Pages

Wednesday, August 07, 2013

மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். இதற்கு தடைபோடும் அதிகாரத்தை இயக்குநர் சேரனுக்கு அளித்தது யார்? - இந்தக் கேள்விய எழுப்பாமல் தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் மவுனம் காப்பாது வியப்பளிக்கிறது.

'முற்போக்கு' கூட்டத்தினர் கேட்க மறந்த கேள்விகள்!

உண்மையில் 'முற்போக்கு' கூட்டத்தினர் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்:

"'சந்துரு உண்மையான காதலனா இருந்தா நானே சேர்த்து வைப்பேன்' என்கிறார் இயக்குநர் சேரன். சந்துரு - தாமினியைச் சேர்த்துவைக்க இவர் யார்? இவரிடம் யார் அனுமதி கேட்டது? பதினெட்டு வயது நிரம்பிய பெண் யாரிடமும் அனுமதி கேட்கவே தேவையில்லை.

"சந்துரு கெட்டவன், சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, என்னோட பெரிய பொண்ணுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்" என்கிறார் சேரன். இந்த தகவல்கள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டால் கூட, சந்துரு செய்ததில் என்ன குற்றம் இருக்கிறது?
\
சந்துரு - தாமினி சந்தித்த நிகழ்ச்சி
கெட்டவன் என்பதற்காக அவரைக் காதலிக்கக் கூடாது என்றோ, கெட்டவர்கள் காதலிக்கக் கூடாது என்றோ ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஒரு ஆணுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் - ஒரு பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தாலும் அதையெல்லாம் குற்றம் என்று சொல்லும் உரிமை அவரவர் மனைவிக்கும் கணவனுக்கும்தான் உண்டு.

இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகள் இல்லையா? அதையெல்லாம் அவரவர் வீட்டு பெண்கள் ஏற்பது போல - இந்தப் பெண்ணும் ஏற்றுக்கொண்டால் அதை மற்றவர்கள் கேள்விக் கேட்கமுடியுமா?

'ஒரு பெண்ணைக் காதலித்து அவரது அக்காவுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்' என்றால் - அந்த மெசேஜை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் சேரன் எதற்காகத் தலையிட வேண்டும்?

ஒருவரது மனைவி மட்டுமே தனது கணவன் இன்னொருப் பெண்ணுக்கு 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்புகிறார் என்பதைக் குற்றமாகக் கூற முடியும். அல்லது அந்த மெசேஜை பெறுகிறவர் குற்றம் சாட்டலாம். மற்றவர்கள் எதற்காக இதைக் கேள்விக் கேட்க வேண்டும்?

எனவே, சந்துரு மீது இயக்குநர் சேரன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சட்டப்படி அடிப்படை ஏதுமற்றவை என்பதுதானே உண்மை?"

- இந்தக் கேள்விகளை 'முற்போக்கு' கூட்டத்தினர்  கேட்டிருக்க வேண்டும்.

முற்போக்கு வேடதாரிகள் மவுனம் ஏன்?


சுமார் பத்து நாட்களுக்கு முன்பு 'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.

இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.  
கௌரவக் கொலை தடைச் சட்டம் வரைவு
ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.

'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ளமவுனத்துடன் வேடிக்கைப் பார்க்கின்றனர். ஏன் இந்த இரட்டை வேடம்?

'முற்போக்கு' கூட்டத்தின் இரட்டை வேடம்

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.

இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.

அதுதானே, தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். 

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்! 

"இளவரசன் - திவ்யாவோடு சந்துரு - தாமினியை ஒப்பிடாதீர்கள்" என்று ஜூனியர் விகடன் அழுகுணி ஆட்டம் ஆடுவது போன்று, முற்போக்காளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்கிறவர்கள் இனியும் ஓடி ஒளியக் கூடாது.

சுப. வீரபாண்டியன், ஞானி, தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வரவேண்டும், இயக்கம் கட்ட வேண்டும், போராட வேண்டும், கருத்தரங்குகள், வெளியீடுகள் என 'தாரைத் தப்பட்டை கிழியும் வரை' முழங்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.
 
இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை.

முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களே, உங்கள் அறிவு நாணயத்தை நிரூபியுங்கள்.

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே! நாளில் மறப்பாரடீ

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலந்தனில்-கிளியே! இருக்க நிலைமையுண்டோ?"

குறிப்பு: இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

13 comments:

Unknown said...

ungal kathali, manaiviyidam ithey nikalchi nadanthal, sattam nerimurai paduthvatherkey, unarvukalai thunpurutha alla nanbargale

Unknown said...

if a girl is ur lover, or wife means will you accept based on 18 years concept, rules are to regulate not to criticize others real emotions, but i agree with your words about the girls who are adjustable with their husband (political leaders) who are having more than one wife, but it is form of suppressing female gender.

kamal said...

