Pages

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

தமிழக தேர்தல் 2016: மக்கள் மனநிலையைக் காட்டும் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ALLEN & MILLER மற்றும் Nature’s Watchdog என்ற நிறுவனகள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 2, 2016 வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பில் தமிழக மக்களின் மனநிலை தெளிவாக கணிக்கப்பட்டுள்ளது.  கருத்துக்கணிப்பின் விவரங்கள் இதோ:

மார்ச் 12-ஆம் தேதியிலிருந்து மார்ச் 26 வரை, தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 120 சட்டமன்ற தொகுதிகளில், 10800 பேரிடம் அரசியல் சுழல், பிரதான பிரச்சனைகள், மற்றும் தலைவர்கள் பற்றிய கருத்து கணிப்பு விவரங்கள் பின்வருமாறு:
1. மது, ஊழல், நிர்வாக சீர்கேடு, விவசாயிகளின் நலன், பிரதான பிரச்சனைகளாக பார்க்கபடுகின்றன.

2. இந்த தேர்தலின் பிரதான முதல்வர் போட்டி வேட்பாளர்களாக ஜெயலலிதாவும், அன்புமணியும் திகழ்கின்றனர்.

3. பாமகவின் அன்புமணிக்கு எதிர்கட்சி தலைவராகும் வாய்ப்பு உள்ளது.

4. தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் முதல்வராக வாய்ப்பளிக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்

1. தமிழகத்தின் மாவட்ட அளவில் மது தலையாய பிரச்சனையாக 51.2% பேரால் பார்க்கபடுகிறது. ஊழல் 29.6% ., நிர்வாக சீர்கேடு 11.3% என்றும், கருத்து இல்லை என்று 7.9% பேர் தெரிவித்துள்ளனர்.

2 .நகரங்களை பொருத்தமட்டில் அனைத்து பிரச்சனைகளை காட்டிலும் ஊழல் 40.6% பேரால் முதன்மை பிரச்சனையாக பார்க்கபடுகிறது.

3. இளையதலைமுறை வாக்காளர்கள் பொதுவாக ஊழலையும், நிர்வாக சீர்கேட்டையும் முதன்மை பிரச்சனையாக பார்க்கின்றனர்.

4. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை திமுக 19.5%., அதிமுக 0.4%., பாமக 55.7%., தேமுதிக 6.2%., மதிமுக 8.2%., கொண்டு வருவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
5. நகரங்களை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக பாமகவுக்கு 57.5%., பேர் மதுவிலக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

6. தமிழகத்தில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மாவட்டங்கள் அளவில் இல்லை என்று 74.1%., பேரும் ஆம் என்று 23.3%., பேரும் கருத்து இல்லை என்று 2.7%., பேரும் தெரிவித்துள்ளனர்.

7. அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்று மாவட்டங்கள் அளவில் 54.1%., பேரும், இல்லை என்று 27.7% பேரும், கருத்து இல்லை என்று 18.2% பேரும் தெரிவித்துள்ளனர்.

8. நகரங்களில் 63% பேர் ஆம் என்றும், 19.8% பேர் இல்லை என்றும் 16.4% பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

9. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்/கட்சிக்கோ வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மாவட்டங்கள் அளவில் 80.4% ஆம் என்றும், 10.6% பேர் இல்லை என்றும் ,கருத்து இல்லை என்று 9.0% பேரும் தெரிவித்துள்ளனர்.

10. நகரங்கள் சராசரியில் 81.0% பேர் இல்லை என்றும் ,9.5% பேர் ஆம் என்றும், 9.6% பேர் கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

11. மாவட்டங்கள் அளவில் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்ற மனநிலை உள்ளதா? என்ற கேள்விக்கு ஆம் என்று 52.5% பேரும், இல்லை என்று 32.0% பேரும் கருத்து இல்லை என்று 15.6% பேரும் தெரிவித்துள்ளனர்.
12. நகரங்களிலும் பெருவாரியாக 58.7% பேர் ஆம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

13. இளைய தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் இதே மன நிலை அதிகம் காணப்படுகிறது.

14. இலவச திட்டங்கள் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என 46.6% பேர் மாவட்ட அளவிலும் 42% பேர் நகரங்கள் அளவிலும், இல்லை என்று 44.4% மாவட்ட அளவிலும், 48.5% பேர் நகர அளவிலும் கருத்து இல்லை என 9% பேரும் தெரிவித்துள்ளனர்.
15. தமிழக முதல்வராக செல்வி ஜெயலலித்தாவின் செயல்பாடு குறித்து 41% பேர் நன்று என்றும், 50.1% பேர் மோசம் என்றும் 8% பேர் கருத்து இல்லை என்று மாவட்டங்கள் அளவில் தெரிவித்துள்ளனர்.
16. நகரங்களில் 60.19% பேர் மோசம் என்றும், 29.6% பேர் நன்று என்றும், 11.4% பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

17.சட்டசபை எதிர்கட்சி தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு குறித்து 8.9% நன்று என்றும், 88.6% பேர் மோசம் என்றும், 2.5% பேர் கருத்து இல்லை என்று மாவட்டங்கள் அளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.
18. நகரங்களில் 11.3% பேரும், மோசம் என்று 80.7% பேரும், 8.0% கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

19. தமிழகத்தில் முதல்வராக இந்த முறை யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று நீங்கள் கருதிகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜெயலலிதா 35.9% பேரும், கலைஞர் 24.4% பேரும், விஜயகாந்த் 7.9% பேரும், அன்புமணி இராமதாஸ் 27.6% பேரும் மற்றவர்கள் 4.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: