இது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவையில் உறுதி கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் அனைத்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாலும், காங்கிரஸ் கட்சியிலேயே பலர் இதற்கு ஆதரவு தெரிவித்ததாலும் அரசு பணிந்துள்ளது.
1960களின் கலேல்கர் குழுவும், 1980களின் மண்டல் குழுவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உடனே தேவை என்று பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இக்கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. எனினும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க, மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட நாளாக போராடிவரும் கட்சி பாட்டளி மக்கள் கட்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தீர்ப்பும் பெற்றுள்ளது பா.ம.க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக