Pages

Friday, April 15, 2011

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.




அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராசபட்சே பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் நாள் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  அதற்கான சின்னஞ்சிறு முன்முயற்சியை நானும் செய்தது குறித்த எனது அனுபவம் இதோ:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளருடன் நான் (இடம் டென்மார்க், 2009): 
ஜான் ஹால்ம்ஸ்- ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர். இறுதி கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் இலங்கைக்கு வந்து ஐ.நா'வின் சார்பில் அரசோடும் புலிகளோடும் பேசியவர். மனிதப்பேரழிவை தடுக்க தவறியவர். இலங்கை அரசால் - புலிகளிடம் காசு வாங்கும் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.

ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு (UN’s HUMAN RIGHTS COUNCIL) சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று உலகின் 90 அரசு சாரா அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். அந்த பட்டியலில் 67 ஆவது நபராக நான் கையொப்ப மிட்டிருந்தேன். (அரசுசாரா அமைப்புகளின் கோரிக்கையை இங்கே காணலாம்)

கூடவே, ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 10ஆவது கூட்டம் கூடியபோது, இலங்கை மீது தனி விவாதத்தை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஐ.நா. அவையில் அதிகாரப்பூர்வமாக மனு செய்திருந்தேன். ஐ.நா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் -Consultative Status With the UN- அளிக்கும் மனுவே அதிகாரப்பூர்வமானதாகும். அவை, ஐ.நா. அவையின் ஆவணங்களாக சுற்றுக்கு விடப்படும். (அந்த மனுவை இங்கு காணலாம்.)

ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 

ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26, 27 தேதிகளில் கூடியது. அக்கூட்டத்தில் நான் "போர்குற்ற விசாரணை வேண்டும்" என மனு அளித்தேன். அக்கூட்டத்தில் மொத்தமாக நான்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே இலங்கை அரசு மீது புகார் தெரிவித்தன. அவற்றில் நான் சார்ந்த அமைப்பும் ஒன்று. அந்தவகையில், அதிகாரப்பூர்வமாக புகார் செய்த ஒரே தமிழன் நான் மட்டும்தான். (எனது புகாரை கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 1 இல் காண்க)

என்னை கண்டித்து இலங்கை இதழ் எழுதியது. (அதனை இங்கு காணலாம்)

ஐ.நா. கூட்டங்களில் அரசுசாரா பிரதிநிதியாக பங்கேற்கவும் கருத்து கூறவும் எனக்கு அனுமதி உண்டு. மேலும், மற்றவர்களையும் கூடுதலாக இட்டுச்செல்லவும் அனுமதி உண்டு. அந்தவகையில், இலங்கை மீதான விவாதத்தின் போது அதனை நேரில் காண எனக்கு அனுமதி இருந்தது. ஆனால், எனது பொருளாதார நிலை அனுமதிக்காததால் - கனடா நாட்டின் தமிழர்கள் இருவரை நான் பரிந்துரைத்தேன். அவர்களும் நேரில் சென்று பங்கேற்று பேசினர்.

ஐ.நா. மனித உரிமை ஆவையில் இலங்கை மீது சிறப்பு விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக கடும் போராட்டம் நடத்தினார் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் கோபிநாதன். கடைசியில் இந்தியாவின் சதியே வெற்றி பெற்றது.

திடீர் திருப்பங்கள்:

1. பொதுவாக முற்போக்கு சக்திகளுக்கு எதிரான நாடுகளாக கருதப்படும் மேற்குலக நாடுகள்தான் ஈழத்தமிழர்களை ஆதரித்தன. அவை: சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, லக்சம்பர்க, எஸ்தோனியா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, சைப்ரஸ், கிரேக்கம், நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா, இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன், பிரான்சு, ருமேனியா, லாட்வியா, சிலி, மொரீசியஸ், மெக்சிகோ, கனடா. இக்கூட்டணியை அமெரிக்காவும் ஆதரித்தது. அப்போது அமெரிக்கா மனித உரிமைகள் குழுவில் உறுப்பு நாடாக இல்லை. (கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 2ஐ காண்க)

2. முற்போக்கு நாடுகளும் சர்வாதிகார நாடுகளும் இலங்கை அரசை ஆதரித்தன. அவை:  இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, சவுதி அரேபியா, மலேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், எகிப்து, நிகரகுவா. பொலிவியா (கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 3ஐ காண்க)

3. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று - உலகின் முற்போக்கு நாடான கியூபா - இலங்கையை மிகத்தீவிரமாக ஆதரித்தது. இதற்காக அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக ஐ.நா'வில் கடிதம் கொடுத்தது கியூபா.
(கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 4ஐ காண்க)

கடைசியில் வாக்கெடுப்பின் போது ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் மொத்தமுள்ள 46 உறுப்பு நாடுகளில் 29 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

மொத்தத்தில், இலங்கை அரசு தற்காலிகமாக தப்பித்தாலும், சர்வதேச அரங்கில் அவமானப்பட்டது. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே, இலங்கையின் போர்குற்றங்கள் குறித்து ஆராய பன்னாட்டு நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை 2011 ஏப்ரல் 12 அன்று ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. (அதுகுறித்து இங்கே காண்க)

ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரப்போகிறது:

இனி என்ன?

உலகத் தமிழர்களிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்கும் நேரம் இது.

இன்னும் ஓரிரு மாதங்களில் - இலங்கையின் போர்குற்றங்கள் உலக அரங்கில் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. இந்நேரத்தில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு - போர்க்குற்றங்கள் பன்னாட்டு அமைப்புகளால் முறையாக விசாரிக்கப்படவும், ராசபட்சே உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் பன்னாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும்.
குறிப்பு: மேலே உள்ளது நான் ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் ஜான் ஹால்ம்ஸ் அவர்களை 2009 டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் சந்தித்தபோது எடுத்த படம். (ஜான் ஹால்ம்ஸ் - ஐ.நா'வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பாளரான இவர்தான் இறுதி கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் இலங்கைக்கு வந்து ஐ.நா'வின் சார்பில் அரசோடும் புலிகளோடும் பேசியவர். மனிதப்பேரழிவை தடுக்க தவறியவர். இலங்கை அரசால் - புலிகளிடம் காசு வாங்கும் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.)

அவர் என்னிடம் கூறிய செய்தி இதுதான்: நான் தமிழர்களைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். எல்லாம் வீணாகப் போனது. கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் இந்திய அரசுக்கு "இன்னும் கூடுதலாக" அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.


ஆவணங்கள்

ஆவணம் 1: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - பசுமைத் தாயகம் புகார் மனு


ஆவணம் 2: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - இலங்கை அரசுக்கு எதிர்ப்பு


ஆவணம் 3: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - இலங்கை அரசுக்கு ஆதரவு


ஆவணம் 4: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை -இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா, இந்தியா

India to Save Sri Lankan Government at the UN

20 comments:

ஜோதிஜி said...

முதன் முதலாக களத்தில் இறங்கிய ஒரு தமிழரை பார்ப்பதில் (புகைப்படத்தில்) எழுத்தில் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆமாம் ஏன் உங்களை ரவுண்டு கட்டறாங்க. இவ்வளவு பெரிய விசயத்தில் சாதித்த நீங்க ஏன் சாதிகளை ஆராய்ந்த ஆய்வுகளை குறித்து எழுதுறீங்க. உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

வாழ்த்துகள் அருள்.

Anonymous said...

உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள்

சாமக்கோடங்கி said...

தொடர்ந்து போராடுங்கள்.. தமிழரின் பிரதிநிதியாய் செயல்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும்.. நன்றி..

அருள் said...

@ஜோதிஜி

நன்றி திரு. ஜோதிஜி,

சாதி அரசியல் என்பது அது வேறு தனி உலகம்.

நாம் எல்லோரும் தமிழர்கள்தானே. அது என்றும் மாறாது.

அருள் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
@சாமக்கோடங்கி

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார்.

ஊக்கமளித்ததற்கு நன்றி திரு. சாமக்கோடங்கி

இனிதான் தமிழர்களுக்கு அதிக வேலை இருக்கிறது. சேர்ந்து செயல்பட்டால் மகிழ்வேன்.

suvanappiriyan said...

சிறந்த சேவை செய்திருக்கிறீர்கள். இனிமேலாவது அல்லல்படும் சகோதர தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்.

ஜோதிஜி said...

சாதி அரசியல் என்பது அது வேறு தனி உலகம்.

கொஞ்ச நாளைக்கு இந்த கருமாந்திரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இதில் முடிந்த வரைக்கும் முன்னேறப்பாருங்களேன். எதிர்கால சமூகம் நினைத்துப் பார்க்கக்கூடும்.

