Pages

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்! 


அமெரிக்கா, சீனா, இரசியா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய உலகின் பலம் வாய்ந்த நாடுகள் மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கேரளாவுக்கு எப்படி அதில் இடம் கிடைக்கும் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதற்கு சீனாவும் இரசியாவும் உடன்பட்டுவிட்டதாக சீனாவில் நடந்த BRICS மாநாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளும் இந்தியாவின் நீண்டகால ஆசைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரு இந்தியக் குடிமகன் என்ற வகையில் இதற்காக என்னால் பெருமைக்கொள்ள முடியவில்லை. எனக்கென்னமோ, இதன்மூலம் "கேரளாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்" கிடைக்கப்போவதாகவே தெரிகிறது.

ஈழத்தில் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்றொழிக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது இந்திய வெளியுறவுத் துறையிலும் ஐ.நா. அவையிலும் முக்கியமான பதவிகளில் இருந்த மலையாளிகள் தமிழ்மக்களை கொன்றொழிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டினார்கள்.
 எம்.கே. நாராயணன்
சிவசங்கர மேனன்

இந்திய வெளியுறவுத்துறையில் கோலோச்சிய சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் ஆகிய மலையாளிகள் தமிழகத்தின் கதறலை காதில் வாங்காமல் ராசபட்சேவின் சேவகர்களாக செயல்பட்டனர்.
கோபிநாதன் 

ஐ.நா. மனித உரிமை ஆவையில் இலங்கை மீது சிறப்பு விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக கடும் போராட்டம் நடத்தினார் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் கோபிநாதன் எனும் மலையாளி.
 விஜய் நம்பியார் - அண்ணன் ஐ.நா.தூதர் 
சதீஷ் நம்பியார் - தம்பி இலங்கை இராணுவ ஆலோசகர்

ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியாரும் ஒரு மலையாளியாக இருந்தார். அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து தமிழர்களைக் காட்டிக்கொடுத்தனர்.

கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார். இக்குற்றத்திற்காக தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கபட்டுள்ள வழக்கில் விஜய நம்பியாரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்படி எல்லா இடத்திலும் - இந்தியாவின் வெளியுறவுத்துறையாக, இந்தியாவின் ஐ.நா. முகமாக மலையாளிகளே நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் என்பது கேரளாவுக்கு தானே!

இதற்காக தமிழர்கள் பெருமைக் கொள்ள முடியாது.

(மலையாளிகளை அவர்கள் மலையாளிகள் என்பதற்காக நாம் குற்றம் சாட்டவில்லை. வெளியுறவுத்துறை சார்ந்த மலையாளிகள் தமிழின எதிரிகளாக இருப்பதையே கண்டிக்கிறோம்)

11 கருத்துகள்:

Unknown சொன்னது…

தலைப்பு கலவரப்படுத்தி விட்டது.

Unknown சொன்னது…

ஆதாரங்களை கொண்டு விளக்கி இருப்பதால், தங்கள் கூற்று மெய்ப்படுகிறது.

தங்கள் மொழி பேசுபவர்களாக இருந்தால், மலையாளிகள் இப்படி செய்வார்களா?

தமிழரகள் தான் எந்த சூழ்நிலையிலும் அனைவரும் இந்தியர்கள் என்பதை முன்னெடுத்து செல்பவர்களாக உள்ளனர்.

Unknown சொன்னது…

//மலையாளிகளை அவர்கள் மலையாளிகள் என்பதற்காக நாம் குற்றம் சாட்டவில்லை. வெளியுறவுத்துறை சார்ந்த மலையாளிகள் தமிழின எதிரிகளாக இருப்பதையே கண்டிக்கிறோம்///

பெயரில்லா சொன்னது…

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். ஈழத்தமிழர்களின் படுகொலையைத் தடுக்க முடியாதமைக்கும், இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் சிதறலுக்கும் -- கேரளாவும், மலையாளிகளும் தானா காரணம் ....

எப்போதுமே ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையும், மக்களையும் குறை கூறுவது சரியா ........

கேரள பார்ப்பனர்கள் தான் கேரளமா ? மலையாள ஆதிக்கச் சாதிகள் மட்டும்தானா மலையாளிகளா ????

கேரளத்தின் வெறும் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனர்களும், அவர்களின் அடிவருடும் சில பார்ப்பன சாதிகள் - செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த கேரளத்தை குறை கூறுவது தவறாகும்.ஏன் தமிழ்நாட்டு பார்ப்பனர்களும் இதனையே செய்தார்கள். அதனால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் பழைப்படுமா?

விடுதலை சொன்னது…

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். ஈழத்தமிழர்களின் படுகொலையைத் தடுக்க முடியாதமைக்கும், இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் சிதறலுக்கும் -- கேரளாவும், மலையாளிகளும் தானா காரணம் ....

எப்போதுமே ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையும், மக்களையும் குறை கூறுவது சரியா ........

Unknown சொன்னது…

இந்த தமிழர் கொலைத் திருமகன்களை, இயக்கிய காங்கிரஸ் கட்சியோடு தானே, தமிழ் இனக் காவலர்களும், குடிதாங்கிகளும், வீறீடும் சிறுத்தைகளும், உளமார்ந்த உறவு கொண்டுள்ளனர்! அவர்களுக்கும் உலக சபைகளில் இடம் வேண்டும்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

பதிவு கொஞ்சம் ஆதாரங்களுடனே இருப்பதால்
நம்பாமலும் இருக்க முடியவில்லை
சிந்திக்கச் வைக்கும் பதிவு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Saamuraai சொன்னது…

Guys! Just thing why we are treating in this way! One and only reason,, we Tamils do not care about community, everything we need is to done and settle with our OWN stuffs. At this moment, we need a STRONG COMMUNITY, which must provide man to man help, no matter where are they, who are they, what are they!!!

suvanappiriyan சொன்னது…

அந்த மலையாளிகளைக் கேட்டால் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை சொல்ல ஆரம்பிப்பார்கள். இது ஒரு தொடர் கதையே! மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை ஏன் பயன்படுத்தினார்கள் என்று அவர்களும் கேட்கிறார்களே!

நம் நாடு நிரந்தர உறுப்பினரானால் இந்தியன் என்ற முறையில் பெருமைப்படுவோம்.

சாமக்கோடங்கி சொன்னது…

ஐநாவில் பங்கேடுப்பதில் இந்தியாவிற்கு ஏதேனும் நல்லது இருக்கலாம். அதில் கேரளாவிற்கும் ஏதாவது இருக்கலாம். எப்படியோ நமது நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி.. இலங்கைத் தமிழர்களுக்கு ஊறு விளைவித்தவர்கள் இவர்களேவாக இருப்பினும், தொடர்ந்து போராடதும், ஆதரவு தெரிவிக்காததும், இது போன்ற பல குற்றச் சாட்டுகளை நமது அரசின் மீதும், ஆளும் வர்க்கத்தினர் மீதும் சொல்லிக் கொண்டே போகலாம். எந்தக் கடவுளும் வந்து தண்டிக்கவும் இல்லை, இவர்களுக்கு ஒன்றும் நடக்கவும் இல்லை. உலகத்தில் அமைதி என்னும் வார்த்தைக்கே இனி அர்த்தமில்லையோ..?

Gowri Shankar சொன்னது…

They are all representatives of Indian Government , not Kerala Govt...If Indian Govt ask them to speak by supporting Sri lankan Govt,they have to speak like that only, Think even ruling D.M.K is not raise it's voice strongly against Centarl,how can we expect those malayalies to come volunteer to protect us ???... I know some of malayalies are against our Tamil people,but we cann't blame all.,..may i right?