உருப்படியான செறுப்படி.,.
உன் முதுகை முதுகைகொஞ்சம் திருப்படி...
... வாய்சொல்லில் வீரரடி கிளியே...
கவித்துவ கிளியே வாய்சொல்லில் வீரரடி....

Unknown said...

'ஒரு பெண்ணைக் காதலித்து அவரது அக்காவுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்' என்றால் - அந்த மெசேஜை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் சேரன் எதற்காகத் தலையிட வேண்டும்?



un akka thangachiku evanavathu anupuran ne ketkam irupiya?

kamal said...

manikandan.k. கடடுரையின் அடிநாதமே உள்களின் கோபம்தானே...! சட்ட நிலைபாட்டைத்தானே பேசுகிரார் வஞ்சகப்புகழ்ச்சியனியில்...!

குலசேகரன் said...

பத்திரிக்கைகள் வெளியிட்டதும் அருளின் வலைபதிவில் சொல்லிவருவதும் சேரனின் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே. அவை உண்மையா புரட்டா என்பது விசாரணைக்கப்புறமே தெரியவரும். அப்படியிருக்க சந்துரு மோசம் என்று எப்படி எடுத்துப்பேசுகிறார் என்று தெரியவில்லை.

//un akka thangachiku evanavathu anupuran ne ketkam irupiya?//

மணிகண்டனுக்குப்பதிலாக நானே சொல்கிறேன்.

என அக்காளுக்கோ தங்கைக்கோ ஒருவன் காதல் கடிதம் அனுப்பினால், அதை அவள் எப்படி எடுத்துக்கொள்கிறாள் எனபதைப்பொறுத்தே என் ரீயாக்ஸன். ஒருவேளை அது ஒரு பொறுக்கியிடமிருந்து தன்னைத் துன்புறுத்தவருகிறது என்று அவள் சொன்னால் குடுமபத்தினர் தலையிடலாம்.

அது அவள் விரும்பிய நபரிடமிருந்து அவளுக்கு வருகிறதென்றால், நான் கேட்டால் அது உரிமை மீறல். நாளை அவளே அவனுக்குக் கணவனாகலாம்.

குழந்தைகளைப்பெற்று அன்புகாட்டி வளர்த்தால் போதாது. அவர்களுக்கு சுய சிந்தனையை உருவாக்கும் வழிகளையும் காட்டி உதவவேண்டும்.

அதைச் சேரன் செய்யவில்லை. தன் பெண்ணை எல்லாரும்தான் இறுக்கக்கட்டி முத்தமழை பொழிந்து அன்புகாட்டுவார்கள். ஆனால் அக்குழந்தை பெரியவளாகும்போது அன்பு உதவாது. அறிவுதான் உதவும் சரியான துணையைத்தேர்ந்தெடுக்க என்ற அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள்.

தந்தை க்டனை ஆற்றாமில் விட்டது சேரன்.

அருள் வெறும் சட்டத்தை வைத்து மட்டும் வாழ்க்கை ஓடாது. சட்டத்துக்கு வெளியே வந்து மனிதர்களைப் பாருங்கள்.

குலசேகரன் said...

கமல்!

அவர் வஞ்சப்புகழ்ச்சியில் சொல்லியிருக்கலாம். உண்மையில் அவரெழுப்பிய கேள்விகள் , பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழவேண்டுமென நினைத்து பெண் சுதந்திரத்தை உரிமைகளையும் பேணுவோர் ( அதாவது அருளில் பாஷையில், முற்போக்கு புர்ச்சியாளர்கள்) உண்மையிலே எழுப்ப வேண்டிய கேள்விகள்.

அருளுக்கு அவர்கள் நன்றிதான் சொல்லவேண்டும்.

kamal said...

இருபலரும் பாலுறவுகொள்ள ஈரெட்டுவயதே இருக்கட்டுமென்கிரது திக்கெட்டும் புகழ்பரப்பும் திகழ்பரதச்சட்டம். ஏதோ களிகாலத்தேவை இருந்துதொலையட்டும் தக்கபாலுறவு கொண்டு பிஞ்சு பழுத்தாலென்ன தகாதவுறவுகொண்டு குஞ்சி புழுத்தாலும் அது அவனவன் தனிமனிதச்சுதந்திரம். அப்படியே இளவரசன்-திவ்யா இரண்டுமுரை கருச்சிதைவு செய்திருந்தாலும் யார்தான் கேள்வி கேட்கமுடியும் அவர்களை. இப்போது நம்கேள்வி ஆட்கொனர்வுமனுவுக்காக நேர்நிறுத்திய திவ்யாவை எப்படி கனவன் இளவரசனுடன் அனுப்பாது அவர்களின் தாய் தேன்மொழி வசம் கோர்ட் எப்படி அனுப்பலாம் என்று நல்லகேள்வி. எல்லாம் சரி எங்கே திருமணபதிவுச்சான்று...!

kamal said...

