Pages

Saturday, April 16, 2011

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

அண்மை விவரங்களை இங்கே காண்க: உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.


(இது TIME வாக்கெடுப்பு அல்ல)

ஐ.நா அவையால் அமைக்கப்பட்ட நிபுணர்குழு அளித்த அறிக்கை ராசபட்சேவை போர்க்குற்றவாளியாக்க போதுமானதாக இருப்பதாக ஊடகச் செய்திகள் அறிவிக்கின்றன. எனினும் 2011 ஏப்ரல் 12 அன்று ஐ.நா. பொதுச்செயலாளரிடம் கையளிக்கப்பட்ட அந்த அறிக்கை இதுவரை பகிரங்கமாக்கப் படவில்லை.

தற்சமயம் இலங்கை ஊடகம் ஒன்றில் கசியவிடப்பட்டுள்ள நிபுணர்குழு  அறிக்கையின் பகுதிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன (அவை உண்மையாக இருக்குமானால்). 1. அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் மூலம் கொன்றொழித்தது. 2. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது, 3. மனிதாபிமான சேவைகளை மறுத்தது, 4. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் சரணடைந்த போராளிகளை சித்திரவதை மற்றும் கொலை செய்தது, 5. போர்நடந்த பகுதிக்கு வெளியேயும், பத்திரிகையாளர் உள்ளிட்டோர் மீதான மனித உரிமை மீறல்கள் - ஆகிய குற்றங்களை ஐ.நா. நிபுணர் குழுவினர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

இக்குற்றங்கள் அனைத்தும் பன்னாட்டு சட்டங்களின் கீழ், போர் குற்றங்களாகவும் (war crimes), மனித குலத்திற்கு எதிரான கொடும் குற்றங்களாகவும் (crimes against humanity) கருதப்படக்கூடியவை. இவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) விசாரித்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.

இக்குழுவின் பரிந்துரைகளில் "ஐ.நா.அவை இலங்கையில் ஒரு பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்பது முக்கியமானதாகும்.

கசியவிடப்பட்ட நிபுணர்குழு அறிக்கை பகுதியை இங்கே காணலாம்.

"போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்" எனும் எனது முந்தைய பதிவில் 2009 ஆம் ஆண்டில் நடந்த இலங்கை குறித்த ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அதில்: ""ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் மொத்தமுள்ள 46 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. 17 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 7 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மொத்தத்தில், இலங்கை அரசு தற்காலிகமாக தப்பித்தாலும், சர்வதேச அரங்கில் அவமானப்பட்டது. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே, இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய பன்னாட்டு நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது" என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது நிபுணர் குழுவின் பரிந்துரையில் "ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு மீண்டும் கூட்டப்பட்டு இலங்கைக்கு ஆதரவான நிலை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் இந்தியாவின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும்.

அதற்காக உடனே செயல்படுங்கள்:

பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்


(நீங்கள் நடவடிக்கை எடுப்பின் அதனை எனக்கு தெரிவியுங்கள். நன்றி)
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை அனுப்புங்கள். சமூக வலைதளங்களின் பரப்புங்கள்

17 comments:

ஆறாம்பூதம் said...

மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். இச் சமயமே தமிழர் ராஜதந்திரத்துடனும், வேகத்துடனும் செயலாற்றவேண்டியது.

ஆறாம்பூதம் said...

மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். தொடரட்டும் உங்கள் பணி.

ஆறாம்பூதம் said...

அனுப்பிவிட்டேன். தொடரட்டும்

Anonymous said...

தகவலுக்கு நனறிகள் ! நானும் எனது நண்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பும் படி கூறிவிட்டேன். முடிந்தால் ட்விட்டரிலும் ஒரு ஹாஷ்டாக் உண்டுப் பண்ணி ராஜபக்ஷவுக்கு எதிராக தோழர்களை திரட்டலாம்...

சசிகுமார் said...

தகவலுக்கு நன்றி நானும் அனுப்புகிறேன் என் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

ஈழம் குறித்த உங்கள் தனிப்பட்ட உழைப்புக்கும்,முயற்சிக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

Just for record my mail no is 1512.

Unknown said...

மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்..தங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்க்கும் வாழ்த்துக்கள்..

ஹேமா said...

நன்றி உங்களுக்கு.மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

Sir,
Noted. I will act accordingly & I will forward this to my friends also. Thank you for your efforts.

Unknown said...

//தகவலுக்கு நன்றி நானும் அனுப்புகிறேன் என் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.//


இணைந்திருப்போம், அரக்கனுக்கு எதிரான போரில்..

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பரே.. அனுப்பிடேன்.. என்னோட பஸ்லயும் ஷேர் பண்ணி இருக்கேன்..

suvanappiriyan said...

நானும் மெயில் அனுப்பி விட்டேன். தகவலுக்கு நன்றி!

rushanth bose said...

இலங்கையில் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்வது உங்களுக்கு எல்லாம் பிடிக்கவில்லையா?????? இனிமேலும் எம்மால் உங்கள் ( இந்தியரின்) அட்டூழியங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது!!!! உங்கள் உதவிகள் எமக்கு தேவை இல்லை.......உங்கள் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு எங்கள் நாட்டின் விஷயத்தில் தலை இடாமல் இருந்தாலே நாம் நிம்மதியாக இருப்போம்.........

VijayaBhaskar D.K. said...

இணைந்திருப்போம், அரக்கனுக்கு எதிரான போரில்..

முரளிதீர தொண்டைமான் said...

அன்பு தமிழ் நெஞ்சங்களே! ஒன்றுபடுவோம் எதிரிகளை வென்றிடுவோம்!

சுதர்ஷன் said...

உங்கள் உதவிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே .தொடருங்கள் .:-)