Pages

வெள்ளி, மார்ச் 23, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: தொடரும் இந்திய சதி!-இதோ ஆதாரம்!!

இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றியில் ஒரு கரும்புள்ளியாக பங்கெடுத்துள்ளது இந்தியா!

இந்த தீர்மானத்தினை நீர்த்துப்போக இந்தியா முயன்றதாகவும், அதில் ஓரளவு வெற்றிபெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா முதலில் முன்மொழிந்த தீர்மானத்தில் (அதனை இங்கே காண்க)  "ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்" (the Government of Sri Lanka to accept) என்கிற (ஒப்பீட்டளவில் உறுதியான) வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

ஆனால், இதனை இந்தியா தலையிட்டு: "ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்" (in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka ) என்று மாற்றியுள்ளது.

அந்த மாற்றத்தை இங்கே காணலாம்.
Oral Revision-Promoting Reconciliation and Accountability in Sri Lanka
இந்தியா இத்தகைய சதியில் ஈடுபட்டதை பத்திரிகை செய்திகள் உறுதிசெய்கின்றன. கூடவே, இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது (UNHRC: India dilutes censure motion before voting with West against Sri Lanka)

அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியது ஆறுதல் அளித்தாலும் இந்தியா கொண்டுவந்த திருத்தம் வேதனை அளிக்கிறது. இது தீர்மானத்தின் நோக்கத்தைச் சிதைத்துள்ளதன்மூலம், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா வெளியேறியிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் தீர்மானத்தின் நோக்கத்தை இந்தியா சீர்குலைத்துள்ளது.

இத்தகைய குறிப்பிடத்தக்க பின்னடைவு இருந்தாலும், ஒப்பீட்டளவில் இந்த தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றிதான்.

நீதியை நோக்கிய நமது பயணம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் மாபெரும் வெற்றி-அதிகாரப்பூர்வ வாக்களிப்பு முடிவுகள் இதோ!
ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

4 கருத்துகள்:

அன்பு துரை சொன்னது…

என்ன செய்ய.. கழுதைக்கு வாக்கப்பட்டா உதைபட்டுத்தான ஆகனும்.. அடுத்த தேர்தல் வரைக்கும்...

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்1வரைவுரை மாற்றங்கள் என்பது ராஜதந்திர ரீதியாக நிகழும் ஒன்றுதான்.அமெரிக்க,இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தில் கூட இந்த மாதிரி இழுபறிகள் நிகழ்ந்துள்ளது.இறுதி வரைவின் விளைவு என்ன என்பதே முக்கியம்.உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் இந்தியாவின் தீர்மான ஆதரவு, அமெரிக்க தீர்மானத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கையின் காய் நகர்த்தல்கள் என்ன என்பது மட்டுமே உற்று நோக்க வேண்டிய ஒன்று.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இத்தகைய குறிப்பிடத்தக்க பின்னடைவு இருந்தாலும், ஒப்பீட்டளவில் இந்த தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றிதான்.


நீதியை நோக்கிய நமது பயணம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்.

பகிர்வுக்கு நன்றிகள்..

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...எப்படியெல்லாம் ஏமாற்று வித்தைகளை எல்லோருமாகவே சேர்ந்து செய்கிறார்கள் !