Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்

ஆர்.எஸ்.எஸ் படத்துக்கு முன்னால் அண்ணா அசாரே

அமைச்சர்களிடம் மனுகொடுத்தால் - அதன்மீது 'உரிய நடவடிக்கை எடுக்கவும்' என்று எழுதி தொடர்புடைய அதிகாரிக்கு அனுப்புவார்கள். இதனால் அந்த மனுவில் கோரியுள்ளவை நடந்துவிடும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஏனெனில், அமைச்சரின் குறிப்பு உத்தரவு அல்ல.

அதேபோன்று - இப்போது அண்ணா அசாரே கும்பலின் கோரிக்கை மீது 'உரிய நடவடிக்கை எடுக்கவும்' என்கிற வகையில் நாடாளுமன்றம் தொடர்புடைய குழுவிற்கு அனுப்பியுள்ளது. இதனால் அண்ணா அசாரே கும்பல் கோரியுள்ளவை நடந்துவிடும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஏனெனில், நாடாளுமன்ற தீர்மானம் உத்தரவு அல்ல. வெறும் பரிந்துரைதான்!

ஊழலை ஒழிப்பதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறியவர்கள் - ஏதோ உயிர்தப்பினால் போதும் என "வெறும் பரிந்துரையை" வெற்றியாகக் கொண்டாடி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

குப்பை மேடாக உண்ணாவிரதத் திடல்

அது ஒருபுறம் இருக்க, அண்ணா அசாரே உண்ணாவிரதமிருந்த ராம்லீலா திடல் இப்போது குப்பைமேடாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நாட்களாக திடலை சுத்தப்படுத்திவந்த 'தன்னார்வலர்' கூட்டம் - இப்போது வேலைமுடிந்தவுடன் குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டு சென்றுள்ளனராம்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் புட்டிகள், பொட்டல குப்பைகள், உணவுப்பொருட்கள் என எல்லா இடத்திலும் குப்பையாக - ராம்லீலா திடலே குப்பை மேடாகக் காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வசதியாக திடலைச்சுற்றி பெரிய குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தும் - இத்தனை நாட்களாக சுத்தப்படுத்தி வந்த கூட்டத்தினர் இப்போது அப்படியே கைவிட்டுவிட்டு ஓடிவிட்டனராம்.

காண்க: Ramlila Maidan turns into garbage ground

இந்த பொறுப்பற்ற கூட்டம்தான் நாட்டை சுத்தப்படுத்தப் போவதாக கூறிக்கொண்டிருக்கிறது!

12 கருத்துகள்:

ஊரான் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்.
சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!
http://hooraan.blogspot.com/2011/08/blog-post_23.html

அப்பாதுரை சொன்னது…

குப்பைக்கும் ஹசாரே பொறுப்பெடுக்க வேண்டாமோ? அதை ஏன் ஊடகங்கள் போட்டுக் கிழிக்கவில்லை?
போகிற வயசில் உண்ணாவிரதம் இருக்கும் கூட்டமெல்லாம் நாட்டைத் திருத்துவதா? ஏதோ அவர்கள் கூத்தடித்திருக்கிறார்கள் - பொழுது போக. அத்தோடு விட வேண்டும். முட்டாள் மக்களின் இடையிலே பெரிய முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வோருக்குத்தான் ஏமாற்றம் மிஞ்சும்.

கோகுல் சொன்னது…

மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள்!
நல்ல பகிர்வு!

settaikkaran சொன்னது…

வைத்தியன் பொஞ்சாதி புழுத்துச் செத்தா - என்று நெல்லைப் பக்கத்தில் ஒரு சொலவடை இருக்கிறது. அது ஞாபகத்துக்கு வருகிறது. :-)

ஆனால், இந்த செய்தி "தி ஹிந்து" பத்திரிகையில் வந்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

அருள் சொன்னது…

நன்றி
திரு.ஊரான்,
திரு.அப்பாதுரை,
திரு.கோகுல,
திரு.சேட்டைக்காரன்

அருள் சொன்னது…

சேட்டைக்காரன் கூறியது...

// //இந்த செய்தி "தி ஹிந்து" பத்திரிகையில் வந்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.// //

வேறு சில ஊடகங்களும் இதனை (போனால் போகட்டும் என) வெளியிட்டுள்ளன:

DNA: Agitators against corruption turn Ramlila Maidan into garbage dump

http://www.dnaindia.com/india/report_agitators-against-corruption-turn-ramlila-maidan-into-garbage-dump_1580617

IBN Live: Anna's fast venue turns into garbage ground

http://ibnlive.in.com/news/annas-fast-venue-turns-into-garbage-ground/179306-3.html

silambukal சொன்னது…

இதில் என்ன தவறை கண்டீர் அன்பரே. குப்பை மேடாவது இயல்பு தானே. எத்தனை பெரிய பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் சுமார் 5 மணி நேரத்திற்குள்ளேயே குப்பை மேடாகக் காட்சியளித்துவிடும் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு. இவர்கள் இத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள் நிலைமை அதை விட மோசமாகத் தான் இருக்கும் இதையெல்லம் பெருசு படுத்தலாமா?

silambukal சொன்னது…

சாதாரண நிகழ்வு தான் அன்பரே இதனை பெரிதுபடுத்தாதீர்

tekvijay சொன்னது…

ஆமாம், அரசியல்வாதிகள் கூட்டம் நடத்தினா கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடைசி குப்பையை கூட கூட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போல! இதுபோக கரண்டை திருடுவானுங்க, ஸ்பீக்கர் போட்டு உயிர எடுப்பானுங்க, சவுண்டை குறைக்கச் சொல்லிப்பாருங்க, உங்களுக்கு 'செம்ம' மரியாதை கிடைக்கும்!!!

மைதானத்துக்கு வரும் ஒவ்வொருத்தனுக்கும் சிவிக் சென்ஸ் பத்தி டியூஷன் எடுக்கவா முடியும். இன்னும் என்னென்ன சொல்லப்போறீங்க? மைதானுத்துக்கு வந்தவன் சின்ன வீடு வெச்சிருந்தா கூட இவங்களைத்தான் குறை சொல்வீங்க போல!

இதுல ஒரு 1% குறையாவது அரசியல்வாதி மேலயும் உங்கமேலயும் சொல்லிக்குங்கையா இந்த நாடு உருப்பட்ரும், லோக்பால் தேவையே படாது!

Prabu Krishna சொன்னது…

இவிங்க மேல எனக்கும் சந்தேகமாவே இருக்கு.

அருள் சொன்னது…

தமிழன் சொன்னது…

// //இவர்கள் இத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள் நிலைமை அதை விட மோசமாகத் தான் இருக்கும் இதையெல்லம் பெருசு படுத்தலாமா? // //

சுமார் பத்து நாட்களாக திடலை சுத்தப்படுத்தியவர்கள் கடைசி நாளில் அந்த வேலையை ஏன் செய்யவில்லை? இவர்கள் சுத்தப்படுத்தாமல் விட்டால் - அந்த வேலையை மாநகராட்சி செய்யும். மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் அதற்கு செலவிட வேண்டும். ஊழலைப்போன்று அதுவும் ஒருவகையான பணவிரயம்தானே?

அருள் சொன்னது…

Silicon Sillu கூறியது...

// //ஆமாம், அரசியல்வாதிகள் கூட்டம் நடத்தினா கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடைசி குப்பையை கூட கூட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போல!// //

கருணாநிதி, செயலலிதா இவர்களைப் போன்ற மற்றொரு நபர்தான் அண்ணா அசாரேவும் என்பதுதான் நான் சொல்வதும். அதனை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.