Pages

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு


திரு.கே.ஆர்.பி செந்தில் என்பவர் "பயோடேட்டா - பா.ம.க" எனும் ஒரு பதிவை போட்டுள்ளார். சனநாயக நாட்டில் யாரும் யாரைக்குறித்தும் தமது எண்ணத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. அந்தவகையில் அவர் பயோடேட்டா வெளியிடுவதை குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு அந்த உரிமை உண்டு.

அதேநேரம் - கருத்து என்று வரும்போது போதுமான ஆதாரமுள்ள உண்மைகளைச் சொல்லலாம், அல்லது, தனது சொந்தக்கருத்தை சொல்லலாம். அதைவிடுத்து கட்டுக்கதைகளை அள்ளி விடக்கூடாது. கே.ஆர்.பி செந்திலின் "பயோடேட்டா - பா.ம.க" என்பது உண்மையானதாகவும் இல்லை, அவரது சொந்தக்கருத்து போலவும் இல்லை. மாறாக பார்ப்பன - ஆதிக்க சாதிவெறியர்களின் கோயபல்சு பிரச்சாரத்தின் நீட்சியாக காட்சியளிக்கிறது. அவற்றைப் பார்ப்போம்:

கட்டுக்கதை 1. இயற்பெயர்: பாசக்கார மகன் கட்சி 
கட்டுக்கதை 2. தொழில்: முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது 
கட்டுக்கதை 3. பலவீனம் : கூட்டணி மாறுவது 
கட்டுக்கதை 4. டிஸ்கி: பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

கட்டுக்கதை 1. இயற்பெயர்: பாசக்கார மகன் கட்சி 

பா.ம.க மீது பாய்ந்து பிடுங்கும் சாதிவெறியர்கள் "அந்த ஒரு கட்சி மட்டுமா அப்படி?" என்கிற கேள்வியை கவனமாக தவிர்த்துவிடுகிறார்கள். தி.மு.க - பாசக்கார மகன்கள் + மகள் கட்சி இல்லையா? காங்கிரசு பாசக்கார பேரன், மருமகள், கொள்ளுபேரப்பிள்ளைகள் கட்சி இல்லையா? அ.தி.மு.க ஒன்றுவிட்ட (சசிகலா) குடுப்பத்தின் கட்சி இல்லையா? விசயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அதை குடும்ப நிறுவனமாக தொடங்கவில்லையா?

குடும்ப ஆரசியல் என்று கத்துவதால் ஒருபயனும் இல்லை. ஏனெனில், மக்கள் அதை ஏற்கிறார்கள், வரவேற்கிறார்கள். அதற்கு ஒரு எளிய உதாரணம் செல்வி. செயலலிதா அம்மையார். அவர் மட்டும் திருமணம் ஆனவராக இருந்திருந்தால், வேறு யாருக்காவது மனைவியாக இருந்திருந்தால் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகியிருக்க முடியுமா? அதிகமான திரைப்படங்களில் எம்.சி.ஆரின் மனைவியாக நடித்ததே, அவர் முதல்வராக போதுமானதாக இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

பா.ம.க'வில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பா.ம.க'வில் திடீரென புகவில்லை. 1998 முதல் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடியவர் அவர். அதனால் 2002 ஆம் ஆண்டில் ஐ.நா.அவையின் அழைப்பின்பேரில் தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்க்கில் நடந்த புவி உச்சி மாநாட்டில் பங்கேற்றவர். 2004 ஆம் ஆண்டில் கட்சி நிருவாகிகளின் வற்புறுத்தலின் பேரில்தான் அவர் அமைச்சராக ஆக்கப்பட்டார்.

இன்றைக்கும் பா.ம.க உறுப்பினர்கள், தொண்டர்கள், நிருவாகிகள் அனைவரும் ஒருமனதாக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான் கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

'பாசக்கார மகன் கட்சி' என்கிற கேலி, கிண்டல் எல்லாம் வன்னியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் ஒருசில ஆதிக்க சாதிவெறியர்களால் கிளப்பிவிடப்படும் விசமப் பேச்சுகளாகும்.

ஒரு கட்சி முதன்மையாக அதற்கு வாக்களிக்கும் மக்களுக்கு அல்லது தொண்டர்களுக்கு கட்டுப்பட்டது என்று நான் கருதுகிறேன். மற்றதெல்லாம் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் - அவ்வளவுதான். ஒரு பொருளை விற்கும் நிறுவனம் அதன் நுகர்வோருக்குதான் பயப்பட வேண்டுமே தவிர, நுகர்வோர் அல்லாதோருக்கு - அல்லது எதிர்காலத்தில் நுகர்வோர் ஆக வாய்ப்பே இல்லாதோருக்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும். அந்த வகையில் சாதிவெறியர்களின் வயிற்றெரிச்சலுக்கு பா.ம.க'வினர் வருந்தத்தேவை இல்லை.

கட்டுக்கதை 2. தொழில்: முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது 

பா.ம.க மரம்வெட்டும் கட்சி என்று பேசுவது ஒட்டுமொத்த வன்னியப் பேரினத்தையும் இழிவுபடுத்தும் செயல் மட்டுமின்றி சமூக நீதிப்போராட்டத்தையே கேவலப்படுத்தும் செயலுமாகும்.

"அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு, மண்டல் குழு அறிக்கை அமலாக்கம், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து" 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் அதிகாலை ஒருவாரகால சாலைமறியல் போராட்டம் தொடங்கியது. அன்றைய பொழுது விடிவதற்குள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பலர் கொடூரமான சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்தக்கொடூரங்கள் தொடராமல் தடுக்க ஆங்காங்கே சாலையில் மரங்கள் தன்னிச்சையாக வெட்டிப்போடப்பட்டன.

அந்த ஒருவார காலத்தில் காவல்துறை அராசகத்தால் 21 பேரின் உயிர் பலிவாங்கப்பட்டது. அதேசமயம், வன்னியப் போராளிகளால் ஒருவரது உயிருக்கும் பாதிப்பு இல்லை.உயிரழப்பை தவிர்க்க சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டன.

தற்காப்புக்காக கொலையே செய்யலாம் என்பது சட்டமாக இருக்கும் நாட்டில் தற்காப்புக்காக மரம் வெட்டுவது குற்றமா?

(மற்றபடி, வன்னியர் சங்க போராட்டத்தில் 100 மரம் வெட்டப்பட்டதற்கும் - பசுமைத் தாயகம் சார்பிம் பல லட்சம் மரம் வளர்க்கப்படுவதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.)

கட்டுக்கதை 3. பலவீனம் : கூட்டணி மாறுவது 

இது ஒரு அப்பட்டமான கட்டுக்கதை. இதுகுறித்து இங்கே காண்க: விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்! 

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

கட்டுக்கதை 4. டிஸ்கி: பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

சாதிவெறியர்களின் அப்பட்டமான கோயபல்சு பிரச்சாரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

பசுமைத்தாயகம் அமைப்பை குறித்து கட்டுக்கதை கூறப்பட்டவுடன், அதற்கு நான் (அருள்), திரு. கே.ஆர்.பி. செந்திலின் அதே பதிவில் பின்னூட்டமாக : "பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான். அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்" என்று கூறினேன்.

உடனே "விந்தைமனிதன்" என்பவர்

"பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?" என்றார்.

அதற்கு நான் (அருள்):

"தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.


மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.


அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.


நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.


அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.


தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்" என்று கூறினேன்.

அதற்கு "விந்தைமனிதன்" என்பவர்:

"முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த.." என்றார்.

அதற்கு நான் (அருள்): 

"உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.


1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.


அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.


நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.


நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.


இதில் நிங்கள் குறிப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?


"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?


பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை." என்று கூறினேன்.

இப்படி விளக்கமாக எடுத்துக்கூறிய பின்னரும் திரு.கே.ஆர்.பி செந்தில் எந்த மறுப்பையும் கூறவில்லை. 


என்ன செய்வது வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறி கண்களை மறைக்கும், உண்மையை குழிதோண்டி புதைக்கும்தானே?!!

6 கருத்துகள்:

raja சொன்னது…

நான் உங்கள் வலைமனையில் கேட்ட முன்று கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.. ஆனால் நீங்கள் பெரும் யோக்கியர் போல் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்

வருண் சொன்னது…

***கே.ஆர்.பி செந்திலின் "பயோடேட்டா - பா.ம.க" என்பது உண்மையானதாகவும் இல்லை, அவரது சொந்தக்கருத்து போலவும் இல்லை. மாறாக பார்ப்பன - ஆதிக்க சாதிவெறியர்களின் கோயபல்சு பிரச்சாரத்தின் நீட்சியாக காட்சியளிக்கிறது. ***

செந்திலுக்கு பாப்பான், பாப்பாத்தி அவரை ஆண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவருக்கே அது தெரியாது. காங்கிரஸுனு சொல்லுவாரு, இல்லைனா பா ம க னு சொல்லுவாரு. ஆனா உண்மையிலேயே அவருக்கு வேண்டியது ஆத்தா ஆட்சி! :)

ஆனா இவருடைய நியாயத்துக்கு, சோ ராமசாமி எவ்வளவோ பர்வாயில்லை!

எப்படி ஆயிட்டானுக பாருங்க நம்ம திராவிடர்கள்! :( நாசமாப்போயிட்டானுக! :(

rajamelaiyur சொன்னது…

PMK a pitikathavarkalai vanneyar eatheri pola yan parkendrerkal?

Bharathi.R சொன்னது…

உண்மையான தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.....

பெயரில்லா சொன்னது…

அநேகமா நீங்களும் வன்னியராக தான் இருக்க வேண்டும்.. இல்லையெனில் இவ்வளவு கரிசனம் ஏன்? பா.ம.கா வுக்கு ஆதரவு தருபவர்கள் வன்னியர்கள் அன்றி வேறு இல்லை. ஆதிக்க சாதியின் வெறி என்று கூறும் நீங்கள், அதே ஆதிக்க சாதியின் வெறியோடு பா.ம.கா வானது தலித்துக்களை பார்ப்பதை பற்றி தங்களுக்கு மாற்று கருத்து உண்டோ? உங்களுடைய கருத்துக்களும், பதில்களும் எப்படி உள்ளது என்றால், நீங்கள் ஏன் இவ்வாறு சேற்றை பூசிக் கொள்கிறீர்கள் என்றால், அடுத்தவன் சாக்கடையில் கிடக்கிறானே, அதற்கு நான் தேவலை எனபது போல் உள்ளது. நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் வாருங்கள் என்றால், தங்களை போன்ற இளையோர்கள் இவ்வாறு பேசுவது சிறப்பு அல்ல.

மீண்டும் வருவேன்..........

அரசூரான் சொன்னது…

அருள், நீங்க பா.ம.க-வோட கொ.ப.செ-வா?
ஏங்க நிறைய விசயங்கள் நல்ல நடு நிலையில் எழுதிட்டு, இங்க இப்படி மோசம் போயிட்டீங்க?