இலங்கையின் மீது விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவில் 3 புகழ்பெற்ற வல்லுநர்கள் பங்கேற்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கை போரில் இரு தரப்புகளாலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழு 10 மாதங்கள் செயல்படும்.
- பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அடிசாரி,
- நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட்,
- பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய தலைவர் அஸ்மா ஜகாங்கீர்
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கை போரில் இரு தரப்புகளாலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழு 10 மாதங்கள் செயல்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக