Pages

சனி, டிசம்பர் 17, 2011

ஓரினச்சேர்க்கை: மாபெரும் மாற்றம்!

பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய மாறுபட்ட விருப்பங்களை - பெண்ணை விரும்பும் பெண், ஆணை விரும்பும் ஆண், இருபால் உறவை விரும்புவோர், திருநங்கைகள் (lesbian, gay, bisexual, and transgender) என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பொதுவாக LGBT என்று அழைக்கின்றனர்.
இத்தகைய மாறுபட்ட பாலியல் விருப்பம் இயல்பானதுதான், காலம்காலமாக இருப்பதுதான் என்பது அறிவியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்னமும் ஒதுக்குதலும், மனித உரிமை மீறல்களும் தொடரவே செய்கின்றன. இந்த அநீதியை எதிர்த்து இந்திய அளவில் துணிச்சலாக குரல் கொடுத்த ஒரே அரசியல் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான். 

மூன்றாண்டுகளுக்கு முன்பு அவரது கருத்து இந்தியாவில் பலராலும் தூற்றப்பட்டது, எதிர்க்கப்பட்டது. இன்று வரலாறு தலைகீழாகி - ஐக்கிய நாடுகள் அவையே அதனை வழிமொழிந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்:


2008 - ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என அறிவிக்க கோரிக்கை.

ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆம் பிரிவை நீக்க வேண்டும் என்று நடுவண் முன்னால் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் அவர் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது பிரதமருக்கு கடிதம் எழுதினார். (இங்கே காண்க: Legalise homosexuality: Ramadoss) . ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரிவு 377 இங்கிலாந்திலேயே காலாவதியான பின்னரும் இந்தியாவில் நீடிக்கும் கொடுமையை அவர் எதிர்த்தார், இதற்காக அவர் பலராலும் தூற்றப்பட்டார்.
'ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம்' என்கிற கருத்தை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையிலான இந்திய நலவாழவு அமைச்சகம் எதிர்த்தபோது, இந்திய உள்துறை அமைச்சகம் அதனை ஆதரித்து.

2009 - உள்துறை அமைச்சகத்தின் இரட்டை நிலையும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்.

தில்லி உயர்நீதி மன்றத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் இ.த.ச. 377 ஆம் பிரிவுக்கு எதிரான வழக்கில் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் இப்பரிவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்தது. ஆனால், உள்துறை அமைச்சகம் இ.த.ச. 377 ஆம் பிரிவை நீக்க எதிர்ப்பு தெரிவித்தது. கடைசியில் தில்லி உயர்நீதிமன்றம் 'ஓரினச்சேர்க்கை குற்றமற்றது' என 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 'ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும்' சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடிய போது - இந்திய அரசாங்கம் இந்த சிக்கலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்தது. (இங்கே காண்க: Government Defers Decision on 377 to Supreme Court) இந்திய அரசின் நலவாழ்வு, உள்துறை, சட்டம் ஆகிய மூன்று அமைச்சரகங்கள் ஒன்று கூடி, தில்லி உயர்நீதிமன்றத்தின் 'ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல' என்கிற தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பது இல்லை என முடிவெடுத்தது.
கடைசியில் - அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் முன்வைத்த கருத்துதான் வெற்றியடைந்துள்ளது.

2011 ஐ.நா.அவையின் அதிரடி.
இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பாலியல் விருப்பத்தின் காரணமாக (அதாவது ஒரினச்சேர்க்கை உட்பட) ஒருவரது மனித உரிமை பறிக்கப்படக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இங்கே காண்க:Resolution adopted by the Human Rights Council).

ஓரினச்சேர்க்கை தொடர்பான ஆவணங்கள்:

1. The Right that Dares to Speak its Name
2. UN Human Rights Council - Discriminatory laws and practices and acts of violence against individuals based on their sexual orientation and gender identity
3. Yogyakarta Principles on the Application of International Human Rights Law in relation to Sexual Orientation and Gender Identity

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"