்னணி மற்றும் தீவிரத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் புரிந்து கொள்வதற்கு பசுமைத்தாயகம் அமைப்பின் அறிக்கை உதவும் என்று நம்புகிறேன்.

எனினும், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளிலாவது நீதி கிடைக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாற்றுகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உடனடியாக ஆணையிடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை செய்து முடிக்க வேண்டிய கடமை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது.

எனவே, ஈழத்தமிழருக்கு அமெரிக்காவோ அல்லது வேறு ஏதேனும் நாடோ நீதி பெற்றுத்தரும் என்று எதிர்பார்ப்பதைவிட, இந்திய அரசே அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். எனவே, இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு  எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவோ அல்லது ஏற்கனவே அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் திருத்தமாகவோ கொண்டுவந்து நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ள பசுமைத் தாயகத்தின் அறிக்கை கீழே:

ஐநா தீர்மானத்தின் இரண்டாம் வரைவு: இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தக் கோரும் வரைவுத் தீர்மானம் ஐநா மனித உரிமைப் பேரவையில் மார்ச் 3ஆம் நாள் வைக்கப்பட்டது. 

அதன் இரண்டாம் வரைவு தற்போது வெளியாகியுள்ளது. (இரண்டாம் வரைவு இன்னமும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. வரும் 18 ஆம் நாள் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது). 

பன்னாட்டு விசாரணையை ஐநா மனித உரிமை ஆணையரகம் நடத்துவது குறித்து முதல் வரைவில் தெளிவில்லாமல் இருந்தது. இரண்டாம் வரைவில் அந்தப் பகுதி தெளிவாக்கப்பட்டுள்ளது.

கொடுங்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விரிவான புலன்விசாரணை, தண்டணை அளிக்க வழிசெய்யும் நோக்கில் குற்றமிழைக்கப்பட்ட சூழல் மற்றும் பின்னணியைக் கண்டறிந்தல், இதற்கு வல்லுநர்கள் உதவியைப் பெறுதல்' உள்ளிட்ட வாசகங்கள் புதிய வரைவில் இடம்பெற்றுள்ளன.

ஒரு தனிப்பட்ட பன்னாட்டு விசாரணை ஆணையம் (Commission of Inquiry) அமைப்பது மட்டும்தான் இந்த தீர்மானத்தில் விடுபட்டுள்ளது. அதற்குப் பதில் ஐநா மனித உரிமை ஆணையரகமே பன்னாட்டு விசாரணையை நடத்த வழிசெய்யப்பட்டுள்ளது.

முதல் வரைவு தீர்மானத்தின் முதன்மை செயல்பாட்டுப் பகுதி:

8. Welcomes the recommendations and conclusions of the High Commissioner on the need for an independent and credible international investigation in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner to assess progress towards accountability and reconciliation, to monitor relevant national processes and to investigate alleged violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka, with input from relevant special procedures mandate holders as appropriate, and to present an oral update to the Human Rights Council at its twenty-seventh session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty-eighth session;

(முதல் வரைவு முழுவதுமாக: இங்கே சொடுக்கவும்)

இரண்டாம் வரைவு தீர்மானத்தின் முதன்மை செயல்பாட்டுப் பகுதி:

8. Takes note of the High Commissioner’s recommendations and conclusions regarding ongoing human rights violations and the need for international inquiry mechanism in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner:

 a) to continue to monitor the human rights situation in Sri Lanka and assess progress on relevant national processes;

b) to lead a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka and establish the facts and circumstances of such violations and of the crimes committed with a view to avoiding impunity and ensuring accountability, with assistance from relevant experts;

c) to present an oral update to the Human Rights Council at its twenty-seventh session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty-eighth session. 

(இரண்டாம் வரைவு முழுவதுமாக: இங்கே சொடுக்கவும்)

தொடர்புடைய சுட்டிகள்: 

1. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

2. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

3. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!

4. இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் இதோ: ஐநா மனித உரிமை பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.

5. ஐ.நா மனித உரிமை ஆணையார் நவநீதம் பிள்ளை அறிக்கை இதோ: இலங்கை மீது அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை!

வியாழன், மார்ச் 13, 2014

ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மையும் நீதியும் காக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில் தமிழர்களைக் குழப்பும் வகையில் சில அமைப்புகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் குழப்பங்கள் தெரிந்தே செய்யப்படுகின்றனவா என்கிற அய்யமும் எழுகின்றது.
உண்மையான உலகம் இது: இலங்கையைக் காப்பாற்றும் சீனா, கியூபா, ரஷ்யா

போலிப் புரட்சி: தமிழகத்தில் கட்டமைக்கப்படும் அமெரிக்க எதிர்ப்பு!

1. எது தவறான பிரச்சாரம்?

'ஈழத்தமிழர்களின் எதிரி அமெரிக்க நாடு' என்கிற பிரச்சாரமே இன்றைய நிலையில் தவறான திசை திருப்பும் பிரச்சாரம் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் - இனப்படுகொலையா அல்லது போர்க்குற்றமா? விசாரணையா அல்லது புலனாய்வா? ஐநா சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கையா அல்லது மனித உரிமை ஆணையத் தீர்மானமா? விசாரணை ஆணையமா அல்லது தீர்ப்பாயமா? - என்றெல்லாம் வெவ்வேறு வார்த்தை ஜால குழப்பங்களை அரங்கேற்றுகிறார்கள். இவையெல்லாம் பெரும்பாலும் குழப்பும் நோக்கிலான பரப்புரைகள்தான்.

2. அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் என்ன தவறு?

ஈழத்தில் நடந்த போரை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து இலங்கை மூலம் நடத்தின என்பது உண்மை. ஆனால், இப்போதைய தருணத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருப்பது இலங்கை மட்டும்தான்.
அமெரிக்காவை எதிர்க்கும் தமிழக போராட்டங்கள்: அமெரிக்க வர்த்தகத்தை தாக்க வேண்டுமாம்!
இலங்கை அரசைத் தவிர வேறு எந்த ஒரு அரசையும் எதிரியாக நினைப்பதோ, அல்லது உலகின் வேறு எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் போராடுவதோ - ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது.

(உலக நாடுகளிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி ஆதரவு கோரலாம். ஆனால், எதிர்த்துப் போராடுவது தேவையில்லை. அப்படி போராடித்தான் ஆகவேண்டும் என்றால், கியூபா, சீனா, இந்தியா, ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதே நியாயமாக இருக்கும்).

3. ஐநா தீர்மானம் அயோக்கியத் தீர்மானம் தானே?

அமெரிக்கத் தீர்மானத்தை அயோக்கியத் தீர்மானம் என்று சொல்வதுதான் அயோக்கியத்தனமானது.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மான வரைவு - தமிழர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதற்காக அந்த தீர்மானத்தில் எதுவுமே இல்லை என்று சொல்வதோ அல்லது அந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என்று பேசுவதோ குதர்க்கமான வாதம் ஆகும்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்னும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பம். அதே நேரத்தில் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தீர்மானம் தவறானது என்று கூறிவிட முடியாது.

இந்த வரைவு தீர்மானத்தை ஈழத்தமிழர்களின் முதன்மை அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வரவேற்றுள்ளனர். ( STATEMENT BY TNA LEADER MR. R. SAMPANTHAN AND NORTHERN PROVINCE CHIEF MINISTER JUSTICE C. V. WIGNESWARAN )

4. குழப்ப வேண்டும் என்கிற நோக்கிலேயே அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம் இருக்கிறதா?

ஆம். உலகில் இனப்படுகொலைக்காக நடத்தப்பட்ட பெருப்பாலான விசாரணைகளில் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என எல்லாமும்தான் விசாரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முதலில் 'போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றம்' என்று குழப்புவதை ஆரம்பித்தார்கள்.

பல மனித உரிமை அமைப்புகள் 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்' விசாரிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றன. தமிழர் அமைப்புகளும் மிகச்சில மனித உரிமை அமைப்புகளும் 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும்' என்று கோருகின்றன.

இனப்படுகொலை விசாரணை தேவை என்பது போர்க்குற்ற விசாரணை என்கிற கோரிக்கைக்கு எதிரானது அல்ல. 

ஆனால், தமிழ் நாட்டில் மட்டுமே 'போர்க்குற்றம் என்று சொன்னால் அது இனப்படுகொலை விசாரணைக்கு எதிரானது' என்று குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
அமெரிக்காவை எதிர்க்கும் தமிழக போராட்டங்கள்
இதனை மேலும் குழப்புவதற்காக 'ஒருமுறை போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டுவந்தால் அதன்பிறகு அதனை இனப்படுகொலை என்று கூற முடியாது' என்று புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கூறியது மே 17 இயக்கம்.

"ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள். இதை போனவருடமோ அல்லது அதற்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும். எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது" - என்று சொன்னது மே 17 இயக்கம்.

ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்கிற வாசகம் 2012 தீர்மானத்திலோ, 2013 தீர்மானத்திலோ இல்லவே இல்லை. 

ஒருமுறை ஐநா மன்றம் முடிவெடுத்தால் - அதனை மாற்றவே மாற்றாது என்பதெல்லாம் குழப்புவதற்காக சொல்லப்பட்டக் கட்டுக்கதைகள். 2009 ஆம் ஆண்டில் இலங்கை அரசினைப் பாராட்டி தீர்மானம் கொண்டுவந்த அதே ஐநா மனித உரிமைப் பேரவையில்தான் 2012, 2013 இல் அதற்கு மாறான தீர்மானங்களும் வந்தன.

5. போர்க்குற்றம் என்றால் இருதரப்பையும் விசாரிப்பார்களா?

2008 - 2009 உள்நாட்டுப் போரில் என்ன நடந்தது என்பதும் அதன் பின்னணி என்ன என்பதும்தான் விசாரணைக்கான கால எல்லையாக பேசப்படுகிறது. அங்கு நடந்த சர்வதேசக் குற்றங்கள் என்ன, அதை செய்தவர்கள் யார் என்றெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கை.

எனவே 'நடந்தது என்ன, செய்தது யார்' என்பதுதான் விசாரணையின் அளவுகோளாக இருக்கும். போர்க்குற்றம் என்று சொன்னாலும் இனப்படுகொலை என்று சொன்னாலும் - சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து எல்லா தரப்பையும்தான் விசாரிப்பார்கள்.

இந்நிலையில் - இலங்கைப் படையினர் குற்றமிழைத்தார்களா என்பதை மட்டும்தான் விசாரிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தவறிழைத்தார்களா என்று விசாரிக்கக் கூடாது என்று சொல்வது 'சர்வதேச விசாரணையே வேண்டாம்' என்று சொல்வதற்கு சமமானதாகும். போரில் ஒரு தரப்பை மட்டும் விசாரிக்கும் நீதி முறை உலகில் எங்கும் இல்லை

தற்போது ஆய்வுகளை மேற்கொண்ட அமைப்புகள் எல்லாம் - மிக அதிக சட்டமீறல்களைச் செய்தவர்கள் இலங்கைப் படையினர், அடுத்தது கருணா படையினர், அதற்கு அடுத்தது விடுதலைப் புலிகள் என்கின்றனர். புலிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படும் பலரும் இப்போது ராஜபக்சேவின் ஆட்களாக இருக்கின்றனர்.

6. அமெரிக்கா எதைச் சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்கிற உள்நோக்கம் இருக்கிறதா?

ஆம். அமெரிக்கா எதைச் சொன்னாலும் இவர்கள் எதிர்ப்பார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளுடன்தான் இருக்கிறர்கள்.

அமெரிக்க தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, தமிழ்நெட் இணைய தளம் ஒரு செய்திக்கட்டுரையை வெளியிட்டது. ( Tamils cautioned against word trick of OHCHR ) அதில் "பன்னாட்டு விசாரணை அணையத்தை ஏற்படுத்தக் கோரும் தீர்மானத்தால் பலன் இருக்காது. இதற்கு மாறாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் தீர்மானம் வேண்டும்" என்று கோரினர்.

ஆனால், அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை அணையம் என்பது கூட இல்லை. எனவே, இப்போது பன்னாட்டு ஆணையம் அமைக்காமல் அமெரிக்கா ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறார்கள்.

அதாவது, பன்னாட்டு விசாரணை அணையத்தை (Commission of Inquiry) அமைக்கும் தீர்மானத்தை அமெரிக்கா முன் வைத்திருந்தால் - அதனால் பலன் இல்லை. சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தை (international court or a UN special tribunal) ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் அமெரிக்கா ஏமாற்றிவிட்டது என்று இவர்கள் போராடி இருப்பார்கள்.

(சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் இருக்கிறது. அங்கு சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன)

7. அமெரிக்க தீர்மானம் வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நா கொண்டு வந்திருக்கும்' என்பது உண்மையா?

இது ஒரு கடைந்தெடுத்தப் பொய். வீணான குழப்பத்தை உருவாக்கும் வாதம். ஐநா நிறுவனங்கள் தானாக எதையும் செய்யாது.

ஐநா பொதுச்செயலருக்கு ஓரளவுக்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய பொதுச்செயலர் பான் கி மூன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நண்பர், நெருக்கமானவர். எனவே, பான் கி மூன் தானாக ஏதாவது செய்வார் என எதிர்பார்ப்பது ஏமாளித்தனம். பான் கி மூன் கடமைத் தவறினார் எனக்கூறி நியாயம் கேட்க எந்த வழியும் இல்லை.
அமெரிக்காவை எதிர்க்கும் தமிழக போராட்டங்கள்: KFC கடைக்குள் போராட்டம்!
ஐநா அவை என்பது ஒரு அரசியல் அமைப்பு. அங்கு உறுப்பு நாடுகள் வைத்ததுதான் சட்டம். ஐநா பொதுச் சபை, ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் இலங்கையின் குற்றங்கள் எழுப்பப்பட வேண்டுமானால், அதனை உறுப்பு நாடுகள்தான் முன்வைக்க முடியும்.

இவற்றில் ஐநா பொதுச் சபையில் இலங்கை உள்ளிட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் இலங்கையை எதிர்த்து தீர்மானம் வராது. ஐநா பாதுகாப்பு அவையில் சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அங்கும் இலங்கையை எதிர்த்து தீர்மானம் வராது.

எனவேதான் 47 நாடுகள் உள்ள ஜனநாயக அமைப்பான (யாருக்கும் வீட்டோ இல்லை) ஐநா மனித உரிமைப் பேரவையில் இந்த பிரச்சினை எழுப்பப்படுகிறது.

'அமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும்' என்று எதிர்பார்த்திருந்தால் - அப்படி ஒரு நிகழ்வு ஒருபோதும் நடக்காது.

இப்படி ஒரு வாதத்தை முன் வைப்பவர்கள் - ஐநா நிறுவனங்களின் மூலம் - எப்படி, யாரால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டிருக்கும் என விளக்க வேண்டும்.

அமெரிக்கா சரியாக செயல்படவில்லை என்பது உண்மை. ஆனால், அமெரிக்காவை விட்டால், வேறு யாரால் இது நடக்கும் என்பதையும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும்.

8. ஐநா விதி 99 இன் கீழ் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைத் தடுக்க அமெரிக்கா நாடகமாடுகிறது என்பது உண்மையா?

"ஐ.நாவின் விதி எண் 99ன் கீழும் அதன் அதிகாரத்தின் கீழும் தாமாகவே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை அமெரிக்காவும், இந்தியாவும் தவிர்த்தார்கள், காலதாமதப்படுத்தினார்கள். இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால், சர்வதேச விசாரணையை திசை திருப்ப உள்நாட்டு விசாரணையை கோரினார் பான் கி மூன்" - என்றெல்லாம் பேசுகிறார்கள்.

"ஐ.நாவின் விதிமுறைப்படி (வந்திருக்கவேண்டிய) வரவேண்டிய விசாரணை என்பதை தமிழருக்கான நீதி கிடைக்கும் வழிமுறையாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இந்தியா முன்மொழியும் தீர்மானத்தில் சர்வதேச சுதந்திர விசாரணை இலங்கை -விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையாக வரும் பொழுது, இனப்படுகொலை என்கிற நிலைப்பாடு மறுக்கபடும். தமிழ் இனம் என்கிற ஒன்றினை மறுக்கும் அமெரிக்கா எவ்வாறு தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணையை கேட்கும்?" - என்றும் பேசுகிறார்கள்.

ஐநா விதி 99 இன் கீழ் விசாரணை என்பதைக் குறித்து பேசும் முன்பு - 'விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணை' மற்றும் 'தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணை' என்பனக் குறித்த சந்தேகங்களைப் பார்க்கலாம்.

விடுதலைப் புலிகள் மீது விசாரணை

முதலில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஒரு தரப்பை மட்டும் விசாரிக்கும் முறை என்று எதுவும் உலகில் இல்லை. இரண்டு தரப்புக்கு இடையே போர் நடந்தது, அதில் அரசுத் தரப்பினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. விடுதலைப் புலிகள் மக்களை கேடயமான பயன்படுத்தினர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, போர்க்குற்றம் என்கிற அடிப்படையிலோ இனப்படுகொலை என்கிற அடிப்படையிலோ - சர்வதேச விசாரணை என்கிற ஒன்று நடந்தால் எல்லா குற்றச்சாட்டுகளையும்தான் விசாரிப்பார்கள். 'எதிர்தரப்பின் குற்றங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும். எங்கள் தரப்பிலும் தவறுகள் உண்டா என்று பார்க்கக் கூடாது' என்று கோருவது கேலிக்கூத்தான வாதம் ஆகும்.

எனவே, விடுதலைப் புலிகள் தவறிழைத்தார்களா என்று விசாரிக்கக் கூடாது என்று சொல்வதற்குப் பதில் - இலங்கை இனவெறியர்களைப் போன்று 'சர்வதேச விசாரணையே வேண்டாம்' என்று சொல்வது நேர்மையான வாதமாக இருக்கும்.

தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் விசாரணை

அடுத்ததாக 'தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணை' என்று கூறுவதும் ஏன் என்றுத் தெரியவில்லை. இனப்படுகொலை விசாரணை என்று வந்தால்தான் தமிழர்கள் ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவார்களா? இல்லையென்றால், தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? இனப்படுகொலை என்று சொன்னாலே, தமிழ் ஈழம் அமைந்துவிடும் பேசுவதன் காரணமோ பின்னணியோ தெரியவில்லை.

சர்வதேசமோ, அமெரிக்காவோ, இங்கிலாந்தோ - உலகின் எந்த ஒரு அரசும் 'தேசிய இனவிடுதலைக்கு ஆதரவாக' ஐநா தீர்மானத்தை முன்வைக்கவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவும் நடக்காது. தேசிய இன விடுதலையை நேரடியாக வலியுறுத்தி ஐநாவில் யாரும் எந்த முன்முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்துதான் சர்வதேசம் கேள்வி கேட்கிறதே தவிர, தமிழ் தேசிய இனவிடுதலையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

எனவே, 'தேசிய இனவிடுதலை' என்கிற உள்நோக்கத்துடன் சர்வதேச மனித உரிமை அமைப்புகளோ, உலக நாடுகளோ இந்தப் பிரச்சினையை அனுக வாய்ப்பு இல்லை. அவ்வாறு செய்யவேண்டும் என யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது.

ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை

ஐநா விதி 99 என்பது 'உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விடயங்களை ஐநா பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஐநா பொதுச்செயலர் கொண்டுவரும் அதிகாரம்' ஆகும். இது அரிதிலும் அரிதான தருணங்களில் பயன்படுத்தக் கூடிய அதிகாரம். ஐநா அவையின் வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இந்த அதிகாரம் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டது.
ஐநா விதி 99ஐ இப்போது கோரும் தமிழகப் போராட்டம்
ஐநா விதி 99 இல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், வருமுன் காக்கும் நடவடிக்கையாக, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலை ஆராய ஒரு விசாரணைக் குழுவை ஐநா பொதுச்செயலர் அமைக்கலாம். இதன்படி 2008 ஆம் ஆண்டின் கடைசியிலோ, 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ, இத்தகைய ஒரு விசாரணையை ஐநா பொதுச் செயலர் நியமித்திருக்க வேண்டும். ஆனால், பான் கி மூன் இந்தக் கடமையில் இருந்து தவறிவிட்டார்.

(பான் கி மூன் கடமைத் தவறியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஐநாவின் விஜய் நம்பியாருடைய தம்பி சதீஷ் நம்பியார் ராஜபக்சேவின் ஆலோசகராக இருந்தார். பான் கி மூனுடைய உறவினரான இந்தியர் ஒருவரே ராஜபக்சேவின் கையாளாக இருந்தார் என்று கூறப்பட்டுகிறது. பான் கி மூனே தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கருதினார். அவர் ராஜபக்சேவுக்கு இணக்கமாகவே இருந்தார்).

