Pages

ஞாயிறு, ஜூன் 08, 2014

ஐநா மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர்

தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அடுத்ததாக - இஸ்லாமியரான ஜோர்டன் இளவரசர் செயித் பின் ராத் (Prince Zeid Ra’ad Zeid Al-Hussein) ஐநா மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக (High Commissioner for Human Rights) பொறுப்பேற்க உள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் பன்னாட்டு சட்டங்களின் செயல்பாட்டை வலியுறுத்துபவராகவும் இனப்படுகொலையை கடுமையாக எதிர்ப்பவராகவும் இவர் அறியப்பட்டிருக்கிறார்.

இளவரசர் செயித் பின் ராத் போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவக் காரணமானவர்களில் ஒருவரும், அதன் முதல் நிருவாகக் குழுத் தலைவராக இருந்தவரும் ஆவார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச நெறிமுறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஐநா படைகளின் பாலியல் குற்றங்கள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவிற்கும் இவர் தலைமை யேற்றிருக்கிறார்.

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இவர் ஐநா அவை நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு யூகோசுலோவியா நாட்டின் இனப்படுகொலை தொடர்பான ஐநா அமைதிப்படையில் பணியாற்றியுள்ளார்.

ஐநா நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட 'இளவரசர் செயித் பின் ராத்' ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கதே.
குறிப்பு: ஐநா மனித உரிமை ஆணையர் (United Nations High Commissioner for Human Rights -OHCHR) என்பது உலகளாவிய மனித உரிமைக்கான தலைமைப் பதவி. 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஐநா மனித உரிமைப் பேரவை (United Nations Human Rights Council -UNHRC) என்பது இவருக்கு உத்தரவிடக் கூடிய நாடாளுமன்றம் போன்ற ஒரு அரசியல் அமைப்பாகும். அதில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல.

கருத்துகள் இல்லை: