"திரிசங்கு நிலையில் பாமக."
"பாமக'வை திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே புறக்கணிக்கும். எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது."
"தி.மு.க பக்கம் போனால் 22 இடம், அதிமுக பக்கம் போனால் 26 இடம் கிடைத்தாலும் கிடைக்கும்"
- என்றெல்லாம் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், இப்போது திமுக பாமக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு நாடாளுமன்ற மேலவை இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இதுதான் முதல் கூட்டணி அறிவிப்பு. தமிழக அரசியலில் இதுதான் முதல் பெரிய அளவிலான உடன்படிக்கையும் கூட.
பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் இப்போது அவர்களது முகத்தை எங்கே வைத்து ஒடி ஒளியப்போகிறார்கள்?
"பாமக'வை திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே புறக்கணிக்கும். எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது."
"தி.மு.க பக்கம் போனால் 22 இடம், அதிமுக பக்கம் போனால் 26 இடம் கிடைத்தாலும் கிடைக்கும்"
- என்றெல்லாம் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், இப்போது திமுக பாமக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு நாடாளுமன்ற மேலவை இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இதுதான் முதல் கூட்டணி அறிவிப்பு. தமிழக அரசியலில் இதுதான் முதல் பெரிய அளவிலான உடன்படிக்கையும் கூட.
பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் இப்போது அவர்களது முகத்தை எங்கே வைத்து ஒடி ஒளியப்போகிறார்கள்?
21 கருத்துகள்:
//
Arun Ambie சொன்னது…
http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_5433.html
உங்கள் கருத்து/பதில்/எதிர்வாதம் என்ன?
//
Arun Ambie சொன்னது…
// http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_5433.html
உங்கள் கருத்து/பதில்/எதிர்வாதம் என்ன?//
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பதிவில் பாமக'வுக்கு 26 இடங்கள் கிடைக்கக்கூடும் என்பதாக இன்று எழுதப்படுள்ளது. ஆனால், அது 31 + 1 என்பதாக முடிந்துள்ளது.
பொதுவாக - காங்கிரசு, விசயகாந்த் கட்சிகளுக்கு அதிக இடங்களை உத்தேசமாக எழுதுவதும், அதுவே பாமக'வுக்கு மட்டும் எப்போதும் எல்லா பத்திரிகைகளும் குறைவான இடங்களை உத்தேசமாக குறிப்பிடுவதும் ஏன்?
ஒரு கற்பனையளவில் கூட பாமக'வுக்கு அதிக இடங்கள் ஒதுக்க முடியாமல் பத்திரிகைகளைத் தடை செய்வது எது?
வன்னியர்களுக்கு எதிரான (தன்னிச்சையான) சாதிவெறியே இதன் பின்னணி என்று நான் கருதுகிறேன்.
//பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் இப்போது அவர்களது முகத்தை எங்கே வைத்து ஒடி ஒளியப்போகிறார்கள்?//
அருள்!சமநிலை விமர்சனம் செய்யுங்கள்.ராமதாஸின் குரங்காட்டமும்,மகனுக்கு சீட்டு கொள்கையும் தமிழகம் அறிந்த உண்மை.
இதில் ஆதிக்க சாதிவெறியாளர்கள் அவர்களது பத்திரிகைகள் என்பதெல்லாம் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு பார்க்கிற மாதிரி தெரிகிறது.
டோண்டுவை விமர்சனம் செய்வதிலும் கூட உங்கள் நிலைப்பாடை சந்தேகிக்க வைக்கிறீர்கள்.
வளருங்கள் இன்னும்!
நண்பர் அருள்,
சகிக்கவில்லை உங்கள் பதிவு. டோண்டு ராகவன் பதிவை படித்து போல ஒரு அசூசையான உணர்வு வருகிறது. அரருக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவருக்கு இருப்பது பார்பன குடுமி, உங்களுக்கு வன்னிய குடுமி. அன்புமணி அமைசாராக இருந்து அடிய ஆட்டம் மறந்து விட்டதா உங்களுக்கு? இவர்களின் கட்சி, வன்னிய குல மக்கள் முன்னேற்றத்துக்கு எந்தவகையில் உதவியது? ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிவந்த போது, சிலர், ராசாவின் தலித் பின்னணியை கரணம் காட்டி, அதனால் தான் அவர் மேல் பலி சுமத்தபடுகிறது என்று வக்காலத்து வாங்கியது போலவே உங்கள் இடுகை இருக்கிறது. நீங்கள் சமுக நீதிக்காக குரல் கொடுக்கிரிர்களா அல்லது வன்னிய ஊதுகுழல் ஊதுகிரிர்களா?
