Pages

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஐ.நா மனித உரிமை ஆணையார் நவநீதம் பிள்ளை அறிக்கை இதோ: இலங்கை மீது அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை !

சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைக்கும், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் 26 ஆம் நாள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ள இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவன முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறிலங்கா உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத்  தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் , சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை இதோ:

2 கருத்துகள்:

rajendran சொன்னது…

ஐ.நா இலங்கையில் பன்னாட்டு மனித உரிமை இயக்கத்தினரால் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஐ.நா. மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் பாதகம் ஏற்படும்.

Prabhapriyan சொன்னது…

சுதந்திர நாட்டை நிர்மாணிக்கும் வகையிலான சற்றே நீண்ட பணிக்கு அச்சாரமாக நவிப்பிள்ளையின் இந்த பரிந்துரை அமையட்டும்.