Pages

வெள்ளி, ஜூலை 25, 2014

மருத்துவர் அய்யா 75: வாழ்விக்க வந்த மகான்

ஐநூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வன்னியப் பேரினத்தை - வாழ்விக்க வந்த மகான் மருத்துவர் அய்யா. அவரது 75 ஆம் பிறந்தநாள் இன்று. 

வன்னியர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டின் ஒவ்வொரு வகுப்பினரும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என உழைப்பவர் அவர்.

  • இந்தியத் தலைவர்களில், ஒருநாளும் ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன் என பதவி பற்றற்று வாழும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே.
  • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடைப் பெற்றுத்தருவேன் எனப் போராடி, தனது வாழ்நாளிலேயே அந்த சாதனையைப் படைத்தவர் அவர் மட்டுமே. வன்னியர் உள்ளிட்ட 108 சாதியினருக்கான MBC இட ஒதுக்கீட்டால், இன்று பலன் பெறுவோர் பல ஆயிரம் பேர்.
  • வன்னியர்களை விட தாழ்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்ததால் - பா.ம.க'வுக்கு அதிகாரம் கிடைத்தால், அதை தாழ்த்தப்பட்டவருக்கு அளிப்போம் என அறிவித்து, பா.ம.க'வின் "முதல்" மத்திய அமைச்சராக தாழ்த்தப்பட்டவரையே அமரச் செய்தார் மருத்துவர் அய்யா.
  • 1980 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை தொடங்கியது முதல், இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஓயாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார் மருத்துவர் அய்யா.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கான ஒரு மாபெரும் பேறு, அதுவே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தக் காலத்தில் வன்னியர்கள் ஒரு பேரினமாக, அதிகாரம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். ஆனால், அதன் பின்னார் தொடர்ச்சியாக வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வந்தனர்.
  • வலங்கை - இடங்கை சாதி மோதல்களில் நியாயம் பேசியதால், எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் பகைக்கப்பட்டனர். 
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வன்னியர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. 
  • ஆங்கிலேயர் ஆட்சியின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - சத்திரிய சாதியினரான வன்னியர்களை, தாழ்த்தப்பட்ட சாதி என ஒடுக்கும் முயற்சிகள் நடந்தன.
  • இந்திய சுதந்திரப் போராட்டமும், திராவிட இயக்க அரசியலும் - வன்னியர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பயன்படுத்திக்கொண்டன. மற்றவர்கள் புகழுக்கும் அதிகாரத்துக்கும் வன்னியர்கள் உரமாகினர்.
இன்றைய வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் வளமாக இல்லை. இங்கு வாழும் இதர சமூகத்தவரின் வசதிக்கும் வளத்துக்கும் உழைத்த சமூகமாகவே வன்னியர்கள் இருக்கின்றனர். ஆயிரம் வன்னியர் குடும்பங்கள் வசிக்கும் ஊரில், ஐந்து குடும்பம் மட்டுமே உள்ள மாற்று சாதியினர் வசதி படைத்தவர்களாக வாழ்வதின் ரகசியம் - வன்னியர்களின் உழைப்புதான்.

சுதந்திரப் போராட்டத்தில் வன்னியர்கள் தலைமை தாங்கவில்லை. திராவிட இயக்கத்தில் வன்னியர்கள் தலைமை இல்லை. தனித்தமிழ் இயக்கத்திலோ, தமிழ்த்தேசியப் போராட்டத்திலோ வன்னியத் தலைமை இல்லை. 

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் தலைமை இடத்தில் வன்னியர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை. அதிகாரப் பதிவிகள், பொருளாதார வளம் எதிலும் வன்னியர்கள் உரிய இடத்தில் இல்லை.

வன்னியர்கள் அதிகாரமிழந்த நிலையில் வாழ்வதற்கு வன்னியர்கள் காரணம் இல்லை. மாறாக, வன்னியர்களுக்கு எதிராக இங்கு நிலைவும் இனவெறி மனநோய் - வன்னியஃபோபியா - தான் காரணம். (காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA)

வீழ்ச்சிநிலையில் இருந்து வன்னிய சமூகத்தை மீட்கும் முயற்சிகள் 1880 களிலும், 1950 களிலும் நடந்தாலும் - அவையெல்லாம் ஒரு அளவுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.

- இந்த ஐநூறு ஆண்டுகால வன்னியர் வீழ்ச்சிக்குப் பின்னர், வன்னியர்களின் முதல் எழுச்சியை உருவாக்கிக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள். 

அவரது வழியில் - முழு வெற்றியை அடைய, அய்யாவின் 75 ஆம் ஆண்டில் உறுதி ஏற்போம்.
பசுமைத் தாயகம் நாள் 2001 - மரம் வளர்க்கும் விழா (நீலச் சட்டையில் இருப்பது (!) நான் தான்!)
குறிப்பு: வன்னியர்களே தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூகம். வன்னியர் சமூகம் வளர்ச்சி அடையாதவரை, தமிழ் நாடு வளர வாய்ப்பே இல்லை. எனவே, தமிழ்நாடு முன்னேற வேண்டும் - என விரும்புகிறவர் எவராக இருந்தாலும், அவர்கள் வன்னியர்களின் வளர்ச்சியை, அதாவது வன்னியர்களின் வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

அதே போன்று, ஒவ்வொரு சமூகமும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான விகிதாச்சார பங்கினை எல்லா நிலைகளிலும் அடைவதே தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

வியாழன், ஜூலை 24, 2014

இந்திய அரசின் அயோக்கியத்தனம்: நரேந்திர மோடிக்கு தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுதான் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை போலும்! 

ஐநா மனித உரிமைப் பேரவையில் - ஈழத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த அதே இந்திய அரசு, இப்போது காசாவில் கொலை செய்யப்பட்ட 700 பேருக்காக பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு (India voted YES)

இலங்கை - இஸ்ரேல்: ஆளுக்கொரு நியாமா?

அன்று ஈழப்போரின் போது, ராஜபக்சே என்னவெல்லாம் சப்பைக் கட்டுகளைக் கட்டி, ஈழத்தமிழர்களைக் கொலை செய்தாரோ, இன்று அதே சாக்குப்போக்குகளைக் கூறி, காசாவைத் தாக்குகிறார் - பெஞ்சமின் நேதன்யாகு.
இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் ராஜபக்சே
ஈழத்தில் நடந்த கொடூரப் போர்க்குற்றங்கள் தொடர்பில், பன்னாட்டு விசாரணை தீர்மானம் வந்தபோது - 'நாடுகளின் விவகாரங்களில் அன்னிய தலையீடு கூடாது' என்று வியாக்கியானம் பேசியது இந்திய அரசு.