@ராஜ நடராஜன்
சமநிலை விமர்சனம் செய்யுங்கள் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்? என்று தெரியவில்லை.
மற்ற கட்சிகளை விமர்சிப்பது போன்று பாமக'வும் விமர்சிக்கப்பட்டால் அதில் குற்றம் காணும் தேவை இருக்காது. ஆனால், அவ்வாறான சமநிலை விமர்சனம் இல்லை என்பதுதான் எனது கருத்து.
Swamy சொன்னது…
// //நீங்கள் சமுக நீதிக்காக குரல் கொடுக்கிரிர்களா அல்லது வன்னிய ஊதுகுழல் ஊதுகிரிர்களா?// //
சமூக நீதிக்கு எதிரானவர்கள் பா.ம.க'வை குறிவைத்து தாக்குகின்றனர் என்பதால்தான் அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன். பத்திரிகைகள் என்பவை உண்மையையும் பக்க சார்பற்ற செய்திகளையும் வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழ்நாட்டில் நடப்பது என்ன? ஒவ்வொருமுறையும் பத்திரிகைகள் பா.ம.க'வை மட்டும் தனியாக தாழ்த்தி மதிப்பிடுவது ஏன்?
ஒவ்வொரு தேர்தலிலும் 'பாமக எத்தனை இடங்களில் போட்டியிடும் - எத்தனை இடங்களில் வெற்றி பெறும்' என்று பத்திரிகைகள் நடப்பதைவிட குறைவானதொரு எண்ணிக்கையை எடுத்து விடுகின்றன. அதாவது, பாமக'வுக்கு இத்தனை இடங்களே அதிகம் என்பதாக பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன.
அதேசமயம் மற்ற கட்சிகளை மதிப்பிடும்போது - அவ்வாறு செய்வது இல்லை. இதற்கு பின்னால் இருப்பது சாதிவெறி என்று ஏன் கூறக்கூடாது?
//சமநிலை விமர்சனம் செய்யுங்கள் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்? என்று தெரியவில்லை.//
அருள்!மறுமொழி என்ன சொன்னீர்கள் என்று பார்க்க வந்தால் எதைக்குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை என கணக்கு வாத்தியார்கிட்ட மாணவன் சொல்கிற மாதிரி சொல்றீங்களே:)
//பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் //
அடைப்பானில் உள்ள உங்க மனோபாவம் தவறுன்னு சொல்ல வந்தா மறுபடியும் எடுத்துக்கொடுக்கிறீங்களே!
சரி!அத விடுங்க! ப.ம.க(பரிதாப மக்கள் கட்சி) கூட்டணி வெல்லுமா?
not only Pmk changing his alliance in every elections ..think about DMK and ADMK they are also changing alliances nwith national parties in every elections..
Mr.Natarajan PMK done a lot of things to Vanniyars go to the north side villages you will comne to know about the PMK`s contibution.
நண்பர் அருள்,
சகிக்கவில்லை உங்கள் பதிவு.
வன்னியர் என்றால் அந்த ராமதாசு கும்பல் மட்டும் அல்ல. போன தேர்தலில் அடிபட்டும் புத்திவரவில்லை ராமதாசுக்கு.அன்புமணியின் எம்.பி. பதவிக்காக மட்டுமே இப்போது கருணாநிதியுடன் உடன்பாடு.
வெட்கம்,மானம், ரோசம் ராமதசுக்கு மட்டும் இல்லையா, இல்லை அந்த கும்பலில் யாருக்கும் இல்லையா?
சோரம் போவது தப்பில்லை என்று எந்த வன்னியனும் நினைக்கமாட்டான்.
இந்தத் தேர்தலுக்குப் பின் உண்மையான வன்னியர் தலைவன் வருவான். ராமதாசு போன்ற தகரடப்பா கும்பல் துடைத்தெறியப்படுவர்.
ராஜ நடராஜன்
// // ப.ம.க(பரிதாப மக்கள் கட்சி) கூட்டணி வெல்லுமா?// //
வெல்லும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால், அதை கணித்துச்சொல்ல நான் சோதிடன் அல்ல. மே மாதம் வந்தால் தெரிந்துவிடப்போகிறது.
