சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைகள் - குறிப்பாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து" - மலையாளிகள் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இவை முல்லைப் பெரியார் என்பதை "முல்லப் பெரியார்" என்று மலையால தொனியில் எழுதுகின்றன.
அதேபோல, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான செய்திகளில் மலையாளிகள் கருத்தினையே சென்னையிலிருந்தும் எழுதுகின்றன.
சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள பத்திரிகையாளர்கள் தங்களை பத்திரிகையாளர்களாகக் கருதாமல் மலையாளிகளாகவே கருதி உண்மைக்கு எதிராக செயல்படுவது குறித்த ஒரு ஆங்கில கட்டுரை:
11 கருத்துகள்:
nice article..... thanks... www.rishvan.com
முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.
அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.
அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?
முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.
கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.
இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?
இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.
இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ்மலர் கூறியது...
// முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது... ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’ //
நீங்கள் குறிப்பிடும் வகையிலான திட்டம் எதுவும் கேரள அரசிடம் இல்லை. முல்லைப் பெரியாறு அணையை காலி செய்து, கேரள மின் திட்டங்களை நிறைவேற்றுவது ஒன்றே குறிக்கோள். இதனால், தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதால் கேரளாவுக்கு இழப்பு ஏதும் இல்லை.
//மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள்//
எதற்காக மரண பயம்?
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட தண்ணீர் இடுக்கி அணைக்குதான் போகும். முல்லைப் பெரியாறு ஆற்றின் தண்ணீர் மட்டத்துக்கு மேலே வாழும் மக்கள் அதனால் எப்படி மூழ்கிப் போவார்கள்? தண்ணீர் கீழிருந்து மேலேறிச் செல்வது புவியியல் ரீதியில் சாத்தியமில்லாதது.
திரு.அருள்
கேரள அரசிடம் இந்த திட்டம் இல்லை. ஆனால் கேரள போராட்டக்குழு கடந்த 6 வருடமாக இதை தான் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகம் இதில் செவிசாய்க்காததால் தான் தற்போது கேரளாவின் புதிய அணை என்ற சத்தம் அதிகரித்துள்ளது.
தயவு செய்து முல்லைபெரியாறு அணையின் கீழ்பகுதிகளை கூகுள் மேப்வழியாக பார்வையிடுங்கள். ஒரு அணை உடைந்தால் இழப்பு இருக்காது என்று கூறும் மனசாட்சி அற்ற மனிதர்களா தமிழர்கள்?
எங்கள் கோரிக்கை இது தான் எளிமையான கூடுதல் பலன் அளிக்கக்கூடிய தீர்வுகள் இருக்கும் போது ஏன் மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குள்ளேயே இருக்க வேண்டும்?
chnage ur name to malayalamalar...why the hell u use tamil malar. u proved once again that malayalees are crook and do a divide and rule.....
// எங்கள் கோரிக்கை இது தான்
தமிழ் மலர் என்ற பெயரில் எழுதும் உன் உண்மை பெயர் என்ன
// ஒரு அணை உடைந்தால் இழப்பு இருக்காது என்று கூறும் மனசாட்சி அற்ற மனிதர்களா தமிழர்கள்?
அணை உடையாது என்று வல்லுனர்களே உறுதிபடுத்திவிட்டார்கள். தமிழர்களுக்கு மனசாட்சி இருந்தால் என்றோ தமிழகத்தில் உள்ள மலையாளிகள் துரத்தப்பட்டு இருக்க வேண்டும்.
//அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை.
நீங்கள் செய்திதாள் படிக்கிறீர்களா?
//தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம்.
ஏன் குறைக்க வேண்டும்.
// மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள்.
மலையாள கும்பல்களால் ஏற்படுத்தப்படும் புரளி
//ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.
சுப்ரீம் கோர்ட்டே பிரச்னை இல்லை, அணையை உயர்த்தலாம் என்று சொல்லிவிட்டது.
பகிர்விற்கு நன்றி Sir!
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
திரு ஆனந்த்
//தமிழ் மலர் என்ற பெயரில் எழுதும் உன் உண்மை பெயர் என்ன//
திரு ஆனந்த் உங்கள் பெயர் தான் என் பெயரும். சந்தேகம் இருந்தால் நாளை திரு.வைகோ அவர்களின் உண்ணாவிரத பந்தலில் இருப்பேன், நேரில் சந்திக்கலாம்.
//நீங்கள் செய்திதாள் படிக்கிறீர்களா?//
தமிழக பத்திரிக்கைகள் உண்மையான தீர்வை வெளியிடுவதில்லை. கேரளா தண்ணீர்தர மறுக்கிறது என்ற விசம பிரச்சாரத்தை தான் செய்து வருகின்றன.
இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் இந்த நிமிடம் வரையும் முல்லைப்பெரியாரில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த உண்மையை ஏன் மறைக்கிறார்கள்? கேரளாவில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இன்றளவும் ஒரு தாக்குதல் நடக்கவில்லை. ஆனால் இன்று தமிழகத்தில்?
நண்பரே விரைவில் உச்சநீதிமன்றத்தில் தமிழக கேரள விவசாயிகள் சேர்ந்து ஒரு சமரச தீர்வை முன்வைக்கப்போகிறார்கள். அப்போது புரிந்துகொள்வீர்கள் தமிழக கேரள மீடியாக்கள் இதில் எந்த அளவு விளையாடி உள்ளது என.
உங்கள் செய்திதாள் வாசிப்பு தொடரட்டும்...
நன்றி.
Malayala malar,
ur profile says ur a female and u claim ur name as ANAND....what a joke...get the hell out of here....
//கேரளாவில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இன்றளவும் ஒரு தாக்குதல் நடக்கவில்லை. ஆனால் இன்று தமிழகத்தில்?
மீண்டும் சொல்கிறேன், நீங்கள் செய்திதாள் படிப்பது இல்லை. அல்லது உண்மையை மறைக்கிறீர்கள்.
//கேரளா தண்ணீர்தர மறுக்கிறது என்ற விசம பிரச்சாரத்தை தான் செய்து வருகின்றன.
அப்படி சொல்லவில்லை. எதிர்காலத்தில் தண்ணீர் தர விரும்பவில்லை. உண்மையில் கோர்ட் அணையின் உயரத்தை உயர்த்த அனுமதித்து உள்ளது.
பகிர்விற்கு நன்றி
கருத்துரையிடுக