Pages

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: வடஇந்தியர்களின் இனவெறி குறையுமா? 

'ராஜீவ் காந்தியின் கொலை ஒரு தனிப்பட்ட பழிவாங்கும் சம்பவம். அதனை பயங்கரவாதமாகக் கருத முடியாது. கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அந்த நிகழ்வு இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல' என்று இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ளது (08.10.1999).

ஆனால், அதனை ஒரு பயங்கரவாத நிகழ்வு என வடஇந்தியர்கள் இன்னமும் பேசுகின்றனர். பயங்கரவாதிகளை தமிழகம் ஆதரிப்பதாக இனவெறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வடஇந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கொந்தளிக்கின்றனர். 

"நாட்டின் பிரதமராக இருந்தவரை பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். பயங்கரவாதச் செயல் என்பது நாடு மீது தொடுக்கப்படும் போருக்கு சமமாகும். அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஒப்பாகும்" - என்கிறார் பா.ஜ.க'வின் அருண் ஜேட்லி.

"பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இரு வேறு நிலைகளை எந்த கட்சியும் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாட்டின் பிரதமராக இருந்தவரை கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுத் தர ஒரு மாநில அரசே ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடான செயலாக உள்ளது' - என்கிறார் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல்.
"ஈவு இரக்கமற்ற படுகொலையை நிகழ்த்தியவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" - என்கிறார் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி.

"ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்" - என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான இந்த இனவெறி பொய்ப் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். 

ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் 'ஆப்பிரிக்க பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்' என்று குற்றம்சாட்டியவுடன், அப்பிரிக்க தூதரகங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்திய அரசு உடனே பணிந்து போனது. ஆனால், தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடும் இல்லை என்கிற இளக்காரத்தில் வடஇந்தியர்கள் - தமிழகம் பயங்கர வாதிகளை ஆதரிக்கிறது - என அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர். இந்த அநீதிக்கு முடிவு வரவேண்டும்.

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: உச்சநீதி மன்றம்

"பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி இவர்களில் யாரும் பயங்கரவாதிகள் இல்லை. ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையே அல்ல. தனிப்பட்ட பகையின் காரணமாக ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் உத்தரவிட்டார். இது இந்தியாவுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானது அல்ல. இந்திய அரசுக்கு எதிராக அல்லது இந்திய மக்களிடையே பீதியை உண்டாக்க இந்த சம்பவம் நடக்கவில்லை.
ராஜீவ் காந்தி என்கிற ஒருவரைத் தவிர வேறு யாரையும் கொலைசெய்யும் நோக்கம் இவர்களில் யாருக்கும் இல்லை" - இப்படியாக, 'ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயலே இல்லை' என்று உச்சநீதிமன்றம் 08.10.1999-ல் தீர்ப்பளித்தது.

Supreme Court verdict on the Rajiv Gandhi assassination case:

Justice Thomas found it difficult to "conclude that the conspirators intended, at any time, to overawe the Government of India as by law established. Nor can we hold that the conspirators ever entertained an intention to strike terror in people or any section thereof."

Justice Thomas reasoned that there was no evidence to suggest that the LTTE's intention had been to overawe the Government of India. Although the expression 'terrorist' can be used to refer to any person for acting to "deter the Government from doing anything or refrain from doing anything," the Judge said that was not Prabakaran's intention. He was "not against India or the Indian people but against the former leadership in India who is against the Tamil liberation struggle and the LTTE".

Justice Wadhwa said: "There is nothing on record to show that the intention to kill Rajiv Gandhi was to overawe the Government."

தனிப்பட்ட பகையால் நிகழ்ந்த ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என்பது என்ன நியாயம்? 'தமிழகம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. இது தமிழ் மக்களின் இனவெறி' என்றெல்லாம் - வட இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஏன் கொந்தளிக்கின்றனர்? 

தமிழர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை கைவிடுவதுதான் வட இந்தியாவுக்கு நல்லது. 

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்தும் கடற்கரை பரப்பு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்!

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இங்கே காண்க: RAJIV GANDHI ASSASSINATION CASE - Out of the TADA net

3 கருத்துகள்:

காமக்கிழத்தன் சொன்னது…

வடவர்கள் மட்டுமா தமிழனுக்கு எதிரான இனவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்?

இங்குள்ள சில கட்சித் தலைவர்களும் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்!!!

எனவே, இந்த வெறியர்களின் இனவெறிப் பிரச்சாரம் இன்னும் உத்வேகம் பெறுமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், வாழ்நாள் முழுக்கச் சிறையில் கிடந்து அணு அணுவாய்ச் சித்ரவதைப்பட்டுச் செத்தால்தான் இந்தியாவின் ஆன்மா[???] சாந்தி பெறும் என்று இவர்கள் நம்புகிறார்களோ?!?!

தூக்கிலும் போடாமல் விடுதலையும் செய்யாமல் காலம் கடத்தியதன் நோக்கமும் இதுதானோ?!?!

Unknown சொன்னது…

SO u mean the issue between Rajiv gandhi and LTTE is money issue and land issue or woman issue?...Can u understand it is between LTTE and Rajiv because of his decison taken as Prime minister of India not because as individual Rajiv

சீனு சொன்னது…

இந்த பிரச்சினையை இனவெறிப் பிரச்சினையாக உங்களை போன்றவர்ர்கள் தான் திசை திருப்புகிறார்கள். முதலில், வட இந்தியர்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அது பயங்கரவாதிகள் செயல் என்றே நினைக்கிறார்கள். காரணம், தமிழ் தேசியம் பேசி பேசி அங்குள்ளவர்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செய்துவிட்டனர். இதை இந்தியா முழுக்க எடுத்துச் செல்லவேண்டியது இங்குள்ள தமிழ் அமைப்புகள்.

ஆனால், அவர்களுக்கோ இந்த வேற்றுமை கண்டிப்பாக தேவை. அப்புறம் எப்படி தெளியவைப்பார்கள்?