மற்றபடி, பரிதாபப்பட்ட மக்களுக்கான கட்சி என்று திருத்தி வாசிக்கவும். பாட்டாளி மக்கள் பரிதாபமான நிலையில் இருப்பது உண்மைதானே!
தந்தை பெரியார் கருப்பு நிறத்தை கொடியாக, உடையாகக் கொண்டது திராவிட மக்களின் வாழ்க்கை இருளை போக்கத்தானே. அதுபோல இதையும் எடுத்துக்கொள்ளலாம்.
@ராவணன்
கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது இப்போதைய இந்திய தேர்தல் முறையில் சாத்தியமில்லாதது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செயலலிதா கட்சியுடன் கூட்டணி வைத்தபோது பாமக'வுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அந்த அம்மையார் கொஞ்சமும் மதிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரோடு கூட்டணி வைத்துக்கொண்டால் மட்டும் அது - மானம், ரோசம் உள்ள செயலாக இருந்திருக்குமா?
விடுதலை அடைந்த இந்தியாவில் ராமசாமி படையாட்சியாரும் மாணிக்கவேல நாயகரும் காங்கிரசு கட்சியில் இணைந்த பிறகு வன்னியர்கள் அரசியல் அநாதைகளாகத்தான் கிடந்தனர். மருத்துவர் அய்யா அவர்கள் வந்த பின்புதான் தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தில் இழிநிலையை வன்னியர்கள் கூட உணர்ந்தனர். அதன் பின்னர்தான் அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக அடையாளம் காணப்பட்டனர்.
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மாற்றாக வேறொரு தலைவர் வன்னியர்களுக்கு தேவைப்படும் அவசியம் எதுவும் இப்போது இல்லை.
//not only Pmk changing his alliance in every elections ..think about DMK and ADMK they are also changing alliances nwith national parties in every elections..
Mr.Natarajan PMK done a lot of things to Vanniyars go to the north side villages you will comne to know about the PMK`s contibution. //
Do I ever supported the political attitude of the two major parties?
The argument here is the so called ஆதிக்க சாதிவெறியாளர்கள் அவர்களது பத்திரிகைகள்.
Ifever PMK contributed to the society above the Vanniar identity to be appriciated.Does it?
Damn man! I hate segregating the whole society of Tamil into broken groups.That's the root cause for still we are not able to achieve certain common goals inspite of voices raised.Thanks.
நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆதிக்க சாதியினர் யார் யார் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று இங்கே சொல்ல தெம்பும் தெகிரியமும் இருக்கா உங்களுக்கு?
பெயரில்லா சொன்னது…
// //நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆதிக்க சாதியினர் யார் யார் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று இங்கே சொல்ல தெம்பும் தெகிரியமும் இருக்கா உங்களுக்கு?// //
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்க்கும் - மக்கள்தொகை விழுக்காட்டிற்கேற்ப இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கும் சாதிகளை ஆதிக்க சாதிகள் என்று கருதலாம்.
***அருள் சொன்னது…
@ராஜ நடராஜன்
சமநிலை விமர்சனம் செய்யுங்கள் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்? என்று தெரியவில்லை.***
* ஜெயலலிதாதான் தமிழனை ஆளத் தகுதி வாய்ந்தவர்.
* ஜெயலலிதா, தமிழர் நலனைக்காக்கவே காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை.
* ஜெயா டி வி ல ஆங்கில்கலப்பே இல்லை. கலைஞர் டி வி ல தமிழே இல்லை. சுத்தமான தமிழர் உணர்வைக் காட்டுவதுடன் தமிழை கட்டிக் காப்பது ஜெயா டி வி தான்
* அப்புறம் கருணாநிதியை திட்டோ திட்டுனு திட்டனும்.
* ஜெயாவுக்கோ, அ தி மு க வுக்கோ ஊழல்னா என்னனே தெரியாது, பாவம்!
இப்படியெல்லாம் நீங்க பிரச்சாரம் செய்தால் நடுநிலைமைனு நான் நினைக்கிறேன்!
***ராஜ நடராஜன் சொன்னது…
//not only Pmk changing his alliance in every elections ..think about DMK and ADMK they are also changing alliances nwith national parties in every elections..
Mr.Natarajan PMK done a lot of things to Vanniyars go to the north side villages you will comne to know about the PMK`s contibution. //
Do I ever supported the political attitude of the two major parties? ***
Yeah, you hate Jeya as much as you hate MK!