Unknown said...

உங்கள் பங்களிப்பிற்கு என் நன்றிகள். தமிழர்களாக ஒன்றுபடுவோம்...

ஹேமா said...

உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்

purushothaman.p said...

@ஜோதிஜி விரும்பியோ விரும்பாமலோ இந்த சமூகத்தில் சாதியே அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு எந்த அரசியலும் செய்ய இயலாது... தமிழ்சமூகத்துக்குள்ளான அரசியல் தமிழ்சமூகத்துக்கு வெளியான அரசியல் என இரண்டில் தமிழ்சமூகத்துக்கு வெளியான அரசியலில் தமிழனாக இருப்போம்

saarvaakan said...

அருமையான பணி தோழரே,
இந்த விஷயத்தில் ஆர்வம் உள்ள பலரையும் ஒருங்கினைத்தால் ஆக்கபூர்வமாக பல செயல்கள் செய்து,தமிழருக்கு நியாயம் கிடைக்க உதவலாம்.ஒத்துழைக்க காத்திருக்கிறோம்.
நன்றி

ஆறாம்பூதம் said...

மிகச் சிறந்த பணி தோழரே. வாழ்த்துகள். தொடர்ந்து போராடுவோம்.

சின்னப்பயல் said...

தமிழனின் தார்மீகக்கடமை இது...

ராஜ நடராஜன் said...

You are a paradox of castiest and social worker.Anyway glad to know of your other side.Congratulation.

ராஜ நடராஜன் said...

அருள் ஜோதிஜியின் கருத்தை யோசனை செய்யுங்க.தோள் கொடுக்க தயாராக உள்ளோம்.நன்றி.

rushanth bose said...

இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரியாமல் எழுதவேண்டாம்.....முதலில் இங்கு உள்ள தமிழர்களிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு உங்கள் இடுகைகளை இடவும்......எமக்கு இங்கு இலவச கல்வி,இலவச மருத்துவ சேவை வழங்கி எம்மை அவர்களின் சகோதர்களை போல பராமரிக்கும் இலங்கையர்களை இனிமேலும் கேவல படுதுநீர்.......நாம் இங்கு உங்களுக்கு எதிராக வெகுண்டு எழுவோம்!!!!!!! எங்களுக்கு உங்கள் உதவிகள் தேவை இல்லை...............தேவை என்றால் என்னுடன் நேரடியாக கருத்து மோதலுக்கு வரவும்...............நான் தயார் ??? நீர் தயாரா?????

ஜோதிஜி said...

இங்கு உள்ள தமிழர்களிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு உங்கள் இடுகைகளை இடவும்......எமக்கு இங்கு இலவச கல்வி,இலவச மருத்துவ சேவை வழங்கி எம்மை அவர்களின் சகோதர்களை போல பராமரிக்கும் இலங்கையர்களை இனிமேலும் கேவல படுதுநீர்

நண்பரே உங்கள் இடுகையிலும் நீங்கள் ஒன்றும் எழுதவில்லை. நீங்கள் சொன்ன விசயங்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

சாமக்கோடங்கி said...

//இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரியாமல் எழுதவேண்டாம்.....//

நண்பரே..அங்கே நடப்பதை உலகறியும்.

பராமரிக்கிறார்கள் என்றால் எதற்காக ஐயா இப்படிக் கொத்துக் கொத்தாக பொதுமக்களைக் கொன்று குவிக்க வேண்டும்..?? பராமரிப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள்.. கொன்று குவித்ததற்கான ஆதார காணொளிகள் யுடியுப் எங்கும் குவிந்து கிடக்கின்றன. நமது உறவுகளுக்குகாகத்தான் நாம் போராடுகிறோம். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதே நேரம் நமது உறவுகள் அனைவரும் வாழ்வுரிமையோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

rushanth bose said...

சாமகொடங்கி அவர்களே!!! புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?வரலாற்றை மட்டும் பார்த்து கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியாது....நிகழ்காலத்தை பாருங்கள். நீங்கள் (இந்தியா) எம்(இலங்கை) நாட்டை பற்றி இவாறு பிரச்சாராம் செய்தால் அவர்களுக்கு எம்மீது காழ்ப்புணர்ச்சி வரத்தானே செய்யும்??? இங்கு நாம் இப்போது ஒற்றுமையாக இருப்பதை இங்கு வந்து பார்த்து விட்டு கதையுங்கள்!