"பாட்டு ரசிகன்" எனும் வலைப்பூவில் "மானங்கெட்ட ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கில் நடந்த உண்மை சம்பவம்..!" என்று ஒரு பதிவு பின்வருமாறு கூறுகிறது:
"ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம். பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க், வியட்னாம் நாட்டிலிருந்து...அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர்" - என்று கூறுகிறது.
பின்னர் "அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?" என்று பேசுகிறது.
இந்தப் பதிவு யாரைக் குற்றம் சாட்டுகிறது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். எனவே, இந்த கோயபல்ஸ் பிரச்சாரகருக்கு எனது பதில்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் திருமணம் காதல் நாடகம் அல்ல - அது பதின்வயது திருமணமும் அல்ல.
மேலே, "நான் உங்க வீட்டு பிள்ளை" எனும் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது போன்று மணமகளின் வயது 18 அல்ல. மார்க் ஜுக்கர்பெர்க் திருமணம் செய்யும் போது அவரது வயது 28, அவரது காதலி பிரிஸ்கில்லா சானின் வயது 27. (இருபத்தேழு வயது மணப்பெண்ணை, 18 வயது என்று குறிப்பிடும் கேடுகெட்ட நிலை இந்தப் பதிவருக்கு ஏன் வந்தது?)
இதுபோன்ற - 21 வயதுக்கு மேற்பட்ட காதல் திருமணங்களை இவர்கள் குறிப்பிடும் அமைப்புகள் எதிர்க்கவில்லை. மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் தீர்மானத்திலேயே இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறிருக்கும் போது - ஏதோ சாதிவெறியில் கலப்புத்திருமணங்களை எதிர்க்கிறார்கள் என்று மற்றவர்களை இட்டுக்கட்டிப்பேசும் இந்த உண்மையான சாதி வெறியர்களை என்ன சொல்வது?
இந்தக் கூட்டத்திற்கு துணிச்சல் இருந்தால் - கலப்புத்திருமணங்களை உண்மையாகவே எதிர்க்கும் மதவாதிகளைக் கேள்வி கேட்டுப்பார்க்கட்டும்.
1 கருத்து:
21 வயதுக்கு முன் குடும்பம் நடத்தத் தேவையான முதிர்ச்சி இருக்காது என்ற புரிதலில் அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று ஊகிக்கிறேன்.
சரி, அப்படியாயின் பாமகவிலோ / வன்னியர் சங்கத்திலோ உள்ளவர்கள் தங்கள் (பெண்) பிள்ளைகளை 21 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்கக்கூடாது என விதிகள் ஏதாவது இயற்றியிருக்கிறீர்களா என தெரிந்து கொள்ள ஆசை...
கருத்துரையிடுக