You also hate ADMK as much as you hate DMK!
Is that correct, Mr. Natarajan?
Or you prefer one over other? I am confused these days!
ராஜ நடராஜன் சொன்னது…
// //I hate segregating the whole society of Tamil into broken groups.That's the root cause for still we are not able to achieve certain common goals inspite of voices raised.// //
இந்திய விடுதலைக்கு முன்பு அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் சமூக விடுதலையே முதல் தேவை என்று கோரினார்கள். ஆனால், மற்றவர்கள் சுதந்திர இந்தியாவில் சமூக விடுதலை சாத்தியமாகும் என்ற பொய் வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர்.
தமிழர்களின் சாதி ஏற்றத்தாழ்வை அகற்றாமல், சாதிகளுக்கிடையே சமத்துவமேற்பட முயற்சிக்காமல் - பொத்தாம் பொதுவாக தமிழ்தேசியம், தமிழின முன்னேற்றம் என்று பேசுவது ஏமாற்று வித்தை. சாதிகளைக் கடந்த தமிழனாக காட்டிக்கொள்ள முயற்சிப்பது என்பது தமிழர்களுக்கிடையேயான சாதி ஏற்றத்தாழ்வை நீட்டிக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.
http://ragariz.blogspot.com/2011/02/blog-post_19.html
அன்புள்ள அருள்,
தெளிவான கருத்து. தைரியமாக நீங்கள் நினைப்பதை எழுதுங்கள்.
கூட்டணி இல்லாத அரசியல் இந்த பூமிப் பந்திலே, பரந்த இந்திய தேசத்திலே உள்ளதா நடராஜன் அவர்களே ?. கூட்டணிகள் சித்தாந்த அடிப்படையிலான கூட்டணிகளா. சித்தாந்த அடிப்படையிலான கூட்டணி என்றால் பாஜகவும், திமுகவும் எப்படி கூட்டணி சேர்ந்தன நடராஜன் அவர்களே ?
பாமக கூட்டணி மாறுவது பற்றி பேசுபவர்கள் ஏன் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மாறி மாறி பலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை பற்றி பேசுவதில்லை நடராஜன் அவர்களே ?
நடராஜன் அவர்களே,
திமுக நிரந்திரமாக ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறதா என்று சொல்லுங்கள். 1991ல் இடதுசாரிகள், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ், 2001ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி, சாதிக் கட்சிகளான புதிய நீதிக்கட்சி (முதலியார் கட்சி), மற்றொரு சாதிக்கட்சியான கண்ணப்பன் கட்சி, 2006ல் மறுபடியும் காங்கிரஸ், இடதுசாரிகள் என மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.
அதிமுக யோக்கியமான கட்சியா ? 1991ல் காங்கிரஸ், 1998ல் பாஜக, 2001ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், 2006ல் மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் என மாறி மாறி தான் கூட்டணி வைத்துள்ளது
நடராஜன் அவர்களே, கொள்கைப் பற்று மிக்கவர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் இடதுசாரிகளை பாருங்கள்.
1991ல் திமுக, 1996ல் மதிமுக, 2000ம் ஆண்டு அதிமுக, 2006ல் திமுக, 2011ல் அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். அவர்கள் யோக்கியமானவர்களா நடராஜன் ?
நடராஜன், அரசியலில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள் தான். பாமக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள் தான். பாமக நேர்மையான கட்சி இல்லை. திமுகவும் அப்படி தான். அதிமுகவும் அப்படி தான். ஆனால் பாமகவை மட்டுமே எதிர்ப்பது நியாயம் அல்ல. எல்லா கட்சிகளையும் எதிர்ப்பது தான் நியாயமானது
நடராஜன் - இதற்கு அடிப்படை காரணம் என்ன தெரியுமா ? அருள் சொன்ன ஆதிக்கச்சாதியினரின் சாதி வெறி
நன்றி அருள்
எ.டி.எம்.கே, டி.எம்.கே இரண்டு பேரிடமும் நம்பிக்கை துளியும் இல்லை. ராமதாஸ் மீது ஒரு நல்ல எண்ணம் முன்பு இருந்தது. அதுவும் போய் பல காலம் ஆகி விட்டது. ஆனால் ராமதாஸ் விசயத்தில் பத்திரிகைகள் ஒரு தரப்பாக செயல்படுவது என்னமோ உண்மை தான்.
கருத்துரையிடுக