Pages

சனி, பிப்ரவரி 23, 2013

மறுபடியும் குமுதம் ரிப்போர்ட்டரின் குறுக்குபுத்தி: செய்தியை அருவருப்பாக்கும் அவலம்!

குறுக்குபுத்தி 1: குஷ்பு மீது வன்மம்

குமுதம் ரிப்போர்ட்டர் நடிகை குஷ்புவை "இன்னொரு மணியம்மை" என்று அநாகரீகமாக விளித்து தன்னை ஒரு சாக்கடை பத்திரிகை என மெய்ப்பித்தது. இப்படி கேவலமாக செய்தி வெளியிட்டதற்கு அடுத்த இதழில் (24.02.2013), வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக - மீண்டும் குஷ்புவை தாக்கும் விதமாக தமிழருவி மணியனின் பேட்டியை வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.
அதில் "திமுகவில் குஷ்பு தவிர்க்க முடியாத சக்தி. 'உன் தலைக்கு மேல் வேண்டுமானால் பறவை பறக்கட்டும். ஆனால், அது உன் தலையில் கூடு கட்டிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்' என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. கருணாநிதி, பறவை மேலே பறக்க மட்டுமல்ல...தலையில் கூடுகட்டிக் கொள்ள அனுமதித்து விட்டார்" - என்று தமிழருவி மணியன் பேட்டியில் கூறியுள்ளார். (இந்த பழமொழிக்கும் இப்போதைய குஷ்பு சர்ச்சைக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழருவி மணியன்தான் விளக்க வேண்டும்)

திமுகவில் நடக்கும் குஷ்பு தொடர்பான சர்ச்சை என்பது தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சினை. அது அடிதடியாக மாறுவது மட்டுமே மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய தகவல் ஆகும். அதை விட்டுவிட்டு - குமுதம் ரிப்போர்ட்டரும் தமிழருவி மணியனும் 'ஒளிவுமறைவாக' பெண்களை இழிவுபடுத்தி பேசுவது நாகரீகம் அல்ல.

குறுக்குபுத்தி 2:மருத்துவர் அய்யா மீது வன்மம்

நடிகை குஷ்புவை "இன்னொரு மணியம்மை" என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதியதைக் கண்டித்து "நான்காவது தூண்கள் நாகரீகம் தவறக் கூடாது" என அறிக்கை வெளியிட்டார் மருத்துவர் இராமதாசு அய்யா.

இதற்கு பதிலடியாக குமுதம் ரிப்போர்ட்டர் (24.02.2013) இதழில் "ஸ்பாட் லைட்" என்ற தலைப்பில் "1 ஆக்ஷன் - 4 ரியாக்ஷன்" என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். நகைச்சுவை என்ற போர்வையில் குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு அருவெறுப்பான, உண்மைக்கு புறம்பான கருத்தை அநாகரீகமாக வெளியிட்டுள்ளது.

14 வயது, 15 வயது சிறுமிகள் எல்லாம் காதல் வலையில் வீழ்வது குறித்து "கல்வி, வேலை போன்ற வாழ்வின் அடித்தளங்களை கட்டமைக்க வேண்டிய வயதில் காதல் நாடகங்களால் சீரழிவதைத் தடுக்கும் வகையில், 21 வயதுக்கு முன்பு காதல் திருமணங்கள் வேண்டாம். 21 வயதுக்கு பின் வைத்துக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறிவருகிறார்.

மருத்துவர் அய்யா அவர்களின் கருத்தில் "21 வயதுக்குப் பின்" என்பதை "வயதான பின்" என்று மாற்றி மிகக் கேவலமாக சித்தரித்துள்ளது குமுதம் ரிப்போர்ட்டர். அதனைக் கீழே காண்க:

"21 வயதுக்குப் பின்" என்பதை, "வயதான பின் காதல் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியதாக (அதாவது 50 வயது, 60 வயதில் என்கிற பொருளில் கூறியதாக) திரித்து -கேவலப்படுத்துகிறது குமுதம் ரிப்போர்ட்டர்.

அதில் ஒரு ரியாஷன் மிகக் கேவலாக "அய்யாவுக்கு புதுசா எதுவும் சிக்கிருச்சு போல" என்று கூறுகிறது.

இதுதான் ஒரு அரசியல் தலைவரை நகைச்சுவையாக விமர்சிக்கும் லட்சணமா? இதுதான் பத்திரிகை தர்மமா? வெட்கக்கேடு.
பத்திரிகை சுதந்திரத்தை மக்கள் மதிக்கவே விரும்புகிறார்கள். அந்த சுதந்திரம் எல்லை மீறாமல் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பத்திரிகையாளர் சங்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டால் அதற்காகப் போராடும் அமைப்புகள் - இதுபோன்ற அநாகரீகங்களைத் தடுக்கவும் முன்வர வேண்டும்.

6 கருத்துகள்:

srinivasansubramanian சொன்னது…

தனக்கு பிடிக்காதவர்கள் அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்கள் என்று பத்திரிக்கையின் பக்கங்களை மஞ்சள் ஆக் குகிறவர்கள் தேவையானால் விபாச்சாரத்தில் [அதுதான் காரியம் ஆக கூட்டியும் கொடுப்பார்கள் என்பதைத்தான் மறை முகமாக சொல்லுகிறேன.]இறங்கவும் தயங்க மாட்டார்கள்.

அதற்கு குமுதம் ரிப்போர்ட்டரே சாட்சி.

பெயரில்லா சொன்னது…

அரசு விழாக்களில் நிருபர்கள் என்ற போர்வையில் இவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே... பிச்சைக்காரர்கள் போல சோற்றுக்கும் தேநீருக்கும் அலைவார்கள் பாருங்கள்..மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களுக்கு மாப்பிள்ளை உபச்சாரம் செய்ய வேண்டும்.இல்லையெனில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதிவிடுவார்கள்.இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பத்திரிக்கை தர்மமல்ல..சீனி, சுப்பிரமணியன் அவர்கள் சொன்னது தான்.

சிவக்குமார் சொன்னது…

குமுதம் மணந்தால்தான் சந்தேகப்பட வேண்டும், நாறுவதுதான் அதனியல்பு.

காதல் குறித்து ராமதாசு அய்யாவின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. ஆனால் அதற்கான எதிர்வினைகள் படு கீழ்த்தரமானவை.

திவ்யாஹரி சொன்னது…

குஷ்பு சர்ச்சையில் பெண்கள் ஏதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதா நண்பரே? யாரும் குரல் கொடுத்தா மாதிரி தெரியலையே.. பத்திரிக்கைக்கும் சென்சார் வேணும்னு தோணுது.

புரட்சி தமிழன் சொன்னது…

சொல்கின்ற கருத்து என்ன என்று யாரும் பார்பதில்லை யார் சொல்கிறார்கள் என்றுதான் அனைவரும் பார்கிறார்கள் நல்ல கருத்துக்களை மருத்துவர் ராமதாஸ் சொன்னால் அதை வெகுவானவர்கள் வெளிப்படையாக ஏற்கும் மனனிலையில் இல்லை என்பது தான் உண்மை அதற்கு இப்படி அய்யோகியத்தனமாக நையாண்டி செய்கிறார்கள்..

சிரிப்புசிங்காரம் சொன்னது…

என்னமோ மஞ்சள் துண்டுகாரனும், கருப்புத் துண்டுக்காரனும் ரொம்ப யோக்கியமா பேசுறமாதிரியும் குமுதம் மட்டும் அயோக்கியத்தனமா பேசுறமாதிரியும்...ஆபாசத்தின் அடிப்படையே மஞ்சளும், கருப்பும்தான்....