Pages

செவ்வாய், மே 07, 2013

மரக்காணம் படுகொலை: இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்!

மரக்காணத்தில் ஒரு கலவர நிகழ்வு நடந்துவுடனேயே, இதுகுறித்து 'இந்தியா டுடே ஒரு கவர்ஸ்டோரி வெளியிடும், அதைக்கூட கவின்மலர் என்பவர்தான் எழுதுவார்' என நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்தது போல கவர்ஸ்டோரி வெளியாகவில்லை, ஆனாலும் சிறப்புக் கட்டுரை என்கிற வடிவில் அதனை எழுதியிருந்தார் கவின்மலர்.

"முழுநிலவு நாளில் சாதிய கிரகணம்" என மூன்று பக்கம் விரியும் இந்த 'சிறப்பு' கட்டுரையில் 7 குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அது குறித்து மிக விரிவாக வர்ணனை செய்துள்ளார் கவின்மலர். 7 குடிசைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நிழற்படம், அவர்களின் நேர்காணல் என நீள்கிறது அந்தக் கட்டுரை. அப்புறம் 'பணத்தைக் காணோம், நகையைக் காணோம்' என்கிற 'ரெடிமேட்' செய்திகளும் உண்டு.
விவேக் 
குமபகோணம் விவேக் படுகொலை
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவரது சாதி மதத்தைப் பார்க்காமல், அவர்களின் இழப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சரியான ஊடக தருமமாக இருக்க முடியும். அந்த வகையில் தலித் மக்களின் பாதிப்புகளை விரிவாக பதிவு செய்துள்ள இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் நன்றி.

அப்புறம், இந்த மோதலின் மற்றொரு தரப்பான, வன்னியர்கள் தரப்பில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒன்று கொலை என்றும், மற்றொன்று விபத்து என்றும் காவல்துறை கூறுகிறது. மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளனர். வன்னியர்களின் எதிர் பிரிவினரால் தாக்கப்பட்டவர்களில் படுகாயமடைந்தவர்கள் பலர் கடலூர், நாகை, அரியலூர், சேலம் மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுமார் 500 வாகனங்கள் வன்னியர்களின் எதிர் பிரிவினராலும், காவல்துறையினராலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இப்படி அதிக பதிப்புகள் வன்னியர்கள் தரப்பில் இருக்கும் நிலையில் 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
தீக்குளித்து இறந்த திருவண்ணாமல பாண்டியன்
எனவே, மரக்காணத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிய மருத்துவர் இராமதாசு அவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்படியாக - வன்னியர் தரப்பில் இரண்டு உயிர்ப்பலி, மூன்று பேருக்கு துப்பாக்கிச் சூடு, பலர் படுகாயம், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம், 1512 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், இதற்கெல்லாம் நீதிகேட்டு போராடிய மருத்துவர் இராமதாசு என பத்திரிகைகளில் வெளியிடத் தகுதியான பல நியாயங்கள் உள்ளன.

ஆனாலும், தனது மூன்று பக்க கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் - அதாவது 7 குடிசைகள் எரிந்தன - என்பதை மட்டுமே வளைத்து வளைத்து மிகக் கவனமாக எழுதியுள்ளார் கவின்மலர். வன்னியர் தரப்பின் வாதங்களை முற்றிலுமாக குழிதோண்டி புதைத்துள்ளார் கவின்மலர்.

இந்திய பத்திரிகை கவுன்சிலின் நன்னடத்தை நெறிகளில் (Press Council: NORMS OF JOURNALISTIC CONDUCT) மிக முதன்மையானது "துல்லியம் மற்றும் நியாயம்" (Accuracy  and Fairness) என்பதாகும். அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வின் எல்லா பக்க நியாயமும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பது முதன்மையாகும். (All sides of the core issue or subject should be reported).

துல்லியம் மற்றும் நியாயம் என்பதையெல்லாம் இந்தியா டுடேவிலும் கவின்மலரிடமும் எதிர்பார்ப்பவன் யாராவது இருந்தால் அவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும்.

அப்புறம் எதற்கு 'இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்'? என்று கேட்கிறீர்களா?