In an explanation of vote by the Permanent Representative of India to the UN Offices in Geneva, Dilip Sinha, said this resolution at the UN Human Rights Council imposes an “intrusive approach” of international investigative mechanism which was counterproductive apart from being “inconsistent and impractical”

இலங்கை நாட்டில் அன்னியத் தலையீடு கூடாது என்கிற இந்தியாவின் நியாயம், இஸ்ரேல் நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா?

அன்று, ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலை மீதான பன்னாட்டு விசாரணையை எதிர்த்து வாக்களித்த இந்திய அரசு, இன்று, 700 பாலஸ்தீனியர்கள் படுகொலைக்காக மட்டும் பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது ஏன்?

தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே, பாலஸ்தீனருக்காக துடிக்கும் உங்கள் இதயம், தமிழர்களுக்காக துடிக்க மறுப்பது ஏன்?

தமிழர்கள் நாங்கள், இந்தியப் பேரரசுக்கு அந்த அளவுக்கா தீண்டத்தகாதவர்கள் ஆகிவிட்டோம்?
---------------------------------------------------------------------------
பாலஸ்தீனத்தின் நட்சத்திரம் எனும் விருதை - பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் பெறும் ராஜபக்சே.
இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு விசாரணைத் தீர்மானம் (23.07.2014)

Human Rights Council - Twenty-first special session - 23 July 2014: Resolution – 

“Decides to urgently dispatch an independent, international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate all violations of international humanitarian law and international human rights law in the Occupied Palestinian Territory, including East Jerusalem, particularly in the occupied Gaza Strip”

NEWS: Human Rights Council establishes Independent, International Commission of Inquiry for the Occupied Palestinian Territory

(குறிப்பு: இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐநா மனித உரிமைப் பேரவை விசாரணையை நாம் ஆதரிக்கிறோம். இதே போன்று இலங்கை மீதானக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை) 

ஞாயிறு, ஜூலை 06, 2014

திராவிட இயக்கத்தின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி: ஒரு VANNIYAPHOBIA ஆதாரம்!

திராவிட இயக்கம் என்பது பெரும்பான்மைச் சாதிகளை ஒழிக்கும் இயக்கமாகவே இருந்துள்ளது. வன்னியர்களை ஒழிப்பதிலும், வன்னியர்களின் வரலாற்றை மறைப்பதிலும் திராவிட இயக்கத்தினர் எப்போதும் முனைப்பாக இருந்துள்ளனர். 

அந்த வகையில், திராவிட இயக்கத்தினரின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி (VANNIYAPHOBIA) வன்னியஃபோபியாவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு. 

மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போரில் முதல் ஆளாக உயிர்த்தியாகம் செய்த அவரது 105 ஆம் நினைவு நாளில் (6.7.2014), நாம் திராவிட இயக்கத்தினரின் துரோகத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது.

இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி.

சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் சிறையில் ஏற்பட்ட பாதிப்புகளால் மரணத்தை தழுவினார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. தமிழ்நாட்டில் அவரது சொந்த ஊர், நாகை மாவட்டம் பூம்புகார் - மேலையூர் அருகில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஆகும்.

திராவிட இயக்கத்தின் துரோகம்

தென் ஆப்பிரிக்காவில் தமிழர்களின் போராட்டத்தையும், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தையும் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, கலைஞர் கருணாநிதி இதனை அறிந்திருந்தார். 

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் தமிழக அரசின் சார்பில் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. 

அந்தத் தேரில் "1. நாகப்பன், 2. நாராயணசாமி. 3. வள்ளியம்மை" என வரிசையாக எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
1970 தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" தேர் ஊர்வலம் 
அதாவது, 1970 ஆம் ஆண்டில், சாமி நாகப்பன் தான் என்பதை முதல் தியாகி என்பதை நன்கு அறிந்து, அதனைக் குறிப்பிட்டு ஊர்வலமும் நடத்தியுள்ளனர். ஆனால்,  அதற்கு அடுத்த ஆண்டே அந்த வரலாற்றை மூடி மறைத்துவிட்டனர்.

1971 இல் - தில்லையாடி கிராமத்தில் 'வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி' ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.
தில்லையாடி வள்ளியம்மை சிலை
தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை
1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்துக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான முதல் தியாகியின் தியாகத்தை மறைத்தார்.

1997 இல் மீண்டும் திராவிடத் துரோகம்

1915 ஆம் ஆண்டில் ஜொகனஸ்பர்கில் மகாத்மா காந்தி திறந்து வைத்த சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சிதைக்கப்பட்டன. அவை 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன.

அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. (சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடத்தில் பின்னர் 1997 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜரால் அஞ்சலி செலுத்தினார்)
 ஜொகனஸ்பர்க் - சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம்
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர்.  அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்து எழுதியுள்ளார். ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. 

வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒரு வன்னியர் என்பதே காரணம்
வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்
இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் 'தில்லையாடி வள்ளியம்மை' மட்டும்தான் தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? 
  • உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்க மறந்தது ஏன்?
  • காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில்தான். அதுதான் வன்னியஃபோபியா.

வன்னியஃபோபியாவும் திராவிட இயக்கமும்

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமும், உண்மை மறைப்பும் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட. 

யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.

VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars.

இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் உண்மை மறைப்புக்கும் இந்த 'வன்னியஃபோபியா' மனநோய் தான் காரணம் ஆகும். 

அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ள 'திராவிட இயக்கத்தினர்தான்' சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாற்றை மறைத்துள்ளனர்.
குறிப்பு: "பாடபுத்தகத்தில் நாடார்களின் வரலாறு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது, அதனை மாற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் முன்பு அறிக்கை வெளியிட்டார்கள். உடனே, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பின் தொடர்ந்து அறிக்கைவிட்டார்கள். வார இதழ்கள் கட்டுரைத் தீட்டின. 

இப்போது, "9 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் விடுதலைப்போரின் முதல் களப்பலி தில்லையாடி வள்ளியம்மை என தவறாக உள்ளது. அதனை சாமி நாகப்பன் படையாட்சி என்று திருத்த வேண்டும்" என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். 

இப்போது, எந்த அரசியல் கட்சித் தலைவரும் பின் தொடர்ந்து அறிக்கை விடவில்லை. வார இதழ்கள் கட்டுரைத் தீட்டவில்லை. நாடார்களின் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுத்தவர்கள், வன்னியர் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. அதுதான் வன்னியஃபோபியா. 

தொடர்புடைய சுட்டிகள்:




வெள்ளி, ஜூலை 04, 2014

ஜூனியர் விகடனில் வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்!

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட. 

யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். (VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars)

(VANNIYAPHOBIA குறித்து விரிவாக இங்கே காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்)

இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர்.

வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும். அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளவர்களில் முதன்மையான இடத்தில் இருப்பது "ஜூனியர் விகடன்" பத்திரிகை ஆகும். 
ஜூனியர் விகடன் குழுவினருக்கு பீடித்துள்ள வன்னியர் எதிர்ப்பு இனவெறி மனநோயின் காரணமாக, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி எழுதிவருகின்றனர்.

தருமபுரி வெற்றி ஒரு வரலாற்று சாதனை. ஆனால், அந்த மாபெரும் வெற்றியை 'பணத்தால் வந்த வெற்றி' என ஜூனியர் விகடன் இதழில் கொச்சைப்படுத்தியுள்ளனர்

தருமபுரி: ஒரு வரலாற்று சாதனை
  • 47 ஏழு ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக கட்சிகளின் துணை இல்லாமல் வெற்றிபெற்ற வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்றுள்ளார்கள்.
  • தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக என்கிற இரண்டுகட்சிகளுடனும் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக மோதி வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் படைத்துள்ளார்கள்.
தருமபுரி மக்களைக் கொச்சைப்படுத்தும் ஜூனியர் விகடன்

தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் தொகுதிக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டதாகவும், தருமபுரியில் மட்டும் 85 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் உறுதிபடுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தருமபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு வாக்களிக்கக் கோரி, ஒரே ஒரு வாக்காளருக்குக்கூட, ஒரே ஒரு ரூபாய் பணமும் அளிக்கப்படவே இல்லை. 

அதாவது, தமிழ் நாட்டிலேயே மிக அதிகப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட தருமபுரி தொகுதியில்தான், ஒரே ஒரு ரூபாய் கூட பணமே கொடுக்காத மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். இதன் மூலம் தமிழ் நாட்டிலேயே இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காப்பற்றிய தொகுதி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தருமபுரி.

இந்த மாபெரும் வெற்றியை, "பணத்துக்கு கிடைத்த வெற்றி" எனக்கூறி கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன் இதழ்.

ஜூனியர் விகடன் 6.7.2014 இதழின் 'கழுகார் பதில்கள்' பகுதியில் - 

"தர்மபுரியில் பா.ம.க எவ்வளவு செலவு செய்தது என்பது அன்புமணிக்குத் தெரியும். காடுவெட்டி குருவுக்குக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தர்மபுரியில்கூட இவ்வளவு செலவு செய்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமையில் கட்சி இருப்பதை இவர்கள் உணர வேண்டும்"

- எனக் கருத்து கூறியுள்ளது ஜூனியர் விகடன் இதழ்.
அதாவது, ஓட்டுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்ற வெற்றியை, பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றார்கள் என இழிவுபடுத்துகிறது ஜூனியர் விகடன்.

நாடெங்கும் பணத்தை வெள்ளமாக ஓடவிட்டு - ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அதிமுக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஜூனியர் விகடன்; பா.ம.கவின் நியாயமான வெற்றியைக் கேவலப்படுத்துவது ஏற்புடையது அல்ல.
  • ஓட்டுக்கு பணம் அளித்த ஆளுங்கட்சியினரின் ஜனநாயகப் படுகொலை எதிர்த்துப் போராட முதுகெலும்பு இல்லாத ஜூனியர் விகடன், பா.ம.கவின் நேர்மையான வெற்றியைக் கொச்சைப்படுத்துவது ஏன்?
  • 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, தர்மபுரியிலும் வெற்றி பெற்றிருக்கலாமே என்கிற சாதிப்பாசமா? 
  • அல்லது, வன்னியர்கள் ஒழித்துவிட்டோம் என நம்பிய நிலையில், சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைப் போல, தருமபுரியில் வன்னியர்கள் எழுந்துவிட்டார்களே என்கிற சாதிவெறி வயிற்றெரிச்சலா?
தருமபுரியில் பா.ம.க ஓட்டுக்கு காசு கொடுத்ததாக நிரூபித்தால், அரசியலையே கைவிட பா.ம.க தயாராக இருக்கிறது. தருமபுரியில் பா.ம.க ஓட்டுக்கு காசு கொடுத்ததாக நிரூபிக்காவிட்டால் ஜூனியர் விகடன் இதழை இழுத்து மூடத் தயாரா?

வரைபடம்: தமிழ்வாணன் கோவிந்தன் கவுண்டர்
தருமபுரி மக்களைக் கொச்சைப்படுத்தும் செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் தருமபுரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:








சனி, ஜூன் 28, 2014

ஐநா விசாரணை: பயத்தில் ராஜபக்சே கும்பல்!

இலங்கையில் நடந்த கொடூரங்கள் தொடர்பான ஐநா விசாரணை, இலங்கையின் சர்வதேச குற்றவாளி ஆட்சியாளர்களுக்கு பயமளிக்கும் வகையில் தொடங்கியுள்ளது. 
மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர்
நவநீதம் பிள்ளை அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்களே அந்த பயத்திற்கு காரணம்:

1. மார்ட்டி அடிசாரி: 

பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான இவர் தலையிட்ட பல பிரச்சினைகளில் புதிய நாடுகளை உருவாக்கியுள்ளார்.

நமீபியா விடுதலை பெறக் காரணமானவர். இந்தோனேசியாவில் ஆச்சே சர்ச்சையில் தலையிட்டு, சுதந்திர மாகாணம் உருவாக வழிவகுத்தவர். செர்பியாவிடமிருந்து கொசாவோ நாட்டைப் பிரித்தவர் இவர்தான். 

இலங்கைச் சிக்கலை சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவரும் 'இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குழுவின்' (ICG) தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

2. சில்வியா கார்ட்ரைட்:

நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதி.

3. அஸ்மா ஜகாங்கீர்:

பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர். மதச்சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானவர். அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர். ஐநா மனித உரிமை ஆணையத்தில் "அரசாங்கத்தின் சட்டவிரோத படுகொலைகள்" மற்றும் "மதச்சுதந்திரம்" தொடர்பான சிறப்பு விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் (UN Special Rapporteur on Extrajudicial, Arbitrary and Summary Executions. UN Special Rapporteur on Freedom of Religion and Belief).

(இலங்கை மீதான விசாரணைக் குழுவில் ஆசிய நாட்டவர்கள் யாரும் இடம்பெற ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்கிற இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, ஐநாவில் இலங்கையைக் காப்பாற்றும் பாகிஸ்தானில் இருந்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்).

4. சான்ட்ரா பெய்தாஸ்

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனிதஉரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் சான்ட்ரா பெய்தாஸ் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சான்ட்ரா பெய்தாஸ் சூடான் நாட்டின் மீதான விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்.

5. இளவரசர் செயித் ராத் செயித் உசேன்.

நவநீதம் பிள்ளைக்கு அடுத்ததாக ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைமை பதவிக்கு வரவுள்ளார் ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன். இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப் போகிறவர் இவர்தான்.
ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன்
இவர் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர். ராஜபக்சே கும்பலைச் சேர்ந்த போர்க்குற்றவாளி சாவேந்திர டிசில்வா என்பவர் ஒரு ஐநா அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அதனை இவர் எதிர்த்துள்ளார். இவரைச் சந்திக்க ராஜபக்சே ஜோர்டன் நாட்டுக்கு நேரடியாக சென்ற போதும், ராஜபக்சேவைச் சந்திக்க மறுத்துள்ளார்.

இவர் போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவக் காரணமானவர்களில் ஒருவரும், அதன் முதல் நிருவாகக் குழுத் தலைவராக இருந்தவரும் ஆவார். இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச நெறிமுறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஐநா படைகளின் பாலியல் குற்றங்கள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவிற்கும் இவர் தலைமையேற்றிருக்கிறார்.

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இவர் ஐநா அவை நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு யூகோசுலோவியா நாட்டின் இனப்படுகொலை தொடர்பான ஐநா அமைதிப்படையில் பணியாற்றியுள்ளார்.

- மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர், சான்ட்ரா பெய்தாஸ், இளவரசர் செயித் ராத் செயித் உசேன் - என்கிற சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட, நம்பிக்கை அளிக்கும் அணியினர், ராஜபக்சேவை தூக்கமில்லாமல் செய்யப்போவது உறுதி.

தாமதம் ஆகலாம், ஆனால், நீதி ஒருநாள் வென்றே தீரும்!

வெள்ளி, ஜூன் 27, 2014

வன்னியர் என்றால் சாதி - கள்ளர் என்றால் சாதி இல்லை: இதுதான் தமிழ்த்தேசியமா?

"தமிழன் முதல்வராக வேண்டும் என்றால், பாமகவினர் வன்னியர் முதல்வராக வேண்டும் என்கிறார்களே" என உணர்ச்சிவசப்பட்டார் - நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் என்கிற சைமன் ஜெபாஸ்டியன்.

"ஒரு வன்னியரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கும் அரசியல் தமிழினத்தை 500 ஆண்டுக்காலத்திற்கு பின்னால் தள்ளும் பிற்போக்குத்தனமான அரசியலாகும். இப்படிப்பட்ட சாதிய அரசியல், தமிழின உணர்வு எனும் ஒர்மையின் மாபெரும் பலத்தை உடைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும். மதிப்பிற்குரிய இராமதாஸ் முன்னெடுக்கும் இந்த அரசியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது" அறிக்கை விட்டார் சீமான்.

ஆனால், "பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும்" எனும் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த நூலுக்காக இப்போது நடத்தப்படும் "நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில்" நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் காசித்தேவர் அய்யநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
'வன்னியர்' என்பது மட்டும் தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் என்றால் - 'கள்ளர்' என்பது தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தாதா?

அது எப்படி? முற்போக்குக் கூட்டத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டத்துக்கும் வன்னியர் எனும் போதெல்லாம் அது சாதி வெறியாகத் தெரிகிறது? கள்ளர், தேவர் எனப் பேசினால் - அதுமட்டும் முற்போக்காகவும் தமிழ்த்தேசியமாகவும் மாறிப்போகிறது?

உண்மையில் முற்போக்கு, தமிழ்த்தேசியம் என்பதெல்லாம் வேறொன்றும் இல்லை. வெறும் "வன்னியஃபோபியா" மட்டும்தான். விளக்கமாக இங்கே காண்க: "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA

(குறிப்பு: 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும்' நூல் வெளிவந்த போதே 2012 ஆம் ஆண்டில் மதுரை நகர் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இந்த நூலை வரவேற்று சுவரொட்டி ஒட்டினர். சாதி எதிர்ப்பு பேசும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமுஎச அமைப்பினர் இந்த நூலைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆனந்தவிகடன் இந்த நூலைப் போற்றி பேட்டி வெளியிட்டது.)

மிக முக்கிய குறிப்பு: கள்ளர், தேவர், முக்குலத்தோருக்கு எதிராக இந்த பதிவு இல்லை. அனைத்து சாதிகளையும் அவர்களது உண்மை வரலாற்றையும் நாங்கள் போற்றுகிறோம்.

வியாழன், ஜூன் 26, 2014

இலங்கை மீதான ஐநா விசாரணைக்குழுவில் உலகின் புகழ்பெற்ற வல்லுநர்கள்

இலங்கையின் மீது விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவில் 3 புகழ்பெற்ற வல்லுநர்கள் பங்கேற்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
  • பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அடிசாரி, 
  • நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட்

  • பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய தலைவர் அஸ்மா ஜகாங்கீர் 
- ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிவித்துள்ளார். மிக முக்கியமான மற்றும் சவாலான இந்த விசாரணைக்கு உதவி செய்ய இந்த மூன்று வல்லுநர்களும் ஒப்புதல் அளித்ததை நவநீதம் பிள்ளை வரவேற்றுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கை போரில் இரு தரப்புகளாலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழு 10 மாதங்கள் செயல்படும்.

திங்கள், ஜூன் 23, 2014

9-ஆம் வகுப்பு பாடநூலில் வரலாற்றுப் பிழை: வன்னியர்களுக்கு அநீதி!

தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சுதந்திரப் போராட்டத்தின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சி வரலாறு! (வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

‘சத்தியாகிரகம்’ - மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை.  இதனை முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி அரங்கேற்றிய போது, அதில் முதன்முதலில் களப்பலி ஆனவர் சாமி நாகப்பன் படையாட்சி. 

