Pages

சனி, டிசம்பர் 17, 2011

ஓரினச்சேர்க்கை: மாபெரும் மாற்றம்!

பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய மாறுபட்ட விருப்பங்களை - பெண்ணை விரும்பும் பெண், ஆணை விரும்பும் ஆண், இருபால் உறவை விரும்புவோர், திருநங்கைகள் (lesbian, gay, bisexual, and transgender) என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பொதுவாக LGBT என்று அழைக்கின்றனர்.
இத்தகைய மாறுபட்ட பாலியல் விருப்பம் இயல்பானதுதான், காலம்காலமாக இருப்பதுதான் என்பது அறிவியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்னமும் ஒதுக்குதலும், மனித உரிமை மீறல்களும் தொடரவே செய்கின்றன. இந்த அநீதியை எதிர்த்து இந்திய அளவில் துணிச்சலாக குரல் கொடுத்த ஒரே அரசியல் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான். 

மூன்றாண்டுகளுக்கு முன்பு அவரது கருத்து இந்தியாவில் பலராலும் தூற்றப்பட்டது, எதிர்க்கப்பட்டது. இன்று வரலாறு தலைகீழாகி - ஐக்கிய நாடுகள் அவையே அதனை வழிமொழிந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்:


2008 - ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என அறிவிக்க கோரிக்கை.

ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆம் பிரிவை நீக்க வேண்டும் என்று நடுவண் முன்னால் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் அவர் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது பிரதமருக்கு கடிதம் எழுதினார். (இங்கே காண்க: Legalise homosexuality: Ramadoss) . ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரிவு 377 இங்கிலாந்திலேயே காலாவதியான பின்னரும் இந்தியாவில் நீடிக்கும் கொடுமையை அவர் எதிர்த்தார், இதற்காக அவர் பலராலும் தூற்றப்பட்டார்.
'ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம்' என்கிற கருத்தை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையிலான இந்திய நலவாழவு அமைச்சகம் எதிர்த்தபோது, இந்திய உள்துறை அமைச்சகம் அதனை ஆதரித்து.

2009 - உள்துறை அமைச்சகத்தின் இரட்டை நிலையும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்.

தில்லி உயர்நீதி மன்றத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் இ.த.ச. 377 ஆம் பிரிவுக்கு எதிரான வழக்கில் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் இப்பரிவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்தது. ஆனால், உள்துறை அமைச்சகம் இ.த.ச. 377 ஆம் பிரிவை நீக்க எதிர்ப்பு தெரிவித்தது. கடைசியில் தில்லி உயர்நீதிமன்றம் 'ஓரினச்சேர்க்கை குற்றமற்றது' என 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 'ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும்' சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடிய போது - இந்திய அரசாங்கம் இந்த சிக்கலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்தது. (இங்கே காண்க: Government Defers Decision on 377 to Supreme Court) இந்திய அரசின் நலவாழ்வு, உள்துறை, சட்டம் ஆகிய மூன்று அமைச்சரகங்கள் ஒன்று கூடி, தில்லி உயர்நீதிமன்றத்தின் 'ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல' என்கிற தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பது இல்லை என முடிவெடுத்தது.
கடைசியில் - அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் முன்வைத்த கருத்துதான் வெற்றியடைந்துள்ளது.

2011 ஐ.நா.அவையின் அதிரடி.
இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பாலியல் விருப்பத்தின் காரணமாக (அதாவது ஒரினச்சேர்க்கை உட்பட) ஒருவரது மனித உரிமை பறிக்கப்படக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இங்கே காண்க:Resolution adopted by the Human Rights Council).

ஓரினச்சேர்க்கை தொடர்பான ஆவணங்கள்:

1. The Right that Dares to Speak its Name
2. UN Human Rights Council - Discriminatory laws and practices and acts of violence against individuals based on their sexual orientation and gender identity
3. Yogyakarta Principles on the Application of International Human Rights Law in relation to Sexual Orientation and Gender Identity

செவ்வாய், டிசம்பர் 13, 2011

முல்லைப்பெரியாறு சிக்கலுக்கு அதிரடித்தீர்வு: அன்று சொன்னதை இன்று செய்வாரா முதலமைச்சர்?


மலையாளிகளின் கதை, திரைக்கதை, வசனம்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற கட்டுக்கதையைப் பரப்பி, ஒரு தற்காலிக ஏற்பாடாக அணையின் உயரம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் செலவில் அணை பலப்படுத்தப்பட்ட பின்னர் அணையின் உயரத்தை மீண்டும் உயர்த்த (ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு மாறாக) கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 27.2.2006 ஆண்டு ஆணயிட்டுள்ளது.
மலையாளிகளின் கதை, திரைக்கதை, வசனம்
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது? ஆனால், முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரும்போதெல்லாம் - அணையை உயர்த்தாமல் விட்டுவிடுகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு நினைத்தால் அணையின் நீர்த்தேக்கும் உயரத்தை 142 அடிக்கு இப்போதும் உயர்த்த முடியும்.

கேரளாவிடம் அதற்கு புரியும் மொழியில் பேச வேண்டும். கேரளாவுக்கு புரிந்த ஒரே மொழி 'அடாவடி'தான். எனவே, தமிழ்நாடு அதிரடியாக செயல்பட்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவது ஒன்றுதான் தீர்வாக இருக்கும்.

இதுகுறித்து 15.11.2009 அன்று கருத்து தெரிவித்த, இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், செல்வி. ஜெயலலிதா: 

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு கையில் இருக்கும் போது - ஒரு உள்ளூர் (கேரள) சட்டத்துக்கு கருணாநிதி ஏன் பயப்பட வேண்டும்?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் மூன்று பருவமழை காலங்கள் வந்து, மூன்று முறையும் தண்ணீர் அணையை கடந்து போய்விட்டது. அணையை 142 அடியாக உயர்த்தும் அதிகாரம் இருந்தும் கருணாநிதி தவற விட்டுவிட்டார்" என்று கூறியுள்ளார்.

இப்போது புதிய முதல்வரின் காலத்திலும் மழை வந்தது, ஆனால், அணை உயரவில்லையே! அது ஏன்?

இன்றைய முதல்வரின் அன்றைய அறிக்கை இதோ:
Why is Tamil Nadu obeying Kerala law on Mullaperiyar: Jayalalithaa

15. 11. 2009

"She alleged the Tamil Nadu government did not lower the dam shutters to raise the storage level to 142 ft, despite being armed with a Supreme Court order.

In a statement issued here Sunday, Jayalalithaa citing the apex court's order in 2006 said: "Not one but three monsoons have brought in water into the Mullaperiyar reservoir."

""By the time the rains came and water flowed into the Mullaperiyar reservoir, the minority regime headed by Karunanidhi was in power in Tamil Nadu. It was up to this government to lower the gates of the dam and increase the level of water to 142 feet and give effect to the apex court's order." She charged that "for reasons best known to Karunanidhi himself", he did not give the orders for this. 

She wondered since when was the Tamil Nadu chief minister bound to follow laws enacted by the Kerala government. She posed: "When Karunanidhi had the Supreme Court's order to back him, why did he give credence to a local law of the Kerala government."

http://www.deccanherald.com/content/35989/why-tamil-nadu-obeying-kerala.html

வெள்ளி, டிசம்பர் 09, 2011

முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்


கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்லணை மூலமாக கடலுக்கு செல்லும் நீரை பாசனத்துக்கு திருப்பினான் கரிகால் சோழன். உலகிலேயே முதன்முதலாக நீரின் பாதையை திருப்பிய நிகழ்வு அதுதான். அதுபோல மேற்கு மலைகளின் வழியே அரபிக்கடலுக்கு சென்ற தண்ணீரை 116 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகப் பகுதிகளுக்கு திருப்பினார் பென்னி குக். இரண்டு அணைகளும் இன்னும் செயல் பாட்டில் உள்ளன.
முல்லைப்பெரியாறு - தண்ணீரை தேக்கி பின்னர் திறந்து விடும் அணை அல்ல. மாறாக, பள்ளத்தில் வீழும் தண்ணீரை தடுத்து நிறுத்தி ஒரு அளவுக்கு மேல் உயரச் செய்து - மேட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லும் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையாகும். எனவே, மற்ற அணைகளைப் போல வண்டல் தேங்கி வயதாகிப்போகும் ஆபத்து இந்த அணைக்கு இல்லை.

176 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்படுகிறதோ அந்த உயரத்துக்கு ஏற்ற அளவு அதிக தண்ணீர், அணையின் பக்கவாட்டில் உள்ள மலைச்சுரங்க வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. 

1947 இல் இந்திய நாடு அரசியல் சுதந்திரம் அடைந்த போதும், 1956 இல் கேரள மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த போதும் - முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு திருப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றன. இந்த உரிமையை இந்திய அரசோ, கேரள அரசோ தட்டிப்பறிக்க முடியாது.
ஆனால், 1970 களில், அணை பலவீனமாக இருக்கிறது என்கிற கட்டுக்கதையைப் பரப்பி, அதனை பலப்படுத்த வேண்டும் என்று இரண்டு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு - அதற்காக, ஒரு தற்காலிக ஏற்பாடாக அணையின் உயரத்தை 136 அடியாக குறைத்தார்கள். தமிழ்நாடு அரசின் செலவில் அணை பலப்படுத்தப்பட்ட பின்னர் அணையின் உயரத்தை மீண்டும் உயர்த்த, ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு மாறாக கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

கடைசியில் உச்சநீதிமன்றம் அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 2006 ஆண்டு ஆணயிட்டது.

ஆனால், முதுகெலும்பற்ற தமிழ் நாடு அரசு - உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவில்லை. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இப்போது - புதிதாக அணை (அதாவது, கேரள அரசின் கட்டுப்பாடு), 120 அடிக்கு மட்டுமே தண்ணீர் (அதாவது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை) என்கிறது கேரள அரசு. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால் மின்சாரம் தவிர வேறு பாசன பயன் எதுவும் கேரளாவுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசின் நேர்மையற்ற கோழைத்தனத்தால் - தமிழ்நாட்டின் பாசன பரப்பு 2,17,000 ஏக்கரிலிருந்து 46,000 ஏக்கராக சுருங்கியதுதான் கிடைத்த பலன்.

முல்லைப்பெரியாறு சிக்கல் குறித்த சந்தேகங்களை போக்கும் காணொளி:
http://vimeo.com/18283950

புதன், டிசம்பர் 07, 2011

சென்னை ஆங்கில பத்திரிகைகளின் மலையாளி மோகம்!


சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைகள் - குறிப்பாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து" - மலையாளிகள் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இவை முல்லைப் பெரியார் என்பதை "முல்லப் பெரியார்" என்று மலையால தொனியில் எழுதுகின்றன.

அதேபோல, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான செய்திகளில் மலையாளிகள் கருத்தினையே சென்னையிலிருந்தும் எழுதுகின்றன.

சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள பத்திரிகையாளர்கள் தங்களை பத்திரிகையாளர்களாகக் கருதாமல் மலையாளிகளாகவே கருதி உண்மைக்கு எதிராக செயல்படுவது குறித்த ஒரு ஆங்கில கட்டுரை:

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms

http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html