Pages

வெள்ளி, ஜூலை 25, 2014

மருத்துவர் அய்யா 75: வாழ்விக்க வந்த மகான்

ஐநூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வன்னியப் பேரினத்தை - வாழ்விக்க வந்த மகான் மருத்துவர் அய்யா. அவரது 75 ஆம் பிறந்தநாள் இன்று. 

வன்னியர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டின் ஒவ்வொரு வகுப்பினரும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என உழைப்பவர் அவர்.

  • இந்தியத் தலைவர்களில், ஒருநாளும் ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன் என பதவி பற்றற்று வாழும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே.
  • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடைப் பெற்றுத்தருவேன் எனப் போராடி, தனது வாழ்நாளிலேயே அந்த சாதனையைப் படைத்தவர் அவர் மட்டுமே. வன்னியர் உள்ளிட்ட 108 சாதியினருக்கான MBC இட ஒதுக்கீட்டால், இன்று பலன் பெறுவோர் பல ஆயிரம் பேர்.
  • வன்னியர்களை விட தாழ்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்ததால் - பா.ம.க'வுக்கு அதிகாரம் கிடைத்தால், அதை தாழ்த்தப்பட்டவருக்கு அளிப்போம் என அறிவித்து, பா.ம.க'வின் "முதல்" மத்திய அமைச்சராக தாழ்த்தப்பட்டவரையே அமரச் செய்தார் மருத்துவர் அய்யா.
  • 1980 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை தொடங்கியது முதல், இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஓயாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார் மருத்துவர் அய்யா.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கான ஒரு மாபெரும் பேறு, அதுவே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தக் காலத்தில் வன்னியர்கள் ஒரு பேரினமாக, அதிகாரம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். ஆனால், அதன் பின்னார் தொடர்ச்சியாக வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வந்தனர்.
  • வலங்கை - இடங்கை சாதி மோதல்களில் நியாயம் பேசியதால், எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் பகைக்கப்பட்டனர். 
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வன்னியர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. 
  • ஆங்கிலேயர் ஆட்சியின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - சத்திரிய சாதியினரான வன்னியர்களை, தாழ்த்தப்பட்ட சாதி என ஒடுக்கும் முயற்சிகள் நடந்தன.
  • இந்திய சுதந்திரப் போராட்டமும், திராவிட இயக்க அரசியலும் - வன்னியர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பயன்படுத்திக்கொண்டன. மற்றவர்கள் புகழுக்கும் அதிகாரத்துக்கும் வன்னியர்கள் உரமாகினர்.
இன்றைய வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் வளமாக இல்லை. இங்கு வாழும் இதர சமூகத்தவரின் வசதிக்கும் வளத்துக்கும் உழைத்த சமூகமாகவே வன்னியர்கள் இருக்கின்றனர். ஆயிரம் வன்னியர் குடும்பங்கள் வசிக்கும் ஊரில், ஐந்து குடும்பம் மட்டுமே உள்ள மாற்று சாதியினர் வசதி படைத்தவர்களாக வாழ்வதின் ரகசியம் - வன்னியர்களின் உழைப்புதான்.

சுதந்திரப் போராட்டத்தில் வன்னியர்கள் தலைமை தாங்கவில்லை. திராவிட இயக்கத்தில் வன்னியர்கள் தலைமை இல்லை. தனித்தமிழ் இயக்கத்திலோ, தமிழ்த்தேசியப் போராட்டத்திலோ வன்னியத் தலைமை இல்லை. 

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் தலைமை இடத்தில் வன்னியர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை. அதிகாரப் பதிவிகள், பொருளாதார வளம் எதிலும் வன்னியர்கள் உரிய இடத்தில் இல்லை.

வன்னியர்கள் அதிகாரமிழந்த நிலையில் வாழ்வதற்கு வன்னியர்கள் காரணம் இல்லை. மாறாக, வன்னியர்களுக்கு எதிராக இங்கு நிலைவும் இனவெறி மனநோய் - வன்னியஃபோபியா - தான் காரணம். (காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA)

வீழ்ச்சிநிலையில் இருந்து வன்னிய சமூகத்தை மீட்கும் முயற்சிகள் 1880 களிலும், 1950 களிலும் நடந்தாலும் - அவையெல்லாம் ஒரு அளவுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.

- இந்த ஐநூறு ஆண்டுகால வன்னியர் வீழ்ச்சிக்குப் பின்னர், வன்னியர்களின் முதல் எழுச்சியை உருவாக்கிக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள். 

அவரது வழியில் - முழு வெற்றியை அடைய, அய்யாவின் 75 ஆம் ஆண்டில் உறுதி ஏற்போம்.
பசுமைத் தாயகம் நாள் 2001 - மரம் வளர்க்கும் விழா (நீலச் சட்டையில் இருப்பது (!) நான் தான்!)
குறிப்பு: வன்னியர்களே தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூகம். வன்னியர் சமூகம் வளர்ச்சி அடையாதவரை, தமிழ் நாடு வளர வாய்ப்பே இல்லை. எனவே, தமிழ்நாடு முன்னேற வேண்டும் - என விரும்புகிறவர் எவராக இருந்தாலும், அவர்கள் வன்னியர்களின் வளர்ச்சியை, அதாவது வன்னியர்களின் வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

அதே போன்று, ஒவ்வொரு சமூகமும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான விகிதாச்சார பங்கினை எல்லா நிலைகளிலும் அடைவதே தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

1 கருத்து:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

இந்த ஜென்மத்தில் வன்னிய இனத்தில் பிற்ந்த பேற்றை பெருமையை வரலாறு நமக்கு கொடுத்ததோ அது நமக்கு தெரியாது நாமும் பார்க்க வில்லை ஆனால் வாழும் வரலாறு வராது வந்து தோன்றிய மாமணியாக நமது இன காவலர் மருத்துவர் அவர்கள் தோன்றி வாழும் காலத்தில் நாமும் வாழுவதை பெரிய பாக்கியமாக கருதும் பெரிய அதிர்ஷ்டகாரர்கள் நாம் என்பதில் எந்தவித அய்யமில்லை!

வாழ்த்த வயதில்லை ஆதலால் பொற்ப்பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம்!! வாழ வையுஙக்ள் வன்னிய இனத்தை அனைத்தையும் கொண்ட இனமாக....!! நீங்கள் கைகாட்டும் இடத்தில் உங்களது வன்னியபோர்ப்படை வந்து நிற்க்கும்.. உத்தரவிடுங்கள் அதை செய்துமுடிக்க கோடான கோடி இளைஞர்கள் காத்துகிடக்கின்றார்கள்..!!

வாழ்க மருத்துவர் அய்யா!! வளர்க வன்னியப்பேரினம்!!