ஆனால், தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் இந்த வரலாற்று தகவல் மறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி 'தில்லையாடி வள்ளியமை' எனத் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்று தவறு திருத்தப்பட வேண்டும். மேலும், சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக வரலாற்று பாடநூல்களில் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூல்

மகாத்மாவை உருவாக்கிய தென் ஆப்பிரிக்கா

மகாத்மா காந்தி 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது" என்றார் அவர்.

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் 

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் சட்டத்தை கொண்டுவந்தது. பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.  அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் இந்த ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.  காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரகக் தியாகி

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு கடின வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் நிமோனியாவால் இதயம் செயலிழந்து மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) அடக்கம் செய்தனர். சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

முதல் களப்பலி

சாமி நாகப்பன் படையாட்சிதான் முதல் சத்தியகிரகத் தியாகி என மகாத்மா காந்தி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Indian Opinion Newspaper 14.8.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404
14.8.1909 ஆம் நாளிட்ட இந்தியன் ஒப்பீனியன் இதழில் - சாமி நாகப்பனின் மரணமே முதல் தியாகம் (FIRST SACRIFICE) என தலைப்பிட்டு எழுதினார் மகாத்மா காந்தி. (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404)

15.07.1909 அன்று தென் ஆப்பிரிக்க கேப் காலனி பிரதம மந்திரி J. X. MERRIMAN என்பவருக்கு எழுதிய கடிதத்தில், எங்களது போராட்டம் அதன் முதல் பலியை வாங்கியுள்ளது. ஒரு இளம் சத்தியாகிரகப் போராளி கொடுஞ்சிறையிலிருந்து சாகும் நிலையில் விடுதலையாகி ஆறாம் நாளில் இறந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410)
Letter to Prime Minister J. X. MERRIMAN
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410
தென் ஆப்பிரிக்க போராட்டத்தில் மிக முதன்மையான ஒரு நிகழ்வு 16.6.1909 ஆண்டு ஜொகனஸ்பர்கில் நடந்த இந்தியர்கள் கூட்டமாகும். 1500 இந்தியர்கள் திரண்ட இக்கூட்டத்தில், தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் தூதுக்குழுவை இங்கிலாந்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இந்தியர்களில் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமிருந்த மகாத்மா காந்தி மற்றும் ஹாஜி ஹபீப் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இங்கிலாந்து பயணக்குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்ட 21.6.1909 அன்றுதான் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்டார். காந்தி 10.7.1909 அன்று லண்டன் சென்று சேர்ந்தார். அதற்கு முன்பாகவே 6.7.1909 அன்று சாமி நாகப்பன் படையாட்சி மரணமடைந்தார். அந்தத் தகவல் தந்தி மூலம் 12.7.1909 அன்று தெரிவிக்கப்பட்டது. 16.7.1909 அன்று காந்தி வெளியிட்ட தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் புகழ்பெற்ற "டிரான்சுவால் இந்தியர்களின் வழக்கு" எனும் அறிக்கையில், சாமி நாகப்பனின் மரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் காந்தி. (STATEMENT OF TRANSVAAL INDIAN CASE, PRESENTED BY THE INDIAN DEPUTATION, THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 424)

சாமி நாகப்பனை போற்றிய மகாத்மா காந்தி

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.
Indian Opinion Newspaper 14.12.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 10: Page: 217
# தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

# தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.
Indian Opinion Newspaper 18.3.1914 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 14: Page: 124
# சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

# நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

# காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டினம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

# இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

# 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

உலகின் முதல் சத்தியாகிரகமான தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தில் மிக முதன்மையான அடையாளமாக உள்ள சாமி நாகப்பன் படையாட்சியின் படம் ஜொகன்ஸ்பர்க் அருங்காட்சியத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடம் ஜொகன்ஸ்பர்க் கல்லரைத் தோட்டத்தில் உள்ளது.

வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும்

மகாத்மா காந்தியால் போற்றிப்புகழப்பட்ட, சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு தமிழ் நாட்டில் மறைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் - மகாத்மா காந்தி குறிப்பிடும் நான்கு தியாகிகளில் மூன்றவதாக இடம்பெற்றுள்ள வள்ளியம்மா முனுசாமி முதலியார் - தமிழ்நாட்டின் பாடநூல்களில் 'முதல் களப்பலி' என்று குறிப்பிடப்படுவது அநீதியாகும்.  

இந்த வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் வரலாற்று பிழை மாற்றப்பட வேண்டும். மேலும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக பாடநூல்களில் இடம்பெற வேண்டும். 


ஞாயிறு, ஜூன் 22, 2014

இந்தி எதிர்ப்பும் தமிழ்ப்பற்றும்: தமிழகக் கட்சிகளின் போலி வேடம்!

நடுவண் அரசு ஊழியர்கள் சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தரவு தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான உணர்வுகளை மீண்டும் எழுப்பிவிட்டுள்ளது. இந்தி பேசப்படாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என நடுவண் அரசு பின்வாங்கியுள்ளது.

ஒரு தவளையை கொதிக்கும் நீரில் தூக்கிப்போட்டால், அது துள்ளிக்குதித்து ஓடிவிடும். அதுவே, குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும். அதே நிலையில்தான் தமிழர்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு மொழியை தமிழர்கள் மீது திணிப்பதைக் கண்டு துள்ளிக்குதிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், முதல் மொழியான தமிழே இங்கு ஒழிக்கப்பட்டது குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

முதல் மொழி ஒழிக்கப்பட்டு, அந்த இடத்தில் இரண்டாம் மொழி திணிக்கப்படுவதுடன் ஒப்பிட்டால் - மூன்றாம் மொழி இந்தித் திணிப்பு ஒரு பெரிய ஆபத்தே அல்ல!

இந்தித் திணிப்பை விட பெரிய ஆபத்து!

கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சி என எல்லாவற்றுக்கும் அடிப்படையானது 'கற்பித்தல் மொழி' (medium of instruction) ஆகும். மொழியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் படி - எந்த ஒரு இடத்திலும் 'கற்பித்தல் மொழி' என்பது அந்த இடத்தில் பேசப்படும் முதன்மை மொழியாகவே இருக்க வேண்டும்.
குறிப்பாக, பள்ளிக்குழந்தைகள் 6 முதல் 8 ஆண்டுகள் முதல் மொழியில் நன்றாகக் கற்றுத் தேர வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், முதல் மொழியை முழுமையாகக் கற்றுத்தரும் முன்பாக இரண்டாவது மொழியைக் கற்றுத்தரக் கூடாது. முதன் மொழியில் கற்றுத்தேர்ந்த ஒரு குழந்தைக்கு அந்த முதல் மொழியின் மூலமாக இரண்டாம் மொழியைக் கற்றுத்தர வேண்டும்.

