(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)
""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்.""
--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.
"ராமதாஸின் அவதாரங்கள்" என்று விமர்சிக்கிறார் ஓசை.
"இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க" என்று கொச்சையாக விமர்சிக்கிறார் சவுக்கு.
இப்படி வரும் விமர்சனங்களும் அவற்றில் வெளியிடப்படும் கேவலமான பின்னூட்டங்களும் பா.ம.க'வை வேண்டுமென்றே இழிவு படுத்துகின்றன.
இத்தகைய பதிவுகளைவிட ஒருபடி மேலாக - தமிழக பத்திரிகைகள் திட்டமிட்டு பா.ம.க மீது அவதூறு சாக்கடையை அள்ளி வீசுகின்றன?
பா.ம.க'வை தூற்றுவது நியாயம் தானா?
காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.
அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை. எடுத்துக்காட்டாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியன இப்போது திமுக அணியில் உள்ளன. அவ்வாறே, திமுக அணியில் இருந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி ஆகியன அதிமுக அணியில் உள்ளன.
இது மட்டுமின்றி - எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?
ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்.
தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு
முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952
தி.மு.க போட்டியிடவில்லை. காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.
காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.
தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.
(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)
இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957
காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.
மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962
காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.
தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967
தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.
காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.
CPI தனித்து போட்டியிட்டது.
ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971
தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.
காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.
ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977
தி.மு.க தனித்து போட்டி.
அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.
இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,
சனதா கட்சி தனித்து போட்டி.
ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980
தி.மு.க - காங்கிரசு கூட்டணி.
அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.
எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984
அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.
தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.
ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989
அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.
அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.
தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.
பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991
அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.
தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.
பா.ம.க தனித்து போட்டி.
பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996
தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.
அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.
ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.
பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.
பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001
அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.
தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.
பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006
தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.
அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.
--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.
ஆக, எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் இடம் மாறுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?
21 கருத்துகள்:
http://powrnamy.blogspot.com/
பார்பன வர்க்கத்திற்கு நெத்தியடி !. வாழ்த்துக்கள்
எல்லாம் சரிதான். ஆனால் பா .ம.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ரொம்பவும் சுயநலமானது.அரசியலை நன்றாக காசாக்க தெரிந்தவர் ராமதாஸ்; இருந்தாலும் உங்களுக்கு பிடித்திருந்தால் சரிதான்.
விபச்சாரம் பண்றதுக்கு, கூட்டணி மாறுவதற்கு தேவைப்படும் "தில்" லை விட - அதை வெட்கமில்லாம்ம நியாயப்படுத்த ரெம்ப "தில்" வேணும்ங்க.
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
SARIYAGA SONNEERIGAL
PMK vin sariyan kolgai velakki Neengal.
அது சரிண்ணே!
ஆனா பா.ம.க மட்டும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, ஊராட்சி தேர்தலுக்கு ஒரு கட்சின்னு கூட்டணி மாத்துதே!
அதை ஏன் சொல்ல மாட்டிங்கிறீங்க!,
உங்களோடு சேர்ந்து தான் சிறுத்தையும் நாறி ஸாரி மாறி போச்சுன்னு சொன்னாங்க!
Valthukkal nanba....
அருமையான புள்ளிவிபரம், சாட்டையடி. நன்றி அருள்
நேற்று தினமலரில் வந்த செய்தி. தேமுதிக பாமகவை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போகிறதாம். இன்னும் தேமுதிக தொகுதியும், கூட்டணியும் முடிவானதாக தெரியவில்லை. தினமலர் செய்தி என்ற பெயரில் தன்னுடைய ஆசையை வெளியிடுகிறது. இந்த பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஜயகாந்த் குடித்து விட்டு சட்டசபை சென்றது பற்றியோ, விஜயகாந்த் இது வரை சட்டமன்றத்தில் பேசியது பற்றியோ எழுதி இருக்கிறதா ?
கொடுமை அருள் கொடுமை. பார்ப்பனப் பத்திரிக்கைகளின் சாதி வெறியை கண்டு ரத்தம் கொதிக்கிறது. அவர்களின் பணபலத்திற்கு முன்பு நாம் செய்ய எதுவும் இல்லை அருள். அது தான் வேதனை
உங்களது பதிவை வாசிக்கும் பொழுது ஆறுதல் கிடைக்கிறது. அருள், நீங்கள் தொடர்ந்து எழுத அய்யனாரை வேண்டிக்கொள்கிறேன்
நான் அந்தப் பதிவில் காழ்ப்புணர்ச்சியின்றி, நடுநிலையோடு விமர்சித்ததாகவே நம்புகின்றேன்..சுட்டிக்கு நன்றி!
ஆக நடப்பது விபச்சாரம், அதில் பாமகவும் விபச்சாரியாகவோ அல்லது காமத்தைத் தணிக்க விழைபவனாகவோ இருக்கிறது. அவர்கள் யோக்கியர்கள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். பாமகவை மட்டும் பேசுகிறார்களே என்ற புலம்பல் ஒரு வகையில் நியாயம் தான். ஆனால் "நல்லது செய்யவில்லை என்றால் முச்சந்தியில் நிற்கவைத்து செருப்பால் அடிக்கலாம்". "என் குடும்பத்தினர் பதவிக்கு வரமாட்டார்கள்" போன்ற உலகமகா யோக்கியர்கள் போன்ற பேச்சுக்களே அவர்களை இந்த அளவுக்கு விமர்சிக்க காரணமாகின்றன.
தங்கள் பதிவை படித்தேன்.
சில விஷயங்களை கூறுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
முதலில் விபச்சாரி என்று தங்கள் கூறுவது தவறு.
எந்தப்பெண்ணும் அதை வேண்டும் என்று ஏற்பதில்லை. என்னை பொறுத்தவரை அப்பெண்கள் வஞ்சிக்கப்பட்ட தேவதைகளே.
ஆனால் அரசியலில் நீங்கள் சொல்வதில் சிறு பிழை என்னவென்றால் அந்த இயக்கத்தை தொற்றுவித்தவர்கள் இன்று அங்கு இல்லை மற்றும் ஜாதி அமைப்பாகவே செயல் படும் ஓர் அறிவிக்கபடாத சமூக யுத்தத்தை தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பது என் கருத்து.
பாமக சாதிவெறியை தூண்டி அதில் குளிர் காயும் ஒரு குடும்பக்கட்சி.வன்னியன் ஓட்டு அன்னியனுக்கு இல்லை இல்லை என்று கோஷம் போடுபவதும், பார்ப்பனன் ஓட்டு பார்ப்பனனுக்கு என்று கோஷம் போடுவதும் ஒன்றுதான். அதுவாவது பார்ப்பன ஒற்றுமைக்காக இருக்கும். பாமக ஒரு சாதிவெறியில் குளிர்காயும் ஒரு குடும்பக்கட்சி,வன்னியர்கள் இதனை தூக்கி எறியவேண்டும்.
@குடுகுடுப்பை
பார்ப்பனர்களைப் போன்று வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்றெல்லாம் கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு.
வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்பது உண்மையாக இருந்திருந்தால் - வன்னியர் ஒருவர் எப்போதோ தமிழ்நாட்டின் முதல்வராக ஆகியிருப்பார்.
பாமக சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (MLA) கபிலர்மலை மலைப்பசாமி ஒரு கொங்கு வேளாளர்.
அந்தியூர் கிருட்டிணன், தாராபுரம் சிவகாமி வின்சன்ட், மதுராந்தகம் செல்வராசு, திருப்போரூர் மூர்த்தி, வந்தவாசியில் முருகவேல் ராசன் ஆகியோர் தலித் பிரிவினர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் (MP) தலித் எழில்மலை, மற்றும் பொன்னுசாமி ஆகியோரும் தலித் பிரிவினர். புதுச்சேரி MP மு. இராமதாசு மீனவர் வகுப்பு.
நீங்கள் விவதாங்களில் நேர்மையாக இருந்தால் இதை வெளியிடுங்கள்
வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்றெல்லாம் கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு. //
வட மாவட்டங்களில் நடக்கும் சாதிய மோதல்களுக்கு காரணம் என்ன ?
//வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்பது உண்மையாக இருந்திருந்தால் - வன்னியர் ஒருவர் எப்போதோ தமிழ்நாட்டின் முதல்வராக ஆகியிருப்பார்.//
தமிழ் நாட்டில் நீங்கள் 117 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கிறீர்களா? அங்கே மற்ற சாதியினரின் வாக்குகளை கூட்டினால் வன்னியர்களை விட அதிகமாக இருந்தால் என்ன செய்ய முடியும்? நீங்கள் சொல்வது யூக அடிப்படையிலானது இதை நிரூபிக்க எந்த புள்ளி விவரமும் இருப்பதாகத் தெரியவில்லை.
பாமக சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (MLA) கபிலர்மலை மலைப்பசாமி ஒரு கொங்கு வேளாளர் // இவர் அன்புமணியின் பங்குதாரர்.
அந்தியூர் கிருட்டிணன், தாராபுரம் சிவகாமி வின்சன்ட், மதுராந்தகம் செல்வராசு, திருப்போரூர் மூர்த்தி, வந்தவாசியில் முருகவேல் ராசன் ஆகியோர் தலித் பிரிவினர்.// இவர்கள் யாரும் இப்பொழுது கட்சியில் இல்லை ஏன்?
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் (MP) தலித் எழில்மலை // இவர் அவமானப் படுத்தி வெளியேற்றப்பட்டார் ஏன்?
செந்திலான் கூறியது...
// //வட மாவட்டங்களில் நடக்கும் சாதிய மோதல்களுக்கு காரணம் என்ன ?// //
வட மாவட்டங்களில் சாதி மோதல்கள் கடந்த கால நிகழ்வாகிவிட்டன. அத்தகைய ஒரு மாற்றத்திற்கு பா.ம.க வழிவகுத்திருக்கிறது. எப்போதாவது விதிவிலக்காக நடக்கும் ஒன்றிரண்டு நிகழ்வுகளைக் கொண்டு - கூட்டமே சாதி வேறிபிடித்தக் கூட்டம் என்று குற்றம் சாட்ட இயலாது.
செந்திலான் கூறியது...
// //தமிழ் நாட்டில் நீங்கள் 117 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கிறீர்களா? அங்கே மற்ற சாதியினரின் வாக்குகளை கூட்டினால் வன்னியர்களை விட அதிகமாக இருந்தால் என்ன செய்ய முடியும்? நீங்கள் சொல்வது யூக அடிப்படையிலானது இதை நிரூபிக்க எந்த புள்ளி விவரமும் இருப்பதாகத் தெரியவில்லை.// //
இந்தக் கேள்வியை பார்ப்பனர், நாடார், முதலியார், மேனன், இசை வேளாளர் சாதியினரைப் பார்த்தும் கேளுங்கள்.
ஆந்திராவில் ரெட்டி, நாயுடு பிரிவினரோ, கருநாடகத்தில் லிங்காயத், ஒக்கலிக்க சாதியினரோ, கேரளாவில் ஈழவர்களோ 50% க்கு மேல் இருக்கிறார்களா? ஆனாலும் இருக்கிற சாதிகளில் மற்றவர்களைவிட அந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களே அதிகமுறை முதல்வராக வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எப்போதும் சிறுபான்மை சாதியினரே முதல்வராக வருகின்றனர் (காமராசர் மட்டுமே விதிவிலக்கு. ஓ.பி 6 மாதம் பொம்மையாக இருந்தார்).
தமிழ்நாட்டில் இருக்கிற சாதியினரில் வன்னியர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தும் ஒருமுறைக் கூட முதல்வராக வில்லை. வன்னியரும் ஏன் முதல்வராகக் கூடாது?
செந்திலான் கூறியது...
//
பாமக சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (MLA) கபிலர்மலை மலைப்பசாமி ஒரு கொங்கு வேளாளர் // இவர் அன்புமணியின் பங்குதாரர்.
//
இது கற்பனையான, வன்னியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் சாதிவெறி உணர்வாலும் கூறப்படும் இட்டுக்கட்டப்பட்ட, பொய்யான கருத்து.
செந்திலான் கூறியது...
// //இவர்கள் யாரும் இப்பொழுது கட்சியில் இல்லை ஏன்?// //
சிலர் கட்சிமாறி ஓடுவதற்கு பல காரணங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். கட்சி மாறுவது இயல்பான செயல், எல்லா கட்சிகளிலும் நடக்கும் நிகழ்வு. இதையெல்லாம் ஒரு கட்சி மீதான விமர்சனமாகக் கூற முடியாது.
வட மாவட்டங்களில் சாதி மோதல்கள் கடந்த கால நிகழ்வாகிவிட்டன. அத்தகைய ஒரு மாற்றத்திற்கு பா.ம.க வழிவகுத்திருக்கிறது. எப்போதாவது விதிவிலக்காக நடக்கும் ஒன்றிரண்டு நிகழ்வுகளைக் கொண்டு - கூட்டமே சாதி வேறிபிடித்தக் கூட்டம் என்று குற்றம் சாட்ட இயலாது.//
சாதிய மோதல்களுக்கான ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் விரைவில் வருகிறேன் திருமாவளவன் பேசியது ஜூனியர் விகடனில் வந்திருந்தது அதை ஆன்லைன் இல் தேடி வருகிறேன் கிடைத்தவுடன் உங்களுக்கு தருகிறேன்.
வன்னியரும் ஏன் முதல்வராகக் கூடாது? // நான் வன்னியர் முதல்வராக வரக் கூடாது என்று எங்கேயும் கூறவில்லை.வாருங்கள் வரவேற்கிறேன் தமிழன் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன கவலை? மற்ற மாநிலங்களில் பெரிய சாதியினர் எனப்படுவோர் தங்களுக்கு என சாதி கட்சிகளை தொடங்கவில்லை அவர்கள் இருககிற காட்சிகளில் தான் தலைவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தனியாக கட்சி நடத்தும்போது மற்றவர்கள் எப்படி வாக்களிப்பார்கள்? வன்னியன் வாக்கு அந்நியனுக்கு இல்லை என்றால் அந்நியன் வாக்கு வன்னியனுக்கு இல்லை என்றும் ஆகி விடுமே? அப்புறம் எப்படி நீங்கள் பெரும்பான்மை பெற முடியும் ?
//இது கற்பனையான, வன்னியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் சாதிவெறி உணர்வாலும் கூறப்படும் இட்டுக்கட்டப்பட்ட, பொய்யான கருத்து.//
எனக்கு வன்னியர்கள் மேல் எந்த காழ்புணர்வும் இல்லை.எனக்கு நெருங்கிய நண்பர்களில் சிலர் வன்னியர்கள்.அவர் பங்குதாரர் இல்லை என்று நீங்கள் மறுத்திருக்கலாம். இதற்கும் சாதி வெறிக்கும் உணர்வுக்கும் என்ன தொடர்பு?
கருத்துரையிடுக