Pages

செவ்வாய், டிசம்பர் 13, 2011

முல்லைப்பெரியாறு சிக்கலுக்கு அதிரடித்தீர்வு: அன்று சொன்னதை இன்று செய்வாரா முதலமைச்சர்?


மலையாளிகளின் கதை, திரைக்கதை, வசனம்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற கட்டுக்கதையைப் பரப்பி, ஒரு தற்காலிக ஏற்பாடாக அணையின் உயரம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் செலவில் அணை பலப்படுத்தப்பட்ட பின்னர் அணையின் உயரத்தை மீண்டும் உயர்த்த (ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு மாறாக) கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 27.2.2006 ஆண்டு ஆணயிட்டுள்ளது.
மலையாளிகளின் கதை, திரைக்கதை, வசனம்
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது? ஆனால், முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரும்போதெல்லாம் - அணையை உயர்த்தாமல் விட்டுவிடுகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு நினைத்தால் அணையின் நீர்த்தேக்கும் உயரத்தை 142 அடிக்கு இப்போதும் உயர்த்த முடியும்.

கேரளாவிடம் அதற்கு புரியும் மொழியில் பேச வேண்டும். கேரளாவுக்கு புரிந்த ஒரே மொழி 'அடாவடி'தான். எனவே, தமிழ்நாடு அதிரடியாக செயல்பட்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவது ஒன்றுதான் தீர்வாக இருக்கும்.

இதுகுறித்து 15.11.2009 அன்று கருத்து தெரிவித்த, இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், செல்வி. ஜெயலலிதா: 

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு கையில் இருக்கும் போது - ஒரு உள்ளூர் (கேரள) சட்டத்துக்கு கருணாநிதி ஏன் பயப்பட வேண்டும்?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் மூன்று பருவமழை காலங்கள் வந்து, மூன்று முறையும் தண்ணீர் அணையை கடந்து போய்விட்டது. அணையை 142 அடியாக உயர்த்தும் அதிகாரம் இருந்தும் கருணாநிதி தவற விட்டுவிட்டார்" என்று கூறியுள்ளார்.

இப்போது புதிய முதல்வரின் காலத்திலும் மழை வந்தது, ஆனால், அணை உயரவில்லையே! அது ஏன்?

இன்றைய முதல்வரின் அன்றைய அறிக்கை இதோ:
Why is Tamil Nadu obeying Kerala law on Mullaperiyar: Jayalalithaa

15. 11. 2009

"She alleged the Tamil Nadu government did not lower the dam shutters to raise the storage level to 142 ft, despite being armed with a Supreme Court order.

In a statement issued here Sunday, Jayalalithaa citing the apex court's order in 2006 said: "Not one but three monsoons have brought in water into the Mullaperiyar reservoir."

""By the time the rains came and water flowed into the Mullaperiyar reservoir, the minority regime headed by Karunanidhi was in power in Tamil Nadu. It was up to this government to lower the gates of the dam and increase the level of water to 142 feet and give effect to the apex court's order." She charged that "for reasons best known to Karunanidhi himself", he did not give the orders for this. 

She wondered since when was the Tamil Nadu chief minister bound to follow laws enacted by the Kerala government. She posed: "When Karunanidhi had the Supreme Court's order to back him, why did he give credence to a local law of the Kerala government."

http://www.deccanherald.com/content/35989/why-tamil-nadu-obeying-kerala.html

8 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

முன் பின் விளைவுகளை யோசிக்காது தான் நினைப்பதை சாதித்துக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மனம் வைத்தால் செய்துக்காண்பித்து நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்பதில் எவ்வித ஐயமில்லை. ஆனால் அவர் மலையால நம்பூதிரிகள் / ஜோதிடர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர்களின் வாக்குபடி தான் (கண்ணகி சிலை அகற்றல் உட்பட) நடக்கின்றனர் என அரசல் புரசல்களாக தமிழகத்தில் வதந்தி உண்டு. ஆதலால், அன்று சொன்னதை இன்று செய்வாரா என அவரைக் கேள்வி கேட்காமல் ஆதங்கத்துடன் எதிர்நோக்குகின்றோம்!

Unknown சொன்னது…

பதவியில் இருக்கும்போது ஒன்றும், இல்லாத போது வேறொன்றும் பேசுவது என்பதது புதிதல்ல. அவர் சொன்னதைச் செய்தால் நல்லதுதான். ஆனால் அவ்வளவு சுலபமாகச் செய்ய முடியுமா செய்வாரா என்பது தெரியவில்லை.

அருள் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@Rathnavel
@நெல்லி. மூர்த்தி
@நண்டு @நொரண்டு -ஈரோடு
@அப்பு

Unknown சொன்னது…

நல்ல பதிவு! நல்ல கேள்வி!

புலவர் சா இராமாநுசம்

அருள் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@புலவர் சா இராமாநுசம்

அருள் சொன்னது…

அப்பு கூறியது...

//அவ்வளவு சுலபமாகச் செய்ய முடியுமா செய்வாரா என்பது தெரியவில்லை.//

நடமுறையில் சாத்தியமா என்பதைவிட, அதைநோக்கிய முயற்சி முதன்மையானதாகும். முல்லைப்பெரியாறு அணையை உடைப்பது சாத்தியமா, முடியுமா என்றெல்லாம் கேரளத்தவர் எவரும் கேள்வி கேட்காமலேயே முயற்சிக்கின்றனரே?

தமிழ்நாடு நீண்ட காலமாக "தாமாகவே முன்வந்து சீரழிந்து போகிறது." - இந்த ஏமாளித்தனமான தாராளமனசுக்கு முதலில் முடிவுகட்டவேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அதனை நிறைவேற்ற அப்போதைய முதல்வர்கள் (இரண்டும் பேரும்) முன்வரவில்லை. இதுகுறித்து கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது - கேரளத்துடன் நல்லுறவு முக்கியம் - என்றார். அதன் பலனைதான் இப்போது அனுபவிக்கிறோம்.

தாறுமாறு சொன்னது…

Arul,

I am a bit surprised to read this post. When hearings for the present round in the SC commenced, the judges ordered that the status quo with respect to the water level be maintained, i.e. 136 ft. During the first week of December when the TN govt pleaded that politicians of Kerala should be restrained from making false claims about the safety of the dam, the judges observed that why the water level had been allowed to exceed 136 ft. (It was 137.5 ft on the day of the hearing) prompting a cause for fear in Kerala. When the present situation is like this, now even if the political will is available, water level can't be raised. This is the sad reality. It would go against the apex court order and weaken our case. I was under the impression that you normally followed court proceedings diligently.