பான் கி மூன் கடமை தவறினார் என்பதற்காக, அவரைக் கேள்வி கேட்கவோ தண்டிக்கவோ எந்த வழியும் இல்லை. ஐநா அவையே சார்லஸ் பெட்ரி குழு அறிக்கையின் மூலம் "ஆமாம், ஐநா அவை கடமை தவறியதுதான்" என்று ஒப்புக்கொண்டது. இலங்கையில் நாங்கள் கடமைத் தவறிவிட்டோம். இனி மற்ற நாடுகளில் இதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக செயல்படுவோம் என்று ஐநா கூறுகிறது.

இப்போது, இலங்கையின் நிலைமை பன்னாட்டு பாதுகாப்புக்கோ, பன்னாட்டு அமைதிக்கோ அச்சுறுத்தலாக இல்லை. எனவே, இனிமேல் ஐநா விதி 99 ஐ பயன்படுத்த வாய்ப்பே இல்லை.

ஐநாவும் ஐநா பொதுச் செயலரும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. அந்த அமைப்பு ராஜதந்திர வழிகளில்தான் செயல்படும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கலகங்களில் தலையிட்டுள்ள ஐநா அவை - மூன்று நிகழ்வுகளில் மட்டுமே ஐநா விதியை வெளிப்படையாக பயன்படுத்தியது.

அவ்வாறு விதி 99 இன் கீழ் விசாரணை நடத்தியிருந்தாலும் - அந்த அறிக்கை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் போகும். அங்கு இலங்கையின் நட்புநாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அவர்கள் இலங்கை மீதான விதி 99 அறிக்கையைக் குப்பைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஐநா அவையில் உச்ச அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலர் அல்ல. மாறாக, ஐநா பாதுகாப்பு அவையும், ஐநா பொதுச்சபையும்தான் அதிகாரத்துடன் உள்ளன. அங்கு உறுப்பு நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஐநாவில் நடக்கும் விடயங்கள் முழுக்க முழுக்க சர்வதேச அரசியல் சார்ந்தவையே ஆகும். அங்கு போய் 'ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை' என்று கேட்டுக் கொண்டிருந்தால் - அது காணல் நீராகவே முடியும்.

9. தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார்?

இலங்கை அரசுதான் தமிழ் மக்களின் ஒரே எதிரி. அதனுடன் அந்த அரசைக் காப்பாற்றுவோர் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றன.

துரோகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா. 

அடுத்தது கியூபா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். முன்றாவதாக இஸ்லாமிய நாடுகள்.

ஆக, இந்தியா, கம்யூனிச நாடுகள், இஸ்லாமிய நாடுகள் - ஆகியனதான் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனரே தவிர - அமெரிக்காவோ, மேற்குலகமோ தமிழர்களின் எதிரிகளாக இப்போதைக்கு இல்லை.

10. நீதிக்கு துணை நிற்கும் எல்லோரும் நண்பர்களே

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமாக குற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, பன்னாட்டு குற்றவியல் நீதிவிசாரணை அமைப்பால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - என்பதே எங்களது கோரிக்கை.

அதற்கான திசையில் சிறிதளவேனும் முன்னேற யார் உதவினாலும் அவர்களை நாங்கள் ஆதரிப்போம். அது அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்கிற வேறுபாடு எங்களுக்கு இல்லை. இலங்கை அரசைத் தவிர உலகில் மற்ற எல்லோரும் நண்பர்களே!

(இந்தியக் குடிமக்கள் என்கிற முறையில் இந்தியாவின் துரோகத்தையும் கண்டிக்கின்றோம், எதிர்க்கிறோம்)

செவ்வாய், மார்ச் 04, 2014

இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் இதோ: ஐநா மனித உரிமை பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தக் கோரும் வரைவுத் தீர்மானம் ஐநா மனித உரிமைப் பேரவையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீசியஸ், மோன்டெநீக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகள் இந்த வரைவுத் தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரும் ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கையை வரவேற்கிறோம். இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விசாரித்து மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தில் (செப்டம்பர் 2014) வாய்மூல அறிக்கையும், 28 ஆவது கூட்டத்தில் (மார்ச் 2015) முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

The resolution welcomed the High Commissioner's recommendations and conclusions on the need for an independent and credible international investigation in the absence of a credible national process with tangible results.

It requested the Office of the High Commissioner to assess progress toward accountability and reconciliation, monitor relevant national processes and to investigate alleged violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka.

இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் இதோ: