Pages

புதன், மார்ச் 14, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! 

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன்.
UNHRC - Geneva 
ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உலகத் தமிழர்கள் ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய ஆதரவு குரல் எழுப்புவோரில் பெரும்பாலானோர் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வலியுறுத்தும் வாய்ப்பு இல்லை. ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக செயல்பட்டு வருகிறது மருத்துவர் இராமதாசு அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கையை இங்கே காணலாம்). பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் என்கிற முறையில் அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். 

ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்பதும், ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அவைக்கு உள்ளே சென்று ஐ.நா. மனித உரிமைக் குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்துவதும் எல்லோராலும் சாத்தியமாகக் கூடியது அல்ல. ஐ.நா. உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டுமே ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்குள் நுழைய முடியும் என்கிற நிலை உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்பினை ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரித்துள்ளது. எனவே, ஐ.நா'வின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பு உரிமைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் 2012 பிப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
ஐ.நா. மனித உரிமைக் குழுவில இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று பசுமைத் தாயகம் கருதியது. இலங்கை அரசின் சார்பான பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலையில் அதற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்புகள் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று தமிழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என முன்பே முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் உலகளவில் இலங்கைப் போர்க்குற்ற சிக்கலை முன்னெடுத்துச் செல்லும், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum - GTF), அமெரிக்கா இலங்கை மீது தீர்மானம் கொண்டுவர தூண்டுகோலாக இருந்த வாஷிங்டனிலிருந்து செயல்படும் அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை (The United States Tamil Political Action Council - USTPAC), ஆகிய அமைப்பினர் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் 
மருத்துவர் யெசோதா நற்குணம், 
அட்டர்னி அலி பைதூன் 
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கோண்டுள்ளனர். 

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர். 

அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது பசுமைத் தாயகம் எனக்களித்த நல்வாய்ப்பை பயன்படுத்தி செய்யப்பட்ட என்னாலானக் கடமை.

47 கருத்துகள்:

ராசின் சொன்னது…

அருமையான பணி.வாழ்த்துகள்.

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

பாராட்டுகள். வாகை சூடலில் பங்கேற்க வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தறுதலை சொன்னது…

வாழ்த்துகள்

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2012)

ராஜ் சொன்னது…

தீர்மானம் வெற்றி அடைய வேண்டும், இது தான் அணைத்து தமிழர்களின் எண்ணம்.
உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

கீதையில் கூறியபடி,” கடமையைச் செய்யுங்கள்.” பலன் நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

SURYAJEEVA சொன்னது…

புரட்சி ஓங்கி அலை அடித்தால் தான் மாற்றம் நிகழும்
காத்திருக்காமல்
கொண்டு வருவோம்

சசிகலா சொன்னது…

ஒன்று கூடி ஒற்றுமையாய் தமிழினம் காப்போம் . வாழ்த்துக்கள் .

nsk சொன்னது…

vidiyalukaga kaathirukiren

ஹேமா சொன்னது…

அருள்...நல்லதே நடக்கட்டும்.காத்திருக்கிறோம்.உங்கள் பணிக்கும் வாழ்த்துகள் !

எம்.ஞானசேகரன் சொன்னது…

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி! வாழ்த்துக்கள் அருள்!

G Gowtham சொன்னது…

பாராட்டுக்கள், வாழ்த்துகள் அருள்!

Yoga.S. சொன்னது…

உங்கள் கரிசனைக்கு நன்றி நண்பரே!வாழ்க தமிழ்!!!!!

PUTHIYATHENRAL சொன்னது…

வணக்கம் அருள் நலமா. உங்களது பதிவு சிந்திக்கவும் இணையத்தில் வெளியடப்பட்டுள்ளது. பார்வை இடவும். நன்றி.

munril சொன்னது…

கடவுள் தான் தமிழரைக் காப்பாற்றவேண்டும்._தந்தை செல்வா

பால கணேஷ் சொன்னது…

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள் அருள்! மாற்றம் நிகழட்டும்! என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

கப்பலோட்டி சொன்னது…

பாராட்டுகள். தீர்மானம் வெற்றி அடைய வாழ்த்துகள்.

மு. நன்மாறன் சொன்னது…

நல்ல முயற்சி,வாழ்த்துக்கள்

விழித்துக்கொள் சொன்னது…

pasumaiththayagathtirkkum mattrum adhanoode payanikkum mattra amaippugalukkum vaazhththukkal nandri
surendran

அருள் சொன்னது…

பாராட்டுகளுக்கு நன்றி.

நான் குறிப்பிட்டுள்ள ஈழத்தமிழர் அமைப்புகள் பன்னாட்டு அரங்கில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். அவர்கள் பசுமைத்தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழு அரங்கிற்குள் நுழைவதற்கான அனுமதியை மட்டுமே நான் பெற்றுத்தந்துள்ளேன்.

இதற்கான உழைப்பு அல்லது செலவு என்பது என் சார்பாக எதுவும் இல்லை. அவர்கள் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என்று ஐ.நா. அவைக்கு நான் கடிதம் அளித்துள்ளேன். இதனை ஐ.நா'வின் விதிமுறைகளின் படி பதிவு செய்து அவர்கள் அனுமதி அட்டை பெற உதவியுள்ளேன்.

இதைத்தான் நான் "'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல" என்று குறிப்பிட்டேன். எனவே, பாராட்டுகள் எனக்கல்ல. களத்தில் நிற்பவர்களுக்கே சேரும்.

Marc சொன்னது…

அருமைப்பணி மிக நல்ல முயற்சி.

Vijayan@sg சொன்னது…

சிறு பங்களிப்பல்ல, நம் தமிழ் இனத்திற்கு தாங்கள் செய்துள்ளது மகத்தான பணி. நன்றி!!! பாராட்டுக்கள்!!!!

---பா.விஜய், சிங்கப்பூர்.

அருள் சொன்னது…

நன்றி

@ராசின்
@இலக்குவனார் திருவள்ளுவன்
@தறுதலை
@ராஜ்
@G.M Balasubramaniam
@suryajeeva
@சசிகலா
@NSK
@ஹேமா

அருள் சொன்னது…

நன்றி

@கவிப்ரியன்
@G Gowtham
@Yoga.S.FR
@PUTHIYATHENRAL
@munril
@கணேஷ் .
@கப்பலோட்டி .
@மு. நன்மாறன்
@விழித்துக்கொள்

செய்தாலி சொன்னது…

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar சொன்னது…

வாழ்க உங்கள் தொண்டு...தொடர்ந்து நடக்கும் பலவிதப் போராட்டங்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்..

சத்ரியன் சொன்னது…

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல. உங்களின் இந்த சிறு செயலும் ஒருவகையில் உதவியாகவே இருக்கும். பாராட்டுக்கள் அருள்.

அருள் சொன்னது…

நன்றி

@Sekar
@பா.விஜய், சிங்கப்பூர்.
@செய்தாலி
@பாச மலர் / Paasa Malar
@சத்ரியன்

தமிழ்மகன் சொன்னது…

மகத்தான பணி. நன்றி

சத்தியா சொன்னது…

நன்றி கலந்த வணக்கங்கள். உங்கள் அணில் உதவி இச் சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழருக்கு ஒரு பெரும் அரண். இனியாவது உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு எம்மை எழவிடுங்கள். ஒன்றுபட்ட தமிழரின் செயல்பாடே இன்றைய காரியசித்திக்கு வழிவகுக்கும். மறுபடியும் நன்றி உறவே.

பெயரில்லா சொன்னது…

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி...

பாராட்டுக்கள் பசுமைத்தாயகம்...

வாழ்த்துக்கள் அருள்...

nalla photo சொன்னது…

தீர்மானம் வெற்றி அடைய வேண்டும்,
ஒற்றுமையாய் தமிழினம் காப்போம்.
உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நம் தமிழ் இனத்திற்கு தாங்கள் செய்துள்ளது மகத்தான பணி.

ஊரான் சொன்னது…

இடைவிடாத தொடர்ந்த போராட்டங்கள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிக்கு வாழ்த்துகள்!

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

களத்தில் நிற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.தங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பரே.

balakumar சொன்னது…

பாராட்டுகள். வாகை சூடலில் பங்கேற்க வாழ்த்துகள்.

