Pages

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

வினவின் வேடிக்கை: எங்கே செல்லும் இந்த பாதை???


கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் ! என்கிற ஒரு கட்டுரை வினவில் வந்துள்ளது. தேர்தலுக்கு மாற்று என்ன என்பதற்கு அவர்கள் புரிந்துகொள்ளவே கடினமான ஒரு வழியையும் காட்டியுள்ளனர்! 

அதில் ""தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல; தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான் “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது.""

வினவு காட்டியுள்ள வழி பாமரனான எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!!!

1 கருத்து:

வலிப்போக்கன் சொன்னது…

நானே,உங்களைவிட ஆதிபாமரன். எனக்கே புரிஞ்சுபோச்சு. சும்மா பீலா
விடாதீங்க சார்