Pages

வெள்ளி, ஜூன் 14, 2013

எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி!

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக ஒரு தொடரை வெளியிடுகிறது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்.

"இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!" என தலைப்பிட்டு 13 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழில் அந்த பதிலடிக் கட்டுரை வெளியாகியுள்ளது.

"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என அந்த பதிலடிக் கட்டுரை முகப்பில் கூறப்பட்டுள்ளது.

நான் எனது பதிவில் "புளியந்தோப்பு கலவரம் 1921" பற்றி குறிப்பிட்டு "தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ள ஒரு வரலாற்று சம்பவத்தையும் அதில் நீதிக்கட்சியின் பங்களிப்பையும் திராவிட இயக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஏன் என்று தெரியவில்லை!" எனக் கேட்டிருந்தேன்.

எனது இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக "இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண்டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத்தியாயம் இடம்பெறும். எம் மனத்திலிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச்சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா?" என்றும் கூறியுள்ளார்கள்.

எனது வலைப்பதிவுக்கு விடுதலையின் பதிலடி இதோ:

இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு 
1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி! (13.06.2013)

1 கருத்து:

வாசகன் சொன்னது…

விடுதலை மறுப்பு கட்டுரை எழுதியதற்கு எழுதாமலே இருந்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட மக்களை விரட்ட வேண்டும் என்பதை அப்புறப்படுத்துதல் என்று ஒரு வரியில் முடித்து கொண்டது. அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லவே இல்லை.