Pages

வியாழன், பிப்ரவரி 24, 2011

தேர்தல் விபச்சாரம்: மக்களவை தேர்தலிலும்தான்!


"விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!" என்று நான் ஒரு பதிவிட்டுருந்தேன். அதில்:

"காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது. 


அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.  தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை."

என்றும்

"எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?  ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்."

என்றும் கூறியிருந்தேன். மேலும், 1952 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொத்தம் 13 சட்டமன்ற தேர்தலிகளிலும் எப்படியெல்லாம் மாறிமாறி கூட்டணி அமைத்திருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அதற்கு, திரு. வால்பையன்:

"ஆனா பா.ம.க மட்டும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, ஊராட்சி தேர்தலுக்கு ஒரு கட்சின்னு கூட்டணி மாத்துதே! அதை ஏன் சொல்ல மாட்டிங்கிறீங்க!" 

என்று கேட்டிருந்தார். 

இதோ, 1952 முதல் தமிழ்நாட்டில் நடந்த 14 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி விவரங்கள்:

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடந்தது. காங்கிரசு கட்சி மற்றும் இந்திய பொதுவுடைமக் கட்சி ஆகியன முதன்மையான கட்சிகளாக இருந்த அத்தேர்தலில் - வன்னியர் கட்சிகளான ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களிலும், மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி 3 இடங்களிலும் தனித்து நின்று வென்றன. 


தமிழ்நாட்டில் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1957


காங்கிரசு கட்சி அரசியல் இயக்கமாகவும், திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 1962

காங்கிரசு கட்சி, திமுக, பார்வார்டு ப்ளாக், CPI, சுதந்திரா கட்சி ஆகியன போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் நான்காவது நாடாளுமன்ற தேர்தல் 1967

திமுக, சுதந்திரா கட்சி, CPI(M), முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.  காங்கிரசு மற்றும் CPI ஆகியன தனித்தனியாக போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1971

திமுக, காங்கிரசு கட்சி, பார்வார்டு ப்ளாக், CPI, முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி.

காமராசரின் நிறுவனக் காங்கிரசு, ராசாசியின் சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.

CPI(M) தனித்து போட்டி.

தமிழ்நாட்டில் ஆறாவது நாடாளுமன்ற தேர்தல் 1977

அ.தி.மு.க., காங்கிரசு, CPI கட்சிகள் கூட்டணி.

நிறுவன காங்கிரசு, சனதா கட்சி, தி.மு.க கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் 1980

திமுக, காங்கிரசு, முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க., சனதா கட்சி, காங்கிரசு (அர்சு) கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் எட்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1984

அதிமுக, காங்கிரசு, காந்தி காமராஜ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் 1989

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1996

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினோராவது நாடாளுமன்ற தேர்தல் 1998

அதிமுக, பாமக, பாசக, மதிமுக, சனதா கட்சி, தமிழக ராசீவ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1999

திமுக, பாமக, பாசக, மதிமுக கட்சிகள் கூட்டணி.

அதிமுக, CPI, CPI(M), காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதிமூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 2004

திமுக, பாமக, CPI, CPI(M), காங்கிரசு, ம.தி.மு.க கட்சிகள் கூட்டணி.

அதிமுக, பாசக கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினான்காவது நாடாளுமன்ற தேர்தல் 2009

திமுக, காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி.

அதிமுக, ம.தி.மு.க,  பாமக, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

----இவ்வாறாக கடந்த கால தேர்தல் வரலாற்றில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அடிக்கடி கூட்டணி மாறி தேர்தலை சந்தித்துள்ளன. (இதையே, நாடாளுமன்ற தேர்தல் - அதனை அடுத்துவந்த சட்டமன்ற தேர்தல் என்ற அளவில் ஒப்பிட்டு பார்த்தால்கூட உடனடி தாவல்கள் பல நடந்துள்ளது தெரியவரும்.)

உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

3 கருத்துகள்:

ஞாஞளஙலாழன் சொன்னது…

அருள், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மற்ற எல்லா கட்சிகளையும் போல பாமக-வும் ஒரு மோசமான கட்சிதான் என்பது தான் தங்கள் கருத்தா?

"எனது குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால்...." - இந்த கூற்று என்னவாயிற்று?

அருள் சொன்னது…

@ ஞாஞளஙலாழன்

தமிழக, இந்திய அரசியல் இப்படித்தான் என்று கூறுகிறேன்.

இதுதான் யதார்த்த அரசியல். இந்த அரசியல் சூழலில் பா.ம.க செய்வதெல்லாம் இயல்பான நியாயமான அரசியல் நகர்தல்கள் என்றுதான் சொல்கிறேன்.

உண்மை இவ்வாறிருக்க, பா.ம.க ஏதோ குற்றமிழைப்பது போல பார்ப்பன ஊடகங்கள் தனித்து குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.

மதுரைப் பாண்டி சொன்னது…

ஐயா,
நான் அதிமுக காரன்தான்
ஆனாலும் பாமக மீது எப்பொழுதும் நல்அபிமானம் உண்டு.
பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தங்களது கொள்கைகளை விட்டுக் கொடுப்பது கிடையாது.
திமுக கூட்டணியில் இருக்கும்போதே பல விசயங்களில் முரண்பட்டார்கள். நிழல் பட்ஜெட் வெளியிட்டார்கள்.
இந்தக் கூட்டணி மாறுவது பற்றி வேல்முருகன் இமயம் டிவியில் அருமையாக விளக்கமளித்தார்.