இதனை தமிழ்நாட்டு சூழலில் பார்த்தால் - தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழை மிகத் தெளிவாக கற்றுத்தந்த பின்னரே, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுத்தர வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த எல்லா பாடங்களும் தமிழ் வழியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும்.

அதாவது, 6 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு வரையில், தமிழ் நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அங்கும் கூட, முதலில் தமிழைக் கற்பிக்கத் தொடங்கி, பின்னர் அந்த தமிழின் மூலமாகவே ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மரத்தின் படத்தைக் காட்டி அதனை Tree என்று குழந்தைக்கு சொல்லித்தரக் கூடாது. மாறாக, மரத்தின் படத்தைக் காட்டி, முதலில் அது 'மரம்' என தமிழில் சொல்லிக் கொடுத்து. பின்னர் தமிழில் 'மரம்' என்பதுதான் ஆங்கிலத்தில் 'Tree' என்று சொல்வதே - சரியாக இரண்டாம் மொழி கற்பித்தல் முறையாகும்.

ஆனால், இந்தியை எதிர்க்கும் வேலி ஆங்கிலம் என்று சொல்லி - பின்னர் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழை ஒழித்து ஆங்கிலத்தை புகுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் முதன் மொழியாக இல்லாமல், ஆங்கிலம்தான் முதல் மொழி என்று ஆக்கிவிட்டார்கள்.

முதன் முதலில் எம்ஜிஆர் இந்த அநீதியை 'மெட்ரிகுலேசன் பள்ளிகள்' என்கிற சதி மூலம் செயலாக்கினார். இப்போது, அரசுப் பள்ளிகளிலும் இந்த அநீதியைப் புகுத்திவிட்டனர்.

மூன்றாம் மொழி இந்தித் திணிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் கட்சிகள், முதல் மொழி தமிழின் அழிவு குறித்து மவுனம் காக்கின்றன.

கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

திமுக - அதிமுக கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நேர்ந்த பெரும் கேடுகளில் முதலாவது கேடு மதுத்திணிப்பு என்றால், இரண்டாவது பெரும் கேடு தமிழ் மொழி அழிப்பாகும்.

தமிழை ஏன் அழித்தார்கள் என்றால் அதற்கும் அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.

தமிழ் நாட்டில் மூன்றுவிதமான குழந்தைகள் உள்ளனர்:
1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்,
2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 
3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியை (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) பேசும் குழந்தைகள்.

பள்ளிகளில் தமிழை முதல் மொழியாகக் கொள்வதால் "1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள்.

ஆனால், தமிழை அழித்து ஆங்கிலத்தை முன்னிறுத்தினால் "2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியைப் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள். ஆனால், வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள் பின் தங்கி விடுவார்கள்.
அதாவது, வீட்டில் தமிழ்பேசும் தமிழ்க் குழந்தைகளுக்கு பள்ளியிலும் தமிழில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும். அதே நேரத்தில் - வீட்டிற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி பேசும் குழந்தைகளுக்கு பள்ளியில் 'தமிழும் ஆங்கிலமும்' ஒப்பீட்டளவில் ஒன்றாகவே இருக்கும். அதுவே, விட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு பள்ளியிலும் ஆங்கிலத்தில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும்.

ஆக, தமிழ் நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளில் நலனுக்காகவே ஆங்கிலம் திணிக்கப்படுகிறது. 

சாதி ரீதியில் பார்த்தால் பெரும்பான்மை சாதியினர் வீட்டில் தமிழ் பேசுகிறவர்களாகவும், சிறுபான்மை சாதியினர் வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பதாலும் - ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை சாதியினரை ஓரங்கட்டவும் இந்த 'ஆங்கிலவழிக் கல்வி முறை' பயன்படுகிறது.

தமிழ் நாட்டில் "வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" எண்ணிக்கைதான் அதிகம் என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர்களில் "வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசும் குழந்தைகளே அதிகம்". அரசியலிலும் இவர்கள்தான் அதிகம். எனவேதான், தமிழ் பேசாதவர்களின் ஆட்சியில் தமிழ் ஒழிக்கப்பட்டுவிட்டது. 

தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் சதியை தமிழர்கள் அறியாமலேயே இருந்துவிட்டார்கள். குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும் தவளையின் கதி தமிழர்களுக்கும் நேர்ந்து விட்டது.

இந்தப் பேராபத்தைக் கண்டு கொந்தளிக்காதவர்கள் - இப்போது இந்தியை எதிர்த்து முழக்கம் இடுகிறார்கள்.
குறிப்பு: பாமகவின் கொள்கை என்ன? 

"தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்நாட்டின் முதல்மொழியான தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். மொழிச்சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ள வழிசெய்யப்பட வேண்டும்" (பாமக கொள்கை ஆவணம் - புதிய அரசியல் புதிய நம்பிக்கை, பக்கம் 82)

சனி, ஜூன் 14, 2014

பெங்களூரில் மாபெரும் வன்னியர் திருவிழா: அறியாத தகவல்கள்!

பெங்களூரு நகரின் தர்மராயா சுவாமி ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கரகா திருவிழா ஒரு வன்னியர் திருவிழா ஆகும்.

பெங்களூரு நகரிலும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகமாக வாழும் வன்னியர்கள் இத்திருவிழாவினை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்துகின்றனர்.

கர்நாடக வன்னியர்கள்

கர்நாடக மாநிலத்தில் வன்னியர்கள் 'திகளர்' என்று அழைக்கப்படுகின்றனர். அக்னிகுல சத்திரியர்கள், சம்புகுல சத்திரியர்கள், வன்னிய குல சத்திரியர்கள் என வேறுபட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் தமிழ் கலந்த கன்னடம் மற்றும் கன்னட மொழிபேசும் மக்களாக அங்கு வாழ்கின்றனர். கர்நாடக அரசு வன்னிய சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. (கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை வன்னியர்கள் வாழக்கூடும் எனக் கருதப்படுகிறது).