JP சொன்னது…

அருள் அண்ணா உங்களின் உயரிய சிந்தனைகளுக்கும் சமுதாய பற்றுக்கும் கிடைத்த வெற்றியே இந்த அங்கீகாரம்...இதை கொண்டு நமது இலங்கை தமிழ் பிரதிநிதிகள் நம்முடைய வாதத்தை முன்னெடுத்து சென்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தமிழ் மண்ணில் அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ,,,அ.தி.மு.க வின் தலைமை தமிழ் ஈழம், மற்றும் தமிழ்நாடு மக்களின் வாழ்க்கையை அழித்தொழித்து கொண்டிருக்கும் உலக தமிழ் பேசும் மக்களின் இலங்கைக்கு அடுத்து இருக்கும் முதல் எதிரியான இந்திய நாட்டின் பிரதமருக்கு வெறும் வெற்று கடித்ததை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்று ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து உலக அரங்கில் நம்முடைய உள்ளக்குமுறலை ஒலிக்கசெயதமைக்கு உங்களுக்கு எனது இருகரம் கூப்பி நன்றி செலுத்துகிறேன். இருப்பினும் இந்த அரங்கில் நீங்களும் கலந்துகொண்டிருக்க வேண்டும்...ஏனெனில் இன்று தங்களது உரிமையை, உடைமையை, தமது வாழ்வினை இழந்து நிற்கும் நமது தொப்புள் கொடி உறவான மீதமிருக்கும் தமிழீழ மக்கள் இன்றாவது ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவன் நமக்காக உலக அரங்கில் பேசுகிறானே என்ற சிறு சந்தோசம் ஏற்பட்டிருக்கும்...இன்னும் ஒரு வாரம் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் உங்களால் கலந்துகொள்வதர்க்கான சூழல் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று எதிபார்க்கும்..... எமது தமிழீழ மக்களுக்காக எமது தமிழ் உறவுகளுக்காக தன்னால் எதையும் செய்ய முடியாமல் வெட்கித்தலைகுனியும் ஜேபி சத்ரியன்...

Raja சொன்னது…

Dears

i hope you are doing well. please do well. we want justices for our society.

all the very best. i pray to god give
justices

Victor Raj சொன்னது…

சஹாரா பாலைவனத்துக்கே செல்வதாக இருந்தாலும், என் அமைப்பு சார்பில் நான்தான் செல்வேன் என பலரும் அடம் பிடிக்கும் இக்காலத்தில்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை
அவன் கண் விடல்
என்ற திருக்குறளுக்கேற்ப, உரிய நபர்களை அனுப்பி வைத்தமைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thaai சொன்னது…

தீர்மானம் வெற்றி அடைய வேண்டும், இது தான் அணைத்து தமிழர்களின் எண்ணம்.
உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

'பசி'பரமசிவம் சொன்னது…

மகிழ்ச்சி; வாழ்த்துகள்; பாராட்டுகள்; நன்றி.

அருள் சொன்னது…

நன்றி

@சத்தியா
@ரெவெரி
@nalla photo
@ஊரான்
@தென்காசித் தமிழ்ப் பைங்கிளி
@balakuma
@JP
@Raja
@Victor
@Thaai
@பரமசிவம்

இருதயம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே .... சிறந்த பங்களிப்பு உங்களுடையது ...

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!தாமதமான பின்னூட்டமாக இருந்தாலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு துரை சொன்னது…

Ungalin Indha seyal manathukku satru aaruthalaaga irukkirathu.. Nandri matrum Vaazhththukkal Anna..

Creative Sign Arts சொன்னது…

அருமையான பணி.வாழ்த்துகள்

vv9994013539@gmail.com சொன்னது…

வெற்றி பெற வாழுதுகள்.

Nayagananbu சொன்னது…

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி...

பாராட்டுக்கள் பசுமைத்தாயகம்...

வாழ்த்துக்கள் அருள்...

chola vanniyan சொன்னது…

வெற்றி !வெற்றி !! வெற்றி!!! கியூபா புரட்சிக்கு வித்திட நாடு.சேகுவேர,பிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளை உலகிற்கு அடையலாம் கட்டிய நாடு,இன அழிப்பு போரை மனித உரிமை மீறலை ஆதரிக்கும் நாடக மாறி ..இன்று காட்டி கொடுக்கும் நாடகி விட்டது.இனி அவர்களும் தமிழின துரோகிகள்...மருத்துவர் ராமதாஸ் அவர்களால் நிறுவனராக கொண்டு செயல் படும் பசுமை தாயகம் அமைப்பின் சிறந்ததொரு முன்னெடுப்பு சரியான நேரத்தில் செய்யப்பட்ட முல்லிவைகள் படுகொலையில் இருந்து இன்றுவரை நடைபெற்றுவரும் கொலைகள் மனித உரிமை மீறலுக்கான நாலதொரு முன்னெடுப்பு... மனிதஉரிமை மீறலுக்கு எதிரான தீர்மானம் ஐநா சபையில் வெற்றி...வாழ்த்துக்கள்இந்த தீர்மான வெற்றி போதாது .தமிழ்-தனி ஈழம் அமைய ஐநா சபை தீமானம் கொண்டுவரவேண்டும்...அதற்கு நமது உலக தமிழ் இனம் முயற்சி செய்து வெற்றிபெற செய்ய வேண்டும்