இந்த மூன்று பக்க கட்டுரையில், ஒரே ஒரு வரியில் "வன்னியர்கள் இருவர் விபத்தில் இறந்ததாக முதலில் கூறிய காவல்துறை ஒரு வழக்கை மட்டும் கொலை முயற்சி வழக்காக்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

நீங்களே பாருங்கள்! "இரண்டு வன்னியர்கள் இறந்துள்ளார்கள், அதில் ஒன்று கொலையாகக் கூட இருக்கலாம்" என்று கவின்மலர் கூறியுள்ளாரா இல்லையா? அந்த ஒருவர் கூட 'அவரேதான் வெட்டிக்கொண்டு செத்தார் 'என்று கவின்மலர் தன் மனதில் நினைத்ததை எழுதாமல் தவிர்த்துள்ளாரா இல்லையா?

அதற்காகத்தான் "இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்".
வன்னியருக்கு எதிரான தரப்பினரின் படுகொலைத் தாக்குதலில் காயமடைந்த வன்னியர்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

//இந்திய பத்திரிகை கவுன்சிலின் நன்னடத்தை நெறிகளில் (Press Council: NORMS OF JOURNALISTIC CONDUCT) மிக முதன்மையானது "துல்லியம் மற்றும் நியாயம்" (Accuracy and Fairness) என்பதாகும். அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வின் எல்லா பக்க நியாயமும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பது முதன்மையாகும். (All sides of the core issue or subject should be reported).//

மக்கள் தொலைக்காட்சிக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதோ? பின்னர், இந்த கலவரத்தை பற்றி கூறும் போதெல்லாம், கலவரத்துக்கு முழுக்க முழுக்க விடுதலை சிறுத்தையினர் தான் காரணம் மற்றும் பாதிக்கப் பட்டோர் அனைவரும் வன்னியர்களே என்ற பொருள் பட திரும்ப திரும்ப கூறுகிறதே, உங்கள் வலைப்பூவை போலவே :)

Unknown சொன்னது…

கூடங்குளம் போராட்டத்திற்கு அதரவு: இன்று மருத்துவர் இராமதாசு மீது மேலும் 3 புதிய வழக்குகள். அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான்.

இதுகுறித்து ஒரு காணொலி: http://youtu.be/7wzf1s8pqiU

அருள் சொன்னது…

@kari kalan

மக்கள் தொலைக்காட்சி வன்னியர்களுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்பது ஊரறிந்த ரகசியம். எனவே, அந்த ஊடகம் 'கலவரத்துக்கு காரணம் வி.சி.க்கள்தான்' என்று கூறுவதில் வியப்பேதும் இல்லை. அதுபோல, 'கலவரத்துக்கு வன்னியர்கள் மட்டும்தான் காரணம்" என்று கூறும் தமிழ்நாட்டின் மற்ற ஊடகங்கள் வன்னியர்களுக்கு எதிரானவை என்று நீங்கள் கூறுகிறீர்களா?

Unknown சொன்னது…

எங்கள் மாமனார் ஊரில் ஒரு தனியார் கம்பனி பேருந்து எரிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் ஊரில் உள்ளவர்களை வேட்டையாடுகிறது. பேருந்தை வன்னியர்கள் யாரும் எரிக்கவில்லை. எவரோ அந்த கம்பனியில் ஏற்பட்ட முன்விரோதத்தை தீர்த்துக்கொள்ள எரித்திருக்கிறார்கள். ஆனால் பழி வன்னியர்கள் மீது. என் மாமனார் மூத்த குடிமகன். அவரால் சரியாக நடக்ககூட முடியாது. ஆனாலும் ஊரில் உள்ளவர்களை அவர்கள் பயிர் செய்யும் இடம் வரை சென்று போலீஸ் துரத்துகிறது. ஊரில் 15 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். சில சமயங்களில் சில தைரியமாக எதிர்த்து பேசும் பெண்களையும் போலீஸ் கைது செய்கிறது. ஊரில் உள்ள அனைவரும் பயத்தில் உள்ளனர். விவசாயத்திற்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வாடுகின்றன. நான் சென்னையில் பணிபுரிந்தாலும், என்னையும் கைது செய்வார்கள் என்று பயந்து என் மாமனார் ஊருக்கு செல்ல முடியவில்லை. சுருக்கமாக சொன்னால் போலீஸ் மனித வேட்டையாடுகிறது.

வன்னியன் என்று சொன்னால் மட்டும் 'ஜாதிவெறி' என்று எந்த அகராதியில் உள்ளது என்று தெரியவில்லை.