கர்நாடக மாநிலத்தில் வாழும் கணிசமான வன்னியர்கள் அம்மாநிலத்திலேயே நெடுங்காலமாக வாழ்கின்றனர். பெரும்பகுதியினர் பிற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு சென்றவர்கள்.
கர்நாடக திகளர் வன்னியர் அக்னி கலச சின்னம்
பெங்களூரை நகரை நிர்மானித்த கெம்பே கௌடா - காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட வன்னிய குல சத்திரியர் என்று கருதப்படுகிறது. அவர் முதன்முதல் உருவாக்கிய கோட்டை பகுதியில் இப்போதும் வன்னியர்களே அதிக அளவில் வசிக்கின்றனர். அப்பகுதி திகளர் பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.

கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் படையெடுப்பு காலத்தில், முதன்முதலில் கன்னடப் பகுதிக்கு சென்ற வன்னியர்கள் அங்கேயே தங்கினர் என்றும், அதற்கு அடுத்ததாக விஜயநகரப் பேரரசு காலத்தின் வன்னியர்கள் கன்னட நாட்டிற்கு சென்றனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹைதர் அலி ஆர்க்காட்டின் மீது படையெடுத்த போது, பகலில் எங்குமே எதிரிப்படையினர் இல்லாத நிலையிலும், இரவுகளில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் இவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்த போது - பகலில் விவசாயிகளாக இருந்த வன்னியர்கள் இரவில் போராளிகளாக மாறி தாக்குதல் நடத்துவதைக் கண்டு அவர்களையும் தனது படையில் சேர்த்துக்கொண்டார். இவர்கள் மூன்றாவதாக பெங்களூரில் குடியேறிய பிரிவினர் ஆகும்.

இவ்வாறு பல்வேறு காலங்களில் கன்னட நாட்டில் குடியேறிய வன்னியர்களே இன்று பெங்களூரு கரகத் திருவிழாவை நடத்துகின்றனர் (காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏ. நரேந்திர பாபு, பெங்களூர் மாநகரின் முன்னாள் மேயர் ரமேஷ் உள்ளிட்டோர் கர்நாடக வன்னியப் பிரமுகர்கள் ஆகும்)

பெங்களூர் திருவிழா

கரகா திருவிழா என்பது, பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் 'திரௌபதி ஆலயத்தில்' சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் நடக்கும் திருவிழா ஆகும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. அதனைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.
'ஆண்டில் ஒருமுறை உங்கள் முன் தோன்றுவேன்' என திரௌபதி வன்னியர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, திரௌபதி அம்மன் கரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது இதன் ஐதீகம் ஆகும்.

கடுமையான விரதம் இருந்து இந்த கரகத்தை தூக்கும் கடமையை மூன்று வன்னியக் குடும்பத்தினர் பரம்பரையாக மேற்கொள்கின்றனர். இந்தக் கரகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரக் குமாரர்களாக ஒவ்வொரு வன்னியக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் வீதம், வீரக்குமாரர்கள் விரவாளுடன் பங்கேற்கின்றனர்.

(இத்திருவிழாவில் வீரக் குமாரர்களாக வன்னியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு வன்னியர் குடும்பத்தினரும் வீரக் குமாரர்களின் வீரவாளினை தமது குடும்ப பாரம்பரியமாக கொண்டுள்ளனர். ஆங்கிலேயேர்கள் நூறாண்டுக்கு முன்னரே இந்த வாளுக்கு ஆயுதத் தடைச்சட்டத்திலிருந்து விலக்களித்துள்ளனர்)

திருவிழாவின் முக்கிய நாட்கள்

1. கரகா திருவிழா போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த வன்னியக் குடும்பத்தினர் கோவிலில் கொடியேற்றுவதில் தொடங்குகிறது. அப்போது விழாவில் தொடர்புடைய வீரக்குமார்கள் உள்ளிட்டோர் காப்பு கட்டிக்கொள்கின்றனர்.

2. அடுதாக 'மடிவந்திகா' எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அன்றுமுதல் திருவிழாக்காலமான ஒன்பது நாட்களுக்கு வன்னியர்கள் வீட்டை தூய்மையாக பராமரிக்க வேண்டும். புது மட்பாண்டங்களில் சமைக்க வேண்டும், இலையில் சாப்பிட வேண்டும் என்பது மரபாகும்.

3. புண்ணிய சேவா என்பது கரகத்தை தூக்குவோர் குறிப்பிட்ட நீர்நிலைகளில் குளிப்பதாகும்.

4. திருவிழாவின் ஆறாம் நாளில், போதிராஜ சிலையும் திரிசூலமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நாளில் வீரக்கலைகளை வன்னியர்கள் நிகழ்த்திக்காட்ட வேண்டும். தங்களது போர் ஆயுதங்களை கோவிலில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பது மரபாகும்.
வீரவாள் காட்சிக்கு வைத்தல்
இதே நாளில் அரிசியும் வெல்லமும் கொண்ட பாத்திரங்களை மல்லிகை கனகாம்பரம் கொண்டு அலங்காரம் செய்து, வன்னியப் பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
5. ஏழாம் நாளில் ஹசி கரகா எனும் திருவிழா கொண்டடப்படுகிறது. பெங்களூருவின் புராதானமான சம்பங்கி குளத்தில் கரகம் பூசை செய்யப்படுகிறது. பின்னர் ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வன்னிய வீரக்குமாரர்கள் தங்களது வாளால் நெஞ்சில் அடித்து வழிபடுகின்றனர்.

6. எட்டாம் நாளில் வன்னியப் பெண்கள் கோவிலுக்குள் பொங்கல் அவைத்து வழிபடுகின்றனர். கோபம் கொண்ட திரௌபதி அம்மனுக்கு பொங்கல் வைத்து சாந்தப்படுத்தும் விழா இதுவாகும். இரவில் மகாபாரதக் கதை படிக்கப்படுகிறது.

7. ஒன்பதாம் நாள், சித்திரைப் பௌர்ணமி நாளாகும். இதுதான் திருவிழாவின் முக்கிய நாள். இந்த நாளில் கரகம் ஊருவலமாக பெங்களூரு நகரின் முதன்மைப் பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.

பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் இந்த கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.
இஸ்லாமிய தர்காவில் கரகம் 
கரகத்தை சுமப்பவர் இரவு முழுவதும் பல மணி நேரம், கரகத்தை கையால் தொடாமலும், கரகத்தை கீழே வைக்காமலும் நடனம் ஆடியபடி வெறும் தலையில் சுமந்து எடுத்துச் செல்கிறர் (நூறாண்டுகளுக்கு மேலான வரலாற்றில் ஒருமுறைக் கூட கரகம் கீழே வைக்கப்பட்டது இல்லை). கரகத்துக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான வன்னிய வீரக்குமாரர்கள் வீரவாளுடன் செல்கின்றனர்.