கண்டிப்பாக குலசேகரன் உங்கலுடன் உடன்படுகிரேன், கலவிக்கும், காதலிக்கவுமே வயது இருந்ததேயன்றி கல்யானத்திற்கானச்சட்டவயதில்லையே,..! இல்லை என்றால் இந்த சிறுபிள்ளைகள் விதைத்த விதை வீடுஙராது போயிருகாதே...! அத்தோடு திவ்யாவின் தந்தை பினத்தை தூக்கிச்சென்று மரியலிலும ,கலவரத்தில் ஈடுபட்டதும்- இளவயதுகொண்டவர்களை திருமணம்செய்துவைக்கிரேனென தப்புத்தாளம் போட்டவர்கள் இருவருமே குற்றவாளிகளே.,!

குலசேகரன் said...

//இருபலரும் பாலுறவுகொள்ள ஈரெட்டுவயதே இருக்கட்டுமென்கிரது திக்கெட்டும் புகழ்பரப்பும் திகழ்பரதச்சட்டம்//

Kamal

ஈரெட்டு மணவயது என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை என்று அருள் மீண்டும்மீண்டும் எழுதிவருகிறாரே! படிக்கவில்லையா?

இங்கு நாம் பேசுவது தாமினி-சந்துருவைப்பற்றி.

தமிழைப் பிழையில்லாமல் எழுதவும்.ஈரெட்டு மணவயது என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை என்று அருள் மீண்டும்மீண்டும் எழுதிவருகிறாரே! படிக்கவில்லையா?

இங்கு நாம் பேசுவது தாமினி-சந்துருவைப்பற்றி.

தமிழைப் பிழையில்லாமல் எழுதவும்.

குலசேகரன் said...

//கண்டிப்பாக குலசேகரன் உங்கலுடன் உடன்படுகிரேன், கலவிக்கும், காதலிக்கவுமே வயது இருந்ததேயன்றி கல்யானத்திற்கானச்சட்டவயதில்லையே,..! இல்லை என்றால் இந்த சிறுபிள்ளைகள் விதைத்த விதை வீடுஙராது போயிருகாதே...! அத்தோடு திவ்யாவின் தந்தை பினத்தை தூக்கிச்சென்று மரியலிலும ,கலவரத்தில் ஈடுபட்டதும்- இளவயதுகொண்டவர்களை திருமணம்செய்துவைக்கிரேனென தப்புத்தாளம் போட்டவர்கள் இருவருமே குற்றவாளிகளே.,!//

என்ன எழுதுகிறீர்களென்றே புரியவில்லை. மன்னிக்கவும். தெளிவாக எழுதினால் பதில் சொல்லலாம்.

திவ்யா- இளவரசன் கதை முடிந்த கதை. தாமினி-சந்துருவைப்பற்றிப்பேசவும். தெளிவாக. தமிழ்ப்பிழைகளில்லாமல். நன்றி.

kamal said...

குலசேகரன். தாமினி-சந்ரு விசயத்திற்கே வருவோம். திருமண சட்ட வயதுவந்த மனத்திளிவுகொண்ட இணைகள் இணைவதிள் யாரும் குருக்கே நிற்கமுடியாது நிற்கவும்கூடாது மனத்தெளிஇல்லை என்றால் காப்பகத்துக்கு அனுப்பி மனநல மருத்துவர் ஆய்வுசெய்து உடல்நலம் சரிஇல்லாது உள்ளநலம் சரியாக இருந்தாலே சேர, சோழ , பாண்டியர் யாரும் குருக்கே நிற்கமுடியாது. அதேவேலையில் இவர்கள்கூறுவதுபோல் சந்ருவால் ஏமாற்றப்பட்டவர் வந்து சந்ருமீது குற்றம் சுமத்தினாலன்றி சந்ரு நிரபராதியே. சந்ரு இவர்கள் சொல்வதுமாதிரியே ஏமாற்றுபேர்வழியாக இருநிதாலும் யாமினிஏற்றுக்கொண்டால் இவர்கள் எங்கேபோவார்கள்

kamal said...

//*அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். *// அப்டியெல்லாம் நீங்கள் சொல்வதுமாதிரி யாருக்கும் கருணைகாட்டமுடியாது!, சட்டம் தெரியாதென்பதற்காக சட்டத்தில் இருந்தும் அதன் நடவடிக்கைகளில்லிருந்து தப்பித்துக்கொல்ல முடியாதென்பது நீங்கள் அறியாததல்ல. முப்பதென்றாலும்-முன்னூறென்றாலும் சட்டம் அது தன் கடமையைதான்செய்யும். மடமையைச்செய்யாது அவரவர் விருப்பு வெருப்புக்கு வளைந்துகொடுத்து!.