Pages

Tuesday, April 19, 2011

ACT NOWஐ.நா அறிக்கையை உடனே வெளியிடுங்கள் பான் கி மூன் அவர்களே - இயக்கம்

"மே 1 ஆம் நாள் அன்று பலத்தைக் காட்டுவோம்" என்று போர்க்குற்ற விசாரணைக்கு ஆளாகப்போகும் திருவாளர் ராசபட்சே இப்போது ஐ.நா அவையை மிரட்டி வருகிறார். "இலங்கையில் உள்ள ஐநா பணியாளர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என பதிலுக்கு மிரட்டியுள்ளது ஐ.நா.

இந்த நேரத்தில் - ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடக்கோரும் கடித இயக்கத்தை "இலங்கை பிரச்சாரம்" எனும் அமைப்பு தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்று பான் கீ மூனை வலியுறுத்துங்கள்:


http://www.srilankacampaign.org/takeaction.htm

வரலாறு மாறுகிறது.

ஐ.நா.பாதுகாப்பு சபையின் மாற்றம்.
2009 இல் ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது "இலங்கையின் நிலைமை பாதுகாப்பு அவையின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்ற கோரிக்கை - அப்போதைய ஐ.நா பாதுகப்பு சபை உறுப்பினர்களான மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிக்காவால் முன்வைக்கப்பட்டது. ஆனால், உடனடியாக சீனா மற்றும் ரசியாவால் தடுக்கப்பட்டது.

இப்போது 18 ஏப்ரல் 2011 அன்று ஐ.நா பாதுகாப்பு சபையால் இலங்கை மீதான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இரசியா.

இந்திய சதி முறியடிப்பு
ஐ.நா மனித உரிமைக் குழு கூட்டத்தின் போது இந்தியாவின் கடின முயற்சியால் - கியூபாவின் உதவியுடன் இலங்கை காப்பாற்றப் பட்டது. ஐ.நா மனித உரிமைகள் குழு இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது (இங்கே காண்க).

இப்போது, ஐ.நா. நிபுணர் குழு அறிக்இந்த முறையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இரசியா.யின் மூலம் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் குழு மனித உரிமைகள் குழு கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு, இலங்கைக்கு ஆதரவான தீர்மாம் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிக்குகிறார் விஜய் நம்பியார்
ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். (இங்கே காண்க)  

கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார். இக்குற்றத்திற்காக தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கபட்டுள்ள வழக்கில் விஜய நம்பியாரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு உள்ளிட்ட - கடைசி கட்டத்தில் தமிழ் மக்களை காப்பாற்றத்தவறிய ஐ.நா'வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்று ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை 1


ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை 2

இந்நிலையில்:


ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடக்கோரும் கடித இயக்கத்தை "இலங்கை பிரச்சாரம்" எனும் அமைப்பு தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்று பான் கீ மூனை வலியுறுத்துங்கள்.

http://www.srilankacampaign.org/takeaction.htm

2 comments:

Anonymous said...

பார்த்தேன். அப்படியே எனது பக்கமும் பதிந்தேன்.
எங்களுக்காக நீங்கள் உதவுவதற்கு கண்டிப்பாக கைமாறு செய்யக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. மனது நிறைய நன்றி உணர்வு மட்டுமே இருக்கிறது. =((

Unknown said...

அனுப்பிவிட்டேன் நன்பரே