8. பத்தாம் நாள் காவு சேவை எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முதல் நாள் இரவே போதிராஜாவின் புராண வரலாறு, வீரக்கதையாக படிக்கப்படுகிறது. விடியும் நேரத்தில் போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த இரண்டு வன்னியர்கள் போதிராஜாவாக வேடமிட்டு - கருப்பு அட்டை பலியிடுகின்றனர்.

9. பதினோராம் நாள் விழாவின் இறுதிநாளாகும். வசந்தவிழா என்கிற பெயரில் இந்த நாளில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

போதிராஜாவின் கதை

ஏழு சுத்துக் கோட்டை எனும் கோட்டைக்கட்டி அரசாட்சி செய்யும் போதிராஜா தனது வலிமையை நிரூபிக்க 101 அரசர்களை யாகத்தில் பலியிடத் திட்டமிடுகிறார். 100 அரசர்களை சிறைபிடித்து 101 ஆவது அரசனுக்காக காத்திருக்கும் நிலையில், தலைமறைவாக வாழும் பஞ்ச பாண்டவர்களில் பீமனை 101 ஆவது ஆளாக கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

இதனை அறிந்த கிருஷணன் - அர்ஜுனனை குறவங்கி எனும் பெண் வேடமிட்டு, போதி ராஜாவிடம் அனுப்புகிறார். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கும் போதிராஜா, அவளை திருமணம் செய்ய விரும்புகிறார்.
போதிராஜா கதைநாடகத்தில் போதிராஜா பரம்பரையினர் at Mulabagilu
இதற்கு சிவபக்தனும் சைவனும் ஆகிய போதிராஜா, மாமிசம் உண்ண வேண்டும். சிறையில் இருக்கும் அரசர்களை விடுவிக்க வேண்டும் என கிருஷ்ணன் நிபந்தனை விதிக்கிறான். இதனை ஏற்று ஆட்டு மாமிசத்தை புசித்து, சிறைவைக்கப்பட்ட மன்னர்களையும் போதிராஜா விடுவிக்கிறார். இதற்கு மாற்றாக, பஞ்சபாண்டவர்களின் சகோதரியான சங்கவள்ளியை போதிராஜாவுக்கு மணமுடிக்கின்றனர். மகாபாரதப் போரில் போதிராஜா பாண்டவர்களின் படைக்கு தலைமையேற்கிறார். இந்த கதைதான் பத்தாம் நாள் திருவிழா ஆகும்.

ஏழு சுத்தின கோட்டை எனும் ஒரு பழமையான கோட்டை தர்மராயா கோவிலுக்கு அருகில் இருக்கிறது. பெங்களூருவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சித்தரதுர்காவிலும் ஒரு ஏழு சுத்தின கோட்டை இருக்கிறது

(வன்னியர்களிடையே பாரதம் படிக்கும் கதையை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பரப்பிய நரசிம்மவர்ம பல்லவனும், அவரது தந்தை மகேந்திரவர்ம பல்லவனும் - மாமல்லபுரம் கல்வெட்டுகளில் 'நரசிம்மவர்ம பொதிராஜன் , மகேந்திரவர்ம போதிராஜன்' என்று குறிப்பிடப்படுகின்றனர். தமிழ்நாட்டின் எல்லா திரௌபதி அம்மன் ஆலையத் திருவிழாவிலும் போதிராஜன் வம்சத்தை சேர்ந்தோர் என சில வன்னியக் குடும்பங்கள் பரம்பரையாக பங்கேற்க்கின்றனர்) 

கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா

'கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகா சபா' மாநாடு பிப்ரவரி 2014 இல் நடந்தது. கர்நாடக மாநில முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அனைதுக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பங்கேற்றார்.
கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்
தர்மராயா சுவாமி ஆலயத்தில் இருந்து மாநாட்டு மேடைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இம்மாநாட்டில், வன்னியர்களின் பெங்களூர் கரகா விழாவுக்கு கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோரும் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் சீத்தாராமய்யா தெரிவித்தார்.

மறைக்கப்படாத வன்னியர் வரலாறு

தமிழ் நாட்டில், சாதி அடிப்படையிலான வரலாற்று அடையாளங்களை அழிப்பதன் மூலம், தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்துவிட்டனர். இதற்கு மாறாக, கன்னட தேசியத்தை ஓங்கி உயர்த்தும் கர்நாடக மாநிலத்தவர்கள் - ஒவ்வொரு சாதியின் அடையாளத்தையும் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

அந்த வகையில், பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக வன்னியர்களின் திரௌபதி அம்மன் கரகத் திருவிழாவை அங்கீகரித்து, முக்கியத்துவம் அளித்துள்ளனர் (Bangalore's most important and oldest festival called "Karaga Shaktyotsava" or Bengalooru Karaga). மேலும், இதன் எல்லா உரிமைகளும் வன்னியர்களுடையவை என்பதையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
பெங்களூருவின் பெருமை
அதுமட்டுமல்லாம, கர்நாடக ஊடகங்கள், இதனை வன்னியர் திருவிழா என வெளிப்படையாக அறிவித்து, இதனை பெங்களூருவின் முதன்மை விழா என்றும் கொண்டாடுகின்றனர் (இதுவே தமிழ் நாடாக இருந்திருந்தால் - இதனை ஒரேயடியாக மூடி மறைத்திருப்பார்கள்)

கீழே உள்ள பெங்களூரு கரகா காணொலியில், இத்திருவிழா ஒரு வன்னியத் திருவிழா என TV9 தொலைக்காட்சி அறிவித்து, அதனைக் கொண்டாடுவதைக் காண்க:

வன்னியர்கள் குறித்து: 10: 25 / 12: 25 / 17: 10 / 20: 40 / 21: 30 ஆகிய மணித்துளிகளில் காண்க. வீரக்குமாரர்கள் குறித்து: 14: 20 மணித்துளியில் காண்க.

காணொலியில் கரகா திருவிழா
http://youtu.be/WyOXuH1RFRw


குறிப்பு: பெங்களூருவில் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பல்வேறு நகரங்களிலும் வன்னியர்கள் கரகா திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக Hoskote, Shanthinagar, Anaekallu, Maluru, Kolar, Vijaypura, Devanahalli, Yelehanka , Mulabagilu ஆகிய நகரங்களில் வன்னியர்களால் கரகா திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA

2. வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

3. விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!